Monday, August 24, 2015

உங்களை தேற்றுவது யார்? நாசாவா? Who is your comforter? Some believers are getting comfort from NASA. *****விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு***** இன்றைய தினத்தில் செப்டம்பர் 2015 குறித்து பரவியுள்ளதான‌ அத்தனை செய்திகளும் அக்டோபர் முதல் நாள் விடியும் போது வெறும் புரளியாகவே போய்விட #நாசா மீதான நம்பிக்கையும் விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானம் மீதான நம்பிக்கையும் மக்களிடையே அதிகரித்திருக்கும். இது தான் லூசிபருக்கும் அவனை சேவிப்போருக்கும் வேண்டியது. வரும்காலங்களில் சர்ச்சுகளும் கூட வேதாகதீர்க்கதரிசனங்களை சந்தேகித்து நாசாவை நம்பும் காலம் வரும் அதற்கான ஆயத்தங்கள் தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இயற்கைக்கு அப்பாற்ப்பட்டு ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத பேரதிசயங்களையும் செய்யக்கூடிய கர்த்தரை மறந்து போவார்கள். இதனைத்தான் பவுல் அப்போஸ்தலன் "எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு" என எச்சரிக்கிறார்.மேலும் அவர் குறிப்பிடும் போது "இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்" என்கிறார். நாம் கலங்காமல் இருப்போம் எப்போது எனில் நாம் இறைமகனை சந்திக்க எப்போதும் தயாராக இருந்தால். புலி வருகுது புலி வருகுது எனச் சொல்லி ஒரு நாள் புலி வந்தே விடும். அப்பொழுதுகூட‌ நம்மை தேற்றுபவரும் நம்மை ஆற்றுபவரும் நம் நம்பிக்கைக்கு உரியவருமாக‌ நம் கர்த்தர் ஒருவரே நம்மிடம் இருக்கட்டும். In all our situations let our Lord be our comforter.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment