Monday, April 27, 2015

நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது - இயேசு கிறிஸ்து (மத்தேயு:15:28)


Saturday, April 25, 2015

இயேசு கிறிஸ்துவும் மகா அலெக்சாண்டரும். இருவரும் வாழ்ந்தது முப்பத்திமூன்று ஆண்டுகளே. ஆனால் ஒருவர் அம்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். இன்னொருவரோ அன்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். ஒருவர் தன்பின்னே படைகள் அணி தொடர வீரமாய் நடந்தார். இன்னொருவரோ தன் பின்னே சிலரே தொடர‌ தாழ்மையாய் நடந்தார். ஒருவர் முழுஉலக‌த்தையும் ஆண்டுகொண்டும் ஒன்றுமில்லாமலேயே மரித்தார். இன்னொருவரோ மரித்து முழுஉலகத்தையே ஆண்டுகொண்டார். ஒருவர் தனது வெற்றிக்காக‌ எத்தனையோ பேர் இரத்தத்தை சிந்தினார். ஆனால் இன்னொருவரோ தனது இரத்தத்தை உலகோர் அனைவரின் மீட்புக்காகவும் சிந்தினார். மகா அலெக்சாண்டர் மாவீரனாக‌ நன்றாக ஜீவித்திருந்தும் சடுதியில் மரித்துப்போனார். ஆனால் மகாபிரபு இயேசு கிறிஸ்துவோ மரித்தும் இன்றைக்கும் ஜீவிக்கின்றார்.


அத்திமரம் துளிர் விட்டு இன்றோடு 67 வருடமாச்சு. உலர்ந்த எலும்புகள் உடல்கொண்டு இன்றோடு 67 வருடமாச்சு. ஆம் இஸ்ரேல் தேசம் உருவாகி இன்றோடு 67 வருடங்கள். நம்ம காலண்டர் படி மே 15 தான். ஆனால் யூத காலண்டர் படி இன்று தான் அவர்கள் சுதந்திரம் பெற்ற நாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொண்ட நாள். நமதாண்டவர் சொல்லிச்சென்றார். "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்" என்று. ஆம் அவர் வாசலருகே வந்திருக்கிறார் என்பதற்கு துளிர்விட்டிருக்கும் இந்த அத்திமரமாகிய இஸ்ரேல் தேசமே சாட்சி.


கர்த்தர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)


Thursday, April 16, 2015

பைபிளில் கடைசிகாலத்தில் வெளிப்படும் "வெட்டுக்கிளிகள்" (Locust) பற்றி படிக்கிறோம். இவை புகையிலிருந்து புறப்பட்டு பூமியின்மேல் வந்து பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு (Command) கொடுக்கப்பட்டது என படிக்கிறோம். அது போலவே அமெரிக்க கடற்படை விஞ்ஞானிகள் இதனை படித்தோ என்னமோ இப்போது வெட்டுகிளியின் பெயரிலேயே LOCUST (LOw-Cost Unmannded aerial vehicle Swarming Technology) அது போலவே கூட்டமாய் இயங்கிப்போய் எதிரிகளை தாக்கும் வகையில் ஆயுதங்களை தயாரித்து சோதனை முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நன்றாக வேதத்தை படியுங்கள் விஞ்ஞானிகளே நன்றாக வேதத்தை படியுங்கள். அப்போது தான் எதிர்காலத்துக்கு தேவையான விஞ்ஞான தகவல்களும் புதிதான கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளும் உங்களுக்கு நிறைய கிடைக்கும்.படியுங்கள் விஞ்ஞானிகளே நன்றாக வேதத்தை படியுங்கள்.(வெளி:9:3,4) Then out of the smoke came locusts upon the earth..And it was commanded them that they should not hurt the grass of the earth, neither any green thing, neither any tree; but only those men which have not the seal of God in their foreheads.Revelation 9:3,4


Tuesday, April 14, 2015

உண்மையான சிநேகிதர்கள் உண்டு. சுயநலம் கொண்ட சந்தர்ப்பவாதிகளும் உண்டு. இஸ்ரேல் எத்தனை முறை சொல்லியும், சொல்லச் சொல்ல கேட்காமல் ஈரான் பக்கமாய் சாய்ந்து சமாதானம் சமாதானம் என‌ அணு சக்தி பேரம் பேசிய‌து அமெரிக்கா. அமெரிக்கா, ஈரான் இடையே நிலவும் கசப்பான உறவுகளை மாற்ற மிகச்சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அப்போது அமெரிக்க ஜனாதிபதியும் திருவுளம் பற்றினார். அப்படியே சந்தடி சாக்கில் எங்கள் மீதுள்ள‌ பொருளாதார தடைகளையும் நீக்கினால் தான் நாங்கள் நல்ல பிள்ளைகளாக இருப்போம் என சொல்லியது ஈரான். இன்றைக்கு இன்னொரு செய்தி வந்திருக்கிறது, நிகழ் ஆண்டுக்குள் ஈரானுக்கு, எஸ் 300 என்ற ஏவுகணைகளை சப்ளை செய்ய ரஷ்யா முடிவு என்று. நண்பன் ரஷ்யா, நண்பனின் எதிரி அமெரிக்கா இரண்டு பக்கமும் நன்றாகவே கோல் போடுகிறது ஈரான், ஆனால் எங்களுக்கு இரட்டை முகம் கிடையாது- எதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்களும் மதிப்போம் என வசனத்துக்கு மட்டும் ஈரானிடமிருந்து குறைச்சல் இல்லை. குட்டி சாத்தான் இஸ்ரேலையும் பெரிய சாத்தான் அமெரிக்காவையும் ஒழிப்பது தான் ஈரானின் நோக்கம் என இஸ்ரேலின் தலைமைக்கு தெரிகிறது, ஆனால் அமெரிக்க தலைமைக்கு தெரியலையே. அதனால் தான் வேதம் சொல்லுகிறது பிரியமானவர்களே, .. நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் என்று. சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் என்ற வேத வார்த்தை அமெரிக்க தலைமைக்கு என்று புரியுமோ?.(I யோவான் 4:1, நீதிமொழிகள் 17:17)


Friday, April 10, 2015

எது ஆராதனை?


Thursday, April 09, 2015

தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். சங்கீதம் 16:1


Monday, April 06, 2015

கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. சங்கீதம் 144:15


https://www.youtube.com/watch?v=G1qo1gd4klc