Saturday, November 17, 2007

மார்க்ஸூம் மாற்கும்

பொது உடைமைத் தத்துவத்தைத் தோற்றுவித்தவர் காரல் மார்க்ஸ்,(Karl Heinrich Marx அவரை மார்க்ஸ் என்று அவரது தோழர்கள் அன்பாய் அழைப்பார்கள்.அவருடைய காலம் கி.பி.1818-1883.

"ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு கூடாது;சமூகச் சொத்துக்கள் சகலருக்கும் பொது"என்ற பொது உடைமைத் தத்துவத்தை உள்ளடக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மார்க்ஸ் எழுதிய நூலைப்படித்து சோல்ஜர் ஒருவன் ஒரு குருவானவரிடம் வந்து "கள், சாராயம் ,கஞ்சா, அபின் போன்று போதை தரும் மதம் மக்களைக் கெடுக்கிறது.எனவே மதத்தைக் குழிதோண்டி புதைக்க வேண்டும்"என்றான்.

"முரட்டு வார்த்தைகளை உபயோகிக்கிறாயே,நீ நாத்திகனோ?"என்று கேட்டார் பாதிரியார்.

"மதம் என்ற குப்பையைப் புதைக்கவேண்டும் அல்லது சுட்டெரிக்கவேண்டும்"என்றான் பதிலுக்கு.

பாதிரியார் நிதானமாகப் பேசினார்:

"மார்க்ஸ் எழுதிய நூலையும் வாசித்திருக்கிறாய்,இதோ இந்த மாற்கு சுவிசேஷத்தையும் படித்துப் பாரேன்"என்று சொல்லி மாற்கு என்னும் நற்செய்தி நூலைக் கொடுத்தனுப்பிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த போர் வீரன் சொன்னான்."சுட்ட செங்கல் தண்ணீரை ஜிவ் என்று இழுப்பதுபோல மாற்கு சுவிசேஷகனின் வார்த்தைகள் என் உள்ளத்தை இழுத்து என்னை மாற்றிவிட்டது"என்றான்

அவன் கையில் மாற்கு சுவிஷேசம் மட்டும் உள்ளது. நம் கையில் அதைப்போல பெரிதும் சிறிதுமான 66 புத்தகங்கள் கொண்ட திருமறை இருக்கிறதே.அது நம்மை மாற்றி இருக்கிறதா?

சங்கீதம்:41:11
என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

யாக்கோபு:5:20
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment