Sunday, October 25, 2009

இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியத்தை தெரிந்துகொள்ள தமிழக விவசாயிகள் குழு அத்தேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

இக்குழுவினரை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பிவைத்த வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான்.

இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உலக வங்கி உதவியுடன் தமிழக விவசாயிகள் ஒரு வார பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செய்முறை பயிற்சி மட்டுமின்றி பல்வேறு விவசாய பண்ணைகளுக்கு சென்று, அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வர். தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காலங்களில் விவசாயம் செய்வது தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு வார பயணமாக இஸ்ரேலுக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றனர்.

வறட்சி காலங்களில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி லாபகரமாக விவசாயம் நடத்துவது தொடர்பான நவீன தொழில்நுட்பத்தை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்ள உலக வங்கி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, விவசாயிகள் நலவாரிய தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் 21 பேர் கொண்ட விவசாயிகள் குழு நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

நீர் ஆதாரம் இல்லாத இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் விவசாயப் புரட்சி குறித்து அறிந்துகொள்ள, உலக வங்கியின் ஏற்பாட்டில் தமிழக விவசாயிகள் 21 பேர், இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் நடைமுறையில் உள்ள சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரமிடல், பசுமைக் குடில்கள் அமைத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிந்துவர 8 நாள் பயணமாக 17.10.2009 அன்று தோட்டக் கலைத் துறை மூலம் தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விவசாயிகள் குழுவில் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் தலைவர் கே.பி. இராமலிங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் துணைத் தலைவர் கே. செல்லமுத்து, தமிழ்நாடு இரயில்வே மண்டல உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ப. கௌசிக பூபதி உள்ளிட்ட 21 விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், இரவு 8.00 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.

இவர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்”
இதுதான் இரகசியம்.

மூலங்கள்
http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=Chennai&article=13353
http://www.newindianews.com/view.php?2e3C0cA20aeY4DD32edSYOJd2ccdQoOKc4d4AOMogcb34RlYmad43fVm43a002c4C60e
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18020

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment