Saturday, April 25, 2015

இயேசு கிறிஸ்துவும் மகா அலெக்சாண்டரும். இருவரும் வாழ்ந்தது முப்பத்திமூன்று ஆண்டுகளே. ஆனால் ஒருவர் அம்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். இன்னொருவரோ அன்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். ஒருவர் தன்பின்னே படைகள் அணி தொடர வீரமாய் நடந்தார். இன்னொருவரோ தன் பின்னே சிலரே தொடர‌ தாழ்மையாய் நடந்தார். ஒருவர் முழுஉலக‌த்தையும் ஆண்டுகொண்டும் ஒன்றுமில்லாமலேயே மரித்தார். இன்னொருவரோ மரித்து முழுஉலகத்தையே ஆண்டுகொண்டார். ஒருவர் தனது வெற்றிக்காக‌ எத்தனையோ பேர் இரத்தத்தை சிந்தினார். ஆனால் இன்னொருவரோ தனது இரத்தத்தை உலகோர் அனைவரின் மீட்புக்காகவும் சிந்தினார். மகா அலெக்சாண்டர் மாவீரனாக‌ நன்றாக ஜீவித்திருந்தும் சடுதியில் மரித்துப்போனார். ஆனால் மகாபிரபு இயேசு கிறிஸ்துவோ மரித்தும் இன்றைக்கும் ஜீவிக்கின்றார்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment