2000 ஆண்டுகள் பழமையான, எருசலேம் ஆலயத்துக்கு வரியாக செலுத்தப்படும் அரைசேக்கல் வெள்ளி நாணயம் கண்டெடுப்பு. (யாத் 30:13)
Friday, January 27, 2023
அரைசேக்கல் வெள்ளி நாணயம் கண்டெடுப்பு.
பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோம பேரரசர் அகஸ்டஸ் சீசர்.
பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோம பேரரசர் அகஸ்டஸ் சீசர், தான் அறியாமலேயே ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற காரணமாயிருந்தார் என்பது தெரியுமோ. இயேசுவின் தாய் தந்தையினர் குடிஇருந்தது நாசரேத் எனும் ஊரில். ஆனால் மீகா 5:2 படி இயேசு பிறக்க வேண்டியது பெத்லகேமில். அகஸ்டஸ் சீசர் மக்கள்தொகை கணக்கெடுக்கபோவதாக அறிவிப்பு வெளியிட்டபடியால் யோசேப்பு தனது மனைவி மரியாளுடன் சொந்த ஊரான பெத்லகேம் போகவேண்டியதாயிற்று. அங்கே பைபிள் வாக்கியங்கள் முன்னுரைத்த படி இயேசு பெத்லகேமில் பிறந்தார். இப்படியாக அகஸ்டஸ் சீசர், தான் அறியாமலேயே ஒரு பைபிள் முன்னுரைப்பு நிறைவேற காரணமாக அமைந்தார்.
கற்பலகைகளுடன் மோசே.
கையில் பத்துகட்டளை கற்பலகைகளுடன் மோசே - சிற்பத்தை உருவாக்கியவர் இத்தாலிய சிற்பக்கலைஞர் மைக்கெலேஞ்சலோ. இடம் - ரோம்.
கிரீஸ் தேசம் பைபிளில் கிரேக்கு தேசம்.
தப்பிக்கொள்ளும்படியான போக்கை..
சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். I கொரிந்தியர் 10: 13
பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்.
இயேசுவை பற்றிய இந்த நற்செய்தி பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
(மத்தேயு 24:14)கற்றுக்கொள்ளுகிறார்கள் விஞ்ஞானிகள்.
அற்புதமாக உலகினை படைத்த இறைவனிடமிருந்து
அற்புதமான விஷயங்களை கற்றுக்கொள்ளுகிறார்கள் விஞ்ஞானிகள். இன்றைக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் வெல்குரோவும் (Velcro) இப்படி இயற்கையிடமிருந்து ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் (George de Mestral) கற்றுக்கொண்டதே.சீனாவிலுள்ள கிடார் வடிவிலான ஒரு ஆலயம்.
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். சங்கீதம் 43:4
படம்: சீனாவிலுள்ள கிடார் வடிவிலான ஒரு ஆலயம்.1800 ஆண்டுகள் பழமையான நெடுஞ்சாலை.
அத்திமரம் துளிர்விட்டு
இஸ்ரேல் தேசம் எனும் அத்திமரம் 1948 ல் துளிர்விட்டு உருவானபோது ஒன்றை அறிந்துகொள்ள சொல்லுகிறார் இயேசு, அதாவது இயேசு சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் என்கிறார்.
பைபிள் சொல்கிறது "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, இயேசு சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்." மாற்கு 13:28,29 இயேசுவின் வருகை சமீபம்.தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். யாக்கோபு 1:13,14மனைவிகளே..
மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தாலும் பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை பார்த்து, போதனையின்றி, ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 1பேதுரு 3:1,2
3000 ஆண்டுகள் பழமையான எகிப்து நாகரீக முத்திரை.
கல்வி சுற்றுலாவின் போது இஸ்ரேல் மாணவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான எகிப்து நாகரீக முத்திரை ஒன்றை கண்டெடுத்தனர். எகிப்திய பார்வோன் ராஜா, கானானிய சிற்றரசரொருவருக்கு அதிகாரம் அளிப்பது போன்ற சித்திரம் அதில் உள்ளது.
இல்லத்தின் மிக முக்கியமான நூல் பைபிள்.
இல்லத்தின் மிக முக்கியமான நூல் பைபிள்.
"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" யோசுவா 24:15நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்...
கொழுப்பு தசைகள் நீக்கப்பட்டு - மெல்லிய இரத்த நாளங்கள் மட்டுமே தெரியும் மனித இருதயத்தின் படம் இது. ஆண்டவரின் கிரியைகள் அதிசயமாவைகள். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 139 14
எபேசு பட்டணம்.
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள எபேசு பட்டணம். அப்போஸ்தலர் 18:19 The ancient city of Ephesus. Acts 18:19
குப்பைமேட்டு வாசல்.
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைமேட்டு வாசல், பழைய எருசலேம் நகரம். நெகேமியா 2:13 Dung Gate, Old City of Jerusalem. Nehemiah 2:13
பார்கோடை முழங்கையில் பச்சைக் குத்திக்கொண்ட தைவானை சேர்ந்த இளைஞர்!
கிறிஸ்தவர் துன்புறுத்தப்படுவது இந்தியாவில் அதிகரிப்பு.
இங்கிலாந்து, வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர்.
இங்கிலாந்து, வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர்: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்.
இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். உபாகமம் 11:26-28பெரும்பாதை.
அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். ஏசாயா 19:23
தன்னை தானே காயப்படுத்திக்கொள்வது.
தன்னை தானே காயப்படுத்திக்கொள்வது அசுத்தஆவி பிடித்துள்ளோர் செய்யும் ஒரு வருந்தத்தக்க செயல். பைபிளில் ஒரு மனிதன் பிசாசின் ஆவி பிடித்திருந்த படியால் கல்லுகளினாலே தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டான் என பார்க்கிறோம் (மாற்கு 5:5). ஆனால் அவன் வாழ்வில் இயேசு வந்தபோதோ அந்த அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டு நீங்கி போயிற்று. அவன் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிட்டது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு..
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் திரும்பியுள்ள யாக்கோபின் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான ஆடுகள் (ஆதியாகமம் 30:39, எரேமியா 13:20, எசேக்கியேல் 34:12,13).
என்னே அற்புதம் கடவுளின் படைப்பு.
கடற்கரை மணலைவிட அதிகளவு வானத்து நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்ற அதே வேளையில், ஒரு மண்துகளில் நட்சத்திரங்களைவிட அதிகளவு அணுக்கள் இருக்கின்றதாம். என்னே அற்புதம் கடவுளின் படைப்பு. லூக்கா 12:7 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள்.
தலைசீராமட்டும் போட்டுக்கொண்டு யாராவது போருக்கு போவதுண்டோ?
தலைசீராமட்டும் போட்டுக்கொண்டு யாராவது போருக்கு போவதுண்டோ? "இரட்சிப்பு" எனும் தலைச்சீராவோடு உங்கள் கிறிஸ்தவ வளர்ச்சியை நிறுத்திவிடாதீர்.
இந்த உலகத்தில் வெற்றியோடு போராடதேவையான போராயுதங்கள் என பைபிள் குறிப்பிடுவது,
*சத்தியம்* என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்,
*நீதியென்னும்* மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய *ஆயத்தம்* என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக *விசுவாசமென்னும்* கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
*இரட்சணியமென்னும்,* தலைச்சீராவையும். *தேவவசனமாகிய* ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:13-18
"ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்".
Peregrine Falcon எனும் பறவையின் சாயலில் உருவாக்கப்பட்ட நவீன போர் விமானம் B-2 Stealth Bomber. கடவுளின் படைப்பை காப்பி அடிக்கும் போது எப்போதுமே விஞ்ஞானம் வெற்றிபெறுகிறது. இயேசு சொன்னார், "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்". மத்தேயு 6:26
ஆராதனை.
ஆராதனையில் திருப்தியாகவேண்டியது ஜனங்களல்ல. தேவன். ஆராதனை எப்படியிருந்தது என ஆண்டவரைக் கேளுங்கள். ஜனங்களையல்ல. நம் ஆராதனையை மெச்ச வேண்டியது தேவன் ஒருவரே.
உம் அல் குவைனில் பழங்கால கிறிஸ்தவ மடாலயம்.
ஐக்கிய அரபுநாடுகளிலுள்ள உம் அல் குவைனில் பழங்கால கிறிஸ்தவ மடாலயம் ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி ஒன்றில் கிடைத்துள்ளது. இது இஸ்லாமிய காலங்களுக்கு முந்தையதென கணிக்கப்பட்டுள்ளது.
"டிஜிட்டல் கரன்சி"
கரன்சி ரூபாய் நோட்டுகள் போய் முழுக்க முழுக்க "டிஜிட்டல் கரன்சி" சீக்கிரத்தில் உலகமெங்கும் வருகிறது. இதனை "மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்" (CBDC) என்கிறார்கள். அரசுகளின் முழு கம்ப்யூட்டர் கட்டுபாட்டில் இந்த டிஜிட்டல் கரன்சி இருப்பதால் அது புழக்கத்துக்கு வரும் போது, மக்கள் தங்கள் டிஜிட்டல் பணத்தை செலவிடும் முழு சுதந்திரம் மக்களிடமிருந்து எளிதில் பறிக்கப்படலாம். உதாரணமாக எவ்வளவு பணம் எதற்கெல்லாம் செலவழிக்கலாம், யாராருக்கெல்லாம் நன்கொடை கொடுக்கலாம், தடுக்கலாம் என கட்டுபாடுகள் எளிதாக மக்கள் மீது போடலாம். இஷ்டத்துக்கும் செலவு பண்ணமுடியாதவாறு வரைமுறைகள் கொண்டுவரலாம். ஒரே சொடுக்கில் உங்கள் பணம் அனைத்தையும் பிடிங்கியும் விடலாம். சர்வாதிகாரி ஒருவனிடம் இந்நிலையில் உலகம் சிக்கினால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வெளி 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே.
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். வெளி 9:14
ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம்
ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம் இந்த “ஒரே” எல்லாம் யெகோவா தேவனுக்கு பிடிக்காத விஷயம். மனிதர்கள் இப்படி ஒன்று கூடும் போதெல்லாம் உற்றுபார்க்க வந்துவிடுகிறார் இறைவன் (ஆதியாகமம் 11). ஆபத்து மக்களே. இதுவும் "புதிய உலக ஒழுங்கு - NWO New World Order"க்கு இட்டுசெல்லும் பாதையே.
ஹீப்ரு மக்கள்.
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. லேவியராகமம் 25:38
அந்த கால பெர்கமு (Pergamon) பட்டணம்.
பைபிளில் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் குறிப்பிடும் அந்த கால பெர்கமு (Pergamon) பட்டணத்தின் 10,000 பேர் அமரும் விதத்திலான ஒரு களியாட்டு அரங்கம். இப்போது இது துருக்கி நாட்டிலுள்ளது.
ரோமிலுள்ள "The Appian way" எனும் மிக பழமையான சாலை.
ரோமிலுள்ள "The Appian way" எனும் இந்த மிக பழமையான சாலை கிமு 312 ல் Appius Claudius Caecus என்பவரால் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டிலுள்ளது. இந்த சாலையை பற்றிய குறிப்பு பைபிளில் வருவது உங்களுக்கு தெரியுமா? அப்போஸ்தலர் 28:15.
இரத்தசாட்சியாக மரித்த பர்த்தொலொமேயு.
இந்தியாவுக்கு வந்ததாக கருதப்படும் இன்னொரு இயேசுவின் சீஷனின் பெயர் பர்த்தொலொமேயு. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் இவர் ஊழியங்கள் செய்ததாக செவிவழி செய்திகள் உள்ளன. ஆனால் இவரது இறுதிகாலம் ஆர்மேனியாவில் அமைந்தது. அங்கே அவரை உயிரோடு தோல் உரித்து கொன்றதாக சொல்லப்படுகிறது. படத்தில் நீங்கள் காண்பது இத்தாலி மிலான் நகரிலுள்ள தன் தோல்களை தானே தோள்களில் சுமக்கும் உயிரோடு தோல் உரிக்கப்பட்ட பர்த்தொலொமேயுவின் சிலை. இயேசுவுக்காக இரத்தசாட்சியாக மரித்த பர்த்தொலொமேயுவின் தோல்கள் உரிந்து தொங்குவதை படத்தில் காணலாம். சீஷன் பர்த்தொலொமேயுவுக்கு இன்னொரு பெயர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது அது தெரிந்தோர் கமெண்டில் குறிப்பிடுங்கள், இயேசு இவரை பற்றி என்ன சாட்சிகொடுத்தார் என்பதையும் குறிப்பிடுங்கள். பதில் கீழே.
அழகிய கால்வாய் (Canal) உள்ள பட்டணம்.
கிரீஸ் நாட்டிலிருக்கும் இந்த அழகிய கால்வாய் (Canal) உள்ள பட்டணத்துக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டு நிரூபங்கள் எழுதினாரென்றால் அது எந்த பட்டணம் என உங்களால் கணிக்க முடிகிறதா? பதில் கீழே.
கொரிந்து பட்டணம்"ஏனோக்கின் புத்தகம்".
நம் கைகளில் இருக்கும் பைபிளில் சேர்க்கப்படாத ஒரு புத்தகம் "ஏனோக்கின் புத்தகம்". இந்த புத்தகத்தை இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்தோர் படித்திருந்தார்கள் அறிந்திருந்தார்கள் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக இந்த நிரூபத்தை எழுதியவர் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். "இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கு.. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று ஏனோக்கு முன்னறிவித்தான்" என தனது நிரூபத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த நிரூபத்தை எழுதியவர் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?. பதில் கீழே.
யூதாவின் நிருபம். யூதா 1:14
நோவாவின் குமாரரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள்?.
ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவாவின் குமாரர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன என ஆதியாகமம் 10:32 குறிப்பிடுகின்றது. சேம், காம், யாபேத்து என்கிற நோவாவின் குமாரர்கள் மூவரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள் என பைபிள் (சங்கீதம்) குறிப்பிடுகிறது தெரியுமா? பதில் கீழே.
(காமின் தேசம்.சங்கீதம் 105:23,27, 106:21, 78:51)"இயேசுவின் இரத்தம் ஜெயம்"
"இயேசுவின் இரத்தம் ஜெயம்" எனும் சொற்றொடர் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஜெப வாக்கியம். ஆனால் இதற்கு ஆதாரமான வேதாகம வசனத்தை உங்களால் சொல்ல முடியுமா (வெளி)? பதில் கீழே.
"சீலோவாம் குளம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பைபிள் சம்பவங்களை நிரூபிக்கும் இன்னொரு அகழ்வாய்வு இஸ்ரேலிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தான் "சீலோவாம் குளம்". இயேசு வாழ்ந்த காலத்தியது (யோவான் 9:7). இஸ்ரேல் செல்லும் சுற்றுலா பயணிகளும் அதனை கண்டுகளிக்க சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும்..
சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும் உள்ளன என இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். உண்மையில் பூமியின் மிக உயரமான மலையை சமுத்திரத்தின் சில பகுதிகளில் எடுத்து எறிந்தால் அது மூழ்கிப்போகுமாம். அவ்வளவு ஆழமான பகுதிகள் கடலினுள் உள்ளன. இது இப்படியிருக்க சமுத்திரத்தினுள் பர்வதங்களின் அடிவாரங்கள் இருக்கின்றன என எடுத்துரைத்த ஒரு வேதாகம தீர்க்கதரிசி யாரென உங்களால் ஊகிக்க முடிகின்றதா? பதில் கீழே.
மெகித்தோ பள்ளத்தாக்கு.
படத்தில் நீங்கள் காணும் இஸ்ரேலிலுள்ள மெகித்தோ பள்ளத்தாக்கு போர்களுக்கு பெயர் போன இடம். யோசுவாவின் காலத்திலிருந்தே இவ்விடத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் இவ்விடம் இன்னொரு பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன என உங்களுக்கும் தெரிந்திருக்குமே? பதில் கீழே.
வெளி 16:16 அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.சிங்கத்துக்கு பேர் போன சாம்ராஜ்யம்.
பண்டைய சாம்ராஜ்யங்களில் இந்த குறிப்பிட்ட சாம்ராஜ்யத்தில் வீரத்துக்கு பேர்போன சிங்கம் மிகவும் பிரபலம். படத்தில் காண்பது போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் மட்டுமல்லாது, வேதாகமத்தில் கூட சிங்கங்களின் கெபி குறித்ததான ஒரு அற்புதநிகழ்வு இந்த பேரரசை பற்றி குறிப்பிடும் போது வருகிறது. அது எந்த சாம்ராஜ்யம் என உங்களால் கணிக்க முடிகிறதா? பதில் கீழே.
பாபிலோன்."ஆவியின் கனி" vs "மாம்சத்தின் கிரியைகள்".
"ஆவியின் கனி" ஒன்பது என்பது உங்களுக்கு தெரியும். பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கும் போது இந்த ஒன்பது ஆவியின் கனி கொடுப்பீர்கள். ஆவியின் கனிக்கு எதிர்பதம் "மாம்சத்தின் கிரியைகள்" என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகள் எத்தனை? அவைகளை வரிசைபடுத்த முடியுமா?. பதில் கீழே.
"தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு.
படத்தில் நீங்கள் காண்பது யோப்பா பட்டணத்திலுள்ள "தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு. இந்த வீட்டில் வந்து தங்கிய இயேசுவின் சீசர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த சீசர் இவ்விடத்தில் ஒரு தரிசனம் காண அதுமுதல் இயேசு யூதருக்கானவர் மட்டுமல்ல, உலகமுழுமைக்கும் அனைத்து ஜனத்துக்கும் கர்த்தரானவர் என அறிந்து கொணடார் அந்த சீசர். வேதாகாமத்தில் இந்த சம்பவம் எங்கு வருகிறது சொல்லமுடியுமா? பதில் கீழே.
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்