Wednesday, June 10, 2009

இயேசுவே உன்னை காணாமல் பாடல்


Yesuve unnai kaanaamal tamil christian song

இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது....
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது...
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.

[1]

கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது....
உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது....
ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது.....
உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது...
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது....
உள்ளம் அடங்காது......
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..

[2]

உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது.....
தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது....
கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது....
சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது....
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது..
ஆறுதல் எனக்கேது...

இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது..
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது.....
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது......
இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment