Tuesday, November 19, 2013

ஏதேனைச் சேர்ந்த மனித குலம்


பூமியில் வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாத, ஆனால் மனிதன் மட்டுமே படும் சில அவஸ்தைகளை, வேதனைகளை சுட்டிகாட்டி ஒரு விஞ்ஞானி ஒரு வேளை மனிதன் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல, அவன் வேறெங்காவதிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற‌ முடிவுக்கு வந்திருக்கின்றார். கடுமையான‌ பிரசவ வேதனை பூமியில் மனிதன் மட்டுமே படும் வேதனைகளில் ஒன்று. வேறெந்த உயிரினங்களிலும் இல்லாதது. அது போலவே சூரிய வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மென்மையான‌ தோல், முதுகு வலி இப்படியாகப் பல. 

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வேதனைகளெல்லாம் கடவுள் ஆரம்பத்தில் மனிதனுக்காக படைத்த‌ ஏதேன் தோட்டத்தில் இருந்ததில்லை. எப்போது மனிதன் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டானோ அப்போது வந்தவைகள் தான் இந்த வலிகளும் வேதனைகளும். ஆதியாகமம் 3:16 சொல்லுகிறது கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியா யிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்று.இப்படியாக பிரசவ வேதனை வந்தது.அது போலவே சும்மா சொகுசாக‌ இருந்து சாப்பிட்ட ஆதாம் பாவம் செய்த பின் "நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்" என்ற சாபம் வந்தது. முதுகு வலியும் கூடவே வந்தது. சரியாய் தான் சொன்னார் இந்த விஞ்ஞானி. நாம் பூமியில் வாழ‌ படைக்கப்பட்டவர்களல்ல.ஏதேன் தோட்டத்தில் வாழவே படைக்கப்பட்டோம். மனிதன் செய்த‌ பாவத்தால் இந்த பூமி சபிக்கப்பட்டதாயிற்று. மேற்சொன்ன சாபங்களும் வேதனைகளும் வந்தது. இன்னும் சில காலம் தான்.புதிய வானமும் புதிய பூமியும் தோன்றும். மனுஷர்களிடத்திலே நம் தேவன் வாசமாயிருப்பார்.அப்போது மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் எல்லாம் ஒழிந்துபோகும்.எல்லாம் புதிதாகும். ஆமேன். அல்லேலூயா. (வெளி:21:1-4)

Sunday, November 10, 2013

பில்லி கிரஹாம் இறுதி பிரசங்கம் The Cross - Billy Graham's Message To America


எப்படி அழாம‌ல் இருக்க முடியும் அவரால்? அமெரிக்க தேசத்தின் எழுப்புதலையும் பிற்பாடு இப்போதைய பின்னடைவையும் கண்டவரன்றோ அவர். சமீபத்தில் தனது 95 ஆவது வயதை கட‌ந்து ஆனால் இன்னமும் நம்பிக்கையாக அமெரிக்காவுக்காக பரிதபித்து அழுது கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் பில்லி கிரஹாம். ந‌மது கண்முன்னே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியின் மாபெரும் தேவ மனிதர். அவரின் பிறந்த நாளையொட்டி அவரது இருதய ஏக்கம் இங்கே அவரது "இறுதி பிரசங்கமாக" வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தேவாசீர்வாதம் பெறுங்கள். "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" என்ற சங்கீதம் 71:18 வசனப்படி தேவனும் அவரை கைவிடவில்லை. இறுதி அறிவிப்பும் அவர் கொடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் பாடு.
http://watchbillygraham.com/


தமிழகம் வரும் இஸ்ரேலின் விவசாயப் புரட்சி

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியம் உலகத்திற்கே வியப்பளிக்கிறது. எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இஸ்ரேல் தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப் பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.” ஒரு காலத்தில் வனாந்திரமாய் பராமரிப்பற்று ஆளரவமற்ற பாலைநிலமாய் கிடந்த இஸ்ரேல் நிலங்கள் இன்று வேதாகமம் முன்னுரைத்தது போலவே வேளாண்துறையில் முன்னணியிலுள்ள நாடாக மாறிவிட்டது. தமிழக மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில விவசாயிகள் அவர்களிடமிருந்து இரகசியங்களை கற்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான் என்கிறார்கள். இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனராம். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இங்குள்ளோரின் விருப்பமும். ஆனால் அதற்கும் மேலான‌ ஒரு பிரதான இரகசியம் இருக்கிறது. அது தான் கடவுளின் ஆசீர்வாதம். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” என்று. இதுதான் உண்மையான இரகசியம். நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் அல்லவா? (Iகொரி:3:7

Tuesday, November 05, 2013

இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்

"யுத்தங்களையும் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உதவும்" துணை ஜனாதிபதி திரு.அன்சாரி பேச்சு.

இந்திய துணை ஜனாதிபதி திரு.ஹமீது அன்சாரி அவர்கள், பெங்களூரிலுள்ள எக்கியுமெனிக்கல் கிறிஸ்டியன் சென்டரில் ஒரு பொன் விழா கொண்டாட்டத்தில் பேசும் போது, “மனித வர்க்கத்தில் மடமைத்தனங்கள் தொடர்வதால், உலகின் பல பகுதிகளிலும் மனித வர்க்கம் வெறுப்புணர்வுகளுக்குள்ளும் மோதல்களுக்குள்ளும் உந்தி தள்ளப்படுகிற நிலையில், இயேசுவின் என்றென்றும் நிலைத்திருக்கும் செய்தியான அன்பு மற்றும் மனதுருக்கம், ஜனங்களுக்கு மீட்பின் வழியை காண்பிக்கிறது. நாம் அப்படியே எழுத்தின் பிரகாரமும் ஆவியின் பிரகாரமும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததை பின்பற்றுவோமானால், நம்மால் நிச்சயமாக யுத்தங்களையும் போராட்டங்களையும் இந்த‌ உலகத்தை விட்டு நீக்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் நீடிய‌ சமாதானம் வழியாக மனித சமுதாயத்திற்கு தேவையான முன்னேற்றத்தையும் செழிப்பையும் நாம் ஏற்படுத்த முடியும்" எனக் கூறினார்.   மேலும் அவர் கூறும் போது "சமுதாயத்தில் தாழ்ந்த வறுமை நிலையிலுள்ள‌  மக்களுக்கு கல்வி,ஆரோக்கியம், தொண்டு வழியாகவும் சமூக சீர்திருத்தங்கள் வாயிலாகவும் நம் இந்திய தேசத்திற்கு கிறிஸ்தவ சமுதாயம் ஆற்றிய சேவைகளை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நானும் கூட, சிம்லாவிலுள்ள ஐரிஸ் சகோதரர்கள் நடத்திய பள்ளியிலும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெசுய்ட்ஸ் நடத்திய கல்லூரியினாலும் உருவாக்கப்பட்டவன் தான்” என்று திரு.அன்சாரி அவர்கள் கிறிஸ்துவைக் குறித்தும் கிறிஸ்தவத்தைக் குறித்தும் பேசினார்.

வேதாகமம் சொல்லுகிறது,இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று.கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.இயேசு சொன்னார் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக"(யோவா:8:36,IIகொரி:3:17, யோவா:14:27)

Wednesday, October 30, 2013

வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவடைகின்ற‌ காலத்தில் நாம் இருக்கிறோம்


"வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவடைகின்ற‌ காலத்தில் நாம் இருக்கிறோம்" என ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தைரியமாக உலக தலைவர்களின் மத்தியில் தெரிவித்தார். மேலும் அவர் வேதாகமத்தின் ஆமோஸ் 9:14,15 வசனங்களை மேற்கோள்காட்டி "அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லை" என இஸ்ரேல் தேசத்தின் உதயத்தை குறித்து வேதாகமம் முன்கூட்டியே எடுத்துக் கூறியிருப்ப‌தை சுட்டி காட்டினார். பைபிள் வசனப்படி "இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இனி பிடுங்கப்படுவதில்லை" என ஆணிப் பூர்வமாக‌ தெரிவித்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக‌.

http://www.timesofisrael.com/full-text-netanyahus-2013-speech-to-the-un-general-assembly/

Friday, October 25, 2013

உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி


இது கடந்த 21-ம் தியதி நம்மூர் செய்தித்தாள்க‌ளில் வெளியான செய்தி. இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரேல் நாட்டிலே குடியேற்றப்படுவார்கள் என்பது வேதாக முன்னறிவிப்பு. அதன்படியே நம்ம‌ தேவனின் வார்த்தைகள் நம் கண்ணெதிரேயே எப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறுதுனு பாருங்கோ! தேவர்களில் நம்ம தேவனுக்கு ஒப்பானவர் யாருங்கோ!

இதோ அந்த வேதாகம வார்த்தைகள்:
இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி (இந்தியா ஒரு கிழக்கு நாடு என நினைவில் கொள்க‌), உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். (ஏசாயா:11:12,27:12,43:5, ஆமோஸ்:9:14,16)

Thursday, October 24, 2013

தேவன் தந்த இந்த அழகிய பூமி



உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என 
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே 
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை 
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என 
அக்கரை அக்கரையாக 
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது. 

அதனாலேயே வேதம் சொல்லுகிறது 
வானங்கள் கர்த்தருடையவைகள்; 
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே! 
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!

Friday, September 20, 2013

சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம்

On December 24, 1968, in what was the most watched television broadcast at the time, the crew of Apollo 8 read in turn from the Book of Genesis as they orbited the moon. Bill Anders, Jim Lovell, and Frank Borman recited verses 1 through 10, using the King James Version text. On February 5, 1971, the First Lunar Bible was carried to the surface of the moon on board the Apollo 14 lunar module Antares by Lunar Module Pilot Edgar D. Mitchell.The Apollo Prayer League was a group of NASA engineers, scientists, administrators and astronauts.The Apollo Prayer League created a microfilm Bible and 300 microfilm copies were carried to the lunar surface. The microfilm is about 1.5 inches square, and yet contains all 1,245 pages of the King James Bible. These pages so small that they must be read under a microscope. This Lunar Bible is the only complete copy of the Bible to have flown to the surface of the Moon. Praise God!!

Wednesday, September 18, 2013

வழிநடத்தும் வல்லவர்

Indian Boxing Champion Mary Kom for Jesus Testimony

Monday, September 02, 2013

கிறிஸ்துவை நேசிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் சாட்சி


உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.வெளி 3:8 Tamil Cinema Director Mr.Prabhu Solomon Testimony.

Sunday, September 01, 2013

கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்

"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ). அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22


கண்டுபிடிக்கப்பட்ட தாவீது மன்னர் அரண்மனை

பைபிள் கட்டுக்கதைகளின் தொகுப்பு அல்ல. அது ஒரு சரித்திர புஸ்தகம். அதில் எழுதப்பட்டுள்ளது சரித்திரம் எனில் அது சான்றுகளையும் விட்டு சென்றிருக்க வேண்டும். இதோ வேதாகமத்தை நிரூபிக்கும் இன்னும் ஒரு சான்று. பைபிள் சொல்லுகிறது தாவீது இஸ்ரவேலின் மேல் ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் (அரண்மனையை) கட்டினார்கள்.தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.(II சாமுவேல் 5).இந்த தாவீதின் அரண்மனையை தான் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். வேதாகமம் இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை.


Friday, August 02, 2013

கிறிஸ்துவை கண்டு கொண்ட நடிகர் ஜூனியர் பாலையா அவர்களின் சாட்சி

பீட்டர் என்கிற நடிகர் ஜூனியர் பாலையா கிறிஸ்துவை கண்டு கொண்ட சாட்சி
Part 1


Part 2


Part 3


Part 4


”காதலிக்க நேரமில்லை” புகழ் பிரபல நடிகர் திரு.T.S பாலையா அவர்களின் புதல்வனான திரு.ஜூனியர் பாலையா அவர்களின் குடும்பத்தில் ஒரு காலத்தில் பணத்திற்கு பஞ்சமில்லாதிருந்தது. T.S பாலையா அவர்களின் சொத்து ஒரு காலத்தில் 240 ஏக்கர் தேரும். இது சென்னையில் மட்டும். இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களில் தலையில் கொட்டுவார்களாம். இன்றைக்கும் இவரது தாயார், சகோதரர் மற்றும் ஜூனியர் பாலையா அவர்களின் பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது. மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர், மனம் போன போக்கில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளக்கூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.

இவர் நடித்த முதல் படத்திற்கு பிறகு 3-ம் நாளில் இவரின் தந்தை இறந்து விட்டார். வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதன் பிறகு இவரின் தாயார் சுகவீனமாய் படுத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நிலம் விற்பது தொடர்பாக ஓர் பிரச்சினை ஆரம்பித்து தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் இவரை ஆட்டிபடைக்க ஆரம்பித்தது. யோபு 3:25 ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று சொல்லப்பட்டது போல் இவரின் வாழ்க்கையிலும் ஆனது. விக்கிரகங்களை வணங்கினால் பயம் நீங்கும் என்று பலரும் சொன்னதால் பல இந்து கோவில்களுக்கு சென்று வழிபடுவார். போகாத இடம் இல்லை. ஆனாலும் பயத்தில் தூக்கம் இல்லாமல் போனது. பயங்கர குடிகாரனார். குடும்பத்தில் சேமிப்பு எதுவும் கிடையாததால் தந்தை இறந்த பிறகு இவரின் தாயாருக்கு நெருக்கமானவர்கள் அவரை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டனர். இதன் மூலம் பல துயரங்களுக்கு இவர் ஆளாகிப்போனார். அதுவரை பணத்தின் பெருமையில் உல்லாசமாக இருந்த இவரின் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் என்று பல புயல்களில் அகப்பட்டு இருள் என்னும் ஓர் மாயைக்குள் திணிக்கப்பட்டார். சினிமா உலகில் ஸ்ட்ரைக் நடந்த போது இவருக்கு வேலை இல்லாமல் போனது. வருமானமும் நின்று விட்டது. சேமிப்பு இல்லாததினால் கடன் வாங்க ஆரம்பித்தார். நாளடைவில் கடன் அடைக்க முடியாமல் கடனாளியானார்.

நண்பர்கள் மாயமாகிப் போனார்கள். ஒரு முறை ஒரு நண்பன் வீட்டிற்கு சென்ற போது அவர் இவரின் வருகையை தெரிந்து கொண்டு "என்ன செக் bounce ஆகிவிட்டதா என்று சத்தம் போட்டு அவமானப்படுத்தினதாக மனவருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இதன் மத்தியில் இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் சகோதரி தனக்கிருந்த கிழிந்த ஓர் வேதாகமத்தை இவர் மனைவியிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதை படித்த மாத்திரத்தில் தேவன் அவரிடம் பேசுவதை உணர்ந்த அவர் மனைவி இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சராக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஓர் ஆலயத்தில் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார். இதை ஜூனியர் பாலையாவிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவரோ அதை கண்டுகொள்ளவில்லை. ஓர் நாள் கடன் கொடுத்த நண்பர் வீட்டிற்கு வந்து ஜூனியர் பாலையா தற்கொலை செய்து கொண்டால் கடனை திருப்பி தர வேண்டாம் என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட ஜூனியர் பாலையா தற்கொலை செய்துகொள்ளலாமென எண்ணி நன்றாக குடித்துக்கொண்டு காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். சென்ற வேகத்திலேயே மீண்டும் கடவுள் கிருபையால் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு இவர் மனைவி இவரை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். ஆலயத்தில் அழுகையோடு "ஏசுவே, ஏசுவே" என்று வேதனையில் கதறின போது தன் கைப்பேசி அழைக்கவே எடுத்து பேசியிருக்கிறார். அதில் இவரை ஏமாற்றி சொத்தை, பணத்தை அபகரித்தவர் மீண்டும் பணத்தை கொடுப்பதாக சொன்னார். இவரால் நம்பவே முடியவில்லை. தேவன் அங்கேயே ஓர் அற்புதத்தை செய்தார். ஜூனியர் பாலையா அவர்கள் இரட்சிக்கப்பட்டு 10-4-2013 அன்று ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இன்று தேவனை அறியாத மக்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறார். அல்லேலூயா. ஆமென்.

இந்த சாட்சியை படித்த எனக்கன்பான கிறிஸ்தவ பெயரை வைத்துகொண்டு உலகபிரகாரமாய் வாழும் கிறிஸ்தவ நண்பர்களே, மற்ற மதங்களை சேர்ந்த சகோதர சகோதரிகளே "இயேசு உங்களை நேசிக்கிறார்" வேதாகமத்தில் ஓர் வசனம் உண்டு "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்". இது தேவன் கொடுக்கும் ஓர் அன்பான அழைப்பு. நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி. இருக்கிற வண்ணமாகவே இயேசுவினிடத்தில் வாருங்கள். உங்கள் வாழ்க்கையும் மாறும். பரிசுத்த வேதாகமம் எங்காவது கிடைத்தால் தவறாது வாசியுங்கள். தேவன் உங்களோடு பேசுவார். உங்கள் காதுகள் நிச்சயம் கேட்கும்.

எனக்கு அன்பானவர்களே... ஜூனியர் பாலையா சொல்வதெல்லாம் தான் கஷ்டப்பட்ட போது யாரும் வந்து இந்த இயேசுவை தனக்கு சொல்லவில்லை என்பது தான். அன்பு நண்பர்களே, இந்த சாட்சியையாவது உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் தேவனை அறிந்து கொள்ளட்டும். தொடர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். என்றாவது ஓர் நாள் அவர்கள் தேவனுக்குள்ளாக வருவார்கள். உங்கள் நண்பர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கூட வேலை செய்பவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கலாமே. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக.

Credit goes to www.healingstripesministry.org
G-5, Ist Floor,
II Block,
Malligai Street,
Brindavan Nagar,
Koyambedu,
Chennai-600 092,
Tamil Nadu,
South India.
healingstripesministry@gmail.com
Contact Numbers
+91-9884428222
+91-9840454423
 Video testimony of Bro. Junior Balaiah - An actor turned Evangelist, proclaiming Jesus Christ as the only true God and Savior of man kind.

Saturday, July 20, 2013

வேதாகம வார்த்தைகளின் படி எகிப்திய நைல் நதி வற்றுமா?



2700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தான் இறுதி காலங்களில் எகிப்தின் நைல் நதி வற்றிப்போகும் என்றும் அதனால் நடக்கப்போகும் பின் விளைவுகளை பற்றியும் விவரித்துக் கூறியிருக்கிறான். இதை ஏசாயா 19‍ ம் அதிகாரத்தில் படிக்கிறோம். அது எப்படி நிஜமாகப் போகிறதுவென இன்றைய செய்திதாள்களை படித்து நாம் தெரிந்து கொள்ளலாம். நம் வேதாகமம் இன்றைய நாட்டு நடப்புகளை அன்றே முன்னுரைத்திருக்கின்றது.
அதுவே நம் வேதாகமத்தை மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபடுத்தியும் காண்பிக்கின்றது.

எகிப்தின் பாரம்... நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்.. அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம் ....ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும். நதியோரத்திலும் நதிமுகத்திலுமிருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம். மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.(ஏசாயா:19:58)
Ethiopia Diverts Nile River for Giant Dam, Raising Fears in Egypt, Sudan - As Bible stated Nile in Egypt dring up? Isaiah:19:5-8

நிச்சயமாக பதில் உண்டு


அன்னாள் அழுதாள் - சாமுவேல் பிறந்தான்.

ஆகார் அழுதாள் - தண்ணீர் துரவைக் கண்டாள்.

எசேக்கியா அழுதான் - ஆயுளில் 15 ஆண்டுகள் கூட கிடைத்தது.

நெகேமியா அழுதான் - எருசலேமின் அலங்கம் கட்டப்பட்டது.

எஸ்தர் அழுதாள் - யூதருக்கு அழிவிலிருந்து விடுதலை கிடைத்தது.

பாபிலோனிலிருந்த யூதர்கள் அழுதார்கள் - விடுதலை பெற்று ஒரு ஜாதியாய் நிலைநாட்டப் பட்டார்கள்.

மகதலேனா மரியாள் அழுதாள் - உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவதாக‌ தரிசித்தாள்.

நீ ஏதற்காக‌ அழுகிறாய் ??
நிச்சயமாக பதில் உண்டு


உன் நம்பிக்கை வீண்போகாது!

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18


தேவன் தெரிந்துகொண்ட...

யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான்
பேதுருவுக்கு சட்டென‌ கோபம்வ‌ரும்
தாவீது பிறன் மனை நோக்கினான்
நோவா குடித்து வெறித்திருந்தான்
யோனா தேவ‌னை விட்டு விலகி ஓடினான்
ப‌வுல் கொலை செய்கிறவனாயிருந்தான்
மிரியாம் முறுமுறுத்தாள்
தோமா ஒரு ச‌ந்தேகப்பேர்வ‌ழி
சாராளுக்கு பொறுமை கிடையாது
மோசே திக்குவாயன்
ச‌கேயுவோ குள்ள‌ம்
ஆபிர‌காம் வ‌ய‌தான‌வனாயிருந்தான்

ஆனாலும் தேவ வார்த்தை சொல்வது என்ன தெரியுமா?

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."
II கொரி:12:9

தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்



Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில்  பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 5:2

Thursday, June 13, 2013

கர்த்தருடைய வேதம்


"அநேக ஆண்டுகளாக நான் ஆண்டுக்கு இரு முறை வேதாகமத்தை முழுமையாக படித்து வருகிறேன். அது ஒரு பிரமாண்டமான, வல்லமையுள்ள மரத்தைப் போன்றது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பெரிய கிளையைப் போன்றது. கனிகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் அந்தக் கிளையைப் பிடித்துக் குலுக்குகிறேன். ஆனால் எப்போதுமே நான் ஏமாற்றமடைந்தது கிடையாது." - ‍ மார்ட்டின் லூதர்.

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 

Friday, May 24, 2013

காற்றின்வழி

என்ன‌வெல்லாமோ தொழில்நுட்ப‌ங்க‌ள் வ‌ந்திருக்கிற‌தென்று சொல்லுகிறார்க‌ள். ஆனால் இந்த‌ காற்று போகும் பாதையை முன்கூட்டியே க‌ண்ட‌றிந்து அங்கிருக்கும் ம‌க்க‌ளை வெளியேற்றுகிறார்க‌ளா பாருங்க‌ள்? இத‌ற்கிடையே "க‌ட‌வுள் துக‌ளை" க‌ண்டுபிடிக்க‌ப்போகிறார்க‌ளாம். வேதாக‌ம‌ம் என்ன‌ சொல்லுகிற‌து."காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது." (யோவான்:3:8)என்கிற‌து. மேலும் "காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது...இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்" (பிர‌ச‌ங்கி:11:5) என்கிறது வேத‌ம்.காற்றின் வ‌ழிக‌ளை க‌ண்டுபிடிக்க‌ முடியாது தான் போலிருக்கிற‌து.

Tuesday, April 30, 2013

சோதோம் கொமாரா ரிட்ட‌ன்ஸ்


"உங்க‌ளை நினைத்தால் எங்க‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌து ஜேச‌ன் காலின்ஸ்!. ந‌ம‌து நாட்டில் இதொரு மிக‌ப்பெரிய‌ முன்னேற்ற‌ம்" என‌ அமெரிக்க‌ முத‌ல் பெண்ம‌ணி மிச‌ல் ஒபாமா த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

என்ன‌மோ ஜேச‌ன் காலின்ஸ் மிக‌ப்பெரிய‌தொரு அரிய‌ சாத‌னையை ப‌டைத்துவிட்டார், வ‌றுமையை ஒழிக்க‌ வ‌ழி க‌ண்டு பிடித்து விட்டார். தீவிர‌வாதிக‌ளின் ச‌தியை ஒட்டு மொத்த‌மாக‌ முறிய‌டித்து விட்டார் என‌ நினைக்க‌ வேண்டாம். த‌ன்னை ஒரு கே (Gay) என‌ அவ‌ர் அறிவித்துவிட்டாராம்.அத‌ற்கு தான் இந்த‌ ஆர்பாட்ட‌ம்.வேதாக‌மமோ அதை "ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து" என்கிற‌து (ரோமர்:1:27)

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னின் ம‌க‌ள் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னோ ஒரு ப‌டி முன்னே போய் த‌ன‌து வாழ்த்துசெய்தியில் இவ்வாறாக‌ எழுதுகிறார்.

Clinton wrote. "It is also the straightforward statement of a good man who wants no more than what so many of us seek: to be able to be who we are; to do our work; to build families and to contribute to our communities."

என்ன‌து "to build families"சா
என்ன‌ப்பா ஆச்சு இவ‌ங்க‌ளுக்கு? ந‌ல்லாதானே இருந்தாங்க‌?
ஆணோடே ஆண்,பெண்ணோடே பெண் இருந்து அவலட்சணம் செய்து விட்டு குடும்ப‌த்தை எப்ப‌டி க‌ட்டுவ‌துப்பா? ந‌ல்லா இருக்குதே க‌தை? எப்ப‌டி இவ‌ர்க‌ளையெல்லாம் குருடாக்கியிருக்கிறான்யா அவ‌ன்? 
இவ‌ர்க‌ளுக்கெல்லாம் விண்ண‌ப்ப‌ம் ஏறெடுப்ப‌துவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

Thursday, April 04, 2013

ஆழ்க‌ட‌லில் எறிந்துவிட்டார்




உலக‌ ச‌முத்திர‌ங்க‌ளிலேயே மிக‌ ஆழ‌மான‌ ப‌குதி எதுவென்று தெரியுமா? ஜ‌ப்பானுக்கு அ‌ருகே ப‌சுபிக் பெருங்க‌ட‌லிலுள்ள‌ ம‌ரியானாஸ் டிரெஞ்ச் ‌என்ப‌து தான் அது.இத‌ன் ஆழ‌ம் 35,827 அடிக‌ள். அதாவ‌து இந்த‌ ஆழ‌த்தில் எவ‌ரெஸ்ட் சிக‌ர‌த்தையே அலாக்காக‌ தூக்கி போட்டு விட‌லாமாம். ஏனென்றால் எவ‌ரெஸ்டின் உய‌ர‌ம் வெறும் 29,035 அடிக‌ள் ம‌ட்டுமே. உல‌க‌ம‌கா சிக‌ர‌த்தையே விழுங்கிக் கொண்டு அத‌ற்கான‌ அடையாள‌மே இல்லாம‌ல் அமைதியாக‌ கிட‌க்கும் இந்த‌ ம‌ரியானாஸ் ஆழ‌ம். 


அன்ப‌ரே! உங்க‌ள் பாவ‌ங்க‌ள் எவெரெஸ்ட் ம‌லைய‌த்த‌னையாய் குவிந்திருக்கிற‌தே என‌ வ‌ருந்துகிறீர்க‌ளா? வேதாகம‌ம் மீகா:7:19 ல் சொல்லுகிற‌து க‌ட‌வுள் "நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" என்று. உங்க‌ள் பாவ‌ங்க‌ளும் அக்கிர‌ம‌ங்க‌ளும் எவெர‌ஸ்ட் சிக‌ர‌ம் போல் குவிந்திருந்தாலும் அதை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு காணாம‌ல் போக‌ச்செய்ய‌ கர்த்த‌ர் ஒருவ‌ரால் ம‌ட்டுமே முடியும். அவ‌ர‌ண்டை அண்டிக்கொள்வாயா? அவ‌ர் அருளும் ச‌மாதான‌த்தை பெற்றுக்கொள்வாயா?

Thursday, March 28, 2013

ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா


ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா
வேதாக‌ம‌த்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிட‌ப்ப‌டுவ‌துண்டு.
இந்த‌ நாட்டின் பிர‌தான‌ ந‌க‌ர‌மாக‌ இருந்த‌து தான் பெட்ரா. இப்ப‌டி
ஒரு‌ நாடே கிடையாது.இது ஒரு க‌ற்ப‌னை பிர‌தேச‌ம்.
இதிலிருந்தே வேதாக‌ம‌ம் ஒரு பொய் என‌ தெரிகிற‌து என‌
ஒரு கூட்ட‌த்தார் ஒரு கால‌த்தில் வேத‌த்தை அவ‌தூறு செய்து
கொண்டிருந்தார்க‌ள். புதைந்து போய் கிட‌ந்த‌ இந்த‌ பெட்ரா
ந‌க‌ர‌த்தை 1812ல் சுவீட‌னை சேர்ந்த‌ ஒரு யாத்ரீக‌ர் Johann Burckhardt
என்ப‌வ‌ர் க‌ண்டுபிடித்தார்.அத‌ன் பிற‌கு அவ‌ர்க‌ள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயின‌ர்.வேதாக‌ம‌ம் சொல்வ‌தெல்லாம் உண்மை
என‌ மீண்டும் ஒரு முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த பெட்ரா நக‌ர‌ம்
முழுக்க‌ முழுக்க‌ பாறைக‌ளை குடைந்தே செதுக்கி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.
ப‌ல‌ ஆச்ச‌ரிய‌ அதிச‌ய‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. ஆனால் வேதாக‌ம‌ம்
முன்னுரைத்த‌ப‌டி இந்ந‌க‌ர‌ம் பாழாய்போன‌து.

எரேமியா:49:17 சொல்கிற‌து "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" ‌.ஆமாங்க‌ய்யா..ஒபாமா கூட‌ பார்த்து பிர‌மித்துப்போனார்.

Edom shall be a desolation: every one that goeth by it shall be astonished. Jeremiah 49:17

Thursday, March 21, 2013

ஜெபிக்க‌ சொல்லும் நாசா


பூமிக்கு மிக‌த்தொலைவிலுள்ள‌ கோள்க‌ளையெல்லாம் வ‌லிமை மிக்க‌ விண்நோக்கிக‌ள் மூல‌ம் க‌ண்டு ஆராயும் விஞ்ஞானிக‌ளுக்கு பூமிக்கு மிக‌ அருகில் பூமியை தாக்க‌க்கூடிய‌ தொலைவிலுள்ள‌ விண்க‌ல்க‌ளை க‌ண்டுபிடிப்ப‌து மிக‌ சிர‌ம‌மாக‌ இருக்கிற‌தாம். அப்ப‌டியே பூமியை தாக்க‌ வ‌ரும் விண்க‌ற்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டாலும் கூட‌ இப்போதைய‌ தொழில்நுட்ப‌த்துக்கு ந‌ம்மால் ஒன்றும் செய்ய‌ இய‌லாது.அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க‌ வேண்டும் என்கிறார்க‌ள். உதார‌ணமாக‌ இன்னும் மூன்று வார‌த்தில் ஒரு எரிக‌ல் நியூயார்க் ந‌க‌ரை தாக்க‌போகுது எனக்கொண்டால் ந‌ம்மால் க‌ட‌வுளிட‌ம் வேண்டிக்கொள்வ‌தை த‌விர‌ வேறெதுவும் செய்ய இய‌லாது என‌ அமெரிக்க‌ விண்வெளி ஆராய்ச்சி மைய‌ த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார். அவ‌ர் சொல்வ‌தும் ச‌ரிதான் எரிக‌ல்க‌ளை ந‌ம் இஷ்ட‌த்துக்கும் திருப்பிவிட‌ நாம் என்ன‌ க‌ட‌வுளா? க‌ர்த்த‌ர் யோபுவிட‌ம் கேட்கும் போது "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" என‌ கேட்கிறார் (யோபு:38:32).


நாம் ம‌ண் அல்ல‌வோ?(சங்:103:14).கர்த்தர் தான் ந‌ம்மை காக்க‌ வேண்டும்.க‌ர்த்த‌ர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.(சங்:127:2)

Thursday, March 14, 2013

இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்


"ஆத்துமாக்க‌ளின் இரட்சிப்பை இழிவாக‌ வ‌ஞ்சித்துக் கொண்டிருக்கும் போப்பாண்ட‌வ‌ரின் ப‌த‌வி ஒரு உண்மையான‌ நிஜ‌மான‌ அந்திகிறிஸ்துவின் ப‌த‌வி என்ப‌தை நாங்க‌ள் இங்கே குற்ற‌ஞ்சாட்டுகிறோம்.என்னைப் பொருத்த‌வ‌ரை போப்புக்கு கீழ்ப‌டிவ‌தும் அந்திக்கிறிஸ்துவுக்கு கீழ்ப‌டிவ‌தும் ஒன்று தான்." - ‍மார்ட்டின் லூத‌ர் (ஆக‌ஸ்ட் 18,1520)

அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி
இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள் (1 யோவா:2:18)


“We here are of the conviction that the papacy is the seat of the true and real Antichrist, against whose deceit and vileness all is permitted for the salvation of souls. Personally I declare that I owe the Pope no other obedience than that to Antichrist.” - Martin Luther (August 18,1520)

Taken from The Prophetic Faith of Our Fathers, Vol. 2., pg. 256 by Le Roy Edwin Froom.
http://docs.adventistarchives.org//docs/PFOF/PFOF1948-V02.pdf

என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன். தேவனே, உமக்கு நிகரானவர் யார்?.(ஏசாயா 48:11,சங்கீதம் 71:19)

Thursday, March 07, 2013

ஹியூகோ சாவேசும் கிறிஸ்துவும்


சில‌ர் இவ‌ரை புர‌ட்சியாள‌ன் என்ப‌ர்.வேறு சில‌ரோ இவ‌ரை ச‌ர்வாதிகாரி என்ப‌ர்.வெனிசுவேலாவின் அதிப‌ர் ஹியூகோ சாவேசின் ம‌ர‌ணம் அந்நாட்டினை மிகுந்த‌ துக்க‌த்தில் ஆழ்த்தியிருக்கிற‌து.ஒரு கால‌த்தில் ஈரானோடு கூட‌ கூட்டு சேர்ந்து கொண்டு அமெரிக்காவையே ஆட்டிப்ப‌டைத்த‌ இவ‌ர் இள‌மையில் ஒரு க‌த்தோலிக்க‌ பாதிரியாராக‌ மாறி சேவை செய்ய‌ விரும்பியிருக்கிறார் என்றால் உங்க‌ளால் ந‌ம்ப‌முடிகிற‌தா?.ம‌ர‌ம் அமைதியாக‌ இருக்க‌ விரும்பினாலும் காற்று விடுகிற‌தில்லையே.
த‌லாளித்துவ‌த்தை சாத்தானின் ச‌தி வேலை என‌ க‌டுமையாக‌ சாடிய‌ அவ‌ர், இயேசு கிறிஸ்துவின் பார்வையில் பொதுவுடைமையே ந‌ல்ல‌ ச‌முதாய‌த்தை உருவாக்க‌ முடியும் என‌ ந‌ம்பினார்."என்னை பொருத்த‌வ‌ரை முத‌ல் சோசிய‌லிஸ்ட் இயேசு கிறிஸ்துவே" என‌ உறுதியாக‌ கூறியிருந்த‌ அவ‌ர் ச‌மீப‌ கால‌மாக‌ புற்று நோயால் வாடியிருந்தார்."நான் இயேசுவோடு கொண்ட‌ உட‌ன்ப‌டிக்கையின் ப‌டி சீக்கிர‌மாக‌ குண்மாகிவிடுவேன்" என‌ ந‌ம்பிக்கையாக‌ கூறியிருந்தார். ஆனாலும் த‌ன‌து 58-ஆவ‌து வ‌ய‌தில் மார்ச் 5 ல் அவ‌ர் கால‌மானார்."நான் சாக‌ விரும்பவில்லை,என்னை சாக‌ விடாதிருங்க‌ள்" என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தைக‌ளாக‌ அமைந்த‌து.இஸ்ரேலை மிக‌வும் வெறுத்த‌ இவ‌ர், ஈரான் அதிப‌ர் ம‌ஹ்மூத் அக‌ம‌தின‌ஜாத்தின் மிக‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ராக‌ இருந்தார். ம‌ஹ்மூத் அக‌ம‌தின‌ஜாத் த‌ன‌து இர‌ங்க‌ல் செய்தியில் "உயித்தெழுத‌ல் நாளில் இயேசு கிறிஸ்துவோடு கூட‌ ஹியூகோ சாவேசும் உயிரோடு எழுந்து பூமியில் ச‌மாதான‌த்தையும்,சாந்த‌த்தையும் நீதியையும் நிலைநாட்டுவார்க‌ள்" என‌ கூறியிருக்கிறார்.

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். இயேசு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
(I கொரி:15:52,அப்:17:31)

Tuesday, March 05, 2013

வேதாகம‌‌த்தை நிரூபிக்கும்‌ வெட்டுக்கிளிக‌ள்.

வேதாக‌ம‌த்தில் மோசே கால‌த்தில் ப‌த்து வாதைக‌ளில் ஒன்றான‌ வெட்டுக்கிளிக‌ள் எகிப்து தேச‌ எல்லை எங்கும் வந்து இற‌ங்கிய‌தையும் அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடியதையும் தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது என‌வும் ப‌டிக்கிறோம். நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை என‌ வேதாக‌மத்தில் ப‌டிக்கிறோம் (யாத்:10:12-15).
ஆனால் அதை இவ்வுல‌க‌ ஞானிக‌ள் ஏதோ க‌ட்டுக்க‌தைக‌ள் என்பார்க‌ள். இந்த‌ வார‌த்தில் (மார்ச் 2,2013) இது போன்ற‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் அதே எகிப்து தேச‌த்தில் ச‌ம்ப‌வித்துள்ள‌து.30 மில்லிய‌ன் வெட்டுக்கிளிக‌ள் இருக்கும் என‌ க‌ணித்திருக்கிறார்க‌ள்.ப‌வுஞ்சு ப‌வுஞ்சாக‌ வ‌ந்து எகிப்து தேச‌த்தை முடியுள்ள‌து. இன்னும் மூன்று வார‌த்தில் Passover என‌ப்ப‌டும் இஸ்ரேலிய‌ர்க‌ள் எகிப்தைவிட்டு புற‌ப்ப‌ட்ட‌ தின‌ம் வர‌ இருக்க‌ வேத‌ம் குறிப்பிடும் அதே கால‌ வேளையிலேயே வெட்டுக்கிளிக‌ளும் வ‌ந்திருப்ப‌து வேதாக‌ம‌‌த்தை அத்த‌னை தெளிவாக‌ நிரூபிப்ப‌தோடு ந‌ம்மில் ப‌ல‌ரையும் ஆச்ச‌ரிய‌த்தில் உறைய‌வைத்துள்ளது.

http://newsfeed.time.com/2013/03/04/locust-swarms-descend-on-egypt-like-biblical-plague/

Friday, March 01, 2013

ச‌கோத‌ரி ஆர்த்தி க‌ணேஷ் (சினிமா ந‌டிகை)யின் சாட்சி.

உயிருள்ள‌ தெய்வ‌ம்.‍இயேசு விடுவிக்கிறார்.
கிறிஸ்து இயேசுவில் இவர்க‌ள் இறுதிவ‌ரை நிலைத்திருக்க‌ நாம் தொட‌ர்ந்து ஜெபிப்போம்.



Thanks:இயேசு விடுவிக்கிறார் Magazine March 2013

Saturday, February 23, 2013

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

உங்க‌ளுக்குத் தெரியுமா?
தேவ‌ன் அன்பாக‌வே இருக்கிறார்.
ஆனால் சில‌ காரிய‌ங்க‌ள் அவ‌ருக்கு அருவருப்பானவைகள்.
1.மேட்டிமையான கண்.
2.பொய்நாவு.
3.குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
4.துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்.
5.தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்.
6.அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி.
7.சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல்.
நீதிமொழிக‌ள்:6:16-19


Friday, February 22, 2013

விண்ணில் தோன்றிய‌ மின்ன‌ல்


போப் பென‌டிக்ட் அவ‌ர்க‌ள் த‌ன‌து ராஜினாமாவை அறிவித்த‌ சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளிலேயே ரோமாபுரி வானில் தோன்றிய‌ ஒரு அற்புத‌மான‌ மின்ன‌ல் இ‌து. அதை அப்ப‌டியே த‌‌ன‌து கேம‌ராவில் சிறைபிடித்துள்ளார் ஒரு இத்தாலிய‌ போட்டோகிராப‌ர். மின்ன‌ல் சொல்ல‌ வ‌ருவ‌து என்ன‌மோ?

சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். லூக்கா 10:18

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய (இயேசு கிறிஸ்துவினுடைய‌) வருகையும் இருக்கும். மத்தேயு 24:27
இதோ, சீக்கிரமாய் வருகிறேன் - இயேசு கிறிஸ்து

Friday, February 15, 2013

நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில், யூரல் மலை அமைந்த, செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில், காலை, விண்ணில் இருந்து பறந்து வந்த, விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது. இதனால், மக்கள் பீதியடைந்தனர்." இந்த சம்பவங்களில், 84 சிறுவர்கள் உள்பட, 900 பேர் காயமடைந்தனர்' என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று, "2012 டிஏ 14' என்ற, பெயர் கொண்ட ஆஸ்ட்ராய்டு(சிறுகோள்) ஒன்று, வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரஷ்யாவில், விழுந்த விண்கற்களுக்கும், இன்று பூமிக்கு அருகே வரும், 2012 டிஏ 14 க்கும் தொடர்பில்லை' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

வேதாக‌ம‌ம் சொல்லுகிற‌து. அந்நாட்களில் சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, இயேசு கிறிஸ்து வ‌ருகிறார்.மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அப்படியே ஆகும் ஆமென்.(மத்:24:29 மத்:24:6 வெளி1:7)
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=40617

Tuesday, February 12, 2013

அடுத்த‌ போப்,உல‌கின் இறுதி போப்?


12-ம் நூற்றாண்டை சேர்ந்த‌ செயின்ட் மாலாக்கி (Saint Malachy) எனும் ஐரிஷ் பிஷ‌ப், வ‌ர‌ப்போகும் 112 போப்க‌ளை குறித்து தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் (Prophecy of the Popes) சொல்லியிருக்கிறார். இப்போது ப‌த‌வி வில‌க‌ல் தெரிவித்துள்ள‌ போப் பென‌டிக்ட் (Benedict XVI) 111-வ‌து போப் ஆவார். அதாவ‌து அடுத்து வ‌ர‌ப்போகும் 112-வ‌து புதிய‌‌ போப் உல‌கின் க‌டைசி போப் என்றும் அவ‌ரை Peter the Roman என‌வும் அவ‌ர் குறிப்பி‌டுகிறார். பின்பு ரோம் ந‌க‌ர‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு போகும் என்று முன்னுரைத்துள்ளார். வேதாக‌மும் ஏழு ம‌லை ந‌க‌ர‌மாம் ரோமாபுரி ந‌க‌ர‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு போகும் என்றே முன்னுரைக்கிற‌து. அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம். அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். வெளி:17:9,18,16

Tuesday, January 08, 2013

ம‌ற‌க்க‌ முடியுமா இப்பாட‌ல்க‌ளை?