Thursday, March 28, 2013

ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா


ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா
வேதாக‌ம‌த்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிட‌ப்ப‌டுவ‌துண்டு.
இந்த‌ நாட்டின் பிர‌தான‌ ந‌க‌ர‌மாக‌ இருந்த‌து தான் பெட்ரா. இப்ப‌டி
ஒரு‌ நாடே கிடையாது.இது ஒரு க‌ற்ப‌னை பிர‌தேச‌ம்.
இதிலிருந்தே வேதாக‌ம‌ம் ஒரு பொய் என‌ தெரிகிற‌து என‌
ஒரு கூட்ட‌த்தார் ஒரு கால‌த்தில் வேத‌த்தை அவ‌தூறு செய்து
கொண்டிருந்தார்க‌ள். புதைந்து போய் கிட‌ந்த‌ இந்த‌ பெட்ரா
ந‌க‌ர‌த்தை 1812ல் சுவீட‌னை சேர்ந்த‌ ஒரு யாத்ரீக‌ர் Johann Burckhardt
என்ப‌வ‌ர் க‌ண்டுபிடித்தார்.அத‌ன் பிற‌கு அவ‌ர்க‌ள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயின‌ர்.வேதாக‌ம‌ம் சொல்வ‌தெல்லாம் உண்மை
என‌ மீண்டும் ஒரு முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த பெட்ரா நக‌ர‌ம்
முழுக்க‌ முழுக்க‌ பாறைக‌ளை குடைந்தே செதுக்கி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.
ப‌ல‌ ஆச்ச‌ரிய‌ அதிச‌ய‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. ஆனால் வேதாக‌ம‌ம்
முன்னுரைத்த‌ப‌டி இந்ந‌க‌ர‌ம் பாழாய்போன‌து.

எரேமியா:49:17 சொல்கிற‌து "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" ‌.ஆமாங்க‌ய்யா..ஒபாமா கூட‌ பார்த்து பிர‌மித்துப்போனார்.

Edom shall be a desolation: every one that goeth by it shall be astonished. Jeremiah 49:17

Thursday, March 21, 2013

ஜெபிக்க‌ சொல்லும் நாசா


பூமிக்கு மிக‌த்தொலைவிலுள்ள‌ கோள்க‌ளையெல்லாம் வ‌லிமை மிக்க‌ விண்நோக்கிக‌ள் மூல‌ம் க‌ண்டு ஆராயும் விஞ்ஞானிக‌ளுக்கு பூமிக்கு மிக‌ அருகில் பூமியை தாக்க‌க்கூடிய‌ தொலைவிலுள்ள‌ விண்க‌ல்க‌ளை க‌ண்டுபிடிப்ப‌து மிக‌ சிர‌ம‌மாக‌ இருக்கிற‌தாம். அப்ப‌டியே பூமியை தாக்க‌ வ‌ரும் விண்க‌ற்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டாலும் கூட‌ இப்போதைய‌ தொழில்நுட்ப‌த்துக்கு ந‌ம்மால் ஒன்றும் செய்ய‌ இய‌லாது.அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க‌ வேண்டும் என்கிறார்க‌ள். உதார‌ணமாக‌ இன்னும் மூன்று வார‌த்தில் ஒரு எரிக‌ல் நியூயார்க் ந‌க‌ரை தாக்க‌போகுது எனக்கொண்டால் ந‌ம்மால் க‌ட‌வுளிட‌ம் வேண்டிக்கொள்வ‌தை த‌விர‌ வேறெதுவும் செய்ய இய‌லாது என‌ அமெரிக்க‌ விண்வெளி ஆராய்ச்சி மைய‌ த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார். அவ‌ர் சொல்வ‌தும் ச‌ரிதான் எரிக‌ல்க‌ளை ந‌ம் இஷ்ட‌த்துக்கும் திருப்பிவிட‌ நாம் என்ன‌ க‌ட‌வுளா? க‌ர்த்த‌ர் யோபுவிட‌ம் கேட்கும் போது "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" என‌ கேட்கிறார் (யோபு:38:32).


நாம் ம‌ண் அல்ல‌வோ?(சங்:103:14).கர்த்தர் தான் ந‌ம்மை காக்க‌ வேண்டும்.க‌ர்த்த‌ர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.(சங்:127:2)

Thursday, March 14, 2013

இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்


"ஆத்துமாக்க‌ளின் இரட்சிப்பை இழிவாக‌ வ‌ஞ்சித்துக் கொண்டிருக்கும் போப்பாண்ட‌வ‌ரின் ப‌த‌வி ஒரு உண்மையான‌ நிஜ‌மான‌ அந்திகிறிஸ்துவின் ப‌த‌வி என்ப‌தை நாங்க‌ள் இங்கே குற்ற‌ஞ்சாட்டுகிறோம்.என்னைப் பொருத்த‌வ‌ரை போப்புக்கு கீழ்ப‌டிவ‌தும் அந்திக்கிறிஸ்துவுக்கு கீழ்ப‌டிவ‌தும் ஒன்று தான்." - ‍மார்ட்டின் லூத‌ர் (ஆக‌ஸ்ட் 18,1520)

அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி
இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள் (1 யோவா:2:18)


“We here are of the conviction that the papacy is the seat of the true and real Antichrist, against whose deceit and vileness all is permitted for the salvation of souls. Personally I declare that I owe the Pope no other obedience than that to Antichrist.” - Martin Luther (August 18,1520)

Taken from The Prophetic Faith of Our Fathers, Vol. 2., pg. 256 by Le Roy Edwin Froom.
http://docs.adventistarchives.org//docs/PFOF/PFOF1948-V02.pdf

என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன். தேவனே, உமக்கு நிகரானவர் யார்?.(ஏசாயா 48:11,சங்கீதம் 71:19)

Thursday, March 07, 2013

ஹியூகோ சாவேசும் கிறிஸ்துவும்


சில‌ர் இவ‌ரை புர‌ட்சியாள‌ன் என்ப‌ர்.வேறு சில‌ரோ இவ‌ரை ச‌ர்வாதிகாரி என்ப‌ர்.வெனிசுவேலாவின் அதிப‌ர் ஹியூகோ சாவேசின் ம‌ர‌ணம் அந்நாட்டினை மிகுந்த‌ துக்க‌த்தில் ஆழ்த்தியிருக்கிற‌து.ஒரு கால‌த்தில் ஈரானோடு கூட‌ கூட்டு சேர்ந்து கொண்டு அமெரிக்காவையே ஆட்டிப்ப‌டைத்த‌ இவ‌ர் இள‌மையில் ஒரு க‌த்தோலிக்க‌ பாதிரியாராக‌ மாறி சேவை செய்ய‌ விரும்பியிருக்கிறார் என்றால் உங்க‌ளால் ந‌ம்ப‌முடிகிற‌தா?.ம‌ர‌ம் அமைதியாக‌ இருக்க‌ விரும்பினாலும் காற்று விடுகிற‌தில்லையே.
த‌லாளித்துவ‌த்தை சாத்தானின் ச‌தி வேலை என‌ க‌டுமையாக‌ சாடிய‌ அவ‌ர், இயேசு கிறிஸ்துவின் பார்வையில் பொதுவுடைமையே ந‌ல்ல‌ ச‌முதாய‌த்தை உருவாக்க‌ முடியும் என‌ ந‌ம்பினார்."என்னை பொருத்த‌வ‌ரை முத‌ல் சோசிய‌லிஸ்ட் இயேசு கிறிஸ்துவே" என‌ உறுதியாக‌ கூறியிருந்த‌ அவ‌ர் ச‌மீப‌ கால‌மாக‌ புற்று நோயால் வாடியிருந்தார்."நான் இயேசுவோடு கொண்ட‌ உட‌ன்ப‌டிக்கையின் ப‌டி சீக்கிர‌மாக‌ குண்மாகிவிடுவேன்" என‌ ந‌ம்பிக்கையாக‌ கூறியிருந்தார். ஆனாலும் த‌ன‌து 58-ஆவ‌து வ‌ய‌தில் மார்ச் 5 ல் அவ‌ர் கால‌மானார்."நான் சாக‌ விரும்பவில்லை,என்னை சாக‌ விடாதிருங்க‌ள்" என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தைக‌ளாக‌ அமைந்த‌து.இஸ்ரேலை மிக‌வும் வெறுத்த‌ இவ‌ர், ஈரான் அதிப‌ர் ம‌ஹ்மூத் அக‌ம‌தின‌ஜாத்தின் மிக‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ராக‌ இருந்தார். ம‌ஹ்மூத் அக‌ம‌தின‌ஜாத் த‌ன‌து இர‌ங்க‌ல் செய்தியில் "உயித்தெழுத‌ல் நாளில் இயேசு கிறிஸ்துவோடு கூட‌ ஹியூகோ சாவேசும் உயிரோடு எழுந்து பூமியில் ச‌மாதான‌த்தையும்,சாந்த‌த்தையும் நீதியையும் நிலைநாட்டுவார்க‌ள்" என‌ கூறியிருக்கிறார்.

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். இயேசு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
(I கொரி:15:52,அப்:17:31)

Tuesday, March 05, 2013

வேதாகம‌‌த்தை நிரூபிக்கும்‌ வெட்டுக்கிளிக‌ள்.

வேதாக‌ம‌த்தில் மோசே கால‌த்தில் ப‌த்து வாதைக‌ளில் ஒன்றான‌ வெட்டுக்கிளிக‌ள் எகிப்து தேச‌ எல்லை எங்கும் வந்து இற‌ங்கிய‌தையும் அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடியதையும் தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது என‌வும் ப‌டிக்கிறோம். நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை என‌ வேதாக‌மத்தில் ப‌டிக்கிறோம் (யாத்:10:12-15).
ஆனால் அதை இவ்வுல‌க‌ ஞானிக‌ள் ஏதோ க‌ட்டுக்க‌தைக‌ள் என்பார்க‌ள். இந்த‌ வார‌த்தில் (மார்ச் 2,2013) இது போன்ற‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் அதே எகிப்து தேச‌த்தில் ச‌ம்ப‌வித்துள்ள‌து.30 மில்லிய‌ன் வெட்டுக்கிளிக‌ள் இருக்கும் என‌ க‌ணித்திருக்கிறார்க‌ள்.ப‌வுஞ்சு ப‌வுஞ்சாக‌ வ‌ந்து எகிப்து தேச‌த்தை முடியுள்ள‌து. இன்னும் மூன்று வார‌த்தில் Passover என‌ப்ப‌டும் இஸ்ரேலிய‌ர்க‌ள் எகிப்தைவிட்டு புற‌ப்ப‌ட்ட‌ தின‌ம் வர‌ இருக்க‌ வேத‌ம் குறிப்பிடும் அதே கால‌ வேளையிலேயே வெட்டுக்கிளிக‌ளும் வ‌ந்திருப்ப‌து வேதாக‌ம‌‌த்தை அத்த‌னை தெளிவாக‌ நிரூபிப்ப‌தோடு ந‌ம்மில் ப‌ல‌ரையும் ஆச்ச‌ரிய‌த்தில் உறைய‌வைத்துள்ளது.

http://newsfeed.time.com/2013/03/04/locust-swarms-descend-on-egypt-like-biblical-plague/

Friday, March 01, 2013

ச‌கோத‌ரி ஆர்த்தி க‌ணேஷ் (சினிமா ந‌டிகை)யின் சாட்சி.

உயிருள்ள‌ தெய்வ‌ம்.‍இயேசு விடுவிக்கிறார்.
கிறிஸ்து இயேசுவில் இவர்க‌ள் இறுதிவ‌ரை நிலைத்திருக்க‌ நாம் தொட‌ர்ந்து ஜெபிப்போம்.Thanks:இயேசு விடுவிக்கிறார் Magazine March 2013