Friday, September 28, 2007

தேவாலய திரைச்சீலை ரகசியம்

மோசே காலத்து ஆசரிப்பு கூடாரத்தில் தொங்க விடப்பட்ட திரைசீலையானது பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்க தொங்கவிடப்பட்டது.(யாத்திராகமம் 26:33 ) அந்த திரைசீலையை கடந்து பிரதான ஆசாரியன் மட்டுமே செல்ல முடியும்.பிரதான ஆசாரியர்கள் முன்பு தங்கள் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடுவர்.(எபிரெயர் 7:27)
அதற்கெல்லாம் தேவையில்லாமல் ஒரே முறை நமது பிரதான ஆசாரியனாகிய யேசுகிறிஸ்து பலியாகி அந்த திரைச்சீலையை இரண்டாக கிழித்து சென்று விட்டார். உலக வரலாறும் கிபி,கிமு வென இரண்டாக கிழிந்து விட்டது.(எபிரெயர் 6:20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.)

அதில் ஆசர்யம் என்னவென்றால் தேவாலயத்தின் திரைச்சீலை கீழ்தொடங்கிக் மேல்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது என்றிருந்தால் மனிதன் கிழித்திருப்பானோ என சந்தேகிக்திருக்கலாம்.அதற்க்கு மாறாக மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்து அது தேவனின் செயலேயென நிரூபித்தது.

(மத்தேயு 27:51,மாற்கு 15:38,லூக்கா 23:45) அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

எபிரெயர் 8:2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

எபிரெயர் 9:11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு,

எபிரெயர் 9:25 பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.

எபிரெயர் 7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.

தமிழ் சினிமா நடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை


Real Player media audio file
பகுதி 1


பகுதி 2


tamil cinema actor a.vm.rajan story testimony

ஆதாரம் நீர் தான் ஐயா பாடல்


aathaaram neer thaan aiyaa song

ஆமென் அல்லெலுயா பாடல்


amen alleluiah song

கேளுங்கள் தரப்படும் பாடல்


kelungkaL tharappadum tamil song

தேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்


thean inimayilum yesuvin naamam paadal

கலங்காதே நெஞ்சமே பாடல்


kalangathey nenjame tamil christian video song

கானா பேட்டை கானா பாடல்


Ghana petai Kaanaa Tamil Song

ஆசீர்வாதமான தமிழ்நாடு பாடல்

aasirvathamaana tamilnadu christian song

Thursday, September 27, 2007

உலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்த கிறிஸ்து

உலக வரலாற்றை இரண்டாக பிரித்தவர் இயேசு கிறிஸ்து. வரலாற்று புத்தகங்களில் வருடங்களை குறிப்பிட அதிகமாக பயன்படுத்தப்படும் கி.பி என்பது "கிறிஸ்துவுக்கு பின்" எனவும், கி.மு என்பது "கிறிஸ்துவுக்கு முன்" எனவும் பொருள்படும். இதுவே கிறிஸ்துவின் பிறப்புக்கும் அவர் உலகில் வாழ்ந்ததற்கும் அசைக்க முடியாத அத்தாட்சி

BC - Before Christ

AD - Anno Domini (Latin : "In the year of (Our) Lord")(சிலர் After Death என்பர்).C.E அதாவது Christian Era என்பதுவும் இக்காலத்தையே குறிக்கும்.

ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள்
"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-20-11-1993 மாலைமலர் தேன்மலர்

மாற்கு 15:38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

Mark 15:38 And the veil of the temple was rent in twain from the top to the bottom.

Wednesday, September 26, 2007

கிறிஸ்தவர்கள் பற்றி நேரு

"கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை விட காந்தியடிகள் ஏசுவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை அறிதல் வேண்டும்.ஏசுவின் கொள்கைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்து நடக்கின்றவர் காந்தியடிகள்"
-நேரு (Jawaharlal Nehru in 1934,Glimpses of world history-Page:89)

மத்தேயு:5:16
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

Matthew 5:16
Let your light so shine before men, that they may see your good works, and glorify your Father which is in heaven.

Tuesday, September 25, 2007

சிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்

"கிறிஸ்து சுவிசேஷத்தின் உள்ளடக்கமான கொள்கைகள் இந்து ஜன சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் செறிந்து இந்தியருடைய எண்ணங்களை எல்லா விதத்திலும் மாற்றி வேற்று உருப்படுத்திக்கொண்டு வருகின்றன"
- நாராயண் சுந்தர வர்க்கர் (Narayan Sundara Varkar)


வெளி 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள

Revelation 1:3 Blessed is the one who reads the words of this prophecy, and blessed are those who hear it and take to heart what is written in it, because the time is near.

Monday, September 24, 2007

Todays inventions and The bible

இன்றைய கண்டுபிடிப்புகளும் வேதாகமமும்

விமானங்கள்
ஆபகூக் 1:8 அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.
ஏசாயா:31:5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்;
சகரியா:14:17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

வாகனங்கள்,ஏவுகணைகள்
நாகூம்:2:4 இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்;அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.

பீரங்கிகள்
நாகூம்:2:3 இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்;

இயந்திரதுப்பாகிகள்
நாகூம்:2:3 ஈட்டிகள் குலுங்கும்.

அணுகுண்டுகள்
வெளி:13:13 மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
லூக்கா:21:26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்;
எசேக்கியேல்:39:4,5,6 நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்;..விசாலமான வெளியில் விழுவாய்;...
நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்;

தொலைக்காட்சி
வெளி:11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள்,

வயர்லெஸ் போன்கள் மற்றும் வானொலி
யோபு:38:35 நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: அங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?


Todays inventions and The bible

Aeroplanes
Habakkuk 1:8 their horsemen shall come from far; they shall fly as the eagle that hasteth to eat.
Isaiah 31:5 As birds flying, so will the LORD of hosts defend Jerusalem;
Zechariah 14:17 And it shall be, that whoso will not come up of all the families of the earth unto Jerusalem to worship the King, the LORD of hosts, even upon them shall be no rain.


Motor Cars and Missiles
Nahum 2:4 The chariots shall rage in the streets, they shall justle one against another in the broad ways: they shall seem like torches, they shall run like the lightnings.

War Tanks
Nahum 2:3 the chariots shall be with flaming torches

Machine Guns
Nahum 2:4 the fir trees shall be terribly shaken

Nuclear Weapons
Revelation 13:13 he maketh fire come down from heaven on the earth in the sight of men
Luke 21:26 the powers of heaven shall be shaken.
Ezekiel 39:4,5,6 Thou shalt fall upon the mountains of Israel,...Thou shalt fall upon the open field:...And I will send a fire on Magog, and among them that dwell carelessly in the isles:

Television
Revelation 11:9 And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half

Cellphones and Radio
Job 38:35 Canst thou send lightnings, that they may go and say unto thee, Here we are?

Saturday, September 22, 2007

யேசு காவியம் இசை ஓவியமாய்

பாகம் 1


பாகம் 2

Tamil Christian kannadasan Yesu kaaviyam song with video and music

கர்த்தாவே எங்கள் ஆண்டவரே பாடல்


karthaavee engkal aandavaree paadal

அன்பர் யேசுவின் அன்பு பாடல்


anbar yesuvin anbu song

நடந்ததெல்லாம் நன்மைக்கே பாடல்


nadanthathellaam nanmaikke thanthai bergmans prayer garden tamil song

என் ஜனமே மனம் திரும்பு பாடல்


en janamee manam thirumbu Father S. J. Berchmans jeba thoottam

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்


thalarnthu poona kaikalai thidappaduththungal father berhmens paadal

இயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்


yesuvin naaman inithaana naaman tamil christian video song

Friday, September 21, 2007

தேவன் தள்ளுகிறார் - மார்ட்டின் லூதர்

பழமைகளிலும், தவறுகளில் மூழ்கி கிடந்த கிறிஸ்தவ சபைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மார்ட்டின் லூதர் அவர்கள்.Martin Luther (1483 – 1546).ரோமன் கத்தோலிக்கம்,புராட்டஸ்டன்ட் எனப்படும் பிரிவுகள் இவர் காலத்திலிருந்தே உருவானது.ஆனால் இப்படி ஒரு பிரிவையோ பிளவையோ ஏற்படுத்த அவர்கு அவா துளியும் இருக்கவில்லை.ஆனாலும் அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.இப்படியாய் கூறுகிறார் அவர்.

"தேவன் என்னை வழி நடத்தவில்லை;அவர் என்னைப் பிடித்து முன்னால் தள்ளுகிறார்.அவர் என்னைக்கொண்டு செல்கிறார்.நான் எனது எஜமானனல்ல. நான் அமைதியாக வாழவே விரும்புகிறேன்.ஆனால் புரட்சிகளின் நடுவிலும்,எதிர்ப்புகளின் நடுவிலும் தள்ளப்படுகிறேன்"
-லுத்தர் D'Aubigne b5 ch2

"பூமியின் அரசர்களும் முழு உலகமுமே அஞ்சி நடுங்குகிற போப்பானவரை எதிர்க்க நான் யார்?....
இந்த முதல் இரு ஆண்டுகளில் என் இதயம் எவ்வாறு துன்பமடைந்தது என்பதை ஒருவராலும் அறியமுடியாது.எப்படிப்பட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தேன் என்று சொல்வேன்? எப்படிப்பட்ட அவலத்தில் மூழ்கினேன் என்பதே...."
-லுத்தர் ibid b3 ch6


லூக்கா 21:12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Luke 21:12. But before all these, they shall lay their hands on you, and persecute you, delivering you up to the synagogues, and into prisons, being brought before kings and rulers for my name's sake.
13.And it shall turn to you for a testimony.
14.Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:
15.For I will give you a mouth and wisdom, which all your adversaries shall not be able to gainsay nor resist.

Thursday, September 20, 2007

கிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்

சத்யேந்திர நாத் தத்தா (Satyendra Nath Dutta 1882-1922) வங்காளத்தை சேர்ந்த ஒரு மாபெரும் கவிஞர்.அவர் இவ்வாறு கூறினார்

"என்னைக் கிறிஸ்தவனென மற்றவர்கள் அழையாவிடினும் நினது பிறப்புவிழாவாம் இன்று ஓ கிறிஸ்துவே! தெய்வத்தின் பேரன்புப் புதல்வ தூய்மையாளருள் பெருந்தூய்மையாளா! நின்னை நான் பணிகின்றேன்"


The Hindu poet, Satyendranath Datta, felt Jesus himself belonged in India:

We love and revere you, though not called Christians. . . . Bring your message to this ancient home of idealism. Reign supreme in Hind and be the brightest jewel in her diadem. Our heavy-laden hearts will find comfort in you. Teach us the lesson of humility, service and truth. . . . Teach us sympathy, O Teacher of love. Come and fill our hearts. Give us the love that fulfills itself in service among the poor, the lowly and lost.

-Vishal Mangalwadi, Missionary Conspiracy (OM Publishing, 1996), pp. 96–97

Source

யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

John 13:35 By this shall all men know that ye are my disciples, if ye have love one to another.

Wednesday, September 19, 2007

கிறிஸ்து பற்றி தாசித்துஸ்

கிறிஸ்து பற்றி முதலாம் நூற்றாண்டு ரோம வரலாற்று மேதை தாசித்துஸ் (Cornelius Tacitus) இவ்வாறு கூறுகிறார்.

"கீழ்த் திசை மேம்பாடு அடையப்போகிறது.உலக முழுவதையும் ஆளுகை செய்கிறவர் யூதெயாவினின்றும் புறப்படுவார்"
-தாசித்துஸ் ரோமை சரித்திராசிரியர்

மத்தேயு 2:2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

Tacitus (historian of the Roman Empire) tells that

"there was a firm persuasion … that at this very time the East was to grow powerful, and rulers coming from Judea were to acquire universal empire"

(Tacitus: Histories, 5:13).

Matthew 2:2 Saying, Where is he that is born King of the Jews? for we have seen his star in the east, and are come to worship him.

Source

Tuesday, September 18, 2007

கிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்

வங்காளத்தை சேர்ந்த, பிரம்ம சமாஜ தலைவர்களில் ஒருவர் கேஷப சந்திர சென். Keshub Chunder Sen (1838-1884)
அவர் 1879-ஆம் ஆண்டு மே மாதம் இவ்வாறாய் கூறினார்.

"இந்தியா என்னும் சோபிதமான விலைமதித்தற்கரிய கிரீடத்தைச் சூடப் பாத்திரமானவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.இயேசு கிறிஸ்து ஒருவரே என்று அழுத்திச் சொல்கிறேன்.இந்தியாவாகிய மணிமகுடம் ஒருநாள் அவருடையதாகிவிடும்"

Kesab Chandra Sen had said in May, 1879,"None but Jesus, none but Jesus, none but Jesus ever deserved this precious diadem, India; and Jesus shall have it."

சங்கீதம் 60:7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது

எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது

Psalm 60:7 Gilead is mine, and Manasseh is mine;

Ezekiel 18:4 Behold, all souls are mine; as the soul of the father, so also the soul of the son is mine:

Source

Sunday, September 16, 2007

கிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்(Dr. Sarvepalli Radhakrishnan (1888-1975)) ஒரு மிகப்பெரிய மேதை.அவர் பிறந்த தினம் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.அவர் இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது. "If you want to be a real man,you follow Jesus Of Nazareth"

(டிசம்பர் 1993 "வருகையின் தூதன்" பத்திரிகை)

யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

John 8:12 Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.

Friday, September 14, 2007

கிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்

இந்து குலத்தில் பிறந்து பின் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாராயண் வாமன் திலகர் (Narayan Vaman Tilak) மாகாராஷ்டிராவில் (1862-1919) வாழ்ந்த ஒரு மாபெரும் மராட்டிய மகாகவியாவார்.அநேக புகழ்பெற்ற கிறிஸ்தவ கீர்த்தணைகளையும்,பஜனை பாடல்களையும் எழுதியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறினார்.

"உம்மைப்போல கிறிஸ்துவே நானும் ஏழையாய் இருக்கத் தேடுவேன்.உம்மைபோல நானும் சிலுவையில் அறையப்பட ஆயத்தமாய் வாழ்வேன்.உம்மைப்போல நடந்து உம் சாயலை அடைய என்றும் முயலுவேன்"

யோவான்:15:4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

John:15:4
Abide in me, and I in you. As the branch cannot bear fruit of itself, except it abide in the vine; no more can ye, except ye abide in me.

Wednesday, September 05, 2007

சவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா

சவக்கடல் எனப்படும் Dead sea இஸ்ரேலின் ஒரு உப்புக்கடல் salt lake.உப்பால் நிறைந்தது.பிற கடல்களை விட ஒன்பது சதவீதம் உப்பு அதிகம்.இதனால் யார் வேண்டுமானாலும் இக்கடலில் மிதக்கலாம்,நடக்கலாம்.அவ்வளவு அடர்த்தியாய் உப்பு.

வேதாகம ஆபிரகாமின் காலத்தில் Sodom,Gomorrah பட்டணங்கள் அக்கிரம மிகுதியால் கடவுளின் பார்வையில் கோபத்துக்குள்ளாயின.
அந்நகரங்கள் முற்றிலும் நெருப்பால் அழிக்கப்பட்டன.கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும்,வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

அவ்விடம் இப்போது சவக்கடலாக மாறி கிடக்கிறதாக எனது நம்பிக்கை.இந்த வசனமும் அதை ஆமோதிப்பது போல் வருகிறது. ஆதியாகமம் 19:26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

சவமாய் போன சோதோம்கொமாரா மக்களுக்கும் சவக்கடலுக்கும் ஒரு முடிச்சு. உப்புத்தூணாய்போன லோத்தின் மனைவிக்கும் உப்புக்கடலுக்கும் ஒரு முடிச்சு.