Wednesday, August 29, 2012

வில்லியம் கோல்கேட் கண்ட ஆசீர்வாதம்

இனிமேலும் என்னால் உன்னை கவனித்துக் கொள்ள முடியாது. நீ தான் சொந்தமாக காலில் நின்றுகொள்ள வேண்டும் என அந்த ஏழை தந்தை கேட்டுக்கொள்ள இந்த பதினாறு வயது சிறுவன் தனக்குள்ள எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு பட்டணம் நோக்கி பிரயாணம் புறப்பட்டான்.அவன் வந்து சேர்ந்த இடம் நியூயார்க் மாநகரம். சோப்பு செய்து விற்று பிழைக்க வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்.

நாட்டுபுற பையனுக்கு நகரத்தில் வேலை கிடைப்பதென்பது மிகவும் கடினமாக காரியமாக இருந்தது. அவனது தாயாரின் இறுதி வார்த்தைகளும் தான் பயணித்து வந்த படகின் கேப்டனும் அவனுக்கு கொடுத்த தெய்வீக ஆலோசனைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. தனது வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புவித்து தனது வருமானத்தின் ஒவ்வொரு டாலரிலும் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக தேவனுக்கு கொடுக்க முடிவெடுத்தான். முதல் டாலர் வருமானம் வந்ததும் அதில் பத்தில் ஒரு பங்கான பத்து செண்டை தேவனுக்கு கொடுத்தான். தொடர்ந்து அவன் அதை செய்ய ஆரம்பித்தான். டாலர்கள் கொட்ட ஆரம்பித்தன. சீக்கிரத்தில் இவன் ஒரு சோப்பு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனான். சில வருடங்கள் கழித்து இவன் உடன் பங்குதாரர் மரித்து போகவே மொத்த நிறுவனத்தின் பொறுப்பும் இவன் கையில் வந்தது. இவன் இப்போது ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனாலும் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கராராக செலுத்த தன் கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதிசயகரமாக இவரது தொழில் வளர்ந்தது.நேர்மையான இந்த மனிதர் பின் தேவனுக்கு பத்தில் இரண்டு பங்கை வழங்க தொடங்கினார்.பின் பத்தில் மூன்று பங்கு, பின் பத்தில் நான்கு பங்கு, பின் பத்தில் ஐந்து பங்கு என இறைவனுக்கு தாராளமாக வழங்கினார். விரைவில் உலகமெங்கும் வீடுகள் தோறும்  உச்சரிக்கப்படும் பொருளாகி விட்டது இவர் தயாரிப்புகள்.

அவர் தான் மறைந்து போன வில்லியம் கோல்கேட்(1783–1857).William Colgate கோல்கேட் பிராண்டு தயாரிப்புகளின் நிறுவனர், சொந்தக்காரர். தேவன் மீது கொண்ட அவரது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டது.கோல்கேட் நிறுவனத்தின் இன்றைய நிர்வாகம் பற்றி நமக்கு அதிகமாய் தெரியாவிட்டாலும் அந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கான இரகசியத்தை நாம் இங்கே கூறியிருக்கிறோம். இக்கதை இங்கே கோல்கேட் பொருட்களை விளம்பரப்படுத்த எழுதப்படாமல் கடவுள் மீது விசுவாசம் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதை நேர்மையாக கொடுத்து வந்தால் அதை தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தை விளம்பரப்படுத்துகிறதாய் இருக்கிறது.

ஆதாரம்
God`s Tenth and Man`s Mite - By Ashley G. Emmer,Signs of the Times, August 2, 1938.

மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Monday, August 27, 2012

ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்


முழு நீள ஆடியோ பாடல்
http://www.youtube.com/watch?v=FeADe7mxcxA

உம்மால் கூடும் என்ற ஆல்பத்தில் சகோ.ராபர்ட் ராய் அவர்கள் பாடிய அருமையான பாடல். பாடல் இயற்றியவர் சகோ.வெஸ்லி மேக்ஸ்வெல்

ஒருவரும் சேரக்கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம்
நீரே பரிசுத்த தெய்வம்
நீரே  நீர் மாத்திரமே
நீரே  நீர் மாத்திரமே

பரிசுத்தர்  நீர் பரிசுத்தர்
பரிசுத்தர்  நீர் பரிசுத்தர்
நீரே நீர்  மாத்திரமே

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும்  பெரியவர்
சகலவற்றையும் ‌சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மை போல் வேறோரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்திரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே நீர் மாத்திரமே

Oruvarum Sera Koodaatha Oliyil Vaasam Seypavarey Song Lyrics Written by Bro.Wesley Maxwell and sung by Bro.Robert Roy in Ummaal Koodum album

Saturday, August 25, 2012

மற்ற ஒன்பது பேர் எங்கே?

நம் தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (சங்கீதம் 113:7). ஆனால் அதில் எத்தனை பேர் இறுதி வரைக்கும் இறைவனில் நிலைத்திருக்கிறார்கள் என்றால் மிகவும் சொற்பமே. அன்றொரு நாள் இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக்கா 17:17) என்று கேட்டது போலவே இன்றைக்கும் கேட்க கூடிய நிலை. வல்லமையாக நான் பயன்படுத்திய ஊழியக்காரர்கள் பல பேர் உண்டே. அவர்களையெல்லாம் எங்கே என்று நியாயதீர்ப்பு நாளில் தேவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அன்றைய கால பாலாசீர் லாரி முதல் சமீபத்திய கே.ஏ.பால் வரை அநேக அசரவைக்கும் பின்மாற்றங்கள்.

நம்மில் அநேகருக்கு கே.ஏ.பாலை தெரிந்திருக்க நியாயமில்லை. சகோதரன் தினகரன் அவர்களைப் பற்றி பேசும் போது ஒருநாள் ஒரு இந்து தெலுங்கு நண்பர் கே.ஏ.பாலை பற்றியும் பெரிதாக கூறினார். அப்போது அவரைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆந்திராவிலேயே ஏதோ ஒரு மிகப் பெரிய சபையின் போதகராக இருக்கலாம் என எண்ணம். சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருக்கும் ஒரே இந்திய பிரசங்கியார் என்கிற விபரம் கூட தெரியாதிருந்தது. ஆனால் சமீபத்திய செய்தி விவரங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆரம்ப காலங்களில் மிக வல்லமையாக பயன்படுத்த பட்ட இந்த சகோதரனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம். இவரது Global Peace Initiative எனும் இணைய தளம் போனால், தான் பிரபலங்களுடன் (அன்னை தெரசா முதல் லிபிய கடாபி வரை) எடுத்துக்கொண்ட படங்களால் நிறைந்திருக்கிறது. எல்லாம் சுயதம்பட்டம். இவரது Gospel to the Unreached Millions என்ற பணியை நம்பி கோடிக்கணக்கான பணங்கள் நன்கொடைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் இப்பணிக்கென ஒரு வெப்சைட் கூட இருப்பதாக தெரியவில்லை. சுவிசேசத்தை விட்டு விட்டு Global Peace Initiative எனும் நிறுவனத்தை பிரதானமாக Non-profit,non-religious என அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சேகரமாக பின் இவர் அரசியலில் புகுந்ததால் அரசியல் விளையாட்டில் இந்நிறுவனத்தின் பணங்கள் ஆந்திர அரசால் முடக்கப்பட்டன. இவரைப் பின் தொடர்ந்து ஆறு வாரங்களை செலவிட்ட ஒரு நிரூபர் கூறும் போது “he only quotes one or two sentences from the Bible, and rarely mentions it” என்றார். இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக காயீனைப்போல தன் சொந்த சகோதரனையே ஆள் வைத்து கொன்ற கொலைப்பழியில் கையும் மெய்யுமாக போலீசில் சிக்கியிருப்பது மிகவும் வேதனையான விசயம்.சிம்சோனைப் போல இப்போதாவது மீண்டும் தேவனிடம் வந்து சரணடைந்தால் இவருக்கு நலமாயிருக்கும்.

பிரியமானவர்களே! பிரபலமான தேவ ஊழியர்களுக்கு வரும் சோதனைகளும் பயங்கரமானவைகள். இவைகளிலிருந்தெல்லாம் தேவன் அவர்களை தப்புவித்து கடைசி வரைக்கும் போராடி ஜெயிக்க பெலன் கொடுக்க தேவ பிள்ளைகள் நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
மேலும் விவரங்கள்.

தானியேல் 12:3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
வெளி 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று;

Tuesday, August 21, 2012

பிற மதத்தவருடன் வாக்குவாதம் செய்யலாமா? - குறும்பதில்கள்


விளக்கம் கொடுப்பது என்பது வேறு, வாக்குவாதம் செய்வது என்பது வேறு. எனவே இரு விதமான ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் உண்மையாகவே ஆத்துமாவில் தாகம் கொண்டு சில பல கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்பார்கள். இவர்கள் கேள்விகளிலும் குரலிலும் அவர்கள் தாகமும் ஏக்கமும் தெரியும். இது போன்றவர்களுக்கு ஜெபத்துடன் பதில் அளிப்பதில் தவறேதும் இல்லை. அதை விட்டு விட்டு நேருக்கு நேர் வருகிறாயா? ஒரே மேடையில் விவாதிக்கலாமா என சவாலிடும் நபர்களிடமிருந்து விலகியிருப்பதே நல்லது. ஏனென்றால் வேதம் சொல்லுகிறது பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.(மத்தேயு 7:6) இப்படி உங்களையும் பீறிப்போடும் அபாயம் இருப்பதால் நீங்கள் நீங்கி இருப்பதே உத்தமம்.

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17) இளகிய மனதும் நொறுங்குண்ட மனதும் உள்ளவர்கள் தேவனைத் தேடி கண்டு கொள்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனது ஏற்கனவே கடினப்பட்டு இருப்பதால் எத்தனை தான் மழைபெய்தாலும் அவர்கள் இதயம் நீர்த்துபோவதில்லை. மேலும் வேதம் சொல்லுகிறது ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன் (I கொரிந்தியர்:11:16) என்று.

தெரியாதவன் கேள்வி கேட்டால் அவனுக்கு பதில் அளிக்கலாம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கேள்வி கேட்டால் நாமும் முட்டளாக்கப்படுவோம். வாக்குவாதம் செய்பவனுக்கு பதில் கூறக்கூடாது. காரணம், ஒத்துக் கொள்ள மனதில்லாததால்தான் அவன் வாக்குவாதத்தில் இறங்குகிறான் நாம் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை.எனவே கிறிஸ்தவர்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது.

1 கொரி 1:18.சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.

மேலும் விவரங்கள்

Saturday, August 18, 2012

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும்

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் வரும் 2014-ஆம் ஆண்டில் மிகப்பெரிய நிகழ்வுவொன்று நடக்கவிருக்கின்றதாம். மிசிசிபி ஆறும் மிசவுரி ஆறும் கூடும் இவ்விடத்தில் இந்தியாவிலிருந்து 350,000 நிர்வாண சாமியார்கள் (naga sadhu) பறந்துவர மாபெரும் கும்பமேளாவுக்கு திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஸ்பான்சர் செய்பவர்கள் ரெடிமேட் ஆடைகளில் புகழ்பெற்ற Gap மற்றும் Banana Republic நிறுவனங்கள். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கூட இந்நிகழ்வைத்தொடந்து விபூதி-வெண்மை ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்தவும் iBathed என்றொரு அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளதாம்.செயிண்ட் லூயிஸ் நகராட்சி ஒரு பெரிய இடத்தை இந்நிகழ்வுக்காக ஒதுக்க அனுமதித்துள்ளது.

http://www.hinduismtoday.com/blogs-news/hindu-press-international/major-retailer-sponsors-2014-kumbha-mela-in-america/10962.html

ஆனால் இந்நகரின் இன்றைய நிலை மிக பரிதாபம் மிசிசிபி ஆறு கடும் வறட்சியினால் வற்றிக்கொண்டிருக்கிறதாம். வழக்கத்துக்குமாறாக 13 அடி தாழ்வாக நீர்மட்டம். இது இப்படியே தொடந்தால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டு தினமும் மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது இப்படியிருக்க வறட்சியின் ஆரம்பகட்டத்திலேயே ஒரு மனம் வருந்தும் சம்பவம் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்துள்ளது. செயிண்ட் லூயிஸ் நகரின் ஒரு சர்ச் இலவசமாக உணவு வழங்குவதாக ஒரு செய்தி பரவ எல்லோரும் அதிசயிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கு கட்டுக்கடங்காமல் கூடி விட்டதால் மிகப்பெரிய குழப்பம் கொந்தளிப்பே அங்கு உருவாகிவிட்டது. போலீசார் வந்து ஜனங்களை கலைத்துவிட்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் அல்ல. அமெரிக்காவின் நிலமை இது.ஜெபமே ஜெயம்.பிரியமானவர்களே  நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (ஜெபத்தில்) அழுங்கள்.(லூக்கா 23:28)

எரேமியா:50:38. வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.

Thursday, August 16, 2012

வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆழ்ந்த சத்தியங்கள்

அன்றன்றுள்ள அப்பம் ஊழியங்கள் வழங்கும் வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆழ்ந்த சத்தியங்கள்-வீடியோ செய்திகள் தொகுப்பு.தேவ செய்திகள் வழங்குபவர்: சகோ.J.சாம் ஜெபத்துரை
Antantulla Appam Ministries, Elim Glorious Revival Church - Revelation bible study by Bro.J.Sam Jebadurai


Revelation BIBLE STUDY - Part - 1



Revelation Bible Study Part- 2



Revelation BIBLE STUDY - Part - 3



Revelation Bible Study Part- 4



Revelation Bible Study Part-5



Revelation Bible Study Part-6



Revelation Bible Study Part- 7



Revelation BIBLE STUDY - Part - 8



Revelation BIBLE STUDY - Part - 9



Revelation BIBLE STUDY - Part - 10



Revelation BIBLE STUDY - Part - 11



Revelation BIBLE STUDY Part-12



Revelation BIBLE STUDY - Part - 13



Revelation BIBLE STUDY - Part - 14



Revelation BIBLE STUDY - Part - 15



Revelation BIBLE STUDY - Part - 16



Revelation BIBLE STUDY - Part - 17



Revelation BIBLE STUDY - Part - 18



Revelation BIBLE STUDY - Part - 19



Revelation BIBLE STUDY - Part - 20



Revelation BIBLE STUDY - Part - 21



Revelation BIBLE STUDY - Part - 22



Revelation BIBLE STUDY - Part - 23



Revelation BIBLE STUDY - Part - 24



Revelation BIBLE STUDY - Part - 25



Revelation BIBLE STUDY - Part - 26



Revelation BIBLE STUDY - Part - 27



Revelation BIBLE STUDY - Part - 28



Revelation BIBLE STUDY - Part - 29



Revelation BIBLE STUDY - Part - 30



Revelation BIBLE STUDY - Part - 31



Monday, August 13, 2012

Pray for India

Pray for India Hindi Version

http://www.youtube.com/watch?v=TajA7a3Kvlo
Pray for India Tamil Version

http://www.youtube.com/watch?v=N5AZuOrhMa4

Saturday, August 11, 2012

நன்றி மறவாத சாதனைப் பெண் - மேரி கோம்

இதுவரை வரலாற்றில் இல்லாதவாறு இந்த முறை இந்தியா ஆறு பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கி சாதனை படைத்துள்ளது. சாதனை வீரர்கள் அனைவருக்கும் நம் நல்வாழ்த்துகள். இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கையை முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையான மூன்றிலிருந்து நான்காக கூட்டி ஒரு புதிய மைல் கல்லை உருவாக்கியது பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்ட மேரி கோம் (Mary Kom) அவர்கள். மணிப்பூரை சேர்ந்த இந்த சாதனையாளரின் மிகப்பெரிய மீள்வரவு அனைவருக்கும் ஆச்சரியமானது. ஐந்து வயதான இரட்டையர்களின் தாய் இவர், பன்னிரண்டு வருட போராட்டத்துக்குப் பின் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஒரு சாதனைப்பெண் மட்டுமல்லாது இறை தெய்வ பக்தியும் கொண்ட ஒரு பெண் என்பது பலருக்கும் தெரியாத விசயம். தான் அளிக்கும் எல்லா பேட்டிகளிலும் தைரியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தை குறிப்பிட தயங்கமாட்டார். இந்தியா டுடே பத்திரிகை அவரைப் பற்றி குறிப்பிடும் போது ”She believes firmly in Jesus Christ and has no hesitation in invoking Him before any bout” என்றது.

வெண்கலப் பதக்கத்தை வென்றுவிட்ட தன்னால் தங்கமோ,வெள்ளியோ வாங்க முடியாததற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்திய மக்களின் ஆதரவு தமக்கு ஆமோகமாக இருந்தது என பெருமையாக பேசிக்கொண்ட அவர் ”என்னால் முடிந்த அளவுக்கும் கடினமாக உழைத்தேன். இந்த பதக்கமாவது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே” என்றார். “இது ஒரு விளையாட்டு, சில சமயங்களில் எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல அமையாது. ஆனாலும் இது மட்டாகிலும் வந்ததற்கு இயேசுவுக்கு நன்றி. ஒலிம்பிக்கில் நுழையவேண்டும் என்பது என் 12 வருட போராட்டம்.அந்த கனவு இப்போது நனவானதற்காக ரொம்ப சந்தோசம்” என மகிழ்ச்சி பொங்க கூறினார் அவர். ரேடியோ ஆஸ்திரேலியாவுக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில் ”நான் குத்துச்சண்டை வளையத்தில்  நுழைந்ததும், ஆட ஆரம்பிக்கும் முன் முதல் ஐந்து அல்லது பத்து வினாடிகள் நான் நம்பும் என் இறைவன் இயேசுவிடம் பிரார்த்தனை செய்து விட்ட பின் தான் என் விளையாட்டை தொடங்குவேன்” என குறிப்பிட்டிருந்தார். இப்போது புரிகின்றதா அவர் வாழ்வின் வெற்றியின் இரகசியம்.
வாழ்த்துக்கள் ஒலிம்பிக் இந்தியா!

மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Wednesday, August 08, 2012

எருசலேம் - The Ultra-Holy City

யூத குல ஆச்சாரங்களை மிகச் சிரத்தையாக கடைபிடிக்கின்றன அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் பெருகியிருக்கின்ற படியால் அது ஒரு "புதிய எருசலேமாக" அல்ட்ரா-ஹோலி சிட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது என டைம் பத்திரிகை (13Aug2012) அச்சம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கின்றது? சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா:8:6) எருசலேம் முழுவதும் ஆரம்பக் கல்விக் கூடங்களின் 65 சதவீத பிள்ளைகள் இந்த யூதர்களின் பிள்ளைகள் தானாம். இப்படி இஸ்ரேலில் சமீபகாலமாக இந்த அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிவருகின்றது. இவர்கள் தோராவை படிப்பவர்கள். ரபி எனப்படும் போதகமார்கள் சொல்லும் பிரமாணங்களை வரி பிசகாமல் பின் பற்றுபவர்கள். அவர்கள் அணியும் கருப்பு ஆடை, தோற்றம், முடி அமைப்பு எல்லாமே ஒரு சீருடை போலவே இருக்கும். எருசலேமை மொய்த்திருக்கும் இவர்களை பற்றி வேதம் தீர்க்கதரிசனமாக முன்பே கூறியிருக்கின்றது. இவர்களின் ஆதிக்கம் வேதாகமத்தை நிரூபிப்பதோடு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சமீபித்திருக்கிறது என கூறுகின்றது.

சகரியா 8:4-8
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும். இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Saturday, August 04, 2012

இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது

அமெரிக்காவின் Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் இப்போது செய்தித்தாள்களில் மிக பிரபலம். இந்த ரெஸ்டாரண்டுகளை பற்றி முன்பு கேள்விபட்டிராதவர்கள் கூட இப்போது அதிகம் அதிகமாய் கேள்விபடுகிறார்கள். சிலர் போற்றுகிறார்கள். பலர் தூற்றுகிறார்கள். நடப்பது தான் என்ன?
இந்த நிறுவனத்தின் CEO-வான டேன் கேத்தி (Dan Cathy) சொன்ன ஒரு கருத்து தான் இன்று அமெரிக்காவில் பிரளயமாகியிருக்கிறது. அப்படி அவர் என்னத்தான் சொல்லிவிட்டார்.

“குடும்பம் எனும் அமைப்புக்கு தான் எங்கள் முழு ஆதரவும். அது பைபிள் அடிப்படையிலான குடும்பம். எங்கள் நிறுவனம் கூட ஒரு குடும்ப நிறுவனம் தான், ஒரு குடும்பம் தலைமை ஏற்று நடத்தும் நிறுவனம். முதல் மனைவிகளோடேயே நாங்கள் இன்னும் வாழ்கின்றோம். அதனால் கடவுளுக்கு நன்றி. இந்த கருத்து எல்லாருக்கும் பிடிக்காது என்று தெரியும் ஆனாலும் கடவுளுக்கு நன்றி, ஏனென்றால் இந்த தேசத்தில் தான் நாம் நம் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவிலிய கோட்பாடுகள் படி வாழ முடிகின்றது” என்றார். அவ்வளவுதான்.Source

இதுதான் இன்று சர்ச்சையாகியிருக்கின்றது.மேல் சொன்ன டேன் கேத்தியின் கருத்து ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்து கொள்ளும் கூட்டத்தின் அடி மனதை தொட்டதால் இன்று இந்த பிரளயம். கொடியேந்தி இந்த ரெஸ்டாரண்டை மொத்தமாக புறக்கணிப்போம் என கிளம்பியிருக்கின்றார்கள். நேற்று அவர்கள் ஒன்று கூடி Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் முன் குழுமி ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் உதடோடு உதடு முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துகொண்டார்கள். அமெரிக்காவின் பாஸ்டன் நகர மேயர் கூட எங்கள் நகருக்குள் Chick-fil-A ரெஸ்டாரண்ட் வர அனுமதிக்க மாட்டோம் என பிரகடனம் செய்துள்ளார். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.(சங்கீதம் 2:4)

சிக்-பில்-ஏ நிறுவனம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் நிறுவனர் ட்ரூயெட் கேத்தி (Truett Cathy) இதை விவிலிய கோட்பாடுகளின் படி நடத்துவதில் மிக ஆர்வம் கொண்டவராய் இருந்தார். எடுத்துக்காட்டாக ஞாயிற்று கிழமைகளில் ரெஸ்டாரண்டுகளை திறக்காமல் இருத்தல் அதனால் குடும்பங்கள் சர்சுக்கு ஒழுங்காக செல்ல முடியும், கடன் வாங்காமல் நிறுவனத்தை நடத்துதல், வருமானத்தில் ஒரு பகுதியை சமூகநலனுக்கு அளித்தல் போன்றன. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இன்று அபரிதம். 1600 க்கும் அதிகமான ரெஸ்டாரண்டுகள் அமெரிக்காவெங்கும். வாரந்தோறும் புதிதுபுதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. கர்த்தர் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பது ஒன்றும் ஆச்சரியமல்லவே.(மல்கியா 3:10)

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்யலாம் என உன் கருத்தை நீ சொல்ல உனக்கு அதிகாரம் இருக்கும் போது, என் கருத்தை நான் சொல்ல எனக்கு அதிகாரமில்லையா? நல்ல கதையாக இருக்கிறது.

சங்கீதம் 5:12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.