Wednesday, October 30, 2013

வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவடைகின்ற‌ காலத்தில் நாம் இருக்கிறோம்


"வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவடைகின்ற‌ காலத்தில் நாம் இருக்கிறோம்" என ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தைரியமாக உலக தலைவர்களின் மத்தியில் தெரிவித்தார். மேலும் அவர் வேதாகமத்தின் ஆமோஸ் 9:14,15 வசனங்களை மேற்கோள்காட்டி "அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லை" என இஸ்ரேல் தேசத்தின் உதயத்தை குறித்து வேதாகமம் முன்கூட்டியே எடுத்துக் கூறியிருப்ப‌தை சுட்டி காட்டினார். பைபிள் வசனப்படி "இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இனி பிடுங்கப்படுவதில்லை" என ஆணிப் பூர்வமாக‌ தெரிவித்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக‌.

http://www.timesofisrael.com/full-text-netanyahus-2013-speech-to-the-un-general-assembly/

Friday, October 25, 2013

உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி


இது கடந்த 21-ம் தியதி நம்மூர் செய்தித்தாள்க‌ளில் வெளியான செய்தி. இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரேல் நாட்டிலே குடியேற்றப்படுவார்கள் என்பது வேதாக முன்னறிவிப்பு. அதன்படியே நம்ம‌ தேவனின் வார்த்தைகள் நம் கண்ணெதிரேயே எப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறுதுனு பாருங்கோ! தேவர்களில் நம்ம தேவனுக்கு ஒப்பானவர் யாருங்கோ!

இதோ அந்த வேதாகம வார்த்தைகள்:
இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி (இந்தியா ஒரு கிழக்கு நாடு என நினைவில் கொள்க‌), உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். (ஏசாயா:11:12,27:12,43:5, ஆமோஸ்:9:14,16)

Thursday, October 24, 2013

தேவன் தந்த இந்த அழகிய பூமி



உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என 
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே 
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை 
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என 
அக்கரை அக்கரையாக 
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது. 

அதனாலேயே வேதம் சொல்லுகிறது 
வானங்கள் கர்த்தருடையவைகள்; 
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே! 
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!