Wednesday, February 29, 2012

ஆந்திர திரைப்பட நடிகர் ராஜாவின் சாட்சி

தெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக இருந்தவர் ராஜா ஏபல் (Raja Abel-రాజా అబెల్ ). ஆனந்த்(2004),சொந்த ஊரு(2009) முதலான பிரபல தெலுங்கு திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது கிறிஸ்துவின் அடியானாக மாறியுள்ள சகோதரன் ராஜாவின் சாட்சியை இங்கே நீங்கள் கேட்கலாம். கிறிஸ்துவுக்குள்ளாக வந்து கொண்டிருக்கும் இது போன்ற பிரபலங்கள் தேவனில் இறுதி வரைக்கும் நிலைத்திருக்க நாம் அனுதினமும் ஜெபிக்கவேண்டியது நம் கடமையாகின்றது.

யோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

நடிகர் ராஜாவின் சாட்சி தெலுங்கு மொழியில் (Actor Raja Abel Testimony in Telugu)


நடிகர் ராஜாவின் சாட்சி ஆங்கிலத்தில் (Actor Raja Abel Testimony in English)
Part 1

Part 2

Part 3

Part 4


Related Post:
இயேசு கிறிஸ்துவிடம் மனம்திரும்பி வந்த நடிகை நக்மாவின் சாட்சி

Monday, February 13, 2012

தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோகடந்த செவ்வாய்கிழமை (7 பிப்ரவரி 2012) பாகிஸ்தான் கராச்சி கடலோரப் பகுதியில் ஒதுங்கிய அந்த மாபெரும் திமிங்கலச் சுறாவைக் (Whale Shark) கண்டதும் பலருக்கும் பெருத்த அதிர்ச்சி. இத்தனை பெரிய கடல்வாழ் உயிரினங்கள் கடலில் வாழ்வது பலருக்கும் ஆச்சரியம். 40 அடி நீளத்தில் 6 அடி அகலத்தில் 7.7 டன் எடையில் இருந்த இந்த திமிங்கல சுறா ஒரு ஸ்கூல் பஸ்ஸின் அளவாக இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பல கிரேன்களில் உதவியுடன் நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் கரைசேர்த்தனர். 2,200 டாலர் மதிப்பில் அது ஏலம் போனது. இந்த வகை மீன்களில் இது சிறியது எனவும் பெரிய அளவு 66 அடிவரைக்கும் நீளமாக இருக்கும் என சொல்கின்றார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இதனை தனது குழந்தைகளுக்கு காட்டிக் கொடுக்க வந்த ஆங்கிலிக்கன் சபை போதகர் அஷரப் டேனியல் வேதபுத்தகத்தின் மீதான தனது நம்பிக்கை இன்னும் உறுதிப்படுவதாக தெரிவித்தார். அவர் கூறும் போது, ”யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்ததாக பைபிள் கூறுகிறது. எனது பிள்ளைகளும் தேவனின் வல்லமையை பார்க்கும் படியாக அவர்களை இங்கே கூட்டி வந்தேன்” என்றார். MSNBC செய்தி நிறுவனம் இதை லிவியாதான் (The leviathan) என தன் செய்திக்குறிப்பில் கூறியது யோபின் புத்தகத்தை நினைவு படுத்தியது. யோபு 41-ம் அதிகாரம் இப்படியாக தொடங்குகிறது. ”லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?”
வேதம் எத்தனை உண்மை. (வீடியோ செய்தி)

Tuesday, February 07, 2012

மாணிக்க திருமொழிகள் 1

எவனொருவன் வெயிலையும் மழையையும் சமமாகப் பாவிக்கிறானோ அவனுக்கு டபுள் நிமோனியா கிட்டும்.இது உலகம்.
எவனொருவன் சுகத்தையும் துக்கத்தையும் சமமாய் பாவிக்கிறானோ அவனுக்குப் பேரின்பம் கிட்டும். இது வேதாந்தம்.

மனுக்குலம் முழுமையும் பொறுத்த முச்சத்துருக்கள்- பிசாசு,மாம்சம்,உலகம்.
தெய்வ மக்களைப் பொறுத்த முச்சத்துருக்கள்-சோதனை,கவலை,பயம்

அடே அப்பா! மனிதனுக்குத்தான் எவ்வளவு பைத்தியம்.
அவனால் ஒரு புழுவை உண்டாக்க முடியவில்லை; ஆனால் கணக்கில்லாத கடவுள்களை மட்டும் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறான்.

பகலில் தீவெட்டி கொழுத்துகிறவன் இரவில் எண்ணெய் இல்லாமல் திண்டாடுவான்.இளமையில் பணம் சேர்க்காமல் செலவு செய்பவன், முதுமையில் வாழ வழியற்று வாடுவான்.

குருடர் கண்களில் சூரிய வெளிச்சம் படும்போது கூச்சம் உண்டாகாது;இதயக் கடினமுள்ளவர்களுக்கு சுவிசேஷ வெளிச்சம் படும்போது அது அவர்களைப் பிரகாசிப்பிக்காது.

சவுல் என்ற பவுல் 25 வயதில் குணப்படாமல் 70 வயதில்குணப்பட்டிருப்பாரானாம் என்னவாகி இருக்கும்?சரித்திரத்தில் பவுல் என்ற பெயரே வந்திருக்காது.

கடவுள் ஒவ்வொரு பட்சிக்கும் ஆகாரத்தைக் கொடுக்கிறார்.
ஆனால் பட்சிகளின் வாயில் கொண்டுபோய் ஆகாரத்தைத் திணிக்கிறதில்லையே!

மெழுகுவர்த்தி மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கத் தன்னைச் செலவழிக்கிறது
.
முட்டாள்களின் நடுவில் ஒரு புத்திசாலியிருப்பது குருடர்களின் நடுவே ஒரு அழகிய யுவதி இருப்பதுபோல.

காலத்தை ஆதாயப்படுத்துங்கள்.
நயா பைசாக்களை சரியானபடி நன்மைக்கேதுவாக உபயோகிக்கும் போது, நாம் ரூபாய்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ரூபாய் தன்னையே காத்துக்கொள்ளும்.
அவ்வாறே, ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாய்க் கழிக்காமல் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமானால் நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் தங்களையே காத்துக்கொள்ளும்.
காலம் பணத்துக்குச் சமம்.

கேட்பதைவிட பேசுவதே லாபம் என்ற நிலைமை ஏற்படும் போது உன் நண்பனை மாற்றிக்கொள்.

விடாமுயற்சியை சிறையிலடைத்ததால் “மோட்ச பிரயாணம்” என்னும் புத்தகம் தோன்றியது.(ஜாண் பனியன்)
விடாமுயற்சியின் கண்ணை குருடாக்கினதால் “பரதீசு இழத்தல்” என்னும் நூல் வெளிவந்தது.(ஜாண் மில்ற்றன்)
விடாமுயற்சியின் காதை செவிடாக்கினதால் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டது.(தாமஸ் எடிசன்)

Friday, February 03, 2012

பரிகாரம் - கிறிஸ்தவ திரைப்படம்


Pariharam [VCD-Teleflim]
[ பரிகாரம் - பாவத்தினால் வரும் சாபத்தை மையமாக எடுக்கப்பட்ட படம்.. ]
For the wages of sin is death; In this story tells about the sin and comes sorrow by sin..

Watch online
Pariharam Part 1
Pariharam Part 2

Buy this VCD for Rs:100
http://www.jesusredeemsonline.com/shop/product_info.php?cPath=3&products_id=127