Saturday, September 25, 2021
தற்கொலை எண்ணங்களுடன் சிரமப்பட்டேன் - நடிகை மோகினி
Wednesday, September 18, 2013
Monday, September 02, 2013
கிறிஸ்துவை நேசிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் சாட்சி
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.வெளி 3:8
Tamil Cinema Director Mr.Prabhu Solomon Testimony.
Friday, August 02, 2013
கிறிஸ்துவை கண்டு கொண்ட நடிகர் ஜூனியர் பாலையா அவர்களின் சாட்சி
பீட்டர் என்கிற நடிகர் ஜூனியர் பாலையா கிறிஸ்துவை கண்டு கொண்ட சாட்சி
Part 1
Part 2
Part 3
Part 4
”காதலிக்க நேரமில்லை” புகழ் பிரபல நடிகர் திரு.T.S பாலையா அவர்களின் புதல்வனான திரு.ஜூனியர் பாலையா அவர்களின் குடும்பத்தில் ஒரு காலத்தில் பணத்திற்கு பஞ்சமில்லாதிருந்தது. T.S பாலையா அவர்களின் சொத்து ஒரு காலத்தில் 240 ஏக்கர் தேரும். இது சென்னையில் மட்டும். இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களில் தலையில் கொட்டுவார்களாம். இன்றைக்கும் இவரது தாயார், சகோதரர் மற்றும் ஜூனியர் பாலையா அவர்களின் பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது. மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர், மனம் போன போக்கில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளக்கூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.
இவர் நடித்த முதல் படத்திற்கு பிறகு 3-ம் நாளில் இவரின் தந்தை இறந்து விட்டார். வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதன் பிறகு இவரின் தாயார் சுகவீனமாய் படுத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நிலம் விற்பது தொடர்பாக ஓர் பிரச்சினை ஆரம்பித்து தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் இவரை ஆட்டிபடைக்க ஆரம்பித்தது. யோபு 3:25 ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று சொல்லப்பட்டது போல் இவரின் வாழ்க்கையிலும் ஆனது. விக்கிரகங்களை வணங்கினால் பயம் நீங்கும் என்று பலரும் சொன்னதால் பல இந்து கோவில்களுக்கு சென்று வழிபடுவார். போகாத இடம் இல்லை. ஆனாலும் பயத்தில் தூக்கம் இல்லாமல் போனது. பயங்கர குடிகாரனார். குடும்பத்தில் சேமிப்பு எதுவும் கிடையாததால் தந்தை இறந்த பிறகு இவரின் தாயாருக்கு நெருக்கமானவர்கள் அவரை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டனர். இதன் மூலம் பல துயரங்களுக்கு இவர் ஆளாகிப்போனார். அதுவரை பணத்தின் பெருமையில் உல்லாசமாக இருந்த இவரின் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் என்று பல புயல்களில் அகப்பட்டு இருள் என்னும் ஓர் மாயைக்குள் திணிக்கப்பட்டார். சினிமா உலகில் ஸ்ட்ரைக் நடந்த போது இவருக்கு வேலை இல்லாமல் போனது. வருமானமும் நின்று விட்டது. சேமிப்பு இல்லாததினால் கடன் வாங்க ஆரம்பித்தார். நாளடைவில் கடன் அடைக்க முடியாமல் கடனாளியானார்.
நண்பர்கள் மாயமாகிப் போனார்கள். ஒரு முறை ஒரு நண்பன் வீட்டிற்கு சென்ற போது அவர் இவரின் வருகையை தெரிந்து கொண்டு "என்ன செக் bounce ஆகிவிட்டதா என்று சத்தம் போட்டு அவமானப்படுத்தினதாக மனவருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இதன் மத்தியில் இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் சகோதரி தனக்கிருந்த கிழிந்த ஓர் வேதாகமத்தை இவர் மனைவியிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதை படித்த மாத்திரத்தில் தேவன் அவரிடம் பேசுவதை உணர்ந்த அவர் மனைவி இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சராக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஓர் ஆலயத்தில் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார். இதை ஜூனியர் பாலையாவிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவரோ அதை கண்டுகொள்ளவில்லை. ஓர் நாள் கடன் கொடுத்த நண்பர் வீட்டிற்கு வந்து ஜூனியர் பாலையா தற்கொலை செய்து கொண்டால் கடனை திருப்பி தர வேண்டாம் என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட ஜூனியர் பாலையா தற்கொலை செய்துகொள்ளலாமென எண்ணி நன்றாக குடித்துக்கொண்டு காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். சென்ற வேகத்திலேயே மீண்டும் கடவுள் கிருபையால் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு இவர் மனைவி இவரை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். ஆலயத்தில் அழுகையோடு "ஏசுவே, ஏசுவே" என்று வேதனையில் கதறின போது தன் கைப்பேசி அழைக்கவே எடுத்து பேசியிருக்கிறார். அதில் இவரை ஏமாற்றி சொத்தை, பணத்தை அபகரித்தவர் மீண்டும் பணத்தை கொடுப்பதாக சொன்னார். இவரால் நம்பவே முடியவில்லை. தேவன் அங்கேயே ஓர் அற்புதத்தை செய்தார். ஜூனியர் பாலையா அவர்கள் இரட்சிக்கப்பட்டு 10-4-2013 அன்று ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இன்று தேவனை அறியாத மக்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறார். அல்லேலூயா. ஆமென்.
இந்த சாட்சியை படித்த எனக்கன்பான கிறிஸ்தவ பெயரை வைத்துகொண்டு உலகபிரகாரமாய் வாழும் கிறிஸ்தவ நண்பர்களே, மற்ற மதங்களை சேர்ந்த சகோதர சகோதரிகளே "இயேசு உங்களை நேசிக்கிறார்" வேதாகமத்தில் ஓர் வசனம் உண்டு "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்". இது தேவன் கொடுக்கும் ஓர் அன்பான அழைப்பு. நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி. இருக்கிற வண்ணமாகவே இயேசுவினிடத்தில் வாருங்கள். உங்கள் வாழ்க்கையும் மாறும். பரிசுத்த வேதாகமம் எங்காவது கிடைத்தால் தவறாது வாசியுங்கள். தேவன் உங்களோடு பேசுவார். உங்கள் காதுகள் நிச்சயம் கேட்கும்.
எனக்கு அன்பானவர்களே... ஜூனியர் பாலையா சொல்வதெல்லாம் தான் கஷ்டப்பட்ட போது யாரும் வந்து இந்த இயேசுவை தனக்கு சொல்லவில்லை என்பது தான். அன்பு நண்பர்களே, இந்த சாட்சியையாவது உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் தேவனை அறிந்து கொள்ளட்டும். தொடர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். என்றாவது ஓர் நாள் அவர்கள் தேவனுக்குள்ளாக வருவார்கள். உங்கள் நண்பர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கூட வேலை செய்பவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கலாமே. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக.
Credit goes to www.healingstripesministry.org
G-5, Ist Floor,
II Block,
Malligai Street,
Brindavan Nagar,
Koyambedu,
Chennai-600 092,
Tamil Nadu,
South India.
healingstripesministry@gmail.com
Contact Numbers
+91-9884428222
+91-9840454423
Video testimony of Bro. Junior Balaiah - An actor turned Evangelist, proclaiming Jesus Christ as the only true God and Savior of man kind.
Friday, March 01, 2013
சகோதரி ஆர்த்தி கணேஷ் (சினிமா நடிகை)யின் சாட்சி.
உயிருள்ள தெய்வம்.இயேசு விடுவிக்கிறார்.
கிறிஸ்து இயேசுவில் இவர்கள் இறுதிவரை நிலைத்திருக்க நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.
Thanks:இயேசு விடுவிக்கிறார் Magazine March 2013
Wednesday, August 29, 2012
வில்லியம் கோல்கேட் கண்ட ஆசீர்வாதம்
நாட்டுபுற பையனுக்கு நகரத்தில் வேலை கிடைப்பதென்பது மிகவும் கடினமாக காரியமாக இருந்தது. அவனது தாயாரின் இறுதி வார்த்தைகளும் தான் பயணித்து வந்த படகின் கேப்டனும் அவனுக்கு கொடுத்த தெய்வீக ஆலோசனைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. தனது வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புவித்து தனது வருமானத்தின் ஒவ்வொரு டாலரிலும் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக தேவனுக்கு கொடுக்க முடிவெடுத்தான். முதல் டாலர் வருமானம் வந்ததும் அதில் பத்தில் ஒரு பங்கான பத்து செண்டை தேவனுக்கு கொடுத்தான். தொடர்ந்து அவன் அதை செய்ய ஆரம்பித்தான். டாலர்கள் கொட்ட ஆரம்பித்தன. சீக்கிரத்தில் இவன் ஒரு சோப்பு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனான். சில வருடங்கள் கழித்து இவன் உடன் பங்குதாரர் மரித்து போகவே மொத்த நிறுவனத்தின் பொறுப்பும் இவன் கையில் வந்தது. இவன் இப்போது ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனாலும் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கராராக செலுத்த தன் கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதிசயகரமாக இவரது தொழில் வளர்ந்தது.நேர்மையான இந்த மனிதர் பின் தேவனுக்கு பத்தில் இரண்டு பங்கை வழங்க தொடங்கினார்.பின் பத்தில் மூன்று பங்கு, பின் பத்தில் நான்கு பங்கு, பின் பத்தில் ஐந்து பங்கு என இறைவனுக்கு தாராளமாக வழங்கினார். விரைவில் உலகமெங்கும் வீடுகள் தோறும் உச்சரிக்கப்படும் பொருளாகி விட்டது இவர் தயாரிப்புகள்.
அவர் தான் மறைந்து போன வில்லியம் கோல்கேட்(1783–1857).William Colgate கோல்கேட் பிராண்டு தயாரிப்புகளின் நிறுவனர், சொந்தக்காரர். தேவன் மீது கொண்ட அவரது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டது.கோல்கேட் நிறுவனத்தின் இன்றைய நிர்வாகம் பற்றி நமக்கு அதிகமாய் தெரியாவிட்டாலும் அந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கான இரகசியத்தை நாம் இங்கே கூறியிருக்கிறோம். இக்கதை இங்கே கோல்கேட் பொருட்களை விளம்பரப்படுத்த எழுதப்படாமல் கடவுள் மீது விசுவாசம் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதை நேர்மையாக கொடுத்து வந்தால் அதை தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தை விளம்பரப்படுத்துகிறதாய் இருக்கிறது.
ஆதாரம்
God`s Tenth and Man`s Mite - By Ashley G. Emmer,Signs of the Times, August 2, 1938.
மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Saturday, August 11, 2012
நன்றி மறவாத சாதனைப் பெண் - மேரி கோம்
வெண்கலப் பதக்கத்தை வென்றுவிட்ட தன்னால் தங்கமோ,வெள்ளியோ வாங்க முடியாததற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்திய மக்களின் ஆதரவு தமக்கு ஆமோகமாக இருந்தது என பெருமையாக பேசிக்கொண்ட அவர் ”என்னால் முடிந்த அளவுக்கும் கடினமாக உழைத்தேன். இந்த பதக்கமாவது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே” என்றார். “இது ஒரு விளையாட்டு, சில சமயங்களில் எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல அமையாது. ஆனாலும் இது மட்டாகிலும் வந்ததற்கு இயேசுவுக்கு நன்றி. ஒலிம்பிக்கில் நுழையவேண்டும் என்பது என் 12 வருட போராட்டம்.அந்த கனவு இப்போது நனவானதற்காக ரொம்ப சந்தோசம்” என மகிழ்ச்சி பொங்க கூறினார் அவர். ரேடியோ ஆஸ்திரேலியாவுக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில் ”நான் குத்துச்சண்டை வளையத்தில் நுழைந்ததும், ஆட ஆரம்பிக்கும் முன் முதல் ஐந்து அல்லது பத்து வினாடிகள் நான் நம்பும் என் இறைவன் இயேசுவிடம் பிரார்த்தனை செய்து விட்ட பின் தான் என் விளையாட்டை தொடங்குவேன்” என குறிப்பிட்டிருந்தார். இப்போது புரிகின்றதா அவர் வாழ்வின் வெற்றியின் இரகசியம்.
வாழ்த்துக்கள் ஒலிம்பிக் இந்தியா!
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Wednesday, August 01, 2012
தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
இந்த கடைசி காலத்தில் தமிழ் திரைப்பட உலகின் மத்தியிலும் கர்த்தர் பெரிதான காரியங்களை செய்துவருகிறார். கர்த்தருக்கே மகிமை. கிறிஸ்துவின் வல்லமையை தமிழ் திரைஉலகினர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு அனைவரும் அவர் அன்பிற்குள் வர நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டும். ஒருவரையும் புறம்பே தள்ளுகிற தேவன் நம் தேவன் அல்லவே.
http://www.youtube.com/watch?v=o7wS85Fp_to
http://www.youtube.com/watch?v=VODfw5RB1lA
http://www.youtube.com/watch?v=oPJtfu9U_1I
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா.
யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
Tuesday, July 17, 2012
பாஸ்டர் M.S.வசந்தகுமாருடன் ஒரு நேர்முக பேட்டி
l
http://www.youtube.com/watch?v=TajA7a3Kvlo
Pastor. M.S. Vasanthakumar Interview
Founder and president of Tamil Bible Research Center
Credit goes to Tamil Christian Media and
http://tamilbibleresearchcentre.com/
Telephone Number :
020 8374 4004
Mobile Number:
07814 252 077
Postal Address:
M.S Vasanthakumar
8 Broadlands Avenue,
Enfield,
London.
EN3 5AH
United Kingdom
E-Mail: msvtbrc@googlemail.com
Tuesday, July 10, 2012
உயிர்த்தெழுதல் நடந்ததா?

இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆல்பர்ட் ஹென்றி ராஸ் (Albert Henry Ross,1881-1950). இவர் பிராங்க் மாரிசன் (Frank Morison) என்கின்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் எழுதிய பல புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிறிஸ்தவ மதம் என்றாலே எட்டிக்காய் போல வெறுப்பவர். இவர் இயேசுவின் உயிர்தெழுதலே சம்பவிக்கவில்லையென்று ஒரு நூல் எழுதினால் பல கிறிஸ்தவர்களை கிறிஸ்துவை விட்டு பிரித்து விடலாம் என்று திட்டமிட்டார். இதற்கான புத்தகத்தை எழுதுவதற்காக வேதாகமத்தை இரவும் பகலுமாக வாசிக்க ஆரம்பித்தார். புத்தகத்தின் சில பக்கங்களை எழுதவும் துவங்கி விட்டார். இவர் கிறிஸ்துவுக்கு விரோதமாக புத்தகம் எழுதுவதை கேள்விப்பட்ட சில உண்மையான கிறிஸ்தவர்கள் இவருக்காக ஜெபித்தார்கள். இந்நிலையில் வேதம் இவர் மனதில் கிரியை செய்யத் துவங்கியது. முதல் அத்தியாயம் எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே கிறிஸ்துவின் விசுவாசியாக மாறினார். கடைசியில் இயேசு மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் என்று பலமான சாட்சிகளுடன் தன் புத்தகத்தை எழுதி முடித்தார். அவர் எழுதிய நூலின் பெயர் Who moved the stone? 1930ம் ஆண்டில் முதலில் வெளியான இப்புத்தகம் பிற்பாடு 1944, 1955, 1958, 1962, 1977, 1981, 1983, 1987, 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படி இந்த புத்தகம் இலட்சக்கணக்காக விற்பனையாயின. ஆங்கிலத்தில் இயேசுவைப் பற்றிச் சொல்லும் புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் புத்தகம்.
சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
Thursday, May 03, 2012
கிறிஸ்துவை கண்டு கொண்ட பிரபல பாடகர் அணில் கன்ட்
இன்று கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கும் பாஸ்டர் அணில் கண்ட் அவர்கள் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வைராக்கியமான இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்து பாரம்பரியப்படியும் இந்து வேதங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டும் வளர்க்கப்பட்டவர். சிறு வயதிலேயே பிரபல இசைக்கலைஞராக உருவெடுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் கசல் (Ghazal) இசைக் கச்சேரிகள் நடத்தியவர் . எனினும் அவரின் ஆன்மீக தேடல்கள் நிற்கவில்லை. பல்வேறு கேள்விகளோடு அலைந்து கொண்டிருந்த அவருக்கு இயேசு கிறிஸ்துவானவர் பதிலாக வந்தார். அவரது அனைத்து விடை கிடைக்கா வினாக்களுக்கும் பதில் கிடைத்தது. சமாதானமும் சந்தோசமும் அவரை வந்தடைந்தது. இன்று குடும்பமாக கிறிஸ்துவின் புகழ் பாடி வருகிறார்கள். வட இந்திய கிறிஸ்தவ உலகில் இவர்கள் பாடல்கள் மிகவும் பிரபலம். நீங்களும் பார்த்து பகிர்ந்து மகிழ இங்கே சில, தேவனை துதிபாடும் இந்தி பாடல்கள்.
பாஸ்டர் அனில்கந்த் அவர்களின் சாட்சியை படிக்க
http://www.anilkant.org/anilkant-testimony.html
Bro.AnilKant Testimony in English
Bro.Anil Kant Testimony in Hindi
Hindi songs by Anil Kant,wife Reena Kant and daughter Shreya Kant
Pray For India
Sing unto the Lord
Ibadat karo
Meri Rooh
சங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்.
Thursday, April 12, 2012
பாலிவுட் நடிகர் ஜானி லீவரின் சாட்சி
முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவரின் (Johnny Lever) சாட்சியை நீங்கள் இங்கே கேட்கலாம். இது போன்ற பிரபலங்கள் தேவனுக்கு சாட்சியாக இறுதி வரைக்கும் நிலைத்திருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 8:29 தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
Testimony of Bollywood comedian Johnny Lever at an event in Queens New York.Hindi translated to English.
Watch it on a Cell Phone
His interview in Hindi
Friday, March 16, 2012
முன்னாள் திரைப்பட நடிகை மகாலட்சுமியின் சாட்சி
1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. நீங்கள் விசுவாசத்தில் வளரவும் உறுதிப்படவும் இங்கே வழங்குகிறோம். இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.
Testimony of old Kannada actress Mahalakshmi Shree daughter of AVM Rajan.
Part:1
Part:2
Download as MP3
AVM Rajan daughter Mahalakshmi Testimony 01
AVM Rajan daughter Mahalakshmi Testimony 02
எபிரெயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
Wednesday, February 29, 2012
ஆந்திர திரைப்பட நடிகர் ராஜாவின் சாட்சி
தெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக இருந்தவர் ராஜா ஏபல் (Raja Abel-రాజా అబెల్ ). ஆனந்த்(2004),சொந்த ஊரு(2009) முதலான பிரபல தெலுங்கு திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது கிறிஸ்துவின் அடியானாக மாறியுள்ள சகோதரன் ராஜாவின் சாட்சியை இங்கே நீங்கள் கேட்கலாம். கிறிஸ்துவுக்குள்ளாக வந்து கொண்டிருக்கும் இது போன்ற பிரபலங்கள் தேவனில் இறுதி வரைக்கும் நிலைத்திருக்க நாம் அனுதினமும் ஜெபிக்கவேண்டியது நம் கடமையாகின்றது.
யோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
நடிகர் ராஜாவின் சாட்சி தெலுங்கு மொழியில் (Actor Raja Abel Testimony in Telugu)
நடிகர் ராஜாவின் சாட்சி ஆங்கிலத்தில் (Actor Raja Abel Testimony in English)
Part 1
Part 2
Part 3
Part 4
Related Post:
இயேசு கிறிஸ்துவிடம் மனம்திரும்பி வந்த நடிகை நக்மாவின் சாட்சி
Wednesday, January 18, 2012
கால்பந்தாட்டக் களத்திலும் முழங்கால்
அமெரிக்க கால்பந்தாட்ட களத்தில் டிம் டிபோவின் (Tim Tebow) பெயர் மிக சர்ச்சைக்குரியது. இவரை பெரிதாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள், கடுமையாக தூசிப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் டிபோ வெளிப்படையாக தனது கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை தெரிவிப்பதுதான். பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்களை எப்போதுமே வெளியில் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். அதிலும் விஐபியாக இருப்பவர்கள் கப்சிப்பென ஒரு இரககசிய கிறிஸ்தவரை போலவே நடந்துகொள்வார்கள். ஆனால் டிம் டீபோவோ வித்தியாசமானவர். அமெரிக்கர்கள் வெறித்தனமாக ரசிக்கும் கால்பந்தாட்டக் களத்தில் கூட தலை குனிந்து தேவனை நோக்கி விண்ணப்பம் ஏறெடுக்க தயங்காதவர்.(படம்:Tim Tebow in his trademarked prayer pose.) தைரியமாக தனக்கு கிறிஸ்துவின் மீது உள்ள நம்பிக்கையை உலகுக்கு எடுத்துக்கூற துணிந்தவர். இந்த நவநாகரீக உலகில் கிறிஸ்துவுக்கான இதுபோன்ற சாட்சியங்கள் மிகவும் அபூர்வமானவை.
டிம் டிபோ ”டென்வர் பிராங்காஸ்” (Denver Broncos) அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு முறை புளோரிடா யூனிவர்சிட்டி போட்டியின் போது இவர் தனது முகத்தில் யோவான் 3:16 என வர்ணம் தீட்டிக்கொண்டு விளையாட அன்றையதினம் மட்டும் கூகிள் தேடு தளத்தில் 92 மில்லியன் தடவை “John 3:16" என்றால் என்ன என மக்கள் தேடியிருக்கிறார்கள். அந்த வசனம் இப்படியாக பிரபல்யம் அடைந்தது. தனது டிவிட்டரில் அடுக்கடுக்காக வேத வசங்களை வெளியிடுபவர் இவர்.800,000 பேர் இவரின் டிவிட்டர் ஃபாலோவர்கள். இவரின் பேஸ்புக் அக்கவுண்டில் 1.3 மில்லியன் பேர் ரசிகர்கள்.
இளவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட டிம் டிபோ கால்பந்து களத்திலிருந்து கொண்டே இப்படி பல விதங்களிலும் சுவிசேசத்தை அறிவிக்க முயன்று கொண்டு வருகிறார். இதனால் இவரை எதிர்ப்பவர்களும் பெருகியிருக்கிறார்கள்.”I hate Tim Tebow" என பேஸ்புக் பக்கங்களும் “TebowHaters.com" போன்ற தளங்களும் ஆன்லைனில் பெருகி உள்ளன.
ஜனவரி 16-ல் அமெரிக்காவில் வெளியான டைம் பத்திரிகை எழுதும் போது பொது இடத்தில் தொழகை அல்லது ஜெபம் அல்லது பிரார்த்தனை செய்வதை "Tebowing" எனலாம் என்கின்ற அளவுக்கு டிம் டிபோவின் ஆன்மீக வாழ்க்கை அமைந்துள்ளதாக கூறியுள்ளது.
Monday, January 16, 2012
மனம் மாறிய மந்திரவாதி
Credit goes to Kalungady.com
Related Post:
இயேசு கிறிஸ்துவிடம் மனம்திரும்பி வந்த மந்திரவாதி திரு.தொட்டணா அவர்களின் கதை.
Thursday, December 29, 2011
கிறிஸ்துவின் நிமித்தம், தலை துண்டிப்பு!
நன்றி இயேசு விடுவிக்கிறார் டிசம்பர் 2011
Wednesday, December 21, 2011
ஹமாஸ் தீவிரவாத இயக்கத் தலைவரின் மகன் கிறிஸ்துவை பின்பற்றும் அதிசயம்
நன்றி : ஜீவஊற்று பத்திரிக்கை. May 2011.
via Jeevapathail Ministries : Bro.Karthikstephen.
கலாத்தியர் 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
Wednesday, December 07, 2011
சகோ.டைட்டஸ் தாயப்பன் அவர்களின் சாட்சி Pdf புத்தகம் டவுன்லோட்
என் அழுகையும் ஆனந்தமும் - சகோதரர் S.தாயப்பன் அவர்களின் உயிரோட்டமுள்ள சாட்சியம் தமிழில்
MY CRY AND JOYFUL NEW LIFE by BROTHER. S.THAYAPPAN in ENGLISH - A soul striring mighty testimony.
S.Thayappan
No.12, GD Naidu Street, Balaji Avenue-I,
Chitlapakkam Main Road,
Selaiyur Post, Chennai – 600 073
South India. Telephone # (0091-044) 2223 4526
E-Mail – sakthiprabha@yahoo.com
Tuesday, November 15, 2011
சகோ.டைட்டஸ் தாயப்பன் வாழ்வில் இயேசு செய்த அற்புதங்கள் வீடியோ
இந்து மதத்தில் தீவிரமாயிருந்து பின் கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சகோ.டைட்டஸ் தாயப்பன் அவர்களின் வாழ்வில் இயேசு செய்த மாபெரும் அற்புதங்கள் சாட்சியாக இங்கே வீடியோவில்.
Hindu To Christian Testimony in Tamil Language - Bro. Titus Thayappan
Download this video.
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்