Thursday, March 23, 2006

மனிதனின் வயது என்ன?

மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என ஒரு சிலரும் சில லட்சம் ஆண்டுகளாயிற்று என வேறு சிலரும் ஏறக்குறைய 6000 ஆண்டுகளாயிற்று என மற்றும் சிலரும் கூறுகின்றனர்.

இதே வாக்குவாதம் திரு.மூத்துக்கு ஒரு மத போதகரிடம் ஒருமணி நேரமாய் ஏற்ப்பட்டுள்ளது.தன் வாதத்தை திரு.மூத்து அவர்கள் விளக்காவிட்டாலும் அவர்கள் வாதம் என்னமாய் இருந்திருக்கும என யூகிக்க முடிகிறது. இன்னொருவர் அப்படி பட்டவர்களை வீட்டில் ஏற்றாதே என அறிவுரைக்கிறார்.ஏன்? நான் கேட்பது என்னவென்றால் ....உங்கள் நியாயமான வாதங்களை அறிவியல்,சரித்திர பூர்வமாக வைக்கலாமே.

http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_16.html

இதுவரை உலக சரித்திரத்தில் beyond 6000 years-க்கு back போக முடிந்ததுண்டா.ஆறாயிரம் ஆண்டுவரைக்கும் நம்மால் back trace பண்ணமுடியும் போது ஏன் அதையும் தாண்டி செல்ல முடியவில்லை.ஏன் ஓர் வெற்றிடம்.

Indus Valley Civilization (3300–1500 கிமு) வரைக்கும் என சொல்கிறோமே.அதற்க்கு முன்னால் என்ன?....

கிறிஸ்தவர்கள் (மட்டுமல்ல முகமதியர்கள்,யூதர்கள் கூட )சொல்வது கிமு 4000 ஆண்டுகள்+கிபி 2000 ஆண்டுகள்- ஆகமொத்தம் ஏறத்தாழ 6000 ஆண்டுகள்.

சிலர் சொல்வது போல மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என்றால் மில்லியன் ஆண்டுகளாகியும் மக்கள் தொகை இப்படியா இருந்திருக்கும்.பூமி தாங்காமல் போயிருக்குமே.

பழங்காப்பியம் திருக்குறள் வெறும் 2000 ஆண்டு முந்தையது.தொல்காப்பியம் 5000 ஆண்டுகள் முந்தையது.எட்டுவதெல்லாம் ஏன் 6000 க்குள்ளாகவே இருக்கவேண்டும்.

மற்றபடி பெரிய நம்பர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.சைபர் போட போட எண்கள் கூடும்.இந்த மாதிரி விசயங்களில் யாரும் எக்ஸ்ரா சைபர் போட தயங்குவதில்லை.

ஆரோக்கியமான விவாதம் நமக்கு நல்லதே..

2 comments:

  1. thoma4india,
    மறுமொழிக்கு நன்றி தோமா. முதலில் ஒரு வார்த்தை. இது மதசம்பந்தமான விவாதமாக் ஆகிவிடக்கூடாது என நான் கவலைப்படுகிறேன். எதையும் த்னிப்பட்ட தாக்குதலாய் எடுத்துக்கொள்ள வேண்டாம். பல்வேறு நம்பிக்கைகளைப் பற்றி உலகின் வயதைப் பற்றிய நம்பிக்கைகளைப் பற்றி ஒரு சின்ன அலசல் அவ்வளவே. டேக் இட் ஈஸி. ஏதாவது ஒரு மதத்திற்கு ஆதரவாக அல்லது எதிராகவோ நான் எனது பதிவு இருப்பதாய் நினைத்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். திரும்ப ஒரு முறை படித்துப் பாருங்கள்.

    இனிமேல் கொஞ்சம் அறிவியல்பூர்வான விவாதத்துக்கு வருவோம். எந்த மதம் சொல்வதையும் இங்கே நாம் கலக்க வேண்டாம். நம்மிடம் கிட்டத்தட்ட ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் வருடத்துக்கு மேல் வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் இல்லை. ஆனால் அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்று சொல்ல இயலாது. குமரிக் கண்டம் இருந்ததாய்ச் சொல்லப்படுவது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால். கற்கால மனிதர்கள் வாழ்ந்தது கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளை ஒட்டி, இது அறிவியல்பூர்வாய்த் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டைனோசர்கள் வாழ்ந்தது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால். இதுவும் மிக உறுதியாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் சடலம் கூட கண்டுபிடிக்கப்பட்டதாய் ஞாபகம் (தற்போதைக்கு அதுதான் அதிக வயதான மனிதனின் சடலம் என்று நினைக்கிறேன்). டைனோசார்கள் காலத்தில் மனிதர்கள் இருந்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அன்று உலகம் இருந்தது, பல உயிர்களும் இருந்தது, இதுவும் தெளிவாய் நிரூபிக்கப் பட்ட உண்மை.

    ReplyDelete
  2. Muthu ஒரு எலும்புகூடை எடுத்து கொண்டு American scientiest ஒரு அண்டையும் England scientiest வேரு அண்டையும் சொல்வதை நண்பசொல்கிர்களா வரலாற்றுப்பூர்வமான ஆதாரத்னத நண்பவெண்டுமா.

    ReplyDelete