Wednesday, August 26, 2015
மனிதர்களுக்கு இலக்கம் கொடுத்தார்கள் ஆதார் அட்டை என. இப்போது வீடுகளுக்கும் இலக்கமாம்.. செயற்கைக்கோள் கதவிலக்கம்... ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை குடும்பங்கள், ஆண் - பெண், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, வீடுகள், அவற்றிலுள்ள அறைகள், கழிப்பறை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றனவாம். என்னமோ எல்லாமே நல்லதுக்குதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என நாம் நினைத்துக்கொண்டிருக்க எல்லா தகவலுமே விரல் நுனியில் ஒருவன் அதிகாரத்தின் கீழ் போகவிருக்கிறது. அதற்கு தான் இத்தனை ஆயத்தங்களும். உங்களுக்கு புரிந்திருக்குமே.
Tuesday, August 25, 2015
வேதாகமத்தில் தத்மோர் (Tadmur) என அழைக்கப்படும் நகரம் தான் இப்போது பால்மைரா ( Palmyra) என அழைக்கப்படுகிறது. இது சிரிய பாலைவனத்திலுள்ளது. சாலமோன் ராஜா இந்நகரத்தை இப்பாலைவனத்தில் கட்டியதாக வேதாகமத்தில் 2நாளாகமம்:8:4 ல் படிக்கிறோம். வேதாகமம் சொல்லுகிறது. சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான். அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான். (II நாளாகமம் 8 3,4) என்று.இப்படி ஒரு மிகப்பழமைவாய்ந்த நகரம் தான் பால்மைரா. இங்குதான் ஒன்றையும் ஆக்கத்தெரியாதவர்கள் அழித்துத்தள்ளியிருக்கிறார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை. வேதம் சொல்லுகிறது விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான் (நீதிமொழிகள் 13:16).
Monday, August 24, 2015
உங்களை தேற்றுவது யார்? நாசாவா? Who is your comforter? Some believers are getting comfort from NASA. *****விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு***** இன்றைய தினத்தில் செப்டம்பர் 2015 குறித்து பரவியுள்ளதான அத்தனை செய்திகளும் அக்டோபர் முதல் நாள் விடியும் போது வெறும் புரளியாகவே போய்விட #நாசா மீதான நம்பிக்கையும் விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானம் மீதான நம்பிக்கையும் மக்களிடையே அதிகரித்திருக்கும். இது தான் லூசிபருக்கும் அவனை சேவிப்போருக்கும் வேண்டியது. வரும்காலங்களில் சர்ச்சுகளும் கூட வேதாகதீர்க்கதரிசனங்களை சந்தேகித்து நாசாவை நம்பும் காலம் வரும் அதற்கான ஆயத்தங்கள் தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இயற்கைக்கு அப்பாற்ப்பட்டு ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத பேரதிசயங்களையும் செய்யக்கூடிய கர்த்தரை மறந்து போவார்கள். இதனைத்தான் பவுல் அப்போஸ்தலன் "எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு" என எச்சரிக்கிறார்.மேலும் அவர் குறிப்பிடும் போது "இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்" என்கிறார். நாம் கலங்காமல் இருப்போம் எப்போது எனில் நாம் இறைமகனை சந்திக்க எப்போதும் தயாராக இருந்தால். புலி வருகுது புலி வருகுது எனச் சொல்லி ஒரு நாள் புலி வந்தே விடும். அப்பொழுதுகூட நம்மை தேற்றுபவரும் நம்மை ஆற்றுபவரும் நம் நம்பிக்கைக்கு உரியவருமாக நம் கர்த்தர் ஒருவரே நம்மிடம் இருக்கட்டும். In all our situations let our Lord be our comforter.
*****Signs of Shemitah?***** Are economic cycles tied to biblical word in any way? You'll be surprised. God commanded the Israelites to have a year long sabbath rest every 7 years. This was called the Shemitah year. "Six years you shall sow your field... and gather in a harvest, but in the seventh year shall be a sabbath rest for the land, a sabbath for Yahweh. You shall not sow in the field or prune your vineyards." Lev 25:3,4 But if the Israelites did not obey this command, they would experience economic collapse and other calamities."I will destroy your high places and cut down your idols.... and the land will be made desolate....and your cities waste, then shall the land enjoy her sabbaths..." Lev 26:30-34 What would be a sabbath disobeyed, would turn into a judgment of economic collapse because the people turned from God. We could call it the Shemitah 7 year cycle or economic judgment; a sabbath rest, or a crash from economic activity in the form of a forced rest (sabbath). God has made this a sign to us, this 7 year economic cycle that we've been experiencing, because we have departed from him and have justified our sin as a nation.The Shemitah years will not always signify a crash. The Shemitah years can also signify prosperity and blessing, but with the Shemitahs of the last 40 years, since the start of Roe vs Wade in '73, we've experienced nothing but crashes and trouble as a nation. - From “THE MYSTERY OF THE SHEMITAH” by Rabbi Jonathan Cahn.
Friday, August 21, 2015
கர்த்தாவே, உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர். (சங்கீதம் 139:8,எரேமியா 10:6)
Thursday, August 20, 2015
Wednesday, August 19, 2015
இயேசுவானவர் பிறந்தது பெத்லகேமானாலும் அவர் வளர்ந்தது கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் எனும் ஊர் ஆகும். அதனாலேயே அவர் நசரேயன் எனப்பட்டார். அவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.தன் தாயாருக்கும் தச்சுவேலை பார்த்து வந்த யோசேப்புக்கும் கீழ்ப்படிந்திருந்தார்.பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. (லூக்கா: 2:39-52)
Tuesday, August 18, 2015
ஜோடனை தான் வேறு வேறு. தொழில் எல்லாம் ஒன்றுதான்.
Saturday, August 15, 2015
இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. பிரசங்கி 1:9,10
Thursday, August 13, 2015
எல்லாமே முடிந்து போய்விட்டது என மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? ஆனால் வேதம் சொல்லுகிறது. "எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்" என்பதாகும். நீங்கள் சோர்ந்து போயிருந்தாலும் உங்களுக்காக கர்த்தர் வைத்திருக்கும் திட்டம் இன்னும் முடிந்து போகவில்லை. (I இராஜாக்கள்:19:7)
Wednesday, August 12, 2015
டாக்டர் புஷ்பராஜ் ஐயா அவர்கள் #யோகா விசயத்தில் எடுத்துக்கொண்டுள்ள மென்மையான நிலைப்பாடு மனதை வருத்துவதாக இருந்தது."யோகா என்பது ஜெபம் அல்ல- வெறும் உடற்பயிற்சி அவ்வளவே.டிரில்மாஸ்டர் உடற்பயிற்சி கற்றுக்கொடுப்பதுபோல் யோகாவும் ஒன்றாகும்" என கூறியிருக்கிறார். உலகமே ஒத்துக்கொள்ளும் ஒரு இந்துத்துவ அரசாங்கம் யோகாவை கோடிக்கணக்கில் செலவுசெய்து இவ்வளவாய் முன்னுக்குத் தள்ளுகிறார்கள் என்றால் அதில் ஒரு காரணம் இல்லாமல் இருக்க முடியாது. ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றோடு போகமாட்டார் என்பார்கள் இல்லையா. மக்கள் ஆரோக்கியத்தில் அவ்வளவு அக்கறை என்றால் மதுவையும் புகையையும் ஒழிக்க வேண்டியது தானே அதை விட்டு விட்டு யோகா மேல் அக்கறையென்ன? உடற்பயிற்சி என ஒப்புக்கு சொல்லி ஆரம்பித்து கடைசியில் மொத்த உடலையும் பிசாசுக்கு ஒப்படைப்பது தான் சாத்தானின் தந்திரம்.இதை ஐயா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் போய்விடுங்கள் என சில காவி மந்திரிகள் சினம் கொள்வதேன்?.இப்போது யோகா தின ஆர்ப்பாட்டங்கள் முடிந்து போன பின்னாலும் திரை மறைவாக யோகாவை உலகளாவில் பிரபல படுத்த பல்வேறு முயற்சிகள் இந்த அரசாங்கம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதில் பெயர் கிறிஸ்தவர்கள் எளிதாய் விழுந்துபோகிறார்கள். "மற்ற மத தெய்வங்கள் என்பவைகளின் பெயர்களை நாம் யோகா பயிற்சியில் நினைக்கவேண்டுமா?. அப்படி யாரையும் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிரியமானால் இயேசுகிறிஸ்துவை நினைக்கலாமே" என கூறியிருக்கிறார் ஐயா அவர்கள். அப்படி பார்க்கப்போனால் அன்றைக்கு தானியேல் கூட சிலையின் முன்பாக பணிந்து கொண்டு அதே வேளையில் மனதில் தேவனை நினைத்திருக்கலாமோ என தோன்றுகிறது. "ஆகவே நான் என்ன கூறவிரும்புகிறேன் என்றால், கிறிஸ்தவர்கள் யோகாவைப்பற்றி பயம் கொள்ளவேண்டாம். அதைவிட உடற்பயிற்சி செய்யலாம் அது மிகவும் நல்லது" என கூறிமுடித்திருக்கிறார். உடற்பயிற்சி நல்லது தான். ஆனால் அது யோகா வழியாய் தேவையில்லை என ஆணித்தரமாக டாக்டர் புஷ்பராஜ் ஐயா அவர்கள் கூறியிருக்க வேண்டும். பயம் வேண்டும் ஐயா யோகாவைப் பற்றிய பயம் வேண்டும். கர்த்தருக்குப் பயப்படும் பயம் வரும் போது யோகா மீது பயமும் வரும் வெறுப்பும் வரும்.
Monday, August 10, 2015
அது #கோபமாக பாக்குதாம். #நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பிரமாண்டமாக படம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.ரொம்ப முக்கியம்.வனவிலங்குகளை பாதுகாப்பதற்கும் அதற்கும் என்னங்கடா சம்பந்தம். #வேதாகமம் சொல்லுகிறது... ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த #கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு #ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.வெளி 12:12
Friday, August 07, 2015
தம்மாத்துண்டு தேசம் இஸ்ரேல். விவசாயம் முதற்கொண்டு இராணுவம் வரைக்கும் எல்லாதுறைகளிலேயும் இந்தியாவுக்கு ஆலோசனைக்கொடுக்கிறதாம். இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் வல்ல கர்த்தராலே அப்படியாயிற்று. கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? நீ ஆசீர்வாதமாயிருப்பாய். நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருப்பாய். எல்லாதேசத்தாருக்கும் ஆசீர்வாதமாயிருப்பாய் என்பதே.(ஆதி:12:2,3) அது அப்படியே ஆகியிருக்கிறது.
Thursday, August 06, 2015
வேறே பூமிகள் உண்டு, அங்கே புத்திசாலித்தனமான ஏலியன்களும் இருக்கலாம் என வாட்டிகன் முதல் இப்போது எல்லோருமே ஒத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட பூமி போன்றதொரு புதிய கோள் கண்டுபிடிப்பு என செய்திகள் வெளியாகின.உயிரினங்கள் வாழ தகுதியுடன் பூமியை போன்று 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு எனவும் செய்திகள் வெளியாகின. இந்த கடைசிகாலத்தில் ஏலியன்கள் உண்டு என உலகத்தை நம்ப வைப்பதுவும் பிசாசின் ஒரு திட்டமே.அப்போது தான் கிறிஸ்துவின் பிள்ளைகள் திடீரென ஒருநாள் எடுத்துக் கொள்ளப்படும்போது அதை "வெளிக்கிரகவாசிகள் பூமியின் மீது திடீர் முற்றுகை. பல்லாயிரக் கணக்காணோரை காணோம்" என செய்திகளாக வெளியிட்டு உலகை நம்பவைத்து ஏமாற்றமுடியும். அதற்காகவே பூமியை இப்போதே தயாராக்கிக் கொண்டிருக்கின்றான். இது போன்றதான புதிய பூமிகள், வேற்றுகிரக வாசிகள் செய்திகள் இனி அதிகமாகவே வெளிவரும். பூமியின் இறுதியுத்தமும் கூட பூலோக வாசிகளுக்கும் ஏலியன்களுக்கும் இடையேதான் இருக்கும் என வேதம் சொல்லுகிறது (வெளி:19:19). இதில் விசித்திரம் என்னவென்றால் பூலோகவாசிகள் என ஒன்றாக குழுமி The New World Order பேசும் நாம் தான் பூமிக்கு ஏலியன்கள். ஏலியன் என இந்த உலகத்தான் பேசும் நம் தேவன் தான் இப்பூமிக்கு ஒரிஜினல் சொந்தக்காரர். வேதம் சொல்லுகிறது பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது. Iகொரி:10:26
Wednesday, August 05, 2015
நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கர்த்தர் உனக்குக் கொடுப்பார். (உபாகமம்:6:10,11)
Tuesday, August 04, 2015
கனியோடு விதைகளையும் கொடுத்தார் கடவுள். ஆனால் சுயநலமாய் மனிதன் இப்போதெல்லாம் கனிகளை மட்டும் கொடுத்து விட்டு விதைகளை தன்னிடமாய் வைத்துக்கொண்டான். வேதாகமம் சொல்லுகிறது "இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது" என்று.கனியோடு விதைகளையும் கொடுத்து அதன் மூலம் பூமியை கனிதரும் விருட்சங்களால் நிறைப்பது தான் கடவுளின் திட்டம்.தேவன் அது நல்லது என்று கண்டார். ஆனால் சுயநலமிக்க மனிதனோ கனியை மட்டும் பணத்துக்காக விற்க கற்றுக்கொண்டான். அதன் விதையை தன்னிடமாய் ஒளித்து வைக்கவும் கற்றுக்கொண்டான். என்ன பரிதாபம்.(ஆதியாகமம் 1:12,29)
Subscribe to:
Posts (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்