Thursday, March 31, 2011

Iகொரிந்தியர் 2:9 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper
Iகொரிந்தியர்:2:9. தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

Wednesday, March 30, 2011

இருதயத்தில் சமாதானம்

உம்மை உறுதியாய்ப் பற்றி கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர் (ஏசா.26:3) சமாதானத்தை தர வல்லமையுள்ளவர் ஒருவரே. அவர்தான் சமாதான பிரபுவாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம், கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவா.14:27) உலகத்தில் எங்கு பார்த்தாலும் சமாதானம் இல்லை. வியாதிகள், வறுமைகள், கொலைகள், கொள்ளைகள் யாவையும் பார்க்கும் போது மனிதர்களாகிய நமக்கு சமாதானம் இல்லை. என்றைக்கு எப்பொழுது யாருக்கு எது நடக்கும் என்ற கேள்விக்குறியோடு மனுக்குலம் வாழ்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் சமாதானத்தைக் கொடுக்கும் தேவன் நமக்கு உண்டு. எந்த சூழ்நிலையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரை உறுதியாய் பற்றிக் கொண்டவர்கள் பூரண சமாதானத்துடன் வாழ முடியும். அருமையான மகனே, மகளே உனக்கு சமாதானம் இல்லையா, வாழ்க்கையில் கைவிடப்பட்டவளாக கலங்குகிறாயா, பிள்ளைகள் உன்னை கைவிட்டுவிட்டனரா, பள்ளி பாடங்களை படிக்கும்போது சரியாக படிக்க முடியவில்லையே என கலங்குகிறாயா வீட்டுக்குப் போனாலும் நிம்மதி இல்லை, வேலையிலும் நிம்மதி இல்லை, பிள்ளைகளின் வியாதி, வியாபாரத்தில் தோல்வி, எவ்வளவோ ஆண்டு ஆகியும் குழந்தை செல்வம் இல்லை என்று ஏங்குகிறாய் அல்லவா, இதினிமித்தம் உனக்குள் ஒரு கலக்கம் ஏற்படுகிறது அல்லவா, அந்த கலக்கங்களை மாற்றி இயேசு கிறிஸ்து உனக்கு சமாதானத்தை தருவார். உனக்கு சமாதானத்தைத் தருவதற்காகவே கல்வாரி சிலுவையில் தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினார். இன்று மகனே, மகளே நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை தாயின் வயிற்றிலே நீ உருவாகும் போதே உன்னை எனக்கென்று வேறு பிரித்தேன். நீ என்னுடையவன்(யவள்) எனவே இயேசு கிறிஸ்துவாகிய என்னை உன் இருதயத்தில் ஏற்றுக்கொள். நீ என்னை நம்பு என்று அழைக்கிறார். உன்னுடைய கலக்கத்தை மாற்றுவார்.
அருமையான தேவனுடைய பிள்ளையே கர்த்தரிடம் உன் பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடு. இனி பாவம் செய்யாதே. பாவம் செய்யும் போது நமக்கு அந்த பாவம் தற்பொழுது சிறிது சமாதானம் இருப்பது போல் காணப்படும். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பாவம் நமக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தருவதில்லை. அதினிமித்தம் நம் இருதயம் கிலேசப்படும், எனவே கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ எப்படிபட்ட வனாகவும்(வளாகவும்) காணப்பட்டாலும் கர்த்தராகிய இயேசு உன்னை நேசிக்கிறார். உனக்கு சமாதானத்தை தருவார். இன்றே கர்த்தரிடம் வருவாயாகில் கீழே கொடுக்கப்பட்ட ஜெபத்தை விசுவாசத்தோடு இயேசுவிடம் சொல்லி ஜெபி.

ஜெபம் :
அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நான் (உங்கள் பெயரை சொல்லவும்) வந்திருக்கிறேன். என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னியும். என்னை ஏற்றுக் கொள்ளும். இன்று முதல் நான் உம்முடைய பிள்ளை, எனக்கு சமாதானத்தை தாரும், நான் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதியும், வியாதிகளை மாற்றும், தோல்விகளை ஜெயமாய் மாற்றும், என் பிள்ளைகளுக்கு ஞானம் தாரும், சமாதானத்தின் தேவன் என்னை ஆட்கொண்டு வழி நடத்தும்படி ஜெபிக்கிறேன். ஆமென்.

Tuesday, March 29, 2011

இக்கல்லில் மோதுபவன் அவன் நொறுங்கிப்போய்விடுவான்

சமீபத்தில் டுனீசியா மற்றும் எகிப்து நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதனால் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 13-ம் தியதி பேசிய லிபிய அதிபர் கடாபி இது பிரபல புரட்சிகள் நடைபெறும் காலம். இந்த சமயத்தை பயன் படுத்தி பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். நாம் உலகத்துக்கு ஒரு பிரச்சனையை உருவாக்க வேண்டும்.இது போர் பிரகடனமல்ல. சமாதானத்துக்கான ஒரு அழைப்பே. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வெள்ளை நிறமாக குறிப்பிட்ட அவர் வெள்ளை நிறம் பச்சை நிறத்தை ஒழிக்க நினைக்கின்றது.இஸ்ரேல் தேசத்தோடு நல்லுறவு கொண்டுள்ள அரபு தேசங்களெல்லாம் மோசமான தேசங்கள் என அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலில் குழப்பத்தை உண்டாக்க ஆலோசனை சொன்ன கடாபிக்கு சில நாட்களிலேயே அவர் சொந்த தேசமான லிபியாவிலேயே மக்கள் புரட்சி ஏற்பட்டது. இன்றைய செய்தி இவ்வாறாக சொல்கிறது “கடாபியின் சொந்த ஊரில் மோதல் : ஓரிரு நாளில் கதைமுடியும்”

மத்தேயு 21:44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 20:18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

சங்கீதம் 7:15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

சங்கீதம் 9:15 ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்;

எஸ்தர் 7:10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்

சகரியா 12:3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்

References
http://www.msnbc.msn.com/id/41564012/ns/world_news-mideast/n_africa/
http://af.reuters.com/article/tunisiaNews/idAFLDE71C0KP20110213

Monday, March 28, 2011

விசுவாசத்தைக் காண்பாரோ?

"Organized religion 'will be driven toward extinction' in 9 countries, experts predict",
மதம் அழியுமா”,
மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்
- இவை சமீபத்திய செய்தி தலைப்புகள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கும் காலகட்டத்தில் பூமியிலே கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கை அல்லது விசுவாசம் குறைந்து போகும் என இயேசு கிறிஸ்து நமக்கு முன்னறிவித்துள்ளார்.லூக்கா 18:8-ல் இயேசு இப்படியாகச் சொன்னார் ”ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ”. இதற்கேற்ப இன்றைய செய்தித்தாட்களின் செய்திகளும் இதையே உரைக்கின்றன,

உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

இதனால் அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய் விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஓர் கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது.

அதன்படி மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவீதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவீதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர் இது ஒரு சாதாரண கணக்கு தான்.

அதாவது நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தை நாம் தொடர்ந்து செய்வோம். உதாரணமாக ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன் பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனை விட மிக அதிகம். இதே கணக்கை மதநம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

Luke 18:8 “when the Son of Man comes, will He really find faith on the earth?

மத்தேயு 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

மத்தேயு 20:16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
  • மனுஷகுமாரன் வரும்போது உன் சபையிலே விசுவாசத்தைக் காண்பாரோ?
  • மனுஷகுமாரன் வரும்போது உன் குடும்பத்திலே விசுவாசத்தைக் காண்பாரோ?
  • மனுஷகுமாரன் வரும்போது உன் இருதயத்திலே விசுவாசத்தைக் காண்பாரோ?

Wednesday, March 23, 2011

லேவியராகமம் 26:9 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper
லேவியராகமம் 26:9 நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.

Tuesday, March 22, 2011

நீ எங்கே செல்கிறாய்?


இந்த உலகமாகிய யாத்திரை பயணத்தில் நாம் எங்கோ ஓரிடத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம். எனவே தான் நாம் துரிதமாக எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். உயிர் நம் உடலில் இருக்கும் வரை அங்கும், இங்குமாக செல்வோம். ஆனால் நம் (உயிர்) ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு போகும் போது நாம் எங்கே செல்வோம், மோட்சமா? நரகமா? நிச்சயமாக இந்த உலகம் நாம் நினைக்கிறபடி மோட்சமோ, நரகமோ கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் போது நாம் நரகத்தில் இருக்கிறோம் என்றும், சந்தோஷத்தை அனுபவிக்கும்போது மோட்சத்தில் இருக்கிறோம் என்றும் சிந்தனை செய்வது தவறு.மோட்சம்,நரகம் என்று ஒன்று உண்டு.

வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மீண்டுமாக இந்த உலகத்தில் வந்து துன்மார்க்கனையும், நீதிமான்களையும் வெவ்வேறாக பிரித்து அவர், அவர்கள் செல்ல வேண்டிய வழியை அவர்களுக்கு தெரிவிப்பார். இது தான் உண்மை. இந்த பூமியிலே நாம் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமற்ற பாவங்களை செய்து வாழ்ந்தோமானால் நாம் துன்மார்க்கர். இயேசு கிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து எழுந்தார் என்றும், மீண்டுமாக நம்மை சேர்க்க வருவார் என்றும், என்னுடைய பாவங்களுக்காகத்தான் கல்வாரி சிலுவையில் மரித்தார் என்றும் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறவனே நீதிமான்.

நரகம் எப்படி இருக்கும் என்றால், அங்கே புழு சாகாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும் (மாற்.9:44) புழுக்களே படுக்கை பூச்சிகளே போர்வை, நரகம் பாதாளம், இருள், நரகத்தில் அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிறதான புறம்பான இருள். மோட்சத்துக்கும், நரகத்திற்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கும். நரகம் பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி. ஆனால் மோட்சமோ தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் (11 கொரி.5:1) பரலோகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. நீதிமான்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

எனவே அருமையான சகோதரனே, சகோதரியே இன்றே சிந்தனை செய்யுங்கள். நாம் செல்லும் வழி எது, நம்மை அறியாமலே நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? மோட்சத்திற்கு செல்ல நாம் செய்ய வேண்டியது, தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு அடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி.28:13) உன்னுடைய பாவங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சொல்லி விடுதலையை பெற்றுக் கொள். மீண்டும் பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள். இப்படி செய்வதை விட்டுவிட்டு தேவன் இல்லை, மோட்சம் இல்லை, நரகம் இல்லை, நியாயத்தீர்ப்பு இல்லை என்றும் சொல்லி உன்னை தேற்றிக் கொள்வாயானால் என்றென்றைக்கும் அழியாத நித்திய, நித்தியமான நரகத்துக்கு உரியவர்களாகவே மாறிவிடுவோம். இதுவே இரட்சண்ய நாள், இன்றைக்கு மீட்பை பெற்றுக்கொண்டு பரம சந்தோஷத்தை அடைவீர்களாக.
Interactive Picture

Saturday, March 19, 2011

ச‌கோதரி.இவாஞ்சலின் பால்தின‌க‌ர‌னோடு ஒரு நேர்முக‌ பேட்டி

Interview with Sis.Evangeline Paul Dhinakaran

Watch it on iPhone or Ipad or iPod Touch
Credit goes to Tamil Christian Media and Jesus Calls Ministries

Friday, March 18, 2011

அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு இலவச தமிழ் வேதாகமம்

”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” எனச் சொல்லி உலகத்திற்கு ஒளியாய் வந்த இயேசுகிறிஸ்துவை இன்னும் அறியாதவரா நீங்கள்?
மறுபடியும் பிறந்த அனுபவம் இன்னும் இல்லாத நண்பரா நீங்கள்?
கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களல்லாத ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தை பற்றி மேலும் அறிய விரும்பும் தமிழ் நண்பர்களுக்கு இலவசமாக தமிழ் வேதாகமங்களை பரிசளிக்க விரும்புகிறோம்.
கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பினால் மேற்கொண்டு விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.

thewayofsalvation@yahoo.com

இத்தகவலை கிறிஸ்தவரல்லாத உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

From "The way of salvation" ministry we are glad to issue free tamil bibles for non Christians /non believers who are interested in learning more about Jesus Christ.
Right now we are taking requests only from residents of USA and Canada.
Please send us a email at

thewayofsalvation@yahoo.com

We will contact you with further information.
Please share this information with your non-christian tamil friends.
God bless you all.

Thursday, March 17, 2011

இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்

செய்திகளிலெல்லாம் பலதும் கேள்விப்படுகிறோமே.இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என வேதம் சொல்லுகின்றது. ஆனால் முடிவு உடனே வராது. உபத்திரவகாலத்தில், மகா உபத்திரவ காலத்தில் நடைபெறப்போகும் சம்பவங்களின் சாம்பிள் தான் நாம் இப்போது நம் சொந்த கண்களால் பார்த்துக் கொண்டிருப்பது. மெதுவாகத் தொடங்கும் இந்த வேதனைகள் பின் சடுதியாய் வந்து இறங்கும். ஆனாலும் நோவாகாலத்தில் நடந்தது போல ஜலப் பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக் கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். இக்கால ஜனங்களும் இப்படியே உணராதிருப்பார்கள். It is normal என்பார்கள். சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே என்றும் சொல்லுவார்கள்.(2 பேதுரு:3:4). வெளி 8-ம் அதிகாரம் இப்படியாக சொல்லுகிறது. 8-ம் வசனத்தில் இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலை போன்ற தொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. 9.சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று.

இதோ சில சமீபத்திய செய்திகள்லாஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையை சூழ்ந்த மில்லியன் கணக்கான செத்த மீன்கள் - 8 மார்ச் 2011

ஆஸ்திரேலியா டார்லிங் நதியில் ஆயிரக்கணக்கான செத்த மீன்கள் மிதப்பு - 15 மார்ச் 2011

சவுத் வேல்ஸில் 26,000 மீன்கள் செத்து மிதந்தன - 11 மார்ச் 2011

ஹவாயில் மீன்கள் செத்து மிதப்பு - 14 மார்ச் 2011

மிசிகனில் ஆயிரக்கணக்கான மீன்கள் சாவு - 11 மார்ச் 2011

இல்லினாய்ஸ் ஏரியில் நூற்றுக்கணக்கான மீன்கள் சாவு - 10 மார்ச் 2011

கனடாவில் நூற்றுக்கணக்கான கடல் சீல்கள் சாவு - 17 ஜனவரி 2011

மேரிலேண்ட் கடற்கரையில் இரண்டு மில்லியன் செத்த மீன்கள் - 5 ஜனவரி 2011

இங்கிலாந்தில் 40,000 செத்த நண்டுகள் கரை ஒதுங்கின.- 6 ஜனவரி 2011

Something fishy is going on… என நாம் சொல்ல வேண்டியத்தில்லை.ஏனென்றால் இது நடக்கும்போது நாம் விசுவாசிக்கும்படியாக, இவை நடப்பதற்குமுன்னமே இதை இயேசு நமக்காக சொல்லி சென்றிருக்கின்றார். (யோவான்:14:29)

Everything is under His control. You don't have to worry.

Wednesday, March 16, 2011

மத்தேயு 24:44 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper
மத்தேயு 24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

Monday, March 14, 2011

ஆசீர்வாதம் மார்ச் 2011 பத்திரிகை டவுண்லோட்

உள்ளடக்க கட்டுரைகள்

  • உன் வாழ்க்கையை என்ன செய்யப் போகிறாய்? - (அரோமா 2011இல் பங்குபெற்ற 1400 நங்கையருக்கு டாக்டர் திருமதி லில்லியன் ஸ்டான்லி அளித்த செய்தி)
  • ஆத்துமாதாயம் - பயணத்தில் பறித்த பழம் - கே. சசிதரன், பஞ்சாப்
  • நறுமண முகாமின் நறுமணம்!
  • அநீதிக்கு வலது கரம் கொடுப்பதா? - திருமதி ஜெமிமா சுகிர்தராஜ், திருநெல்வேலி
  • உறவில் தேவனைப் போல்! - மிட்டா மாத்யூ, கேரளம்
  • துன்பத்தில் இன்பம் - கெசியா ஜோசப், ஹரியானா
Blessing Tamil Magazine PDF Download Link டவுண்லோட் லிங்க்

Friday, March 11, 2011

அதிகரிக்கும் பூமிஅதிர்ச்சிகள்


காலம் நெருங்க நெருங்க கர்ப்பவதியானவளுக்கு உண்டாகும் வேதனையானது அடிக்கடியாயும் அதிகமாயும் ஆகிக்கொண்டிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டு மெதுவாக ஆரம்பிக்கும் அவள் வேதனைகளும் வலிகளும் பிள்ளை பிறக்கும் நேரம் நெருங்க நெருங்க வலிவரும் frequency-யும் intensity-யும் கூடிக்கொண்டே போகும். கடைசியில் மகாபெரிய பிரசவ வேதனையோடு அவள் பிள்ளையை பெற்றெடுப்பாள். இறுதிக் கால நிகழ்வுகளை பரிசுத்த வேதாகமம் ”கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல” (Iதெசலோனிக்கேயர் 5:3) என குறிப்பிடுகிறது. முன்பெல்லாம் எங்கேயோ எப்போதோ ஒரு முறை பெரிதாக வந்து போகும் பூகம்பங்கள் இப்போது அடிக்கடி பெரிது பெரிதாக ஆங்காங்கே வருகின்றன கர்ப்பவதியானவளுக்கு வேதனை படிப்படியாக கூடுவது போல. கிறிஸ்துவானவரை இந்த பூமிக்கு வர வைக்கும் முன் இந்த உலகம் படப்போகும் பாடு பிரசவ வேதனை பாடுதான். நேற்று முன்தினம் நியூசிலாந்து - நேற்று சீனாவில் - இன்று ஜப்பானில். Buckle up your belts friends.

கீழ்கண்ட வேத வாக்கியங்களில் இயேசு கிறிஸ்து கடைசி காலங்களில் மகா பெரும் பூகம்பங்கள் ஆங்காங்கே நிகழும் என குறிப்பிடுகிறார்.

மத்தேயு 24:7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

மாற்கு 13:8 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்

லூக்கா 21:11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
இந்த பக்கத்தில் இனி நாம் அடிக்கடி நிகழப்போகும் பூகம்பங்களை வரிசைப்படுத்த போகிறோம்.

அர்ஜென்டினாவில் கடும் நிலநடுக்கம் ஜனவரி 01,2011

ஜேர்மனியில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2011

ரஷ்யாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவு! தினகரன் - Feb 21, 2011

நியூசிலாந்தில் கடும் பூகம்பம் 65 பேர் பலி: கட்டடங்கள் சேதம் பிப்ரவரி 22,2011

ராஜஸ்தானில் நில நடுக்கம்: வீடுகள் குலுங்கின ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011

சிலியில் நிலநடுக்கம்: வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின! தினகரன் - Feb 28, 2011

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்! வெள்ளி, 04 மார்ச் 2011

சாலமன் தீவுகளில் கடும் நிலநடுக்கம் 07 Mar 2011

சீன நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு மார்ச் 11,2011

பயங்கர நிலநடுக்கம் - சுனாமி தாக்கியது : ஜப்பானில் பெரும் நாசம் ; பல வீடுகளை கடல் விழுங்கியது மார்ச் 11,2011

It is so hard to track all of them.
And you think it is normal?

Please be praying for the people of Japan for the Lord to comfort them and draw them close to His heart.

Thursday, March 10, 2011

பாஸ்டர் ஆல்வின் தாமஸுடன் ஒரு நேர்முக‌ பேட்டி


Watch it on iPhone or Ipad or iPod Touch
Pastor Alwin Thomas Interview
Credit goes to Tamil Christian Media and
Ruah Ministries
No:155,Pepzen Court,
(Next to old Ram theatre),
Kodambakkam, Chennai, Tamil Nadu

Monday, March 07, 2011

I யோவான் 4:7 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper
I யோவான் 4:7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

Friday, March 04, 2011

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்

யுத்தம் கர்த்தருடையது.
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார் நீங்கள் சும்மா இருப்பீர்கள்.
குதிரைகள் யுத்த நாளைக்கென்று ஆயத்தப்படுத்தப்படும்.ஜெயமோ கர்த்தரால் வரும்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளெல்லாம் ப‌ழைய‌ ஏற்பாட்டு கால‌த்தில் ம‌ட்டுமே செல்லுப‌டியான‌து என‌ நாம் நினைக்க‌ வேண்டாம். ச‌மீப‌கால‌ங்க‌ளில் கூட‌ இஸ்ர‌வேலின் தேவ‌ன் அவ‌ர்க‌ளை ஆச்ச‌ரிய‌ அதிச‌ய‌ வித‌மாக‌ ந‌ட‌த்தி வ‌ந்திருக்கிறார்.246 பய‌ணிக‌ளுட‌ன் இஸ்ரேலிலிருந்து சென்ற‌ ஒரு விமான‌த்தை பாலஸ்தீனிய தீவிர‌வாதிக‌ள் க‌ட‌த்திச்செல்ல‌, தீவிர‌வாதிக‌ள் அதிலிருந்த‌ அத்த‌னை யூத‌ர்க‌ளையும் சிறைபிடித்து வைக்கிறார்க‌ள். கூட‌வே அவ‌ர்க‌ள் உயிரையும் காட்டி மிர‌ட்டி ப‌ல‌ கோரிக்கைக‌ளை வைக்கிறார்க‌ள். இந்த‌ இக்க‌ட்டான‌ சூழ்நிலையில் இஸ்ரேல் ப‌டையின‌ர் சிங்க‌த்தின் குகைக்குள்ளேயே சென்று அவ‌ர்க‌ளை மீட்டு வ‌ந்த‌ க‌தை எல்லோரையும் விய‌க்க‌ வைக்கும். இத‌னை அப்ப‌ரேச‌ன் என்ட‌பே என்ப‌ர். க‌ர்த்தரின் க‌ர‌ம் கூட‌ இருந்தால் ம‌ட்டுமே இது போன்ற‌ அதிச‌ய‌ங்க‌ளை ஒருவ‌ரால் செய்ய‌ முடியும். இது போன்ற‌ ஒரு ஆப்ப‌ரேச‌னை (Operation Eagle Claw) அமெரிக்க ராணுவ‌ம் ஈரானில் செய்ய‌ முய‌ன்று அது பெரும் தோல்வியில் முடிந்த‌து. கர்த்தரை கனம் பண்ணுகிறவர்களை கர்த்தர் கனம் பண்ணுவார். அசட்டை பண்ணுபவர்களை கர்த்தரும் அசட்டை பண்ணுவார்.
1 சாமுவேல் 2:30.
என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் எனறு கர்த்தர் சொல்லுகிறார்.


இங்கு ஆபரேஷன் என்டெர்பே (Operation Entebbe) ச‌ம்ப‌வ‌த்தை ப‌ற்றி நாம் ச‌ற்று விவ‌ர‌மாக‌ காண‌லாம்.

இஸ்ரேலில் இருந்து ஏதென்ஸ் வழியாக பாரிஸ் சென்றுகொண்டிருந்த ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தை 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் உகாண்டாவிற்கு கடத்திச்சென்றனர். அதை இஸ்ரேல் சமாளித்தவிதம் ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையானது. ஏர் ஃப்ரான்ஸ்-139 விமானம் இஸ்ரேலில் இருந்து ஜூன் 27, 1976-ல் பாரிஸ் கிளம்பியது. 246 பயணிகளும் 13 விமானக்குழுவும் இருந்த அந்த விமானம் இஸ்ரேலில் இருந்து கிளம்பியதும் கடத்தப்பட்டது. இந்தியா என்றால் பாகிஸ்தான் என்பது போல், இஸ்ரேல் என்றால் பாலஸ்தீனர்கள்.இந்த விமானத்தை கடத்தியது 2 பாலஸ்தீனர்கள் மற்றும் 2 ஜெர்மானியர்கள் அடங்கிய ஒரு குழு. இந்த கடத்தலுக்கு உகாண்டா அதிபர் இடி அமின் உடந்தையாக இருந்திருக்கிறார்.

கடத்திய விமானம் முதலில் லிபியா கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுமார் 7 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. லிபியாவில் விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பி உகாண்டா செல்ல ஆயத்தமானது விமானம். இதற்கிடையில் ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதாகவும் அது கலைந்து விட்டதாகவும் கூறி லிபியாவிலேயே இறங்கி தப்பித்துக் கொண்டாள்.

பின் உகாண்டா சென்று சேர்ந்தது ஏர் ஃப்ரான்ஸ் விமானம். பிறகு தான் கட்த்திய தீவிரவாதிகள் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினர். எதிர்பார்த்தபடி பணயத்தை அறிவித்தார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட நடக்க இயலாத விஷயமாகவே இருந்தது. அவர்கள் கேட்டது.

•இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பாலஸ்தீனர்களை விடுவித்தல்
•கென்யா, ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 13 தீவிரவாதிகளை விடுவிப்பது

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிடில், ஜூலை 1 முதல் பயணிகளை கொன்றுவிடப்போவதாக அறிவித்தனர். இடையில் உள்ள நாட்கள் 3. ஆனால் இதில் எதிர்பார்க்காத மற்றொரு முகத்தையும் காட்டினர். கடத்திய தீவிரவாதிகள். யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் தனியாக பிரித்தனர்.சில பேச்சுவார்த்தைகளின் பின்னர் சில பயணிகளை மட்டும் விடுவிக்க தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டனர். அதாவ‌து யூதரல்லாதவர்களையும் விமானக்குழுவையும் மட்டும் விடுவிக்க தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

என்டெபியில் இதற்கென தயாராக இருந்த மற்றொரு ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தில் இவர்களை ஏற்றிச்செல்ல முடிவெடுத்தனர். விமானததின் கேப்டன் மைக்கேல்பகோஸ், “இந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் என் பொறுப்பு. அவர்களின்றி நான் செல்ல மாட்டேன்” என்றார். மற்ற விமானக்குழுவினரும் இதை ஆமோதித்தனர். ஒரு ஃப்ரெஞ்சு கிறிஸ்தவ கன்னிகாஸ்திரியும் செல்ல மறுத்து தனக்கு பதிலாக வேரொறுவரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உகாண்டா வீரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இப்போது விமானத்தில் இருந்தது 80 யூதப்பயணிகளும் 20 மற்றவர்களும். இதற்கிடையில் இஸ்ரேல் அரசு வேறொரு வேலையில் மும்முரமாக இருந்தது. ஜூலை 1ம் தேதி நெருங்கிவிட்டதால், இஸ்ரேல் அரசு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டது. அதாவது ஜூலை 4 வரை ஒத்திவைக்குமாறும், தாங்கள் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த நேரத்தில் உகாண்டா அதிபர் இடி அமினும் ஒரு அரசுமுறைப்பயணமாக மொரீஷியஸ் வரை செல்ல வேண்டி இருந்ததால் அவர், அந்த தீவிரவாதிகளை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார். கிடைத்த இந்த 3 நாட்களை கொண்டு ஒரு ஆபத்தான திட்டத்தில் இறங்கியது இஸ்ரேல்.

இஸ்ரேல் ராணுவத்தின் Yekutiel “Kuti” Adam, Matan Vilnai, ,Brigadier General Dan Shomron அடங்கிய படை ஒன்று திரட்டப்பட்டது. அந்த படை தீட்டிய திட்டம் ஆபரேஷன் என்டெபே. திட்டம் என்னவென்றால் ஆறு இஸ்ரேல் ராணுவ விமானங்கள் திருட்டுத்தனமாக உகாண்டாவின் என்டெபே விமான நிலையத்துக்குள் நுழைந்து பணயக்கைதிகளை காப்பாற்றுவது. இது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒரு விஷயம்.

ஏனென்றால் இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிகள் அப்படி.
•இஸ்ரேல் தனக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடனும் சண்டையில் இருந்தது.நல்ல காலத்திலேயே அண்டை நாடுகள் எப்போதும் உதவுவதில்லை. இதில் பிரச்சினையில் இருக்கும்போது கேட்கவே வேண்டாம்.
•எனவே இஸ்ரேலின் முதல் சவால், அண்டை நாடுகளின் வானத்தை விமானப்பயன்பாட்டுக்கு உபயோகிக்காமல் இருக்கவேண்டும்.
•அவ்வளவு தூரம் சென்று மீண்டும் இஸ்ரேல் திரும்ப எரிபொருள் கட்டாயம்போதாது. எந்த நாடும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்காது. மேலும் இந்தஆபரேஷன் ஒரு மிக ரகசியமான ஒரு விஷயம்.
•என்டெபேயில் விமான ஓடுதளத்தை அவர்கள் உதவியின்று பயன்படுத்தவேண்டும். என்டெபே விமானநிலையம் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டதால் இதுவும் அவ்வளவு எளிதல்ல.

இத்தனை சவால்களையும் மீறி விமானநிலையத்துக்குள் நுழைந்தாலும், அவர்களை எப்படி தேடுவார்கள் என்கிறீர்களா? அங்குதான் இருந்தது ஒரு அல்வாத்துண்டு போன்ற ஒரு விஷயம்.

உகாண்டாவின் என்டெபே விமான நிலையத்தை வடிவமைத்து கட்டியது ஒரு இஸ்ரேலிய கம்பெனி. இது போதுமே, அனைத்தையும் முடிக்க. கிட்டத்தட்ட அந்த கம்பெனியிடம் இருந்து வடிவமைப்பைப் பெற்றுத்தான் இந்த திட்டமே தீட்டப்பட்டது எனலாம். அந்த வடிவமைப்பைக்கொண்டு இஸ்ரேலில் ஒரு மாதிரி அமைத்து அங்கு ஒரு சோதனை செய்து பின்னரே களத்திற்கு கிளம்பினர்.

முதல்கட்டமாக அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை, எகிப்து செங்க‌ட‌ல், சூடான் மற்றும் சௌதி அரேபியா வ‌ழி. கிட்டத்தட்ட 100 அடிக்குள்ளான தாழ்வான‌ உய‌ர‌த்தில் ப‌ற‌ந்த‌தால் எகிப்து, சூடான் மற்றும் சவுதி அரேபியாவின் ரேடார் பார்வையில் இருந்து இஸ்ரேல் விமான‌ங்க‌‌ள் தப்பித்தன.பின் செங்கடல் இறுதியில் வலதுபுறம் திரும்பி ஏடென் வழியாக கென்யாவின் நய்ரோபி விமானநிலையத்தை வந்தடைந்தன இஸ்ரேலிய ராணுவ விமானங்கள். விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பி அங்கிருந்து விமானங்கள் நேரடியாக என்டெபேயை நோக்கி புறப்பட்டன.

என்டெபேயில் கடைசியாக ஒரு மெகா நாடகத்தை நடத்தியது இந்த‌ ஆப்ப‌ரேச‌ன் குழு. என்டெபேயில் முதலில் ஒரு விமானத்தை தரை இறக்கியது. சற்று முன் தரை இறங்கிய வேறு ஒரு விமானத்திற்காக போடப்பட்ட ஓடுபாதை விளக்குகளை பயன்படுத்தி இஸ்ரேலிய விமானம் இறங்கியது.

மொரீஷியஸ் சென்றிருந்த இடி அமின் வந்துவிட்டதைப்போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, அவர் எப்போதும் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. அந்த காரை விமானத்தில் இருந்து தரை இறக்கி, அதில் இடி அமின் போல தோற்றம் கொண்ட ஒரு இஸ்ரேலிய கமாண்டோவை இருக்க வைத்து, பின்னால் சில கார்கள் புடைசூழ விமான நிலையத்தில் நுழைந்தது கார். உள்ளே இருந்த ராணுவம் இடி அமின் வருவதாக நினைக்க வைக்கவும், அவர்களுக்கு சுதாரிக்க நேரம் கொடுக்காமலும் இருக்க இந்த நடவடிக்கையை செய்தது இஸ்ரேல்.

ஆனால் விதி வேறு விதமாய் இரண்டு பாதுகாவலர்கள் ரூபத்தில் காத்திருந்தது. இஸ்ரேல் எடுத்து வந்திருந்தது கருப்பு நிற கார். ஆனால் மிக சமீபத்தில் இடிஅமின் தனது காரை வெள்ளையாக மாற்றி இருந்தார். மேலும் தன் காருக்கு பின்னால் கார்கள் ஏதும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இதை நன்கு அறிந்த அந்த பாதுகாவலர்கள், வந்த காரை நோக்கிச்சுட்டனர்.
இது மற்றவர்களை உசுப்பிவிடாமல் இருக்கும் பொருட்டு, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. அவர்கள் முன்னரே போட்டு வைத்திருந்ததிட்டப்படி அனைவரையும் அடித்து நொறுக்கி 30 நிமிடங்களில் அனைத்து பணயக்கைதிகளையும் காப்பாற்றி, விமானம் மீண்டும் கிளம்பி இஸ்ரேல் சென்றது. வழியில் முன்புபோல் கென்யாவில் இரு நிறுத்தம் போட்டு விட்டுசென்றது. இந்த மீட்புப்பணியில் ஒரே ஒரு இஸ்ரேலிய கமாண்டோ மட்டும் உயிரிழந்தார். அவ‌ர் தான் இன்றைய‌ இஸ்ரேலிய‌ பிர‌த‌ம‌ர் பெஞ்ச‌மின் நெட்ட‌ன்யாகுவின் மூத்த‌ ச‌கோத‌ர‌ன் ஜோன‌த்தான் நெட்ட‌ன்யாகு. பணயக்கைதிகளில் 3 பேர் இறந்தனர். உகாண்டா தரப்பில் 45 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 15 மிக் 17 ரகவிமானங்களும் வீழ்த்தப்பட்டன.இஸ்ரேலிய‌ர் எக்காளம் ஊதி இவ்வெற்றியை கொண்டாடின‌ர்.

யாத்திராகமம்:15
11.கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?
3. கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
21.கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்

Wednesday, March 02, 2011

தேவா நான் எதினால் விசேஷித்தவன் பாடல்

Theva Naan Ethanaal Vishesithavan Tamil Song lyrics.

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு இருப்பதினால்

1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே - தேவா

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் - தேவா

3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒருமரம் கூடவருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு - தேவா