Tuesday, March 14, 2006

சத்திய ஆவி

பகுத்தறிவாளன் அவர்களே.. உங்கள் கேள்விகளுக்கு மிக்க நன்றி.

வழக்கம் போல எனக்கு தெரிந்த அளவில் நான் உங்களுக்கு பதிலளிக்க முற்சிக்கிறேன்.

கேள்வி 1. "அந்த தீர்க்கதரிசியைக்" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். "நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா?

பதில்:எனது எண்ணப்படி யேசு இங்கு குறிப்பிடுவது தன்னை பற்றியோ அல்லது மோசே குறிப்பிட்ட தீர்க்கதரிசியை பற்றியோ அல்ல.இங்கு யேசு குறிப்பிடுவது பரிசுத்த ஆவியானவர் என கிறிஸ்தவர்களால் குறிப்பிடப்படுபவரை பற்றியதே.
நீங்கள் குறிப்பிட்ட அதே யோவான் 16:13-ல் அந்த நபரைப்பற்றி "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது,"என அவரை பற்றி சத்திய ஆவி என்கிறது பைபிள்.

இங்கே அவரின் குணாதிசயங்கள்

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

(மேலும் யேசு அந்த சத்திய ஆவியானவ்ர் வரும் வரை எருசலேமை விட்டுப் போகாமல் இருக்க அவர் சீடர்களை கேட்டுக்கொண்டார்.அந்த சத்திய ஆவியானவர் வந்த சம்பவம் பற்றி கீழே)

அப்போஸ்தலர் 1:4 நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.5. ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் (அதாவது பரிசுத்த ஆவி வர)காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

(அடுத்த சில நாட்களில் நடந்தது கீழே)

அப்போஸ்தலர்:2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

ஆகையால் எனது முடிவு படி யேசு இங்கு குறிப்பிட்டது பரிசுத்த ஆவியானவரை பற்றி.

அது நடந்து முடிந்து விட்டது.


கேள்வி:2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், "மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா?

பதில்:ஒரு வசனமானது "உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி"என சொல்ல இன்னொரு வசனம் "மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்."என சொல்வதால் இந்த குழப்பம்என நினைக்கிறேன்.

மோசேயைப் போல பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள், கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர்.போன்ற குணாதிசயமுள்ள ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்பது பைபிள் படி உண்மையே.

ஆனால் மோசேக்கு கடவுள் சொன்ன வாக்கியம் இது.

" உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

அதாவது மோசேயைப்போல அற்புத அடையாளங்கள் செய்வார் என்றில்லை.
மோசே இஸ்ரேலருக்கு சட்ட திட்டங்கள் கொடுத்தது போல இந்த தீர்க்கதரிசியும் கடவுள் வார்த்தையை அருள்வார் என்பதே.

எடுத்துகாட்டாக
மத்தேயு:5:21. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.(இது மோசே அருளியது)

22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
(இது யேசு அருளியது)


கேள்வி:3. "மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்: இ) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)
ஈ) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)

இங்கு "மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.


பதில்:மோசேக்கு கடவுள் சொன்ன வாக்கியம் இது.

" உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

அதாவது மோசேயைப்போல அற்புத அடையாளங்கள் செய்வார் என்றில்லை.

மோசே இஸ்ரேலருக்கு சட்ட திட்டங்கள் கொடுத்தது போல இந்த தீர்க்கதரிசியும் கடவுள் வார்த்தையை அருள்வார் என்பதே.

4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.

பதில்:நன்றி...விருப்பமே..காத்திருக்கிறேன்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment