Thursday, March 23, 2006

மனிதனின் வயது என்ன?

மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என ஒரு சிலரும் சில லட்சம் ஆண்டுகளாயிற்று என வேறு சிலரும் ஏறக்குறைய 6000 ஆண்டுகளாயிற்று என மற்றும் சிலரும் கூறுகின்றனர்.

இதே வாக்குவாதம் திரு.மூத்துக்கு ஒரு மத போதகரிடம் ஒருமணி நேரமாய் ஏற்ப்பட்டுள்ளது.தன் வாதத்தை திரு.மூத்து அவர்கள் விளக்காவிட்டாலும் அவர்கள் வாதம் என்னமாய் இருந்திருக்கும என யூகிக்க முடிகிறது. இன்னொருவர் அப்படி பட்டவர்களை வீட்டில் ஏற்றாதே என அறிவுரைக்கிறார்.ஏன்? நான் கேட்பது என்னவென்றால் ....உங்கள் நியாயமான வாதங்களை அறிவியல்,சரித்திர பூர்வமாக வைக்கலாமே.

http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_16.html

இதுவரை உலக சரித்திரத்தில் beyond 6000 years-க்கு back போக முடிந்ததுண்டா.ஆறாயிரம் ஆண்டுவரைக்கும் நம்மால் back trace பண்ணமுடியும் போது ஏன் அதையும் தாண்டி செல்ல முடியவில்லை.ஏன் ஓர் வெற்றிடம்.

Indus Valley Civilization (3300–1500 கிமு) வரைக்கும் என சொல்கிறோமே.அதற்க்கு முன்னால் என்ன?....

கிறிஸ்தவர்கள் (மட்டுமல்ல முகமதியர்கள்,யூதர்கள் கூட )சொல்வது கிமு 4000 ஆண்டுகள்+கிபி 2000 ஆண்டுகள்- ஆகமொத்தம் ஏறத்தாழ 6000 ஆண்டுகள்.

சிலர் சொல்வது போல மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என்றால் மில்லியன் ஆண்டுகளாகியும் மக்கள் தொகை இப்படியா இருந்திருக்கும்.பூமி தாங்காமல் போயிருக்குமே.

பழங்காப்பியம் திருக்குறள் வெறும் 2000 ஆண்டு முந்தையது.தொல்காப்பியம் 5000 ஆண்டுகள் முந்தையது.எட்டுவதெல்லாம் ஏன் 6000 க்குள்ளாகவே இருக்கவேண்டும்.

மற்றபடி பெரிய நம்பர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.சைபர் போட போட எண்கள் கூடும்.இந்த மாதிரி விசயங்களில் யாரும் எக்ஸ்ரா சைபர் போட தயங்குவதில்லை.

ஆரோக்கியமான விவாதம் நமக்கு நல்லதே..

Friday, March 17, 2006

மாதா வழிபாடு

கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் யேசுவின் தாயாகிய மரியாளை வழிபடுகிறவர்களாக உள்ளனர் (மேரி மாதா) .தங்கள் பிரார்த்தனைகளில் மரியாளை வாழ்த்துவதுடன் வணங்கவும் செய்கின்றனர்.இது தவறல்லவா என கேள்வி எழுப்பினால் நமக்கு கிடைக்கும் விடை "யேசுவை நேரடியாக வேண்டிக்கொள்வதற்கு பதிலாக அன்னை மேரி வழியாக யேசுவை வேண்டிக்கொள்கிறோம்.பொதுவாக எந்த தாய் பேச்சையாவது கேட்காத மகன் உண்டோ எனவே உடனே எங்கள் பிரார்த்தனை கேட்க்கப்படும்"என்கிற ரீதியில் பதில் கிடைக்கும்.

இதை சரியாக புரிந்து கொள்ள யேசு செய்த முதலாம் அற்புதமாகிய கானாவூர் கல்யாண வீட்டு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அங்கே யேசுவும்,மேரியும் இருந்தார்கள்.

ரசம் குறைந்து போனபோது கல்யாண வீட்டுக் காரர்கள் மேற்க்கண்ட பிரிவினர் செய்யும் தவறு போன்றே யேசுவை வேண்டிக்கொள்ளாமல்,மேரியை வேண்டிக்கொண்டனர்.அதற்கு அந்த அம்மா அளித்த பதில் "அவர் (யேசு) உங்களுக்குஎன்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள்"என்பது தான்.

உண்மையில் மரியாள் இந்த பிரிவினர் நம்புவது போலவே யேசுவை கல்யாண வீட்டுக்காரர்களுக்காக வேண்டிக்கொண்டாள்.அதற்கு யேசுவின் பதில் " ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை" என்பதாக இருந்தது.

ஆக இந்த சம்பவம் சொல்வது போல மரியாள் யேசுவிடம் பிறருக்காக வேண்டிக்கொள்ள முடியாது என்பதுடன் மரியாள் சொல்லும் புத்திமதி "யேசுவின் வார்த்தை படி செய்யுங்கள்" என்பதே.அதை விட்டு விட்டு அந்த அம்மாவையே வாழ்த்துவது வழிபடுவது விக்கிரக வழிபாட்டுக்கு சமம்.

மேலும் ஒரு பைபிள் சம்பவம்.

(லூக்கா:11:27-28) யேசுவை பார்த்து ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு பெண் "உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்"என்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு யேசுவின் பதில்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

அதாவது சாதாரண மனிதனும் மேரியைவிட பாக்கியவான்கள் ஆகலாம் எப்படி என்றால் இறைவன் வார்த்தைபடி நடப்பதன் மூலம் என்பதே அவர் கருத்து.

யோவான் 14:13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

அதனால் யேசுவின் வழியாய் பிதாவை வேண்டிக்கொள்ளுங்கள்.அதுவே சரியான கிறிஸ்தவ வழிபாடு.இடையே எவரும் தேவையில்லை.

Thursday, March 16, 2006

தவமிருந்து

தவமாய் தவமிருந்து ஞானமாய், கடினமாய்,பொறுமையாய் உழைத்து ஒரு உல்லாசங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடங் கொடுக்காமல் சிறுக சிறுக சேமித்து, சொத்து சேர்த்து , பைக் வாங்க வசதி இருந்தும் வாங்காமல் நடையாய் நடந்து அப்பாமார்கள் ,தான் சேர்த்தவையெல்லாம் பிள்ளைகளுக்கு விட்டுவிட்டு போகின்றனர்.பிள்ளைகள் அதை அனுபவித்து களிப்பர்.இதுவும் ஒரு மாயை என்கிறது பைபிள்.

பிரசங்கி 2:21. ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.

Interesting Bible Words:
Ecclesiastes 2:21
For there is a man whose labor is with wisdom, knowledge, and skill; yet he must leave his heritage to a man who has not labored for it. This also is vanity and a great evil.

Tuesday, March 14, 2006

சத்திய ஆவி

பகுத்தறிவாளன் அவர்களே.. உங்கள் கேள்விகளுக்கு மிக்க நன்றி.

வழக்கம் போல எனக்கு தெரிந்த அளவில் நான் உங்களுக்கு பதிலளிக்க முற்சிக்கிறேன்.

கேள்வி 1. "அந்த தீர்க்கதரிசியைக்" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். "நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா?

பதில்:எனது எண்ணப்படி யேசு இங்கு குறிப்பிடுவது தன்னை பற்றியோ அல்லது மோசே குறிப்பிட்ட தீர்க்கதரிசியை பற்றியோ அல்ல.இங்கு யேசு குறிப்பிடுவது பரிசுத்த ஆவியானவர் என கிறிஸ்தவர்களால் குறிப்பிடப்படுபவரை பற்றியதே.
நீங்கள் குறிப்பிட்ட அதே யோவான் 16:13-ல் அந்த நபரைப்பற்றி "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது,"என அவரை பற்றி சத்திய ஆவி என்கிறது பைபிள்.

இங்கே அவரின் குணாதிசயங்கள்

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

(மேலும் யேசு அந்த சத்திய ஆவியானவ்ர் வரும் வரை எருசலேமை விட்டுப் போகாமல் இருக்க அவர் சீடர்களை கேட்டுக்கொண்டார்.அந்த சத்திய ஆவியானவர் வந்த சம்பவம் பற்றி கீழே)

அப்போஸ்தலர் 1:4 நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.5. ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் (அதாவது பரிசுத்த ஆவி வர)காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

(அடுத்த சில நாட்களில் நடந்தது கீழே)

அப்போஸ்தலர்:2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

ஆகையால் எனது முடிவு படி யேசு இங்கு குறிப்பிட்டது பரிசுத்த ஆவியானவரை பற்றி.

அது நடந்து முடிந்து விட்டது.


கேள்வி:2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், "மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா?

பதில்:ஒரு வசனமானது "உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி"என சொல்ல இன்னொரு வசனம் "மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்."என சொல்வதால் இந்த குழப்பம்என நினைக்கிறேன்.

மோசேயைப் போல பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள், கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர்.போன்ற குணாதிசயமுள்ள ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்பது பைபிள் படி உண்மையே.

ஆனால் மோசேக்கு கடவுள் சொன்ன வாக்கியம் இது.

" உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

அதாவது மோசேயைப்போல அற்புத அடையாளங்கள் செய்வார் என்றில்லை.
மோசே இஸ்ரேலருக்கு சட்ட திட்டங்கள் கொடுத்தது போல இந்த தீர்க்கதரிசியும் கடவுள் வார்த்தையை அருள்வார் என்பதே.

எடுத்துகாட்டாக
மத்தேயு:5:21. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.(இது மோசே அருளியது)

22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
(இது யேசு அருளியது)


கேள்வி:3. "மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்: இ) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)
ஈ) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)

இங்கு "மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.


பதில்:மோசேக்கு கடவுள் சொன்ன வாக்கியம் இது.

" உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

அதாவது மோசேயைப்போல அற்புத அடையாளங்கள் செய்வார் என்றில்லை.

மோசே இஸ்ரேலருக்கு சட்ட திட்டங்கள் கொடுத்தது போல இந்த தீர்க்கதரிசியும் கடவுள் வார்த்தையை அருள்வார் என்பதே.

4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.

பதில்:நன்றி...விருப்பமே..காத்திருக்கிறேன்.

Thursday, March 09, 2006

வழக்குக்கு விலகு

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள்.எந்த அளவுக்கு நீதிமன்றங்களுக்கும் வழக்குகளுக்கும் தள்ளி இருக்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு நல்லது.உடன்பிறந்தோர் அநேகர் சொத்துக்காக சண்டையிட்டு கடைசியில் அது யாருக்கும் இல்லாமல் வக்கீல் அந்த சொத்துக்களை சுட்டுக் கொண்டு போவதை இந்தகாலங்களில் பார்ப்பது சகஜம்.அது குறித்ததான ஒரு பைபிள் வாக்கியம் இதோ.

நீதிமொழிகள்:20:3.
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

Interesting Bible Words
Proverbs 20:3 It makes you look good when you avoid a fight
only fools love to quarrel.

Wednesday, March 08, 2006

கருப்பு சூரியன்


உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இருண்டுபோய் ஒளிகொடாதிருக்கும் என பைபிள் சொல்லுகிறது.நிகழ்காலங்களில் நடைபெறும் வான ஆராய்ச்சியானது அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது.சூரியனில் உண்டாகி பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள்.அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள்.அது குறித்த செய்தி இங்கே.

http://epaper.tamilmurasu.in/
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பைபிள் வாக்கியங்கள் நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன அல்லது உலகம் பைபிள் வாக்கியங்கள் நிறைவேற தயாராகிக் கொண்டிருக்கிறது எனலாம்.


யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஏசாயா 13:10 வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,

மாற்கு 13:24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்

அப்போஸ்தலர் 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

வெளி 16:8 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

Joel 2:31
The sun shall be turned into darkness,
And the moon into blood,
Before the coming of the great and awesome day of the LORD.

Isaiah 13:10
For the stars of heaven and their constellations
Will not give their light;
The sun will be darkened in its going forth,
And the moon will not cause its light to shine.

Matthew 24:29
“Immediately after the tribulation of those days the sun will be darkened, and the moon will not give its light; the stars will fall from heaven, and the powers of the heavens will be shaken.

Mark 13:24
“But in those days, after that tribulation, the sun will be darkened, and the moon will not give its light;

Acts 2:20
The sun shall be turned into darkness,
And the moon into blood,
Before the coming of the great and awesome day of the LORD.

Revelation 6:12
I looked when He opened the sixth seal, and behold,[e] there was a great earthquake; and the sun became black as sackcloth of hair, and the moon[f] became like blood.

Revelation 16:8
Then the fourth angel poured out his bowl on the sun, and power was given to him to scorch men with fire.

Tuesday, March 07, 2006

பணக்காரன்

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள்.அது சில சமயம் அந்த கூரையை சரி செய்யவே சரியாய் போய்விடும்.எவ்வளவு பணம் வருகின்றதோ அதற்கேற்றால் போல் செலவும் வந்து விடுகிறது என்பதை அவ்வாறு சொல்வார்கள்.விரலுக்கேற்ற வீக்கம்.
அளவுக்கு அதிகமாய் சொத்துடையதன் பலன் தன் சொத்தை பிறர் சாப்பிட அதை தாங்கள் பார்க்கலாம்.அது தான் அதிகம் பொருளுடையதன் பலன்.

இது பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது.

பிரசங்கி:5:11. பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?

Interesting Bible Words

Ecclesiastes 5:11
When goods increase,They increase who eat them;
So what profit have the owners Except to see them with their eyes?

மூஸாவின் (மோசே) முன்னறிவிப்பு

பகுத்தறிவாளன் Sir..எனது தாமதமான பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன்.சில அலுவல்களால் உடனடியாக என்னால் பதிலளிக்க இயலவில்லை.இனிமேல் முடிந்தவரை சீக்கிரம் பதிலளிக்க முயலுவேன்.என் நிலையை புரிந்துகொள்வீர்கள்என நம்புகிறேன்.இனி உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

கேள்வி:அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா?

பதில்:மோசே முன்னறிவித்த அந்த நபர் யேசு என்பது எனது நம்பிக்கை.அதற்கான ஆதார பைபிள் வசனங்கள் கீழே.
மோசே மட்டுமல்ல இன்னும் பிற தீர்க்கதரிசிகளும் யேசு பிறப்பை முன்னறிவித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்.
----------------------------------------------------------------------
லூக்கா 24:27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மை(யேசு)க்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
----------------------------------------------------------------------
லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்(யேசு) குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
---------------------------------------------------------------------
யோவான் 1:45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
---------------------------------------------------------------------
யோவான் 5:46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்(யேசு)குறித்து எழுதியிருக்கிறானே.
----------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 26:23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
----------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 3:22 மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்
-----------------------------------------------------------------------------
உங்கள் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேன்என நினைக்கிறேன்.இல்லையெனில்எனக்கு தெவிவியுங்கள்.நன்றி.

Thursday, March 02, 2006

மீண்டு வந்த மொழி

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் ஜனங்கள் சிதறடிக்கப் பட்டபோது அவர்கள் மொழியான எபிரேயு மொழியும் காணாமல் போயிருக்க வேண்டும்.நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும் மீண்டு வந்து பைபிள் முன்னறிவிப்பு படி தங்கள் மொழியையும் தக்க வைத்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யம்.இன்று இஸ்ரேலின் official language Hebrew.

செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

A pure language

With the return of the nation, the ancient Hebrew language has been revived and become the official language of the state. Prior to this happening, the Jews spoke an impure form of the language called Yiddish. The return to a pure common language was again predicted by the prophets.

Zephaniah 3:8-10 KJV - "For then will I turn to the people a pure language, that they may all call upon the name of the LORD, to serve him with one consent. From beyond the rivers of Ethiopia my suppliants, [even] the daughter of my dispersed, shall bring mine offering".

Wednesday, March 01, 2006

சண்டைக்கோழி

இது உண்மையா இல்லையா என கணவன்மார்கள் தான் சொல்லவேண்டும்.ஓயாமல் வழ வழ என சண்டையிடும் மனைவி, விடாத மாலை வேளை மழை போலவாம்...கணவன்மார்களுக்கு எங்காவது ஓடிவிடத்தோன்றும் போலும்....ஆபீஸிலிருந்து லேட்டாக வர அதுவும் ஒரு காரணம்.

சாக்ரடீஸ் வாழ்வில் நடந்தது என்பார்கள்.ஒருமுறை அவருக்கும் அவர் மனைவிக்கும் வீட்டில் பெரிய சண்டை.இவரோ தன் சீடர்களுக்கு போதித்து கொண்டிருந்தார்.வழ வழ என பேசி சண்டையிட்டுகொண்டிருந்த அவர் மனைவி ஒருகட்டத்தில் ஒரு பாத்திரம் முழுவதும் தண்ணீர் கொண்டுவந்து அவர் மேல் ஊற்றி விட்டார்.சாக்ரடீஸ் தன் சீடர்களை பார்த்து சொன்னாராம் "இவ்வளவு நேரமும் இடிஇடித்தது...இப்போது மழை பொழிகிறது"என்று.

இனிமேல் சில Interesting bible words உங்களுக்காக அவ்வப்போது...

நீதிமொழிகள்:25:24. சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

நீதிமொழிகள்:27:15. அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

Interesting bible words

Proverbs 25 : 24 It is better to dwell in the corner of the housetop, than with a brawling woman and in a wide house.

Proverbs 25 :15 A continual dropping in a very rainy day and a contentious woman are alike.