Wednesday, August 18, 2010

சிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்

சிரிக்க அல்ல,சிந்திக்க சில மொழிகள் இந்தியாவிலிருந்து

”கம்யூனிஸத்துக்காக நாம் இரத்தம் சிந்தவும் தயாராக வேண்டும். இன்று இல்லாவிடினும் ஒருநாள் இந்த உலகத்தையே கம்யூனிஸம் ஆளத்தான் போகிறது”
- முன்னாள் கேரள முதல்மந்திரி நம்பூதிரிபாடு 13-10--1993 மாலைமலர்.

”மாஸ்கோவை இந்தியாவிற்கு அழைத்து வந்து உங்கள் கண் முன் காட்டுவேன்”
-நேரு அண்ணாவின் பொற்செல்வம் பக்:84,85.

"இந்தியாவின் தலைநகரம் மாஸ்கோ"
-தமிழ் துக்ளக் ஏடு ஆசிரியர் சோ.

“சோஷலிசத்திற்கேற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து கிறிஸ்தவ முதலாளிடகளுக்கும், இஸ்லாமிய சக்திகளுக்கும் இடையே தவிர்க்க முடியாத மோதல் ஏற்படும்”
-ராஜீவ் காந்தி இந்தியா டுடே ஜூன்21-ஜூலை5 1990.

நாங்கள் தொடக்க போகும் சாத்தான் நாட்டுக்கு (அமெரிக்கா) எதிரான யுத்தத்தில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேரும் படி கேட்டுக்கொள்கிறோம்.
-சோமாலியா - அமெரிக்க அமைதிபடைகளை எதிர்த்து முஸ்லீம் பிரமுகர்கள் மெதிமக்க ஆகஸ்ட் 1993.

”பாதுகாப்புக்காக ஆளுக்கொரு துப்பாக்கியை வைத்துக்கொள்ளுங்கள்”
-முன்னாள் இந்திய பிரதமர் சந்திரசேகர்.

“நான் பம்பாயின் ஹிட்லராக மட்டுமல்லாது, இந்தியாவின் ஹிட்லராகவும் இருக்க விரும்புகிறேன்”
-பால்தாக்கரே தினமலரில்.

”காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து விட்டதை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. சர்ச்சைக்குரிய அப்பகுதி இந்தியாவின் ஒரு பகுதி அல்ல”
-அமெரிக்க வெளியுறவு துறை துணை செயலாளர் ராபின் ரபேல் (தென் ஆசியா பொறுப்பு) 29-10-1993-ல் வாஷிங்டனில் கூறியதாக 31-10-93 தினகரன்.

“எந்த நாடாயிருந்தாலும் (பாகிஸ்தான்) சும்மா விடப் போவதில்லை” - இந்திய பிரதமர் ராவ் மற்றும் ஜனாதிபதி S.D.சர்மா 10-3-93 (பம்பாய் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து).

“இஸ்ரேல் தீவிரவாத நாடு, எல்லா நாசவேலைகளை எடுத்தாலும் அதில் “மொஸாத்” பங்கு இருக்கும். பம்பாய் குண்டு வெடிப்பிலும் தொடர்பு உண்டு. பின் ஏன் அதனுடன் ராவ் உறவு கொள்கிறார் ராஜீவ் முதல் நேரு வரை யாரும் நெருங்காத போது இவர்.... வெளியுறவு கொள்கையில் மாற்றமா?”
- அப்துல் சமது முஸ்லீம் லீக். தமிழகம் ஜீன் 1993.

“இந்தியா எந்த நாட்டுக்கும் அடிபணியாது, கீழ்படியாது”
-பிரதமர் நரசிம்மராவ் 9-5-1992 தினமலர்.

”இந்தியாவிற்குள் மீண்டும் பாகிஸ்தானை கொண்டு வரவேண்டும். இதுதான் என் தேசிய வாதம்”
-கல்யாண்சிங். இந்தியாடுடே அக்டோபர்21-நவம்பர்4 1993.

“கிறிஸ்தவர்கள் அவர்களது நாட்டுக்கு போக வேண்டும்”
-முன்னாள் இந்திய துணை பிரதமர் தேவிலால்.

“கிறிஸ்தவர்கள் வேண்டாம் என்று அற்பமாக ஒரு போதும் நான் சொல்லமாட்டேன்”- சஞ்சீவரெட்டி 1978-ல் ஜான் ரபீந்திரநாத்துடன் கூறியதாக 1993 நவம்பர் “இயேசு வருகிறார்” பத்திரிகை.

”கிறிஸ்தவர்கள் மூட்டை பூச்சி போன்றவர்கள். அவர்களை நசுக்கினால் அவர்கள் பலுகிபெருகுவார்கள்.அவர்களை தொடாதீர்கள்”
- முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

“கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்களை விட காந்தியடிகள் இயேசுவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை அறிதல் வேண்டும். இயேசுவின் கொள்கைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்து நடக்கின்றவர் காந்தியடிகளே”
-நேரு Glimpses Of World History பக்:89.

”பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை இல்லை. அடுத்தவனுக்கு உலை வைக்காமல் எதை செய்தாலும் சரிதான். எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியிடம் நம்பிக்கை இருக்கிறது. கடவுளிடம் பயம் இல்லை;ஆனால் பக்தி உண்டு”
-நடிகை பூஜாபட்.

You might like this post also:
சிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்
http://www.thewayofsalvation.org/2008/02/blog-post_27.html

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment