Wednesday, September 28, 2016

கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21


மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் #சேவை என்பதையே "மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்ற கிறிஸ்துவின் வாக்கியம் (மத் 25:40) பிரதிபலிக்கிறது. கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்றது #திருக்குறள். மூடநம்பிக்கைகள் நிறைந்திருந்த அக்காலங்களில் #கல்விப்பணி என்பது கண்ணில்லாதவர்களுக்கு கண்களை அளிப்பது போன்றிருந்தது. அப்படியே கல்விக் கண்கள் திறந்ததால் இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் (மத் 4:15). கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு என்றுமே #தமிழகம் நன்றிகடன் பட்டிருக்கிறது.


Tuesday, September 27, 2016

குறைந்த நீர்வளமிருந்தும் மிகுந்த பலனை கண்டடையும் #இஸ்ரேல், "நாம் செய்கிறது நியாயமல்ல" (2இராஜா:7:9) என உணர்ந்து தாங்கள் பெற்ற தொழில் நுட்பத்தையும் வளத்தையும் உலகத்தோடு பகிர்ந்து கொள்ள எப்போதுமே திறந்த மனதோடு வந்திருக்கிறார்கள். #யெகோவா தேவனின் அவர்களுக்கான வாக்குத்தத்தமும் நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன் என்பதல்லவா.(சகரியா:8:13) God’s people are blessed to bless others.


இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,. அவர்களை அழைத்துக் கொண்டுவருவேன்; அவர்கள் #எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன். சகரியா 8:7,8 I will save my people from the countries of the east and the west. I will bring them back to live in #Jerusalem; they will be my people, and I will be faithful and righteous to them as their God. Zechariah 8:7,8


ஏலியன்கள் என்றும் வேற்றுகிரகவாசிகள் என்றும் இவர்கள் கூறுவதும் எச்சரிப்பதும் எல்லாம் கடவுளைத்தான். முதல் முதலாக ஏலியன் கடத்திப்போனது (First documented alien abduction) ஏனோக்கைத்தான் என்கிறார்கள். இரகசிய வருகையையும் வேற்றுகிரகவாசிகள் வந்து நம்மில் பலரை கடத்திச்சென்று விட்டார்கள் (Mass alien abduction) என்று சொல்லி உலகத்தாரை நம்பவைப்பார்கள். கடவுள் என்றோ இயேசு கிறிஸ்துவின் வருகை என்றோ சொல்லமாட்டார்கள். ஏலியன்கள் படையெடுப்பு என சொல்லி ஏமாற்றுவார்கள். அதற்கான ஆரம்பங்கள் தான் இது. வேற்றுகிரகவாசிகள் பற்றி மிக அதிகமாக செய்திகள் இப்போது பேசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:21


Monday, September 26, 2016


Friday, September 23, 2016

அவனுக்கு கொஞ்சகாலம் மாத்திரமே உண்டு.அதனால் கோபம்.(வெளி 12:12)


மண் உழுது வளமாக்கி விதையிட்ட பிறகு அது வளர்வதுவரை ஒன்றும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஆனால் நாம் அந்த மண்ணிடமும் விதைகளிடமும் கனி தா ! கனி தா ! என்று இறைவன் செய்யும் வேலையில் குறுக்கிடுகிறோம். சங்கீதக்காரன் சொல்லுகிறான்.கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் என்று.(சங்கீதம் 40:1) ஆமென் பொறுமையோடு காத்திருப்போம்.


Wednesday, September 07, 2016

அன்று கண்ணீரோடு விதைக்கப்பட்ட‌ விதைகள். இன்று கனிகளாய் நாம்.



Tuesday, September 06, 2016

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.


Friday, September 02, 2016

கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை. ஏசாயா 50:7 The Lord GOD helps Me. Isaiah 50:7