Thursday, January 31, 2008

Rev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு

Download these Rev. Paul Thangiah Mp3 songs from here

ஆராதனை ஆராதனை Aaraathanai Aaraathanai


தேவா சரணம் கர்த்தா சரணம் Devaa Saranam Kartha Saranam


பனி போல பெய்யும் Pani Poola Peyum


கலிலேயா என்ற ஊரில் Kalileya Entra Ooril


அல்லேலூயா தேவனுக்கே Alleluaiah Devanukkey


இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே Yesu Enakku Jeevan


காத்திடும் Kaathidum


இயேசுகிறிஸ்து ஆண்டவர் Yesu Kiristhu Aandavar


புகழும் வேண்டாமே Pukalum Veendaamey

Tuesday, January 29, 2008

மண் கூடு

ஈரம் கலந்த மண்ணை பிசைந்து கொண்டிருந்தன அந்த சின்னஞ் சிறு கரங்கள். அப்படியே மண்ணை கையால் பிடித்து, குவித்து அப்பி சிறு வீடு ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தான் கடற்கரை மணலில். ரம்மியமான சூழல். கடலலைகளின் வேகம் சிறுக சிறுக கூடிக்கொண்டே வந்தது. மாலை நேர வெயில். வரவேற்ப்பறை, நடுவறை, படுக்கையறை, சமையலறை கட்டி மேல்மாடிக்கு வந்திருந்தான் சிறுவன்.கொண்டு வந்திருந்த சிறு சிறு பிளாஸ்டிக் சாதனங்கள் அவன் மண் வீட்டை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன. கோபுரத்தில் சின்னதாய் ஒரு பறக்கும் வண்ணக் கொடி.

இப்போது கடலலைகளின் சூரமும் அதிகமாக தொடங்கிவிட்டது.அப்பா வரவும் நேரமாகிவிட்டது.சிறு வீடு கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தான் அச்சிறுவன். கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து விட்டார்கள்.அப்பாவை எட்டிப் பார்க்கும் நேரத்தில் எங்கிருந்து தான் வந்ததோ அந்த ராட்சத பேரலை மொத்தமாய் சிறுவனின் வீட்டை வாரிக்கொண்டு போய்விட்டது. கை கொட்டி சிரித்தான் சிறுவன் சத்தமாய். மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. சுத்தமாய் காணாமல் போயிருந்த இடிபாடுகளை சுட்டி காட்டியபடியே ஓடோடி வந்த சிறுவன் இறுக்கமாய் அப்பாவின் கரங்களை பற்றிக்கொண்டான். காரில் அமர்ந்திருந்த போது மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டான்.உண்மையான வீடு தூரத்தில் அல்லவா இருக்கிறது.அது அவன் அப்பா கட்டியது.

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

மத்தேயு 7:25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

Monday, January 28, 2008

பைபிளும் இவர்களும்

நான் ஒரு வேளை சிறைசாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன் - கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல. அது நித்திய நித்திய காலமாக உள்ள ஓர் அழிவற்ற நூலாகும்- மார்ட்டின் லுத்தர் (Martin Luther)

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்.- பேராசிரியர் பீட்டெக்ஸ்

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon) கூறினார், "நான் நூறாவது முறை வேதத்தை வாசித்தபோது, முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்."

உலக புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) தனது மரணப்படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம், "அந்தப் புத்தகத்தை எனக்குத் தா" என்றாராம்.மகன் அவரிடம், "எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார். அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார், "இவ்வுலகில் 'புத்தகம்'என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே".

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) இவ்வாறாக கூறினார்."A Bible and a newspaper in every house, a good school in every district--all studied and appreciated as they merit--are the principal support of virtue, morality and civil liberty."

நம் தேச தந்தை மகாத்மா காந்தி இவ்வாறாக கூறினார்."The Bible is as much a book of religion with me as the Gita and the Koran."
- "Mahatma" Mohandas Karamchand Gandhi,in The Words of Gandhi by Richard Attenborough

I will sing - Don Moen Live Video

A great worship service by Evangelist Don Moen Live Video in English with captions.
Download these as mp3 songs from here.

Watch it on iPhone or Ipad or iPod Touch

"I will sing" Worship - Don Moen Live Video with subtitles.

Thursday, January 24, 2008

நாதஸ்வர நாதங்கள்

These videos are from Paul Sheik Naathaswara Naathangal VCD Vol-1
Its MP3 version you can download from here

Credit Goes to:
Lightning & Thunder Trust
No.4-A,Thangaiyah Street
Srirangam
Trichy-620 006
Ph:0091-431-2432620 India
email:paulsheik@hotmail.com
http://www.paulsheik.org

இசை அடக்கம்.
1.இசை நாதஸ்வரம் அறிமுகம்
2.கருணை நிறைந்த தேவா
3.நற்கருணை நாதனே
4.துதிப்பேன் இயேசுவின் பாதம்
5.ஆதி திருவார்த்தை
6.தந்தையே நின் தஞ்சம்
7.ஒருபோதும் மறவாத
8.தவில் தனி ஆவர்தனம்
9.சிங்கார மாளிகையிலே
10.ஜெபம்

1.இசை நாதஸ்வரம் அறிமுகம் Isai naathaswaram Arimugam


2.கருணை நிறைந்த தேவா Karunai niraintha theevaa


3.நற்கருணை நாதனே Narkarunai naathaney


4.துதிப்பேன் இயேசுவின் பாதம் Thuthippeen yesuvin paatham


5.ஆதி திருவார்த்தை Aathi thiruvaarthai


6.தந்தையே நின் தஞ்சம் Thanthaiye nin thanjam


7.ஒருபோதும் மறவாத Orupoothum Maravaatha
flashvars="">

8.தவில் தனி ஆவர்தனம் Thavil thani aavarthanam


9.சிங்கார மாளிகையிலே Singaara Maalikaiyiley


10.ஜெபம் Jebam

Wednesday, January 23, 2008

God is Good by Don Moen Live Video

A great worship service by Evangelist Don Moen Live Video in English with captions.
Download these as mp3 songs from here.

Watch it on iPhone or Ipad or iPod Touch
God is Good Worship - Don Moen Live Video with subtitles.

Tuesday, January 22, 2008

கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message

கிருபையின் காலம்
கடைசிகால தேவ தரிசன செய்திகள்.
in Tamil Audio mp3 format download here.

Kirubaiyin kaalam (Grace Period) Endtime message

Contact Address
God`s Vision Message
Pastor.Y.K.P.Henry
14,Agasthiar Street,
Palayamkottai,
Thirunelveli District
Tamilnadu India
Ph:0462-2560124
Cell:94434-46460

Monday, January 21, 2008

கிறிஸ்தவமும் பிளினியும்

கிறிஸ்து உலகில் வாழ்ந்தது கட்டுக்கதையல்ல.அது ஒரு வரலாறு. அதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. நம் பள்ளிப்பருவத்தின் வரலாற்று பாடநூல்களின் மூலம் பிளினி (Pliny the Younger-61/63 - ca. 113)-என்பவரைப்பற்றி நாம் அறிவோம்.

இவர் பிதினியா-சின்ன ஆசியா (Bithynia) நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் கி.பி 110-ல் ரோம மன்னன் டிராஜனுக்கு(Trajan) எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார்.(Colin Chapman எழுதிய Christianity on Trial,பக்கம் 422,423)

Friday, January 18, 2008

Jesus Calls Bro.Dinakaran Tamil Mp3 Songs Download

இயேசு அழைக்கிறார் சகோ.தினகரன் தமிழ் கிறிஸ்தவ MP3 பாடல்கள் Yesu Alaikiraar Jesus Calls Christian Tamil Bro.Dinakaran Mp3 Songs Download

To Download following songs.Click here

அக்கினி அபிஷேகம் Akkini Abishegam .mp3
கிறிஸ்தவ இல்லறமே Christava Illarame .mp3
எங்கே ஓடுவேன் Enge Oduvean .mp3
எங்கே தேடுவேன் Enge Theduvean .mp3
ஏதுக்கழுகிறாய் Ethukkazhukiraai .mp3
இன்றைத்தினம் உன் அருள் Inraithinam Un Arul .mp3
இறைவா உம் அருள் Iraiva Um Arul .mp3
ஸ்தோதிரம் ஸ்தோதிரமே Isthothiram Isthothirame .mp3
காப்பார் உன்னை காப்பார் Kaappaar Unnai Kaappaar .mp3
கடல் கொந்தளித்து Kadal Konthalithu .mp3
காலமே நீ எழுந்து Kalame Nee Ezhunthu .mp3
காரிருளில் என் நேச தீபமே Karirulil En Nesa Deepame .mp3
மன்னிப்பு மன்னிப்பு Mannippu Mannippu .mp3
மறவாதே மனமே Maravathey Maname .mp3
நடுக்குளிர் காலம் Nadukkulir Kaalam .mp3
ஒரு மருந்தரும் குரு மருந்து Oru Maruntharum Guru Marunthu .mp3
பாடுவேன் பரவசமாகுவேன் Paduvean Paravasamaguvean .mp3
பிளவுண்ட மலையே Pilavunda Malaiye .mp3
சோர்ந்து போகாதே Sornthu Pogathey .mp3
திருப்பாதம் சேராமல் Thiruppatham Seraamal .mp3
திருப்பாதம் சேராமல் Thiruppathem Seraamal .mp3
உம்மண்டை தேவனே Ummandai Devane .mp3
உந்தன் சுயமதியே Unransuya Mathiye .mp3
உந்தன் ஆசி தாருமே Unthan Aasi Tharum .mp3
உந்தன் சுயமதியே Unthan Suyamathiye .mp3
வழி நடத்தும் Vazhi Nadathum .mp3
வினை சூழ்ந்ததிந்த Vinai Soozhathintha .mp3
இயேசு அழைக்கிறார் Yesu Azhaikkirar .mp3
இயேசு நசரேயின் அதிபதியே Yesu Nasaraiyin Athipathiye .mp3

Saturday, January 12, 2008

இங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ் (Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.

Wednesday, January 09, 2008

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

Thursday, January 03, 2008

பெருமையின் முடிவு

தோல்வி....
பெருமையின் முடிவு

ஸ்பானிய தேசத்து அரசன் பிரான்ஸ் தேசத்தை ஜெயிக்க புறப்பட்டான்.பத்திரிகை நிருபர்களை வரவழைத்தான்.

"பிரான்சு தேசத்தின்மீது படையெடுக்கப் போகிறோம்;நான் நிச்சயம் அதை ஜெயிப்பேன். யுத்த செய்திகளை வரிசைக் கிரமமாய் எழுதும்படி போதுமான கடிதாசிகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று பெருமையுடன் கூறினான்.

"என்னை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் ஒருவருமேயில்லை" என கர்வத்தோடு மேன்மை பாராட்டினான்.

சேனைகளைத் திரட்டிக்கொண்டு போனபோது வழியில் கொள்ளைநோய் வந்து சேனையில் ஏராளமானோர் மாண்டனர்.எஞ்சினோர் மிகக் கொஞ்சமே! அகந்தையின் முடிவு அழிவு.

-----------------------------------------------------------------------------------
பட்டம் பெற்ற பாதிரியார் ஒருவர் முதல் தடவையாகப் பிரசங்க மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யப் போகிறார். பெருமையோடும், கர்வத்தோடும் பிரசங்க மேடைமீது ஏறினார்.

பிரசங்க வாக்கியம் ஞாபகத்திற்கு வரவில்லை. பிரசங்கக் குறிப்பை அங்கி அறையில் மறதியாக வைத்துவிட்டார். திண்டாடி ஏதொ சொல்லிவிட்டுப் பத்து நிமிடத்தில் தலை கவிழ்ந்து தாழ்மையுடன் இறங்கினார்.

ஆலயத்திலிருந்த பெரியவர் ஒருவர் வந்து, "சகோதரரே, நீர் இறங்கும்போது என்ன நிலைமையிலிருந்தீரோ, அதே நிலையில் நீர் ஏறிப்போயிருந்தால் சந்தோசத்துடன் இறங்கியிருப்பீர்"என்றார்.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

-------------------------------------------------------------------------------------

நூற்று முப்பது ஸ்பெயின் போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்கு விரொதமாய் படை எடுத்துச் சென்றன. இங்கிலாந்தின் கப்பல்கள் எண்பது தான். அவைகளில் யுத்தத்திற்குப் பயன்படக்கூடியது முப்பதுதான். ஸ்பெயின் கப்பல்களை நிலவு போன்று

வளைவாக விட்டுக்கொண்டு இங்கிலாந்துக் கப்பல்களை சுற்றிவளைத்தனர்.

ஆங்கில நாட்டுக் கப்பல்கள் பின்வாங்கி ஓடின. ஸ்பெயின் கப்பல்கள் மிகுந்த அகந்தையோடு ஆங்கிலக் கப்பல்களைத் துரத்திச் சென்றன.

ஸ்காட்லாந்தின் பக்கம் குன்றுகளடர்ந்த தீவுகள் பல இருந்தன. அக்குன்றுகளில் ஸ்பெயின் கப்பல்கள் மோதி உடைந்தன. ஐம்பத்து நான்கு சேதப்பட்ட கப்பல்கள்தான் ஸ்பெயினுக்குத் திரும்பின.

வீண் டம்பம் கொண்ட ஸ்பெயின் வீரர்கள் வெட்கி நாணினார்கள்.

எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!
நெஞ்சித்திமிர் என்றும் சஞ்சலமே!


நீதிமொழிகள் 8:13.
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

I பேதுரு 5:5
பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.