Friday, November 23, 2007

கிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை

மகா வித்வான் H.A.கிருஷ்ண பிள்ளை அவர்கள் (H.A. Krishna Pillai 1827-1900) கிறிஸ்து குறித்து இரட்சன்ய யாத்திரிகம் (Iratcaniya Yattirikam ) எனும் நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்

கன்னி பாலனாய்க் காசினி தனில் அவதரித்து
மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்
தன்னு யிர்ப் பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த
என்னு பாசனா மூர்த்தியை அஞ்சலித் திடுவோம்.

முனைவனை அறிய வேண்டில் முற்றும் நீ இயற்றும் பாவ
வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்
இனிவரும் தேவ கோபம் எரிந்திடா திருக்க வேண்டில்
மனுவுரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

தனியிடத் திருந்து பாவச் சழக்கினைக் கருதி,ஆவி
அனுமதி பெற்றுத் தேவ அன்பினை இதயத் துன்னி
கனியும்உள் ளன்பி நோடு கண்கணீர் ததும்ப நின்று
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

தனுகரணங்கள் ஓய்ந்து தளர்ந்து மூச் சொடுங்குங் காலை
மனைமகார் துணையா வாரோ மருங்கிருந் தழுவதல்லால்
அனவர தமும் உனக்கோர் ஆம் துணை விரும்பில் இன்னே
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

உலகம் மகிழ்ந்தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற,
அலகை உளந் திகில் ஏற, அகண்டபரி பூரணனார் அருள் மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நர உருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை ஏறிய மெய்ஞ் ஞான சூரியனடியைச் சிந்தை செய்வோம்.

மல்கியா 4:2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

Malachi 4:2 But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.

Tuesday, November 20, 2007

மோட்ச பிரயாணம் in Tamil download PDF format

Using your mouse right click this link and click "Save Target as" to download Tamil Motcha Pirayaanam in PDF format John Bunyan`s The Pilgrim's Progress in Tamil
Click here to download

இதயங்கள் மகிழட்டும் Lyrics

இதயங்கள் மகிழட்டும்
Yidhayangal Magizhattum
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
Muhangal Malarattum (Sirrikattum)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
Manammahilchi Nalla Marundhu

1. மன்னித்து அணைத்துக்கொண்டார்
Mannithu Anaithukondar
மகனாய் சேர்த்துக்கொண்டார்
Maganai Serthukondar
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
Kirubayin Muthangalal Pudhu Vuyirtharukinrar
கோடி நன்றி பாடிக்கொண்டாடுவோம்
Kodi Nanri Padi Kondaduvome

2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
Avaradhu Makkal Nam Avar Meikkum Adukal Nam
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
Thalaimurai, Thalaimuraikum Nambathakkavarey

3. தாய்மறந்தாலும் மறக்கவே மாட்டார்
Thaimarandhalum Marakkavay Maattar
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
Vulankaikaliley Poritthu Vaithular
இதயங்கள் மகிழட்டும்

4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
Dhandanai Neekivittar Sathanai Thurathivittar
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
Naduvil Vandhuvittar Theenkai Kanamattome

5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
Vundakkinar Nammai, Avaril Mazhilnthiruppome
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
Atchi Seikinrar Andha Rajavil Kalikooruvome

6. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
Thamadhu Janathimale Piriyam Vaikinrar
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்ன்றார்
Adhisaya Ratchippinal Alankarikkinrar

7. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
Nallavar Nallavarey (Avar) Kirubai Vullavarey
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
Avaradhu Peranbu Endrenrum Nilaitthirukkum

8. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே - அது
Sanchalamum Thavippum Paranthu Odiyathae - Athu
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்
Nithiya Nithiyamai Mahilchi Nam Thalaimale

சப்தமாய் பாடி Lyrics

சப்தமாய் பாடி
Sapthamai Padi
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்
Sapthamai Padi Sathuruvai Sangiliyal Katuvome
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம்
Nitham Nitham Karthar Namam Padi Uyarthiduvome
இராஜா யேசு ஜீவிக்கின்றார்
Raja Yesu Jeevikinrar
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
Ratham Sindhi Jeyam Thandhar

1. புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையில்லே
Pudhupadal Padi Magizhlvome Punidharkal Sabayilae
துதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும்
Dhudhibali Ellumpattum Jeyakodi Parakkattum
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

2. உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும்
Vundakinarey Nammai Vullam Magizhattum
ஆளுநர் அவர்தனே இதயம் துள்ளட்டும் - நம்
Alunar Avardhaney Ethayam Thullattum
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

சப்தமாய் பாடி
Sapthamai Padi
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்
Sapthamai Padi Sathuruvai Sangiliyal Katuvome
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம்
Nitham Nitham Karthar Namam Padi Uyarthiduvome
இராஜா யேசு ஜீவிக்கின்றார்
Raja Yesu Jeevikinrar
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
Ratham Sindhi Jeyam Thandhar

3. தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார் வெற்றி
Thamadhu Janathinmelay Avar Priyam Vaikinrar
தருகிறார் மேன்மைப்படுத்துவார் - இன்று
Vetri Tharukirar Menmaipaduthuvar – Indru
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

4. கர்த்தரை உயர்த்தும் பாடல் வாயில் இருக்கட்டும்
Kartharai Vuyarthum Paadal Vayil Irukkattum
வசனம் என்ற போர்வாள் கையிலே இருக்கட்டும் - இறை
Vasanam Enra Poreval Nam Kaiyelay Irukkattum – Irai
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

உந்தன் நாமத்தில் Lyrics

உந்தன் நாமத்தில்
Vundhan Namathil
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
Vundhan Namathil Yellam Koodum Yellam Koodumey
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
Vundhan Samookathil Yellam Koodum Yellam Koodumey
உம்மால் கூடும் எல்லாம் கூடும் (2)
Ummaal Koodum Ellaam Koodum (2)
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal

1. உந்தன் வார்த்தையால், புயல் காற்று ஒய்ந்தது
Vundhan Varthayal, Puyal Kattru Oindhadhu
உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு
Vundhan Parvayal, Thirundhinar Pedhuru
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal
உம்மால் கூடும் எல்லாம் கூடும் (2)
Ummaal Koodum Ellaam Koodum (2)
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal

2. தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
Thabithal Marithal Jebatthal Vuyirthal
திமிர்வாத ஐநேயா, சுகமாகி நடந்தான்
Thimirvadha Ineya, Sukamaki Naddandhan
உந்தன் நாமத்தில்
Vundhan Namathil

3. மீனின் வாயிலே, காசுவந்ததே
Meenin Vayelay, Kasu Vandhathey
கழுதையின் வாயிலே, பேச்சி வந்ததே
Kalludhayin Vayelay, Pechu Vandhathey
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal
உம்மால் கூடும் எல்லாம் கூடும் (2)
Ummaal Koodum Ellaam Koodum (2)
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal

4. வாலிபன் ஐதீகு தூக்கத்தல் விழுந்தான்
Valiban Idheeku Thookathal Villundhan
இறந்தும் எழுந்தன், பவுல் அன்று ஜெபித்ததால்
Irandhum Yellundhan, Paul Anrru Jebithathal

5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
Kaloonri Nillenru Kathinar Paul Anrru
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே
Mudavan Nadanthan Listhira Nakarilay

உந்தன் வல்லமையால் Lyrics

உந்தன் வல்லமையால்
Vundhan Vallamaiyal
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
Vundhan Vallamaiyal Mazhilnthirukirane
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Vundhan Dhayavinal Asaivuradhiruppane
நீர் போதுமே என் நேசரே
Neer Podhumay Yen Nesaray
உம்மால் தானே மேன்மை வந்தது
Vummal Dhaney Menmai Vandhathu

1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
Kettane Vaivittu Neer Marukkavillayae
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என்
Vullam Virumbinadhai Ennaku Dhantharae - Yen

2. வெற்றி தந்ததல் பெரியவனானேன் – நீர்
Vettri Thandhathal Periyavananen - Neer
மேன்மை வந்த்தால் என் எழ்மை மாறியது
Menmai Vandhathal Yen Eazhmai Mariyathu

3. வாழ ஒடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
Vazha Odi Vandhen Sugam Thedi Vandhen
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
Neenda Vaazhvodu Nithiya Jeevan Thantheer

உந்தன் வல்லமையால்
Vundhan Vallamaiyal
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
Vundhan Vallamaiyal Mazhilnthirukirane
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Vundhan Dhayavinal Asaivuradhiruppane
நீர் போதுமே என் நேசரே
Neer Podhumay Yen Nesaray
உம்மால் தானே மேன்மை வந்தது
Vummal Dhaney Menmai Vandhathu

4. பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
Pooripadaikiraen Vundhan Peranbal
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான்
Belan Perukinraen Vummai Nambuvadhal - Naan

5. என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
Enrrum Nilaithirukkum Asirtharukinreer
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
Vum Samugathin Mazhilchiyenal Thirupthiyakukireer

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து Lyrics

வாழ்நாளெல்லாம் (காலைதோறும) களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும்

நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்

2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்

4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து
வாழ்நாளெல்லாம் (காலைதோறும) களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்

6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும்

7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான்

8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல

Vaalnaalellam (Kaalaidhorum) Kalikoorndhu Makilumbadi
Thirupthiyaakkum um kirubaiyinaal

1. Pukalidam Neerey Boomiyilay
Adaikkalam Neerey Thalaimuraidhorum

Nallavarey Vallavarey
Nandriyaiya Naalmuludhum

2. Ulakamum Boomiyum Thondrumunney
Enrendrum Irukindra En Dheivamey

3.Thunbathai Kanda Natkalukku
Eedaga Ennai Makilach Cheyyum

4. Arbutha Cheyalkalai Kaana Cheyyum
Makimai Maatchimai Vilanka Cheyyum

Vaalnaalellam (Kaalaidhorum) Kalikoorndhu Makilumbadi
Thirupthiyaakkum Um Kirubaiyinaal

5. Cheyyum Cheyalkalai Chemmaipaduthum
Cheyalkal Anaithilum Vetrithaarum

Nallavarey Vallavarey
Nandriyaiya Naalmuludhum

6. Naatkalai Ennum Arivai Thaarum
Gnanam Niraindha Ithayam Thaarum

7. Aayul Naatkal Elubathuthaan
Valimai Mikunthorku Enpathuthan

8. Aayirum Aandukal Um Paarvayil
Kadandhupona Or Naalpola

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் Lyrics

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Devan Thangkum Paraloga Erussalem
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
Zione Malaikku Vandhu Serndhuvittome
பரலோகம் (நம்) தாயகம்
Paralogam (Nam) Thayagam
விண்ணகம் (நம்) தகப்பன் விடு
Vinnagam (Nam) Thagappan Veedu

1. கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
Kodaana Kodi Thudhar Koodi Ankay Thuthikinranar
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்
Parisutharey Enrru Padi (Ippadi) Mazhilkinrarar
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர்
Parisuthar Parisuthar Paraloka Devan Parisuthar

2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கல்
Peyargal Elludhapatta Thalaipperanavargal
திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்
Thiruvilla Kootamaka Kondadi Mazhilkinranar
அல்லேலூயா, ஒசன்னா
Hallelujah, Osaanaa
கொண்டாட்டம் கொண்டாட்டம் தகப்பன் வீட்டில்
Kondattam Kondattam Thagappan Veetil

ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Devan Thangkum Paraloga Erussalem
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
Zione Malaikku Vandhu Serndhuvittome
பரலோகம் (நம்) தாயகம்
Paralogam (Nam) Thayagam
விண்ணகம் (நம்) தகப்பன் விடு
Vinnagam (Nam) Thagappan Veedu

3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
Pooranamakapata Neethimangal Avi Ankay
எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதி அங்கே
Ellaraiyum Niyayum Theerkkum Niyayadhibathi Ankay
நீதிபதி கர்த்தரே எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி
புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
Pudhiya Vudanpattin Enaippalar Yesu Ankay
நன்மை தரும் ஆசிர்வாதம் பேசும் இரத்தம் அங்கே
Nanmai Tharum Asirvadham Pesum Ratham Ankay
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
Ratham Jeyam Ratham Jeyam
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Yesu Christhuvin Ratham Jeyam

Monday, November 19, 2007

எஜமானனே என் இயேசு Lyrics


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன்;
அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை
அதை நான் மறப்பேனோ

எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

3. அப்பா உம் சந்திதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் - நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என்தேச எல்லையெங்கும்
அப்பா நீர் ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்
வன்முறை எல்லாம் ஓழியணும்

Yejamaananae Yen Yesu Raajanae

Yennamellam Yaekkamellam
Umm Sittham Seivadhuthaanae - Yen
Yejamaananae Yejamaananae
Yen Yesu Raajanae

1. Umakkaagathaan Vaazhgiraen
Ummaithaan Naesikkiraen
Baliyaagi Yennai Meettirae
Paralogamn Thirandheeraiyaa

2. Uyir Vaazhum Naatkalellam
Odi Odi Uzhaitthiduvaen
Azhaitheerae Umm Saevaiku - Yennai
Adhai Naan Marappaeno

Yejamaananae Yen Yesu Raajanae
Yennamellam Yaekkamellam
Umm Sittham Seivadhuthaanae - Yen
Yejamaananae Yejamaananae
Yen Yesu Raajanae

3. Appa Umm Sannidhiyil Thaan
Agamagizhndhu Kalikooruvaen
Yeppodhu Ummai Kaanbaen - Naan
Yengudhaiyaa Yen Yidhayam

4. Yen Dhesa Yellaiyengum
Appa Nee Aala Vaendum
Varumai Yellam Maaranum - Dhesathin
Vanmurai Yellam Ozhiyanum

Ejamaanane En esu Raajane Fr Berhmans Song Lyrics

Sunday, November 18, 2007

கருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்


karunayin naathaa Rev. Paul Thangiah tamil song

நீரே என் தஞ்சம் Rev. Paul Thangiah Song


neerey en thanjam tamil song

ஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song


Rev. Paul Thangiah aaraathanaikkul vaasam seyyum tamil song

மகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song


makilnthu kalikoorungkal fmpb kids christmas tamil song

Saturday, November 17, 2007

வாசல்களே உங்கள் தலைகளை பாடல்


VaasalkaLee ungkaL thalaikaLai sarah navroj tamil song

மனுகுல தேவன் யேசு பாடல்


Manukula theevan yesu Sara Navroji Tamil Song

மகிழ்சியோடு துதிக்கிறேன் பாடல்


Makilchiyoodu Thuthikireen

மார்க்ஸூம் மாற்கும்

பொது உடைமைத் தத்துவத்தைத் தோற்றுவித்தவர் காரல் மார்க்ஸ்,(Karl Heinrich Marx அவரை மார்க்ஸ் என்று அவரது தோழர்கள் அன்பாய் அழைப்பார்கள்.அவருடைய காலம் கி.பி.1818-1883.

"ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு கூடாது;சமூகச் சொத்துக்கள் சகலருக்கும் பொது"என்ற பொது உடைமைத் தத்துவத்தை உள்ளடக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மார்க்ஸ் எழுதிய நூலைப்படித்து சோல்ஜர் ஒருவன் ஒரு குருவானவரிடம் வந்து "கள், சாராயம் ,கஞ்சா, அபின் போன்று போதை தரும் மதம் மக்களைக் கெடுக்கிறது.எனவே மதத்தைக் குழிதோண்டி புதைக்க வேண்டும்"என்றான்.

"முரட்டு வார்த்தைகளை உபயோகிக்கிறாயே,நீ நாத்திகனோ?"என்று கேட்டார் பாதிரியார்.

"மதம் என்ற குப்பையைப் புதைக்கவேண்டும் அல்லது சுட்டெரிக்கவேண்டும்"என்றான் பதிலுக்கு.

பாதிரியார் நிதானமாகப் பேசினார்:

"மார்க்ஸ் எழுதிய நூலையும் வாசித்திருக்கிறாய்,இதோ இந்த மாற்கு சுவிசேஷத்தையும் படித்துப் பாரேன்"என்று சொல்லி மாற்கு என்னும் நற்செய்தி நூலைக் கொடுத்தனுப்பிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த போர் வீரன் சொன்னான்."சுட்ட செங்கல் தண்ணீரை ஜிவ் என்று இழுப்பதுபோல மாற்கு சுவிசேஷகனின் வார்த்தைகள் என் உள்ளத்தை இழுத்து என்னை மாற்றிவிட்டது"என்றான்

அவன் கையில் மாற்கு சுவிஷேசம் மட்டும் உள்ளது. நம் கையில் அதைப்போல பெரிதும் சிறிதுமான 66 புத்தகங்கள் கொண்ட திருமறை இருக்கிறதே.அது நம்மை மாற்றி இருக்கிறதா?

சங்கீதம்:41:11
என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

யாக்கோபு:5:20
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

இங்கர்சாலும் கிறிஸ்தவமும்

கிரியையில்லாத கிறிஸ்தவம்...

நாத்திகன்

நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்:
"சரீரக்கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்"என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் (Robert G. Ingersoll)(காலம்:1833–1899) என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வபக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:

"கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப்போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கமாட்டாது"

இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Thursday, November 15, 2007

வேதாகமத்தில் வரும் மயில்கள்

I இராஜாக்கள்:10:22.
(சாலோமான்) ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

II நாளாகமம்:9:21.
(சாலோமான்) ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

இந்திய தேசிய பறவையான மயில் பற்றிய குறிப்புகள் புனித வேதாகமத்தில் காணக்கிடைக்கின்றன. அவை சில ஆச்சர்யமான உண்மைகளை வெளிகொணர்கின்றன. மேற்கண்ட பைபிள் வாக்கியங்கள் கிமு 990 வாக்கில் இஸ்ரேலின் ராஜாவாயிருந்த சாலோமோனின் காலத்தில் நடந்தவை. இங்கு தர்ஷீஸ் என குறிப்பிடப்படுவது கேரள மலபார் துறையாகவோ அல்லது இலங்கையின் இன்றைய ஈழப் பகுதியாகவோ இருக்கலாம் என கணிக்கிறார்கள். இது அந்தகால இஸ்ரேலர்களுக்கு தமிழர்களோடு இருந்த கப்பல்கள் வழி வியாபாரத்தொடர்பை குறிப்பதாக கருதலாம். ஏனெனில் எபிரேய மொழியில் மயிலை "Tuki" என்கிறார்கள். அது தமிழ் வார்த்தை "தோகை" யிலிருந்து வந்ததாகும். தமிழ் இலக்கியங்களான மலைபடுகடாமும் குறிஞ்சிபாட்டும் மயில்களை தோகை எனும் வார்த்தையாலே குறிப்பிடுகின்றன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸோடு பயணம் போன லுயிஸ் டெ டாரெஸ் (Luis de Torres) எனும் யூதர் மேல்நாடுகளில் கால்வைக்கும் போது அங்கு வான்கோழிகளை கண்டு அவற்றை மயிலென நம்பி "Tuki" என அழைத்தாராம். அது பிற்பாடு Turkey என ஆனது. இன்றைக்கும் அமெரிக்காவில் இந்த டர்கி வான்கோழி நன்றிதெரிவித்தல் (Thanksgiving) நாளின் ஸ்பெஷல் மீல்.

Wednesday, November 14, 2007

Tamil Bible download in PDF format -New Testment

Using your mouse right click this link and click "Save Target as" to download Tamil Bible in PDF format -New Testment
Click here to download

Tamil Bible download in PDF format -Old Testment

Click here to download Tamil Bible in PDF format -Old Testment