Tuesday, June 27, 2006

*பாவ மன்னிப்பு*

தீயணைக்கும் (இஞ்சின்) வண்டிவரும் மணியோசையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தன் படுக்கையிலிருந்தது எழுந்தான் பென்னி! கால்களை இழந்து ஊன்றுகோலின் துணையுடன் நடந்துவந்த பென்னி,மகிழ்ச்சி உந்த,பக்கத்து ஜன்னலைத் திறந்து பார்வையை வீதியில் உலவ விட்டான்!

அவன் இருந்தது,அந்த வீட்டின் நான்காவது மாடி பகுதி!

ஜன்னலைத் திறந்தவன் திடுகிட்டான்.மூன்றாம் மாடி வரை தன் பசியைத் தீர்த்துவந்த தீப்பிழம்புகள்,நான்காம் மாடியையும் முற்றுகையிட வேகமாய் வந்து கொண்டிருந்தது.!
செய்வதறியாது திகைத்த பென்னி, கூக்குரலிட்டான்!புகைமண்டலம்,பின் புறச்சன்னல் வழியாக,அவன் அறைக்குள்ளும் நுழைந்தது.அவனால் கம்பு ஊன்றி கீழே இறங்கமுடியாத பரிதாப நிலை!

"உதவி செய்யுங்கள்" "காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரலிட்டான்.

கீழே,தீயணைக்கும் வண்டியிலிருந்து ஏணியொன்று,மேலுயர்த்தப்பட்டது.அதில் ஏறிசென்ற ஒருவன்,"தம்பி! உடனே கீழே குதித்துவிடு;கீழே சில வீரர்கள் உன்னை காப்பாற்ற தங்கள் கைகளில் அகன்ற வலையை விரித்து காத்து நிற்பதை பார்" என்றான்.

"ஐயோ,அவர்களால் என்னைப் பிடித்துக்கொள்ள முடியாது! வேறு வழியில் உதவுங்கள் என்று மேலும் கூக்குரலிட்டான் பென்னி.

அவனிருந்த அறையின் பின்புற சன்னல் தீக்கிரையானது!

"தம்பி!பயப்படாதே! வலையும் பெரிது,அதை பிடித்து நிற்கும் எம் வீரர்களின் ஊக்கமும் பெரிதே!ஆகவே,நம்பிக்கையுடன் கீழே குதி!என்று மீண்டும் ஏணியில் நிற்பவன் கூறினான்.

பென்னி பின்னால் பார்க்கிறான்! இன்னும் சிறிது நேரத்தில் அவன் தீயில் மடிவது உறுதி!ஆகவே அவன் தன் வலிமையெல்லாம் கூட்டி கீழே குதித்தான்!

இறுதியில் தீயணைக்கும் படையினரின் வலையில் அவன் விழுந்து காப்பாற்றப்பட்டான்!

நீங்களும் இன்னும் எவ்வளவு காலம் அபாயக் கட்டத்திலேயே தரித்திருக்கப் போகிறீர்கள்? படைத்த இறைவனுக்கு முன்பாக நாம் பாவம் செய்து மாமிசத்தில் பலவீனப்பட்டுள்ளோம்.நாம் பாவத் தீயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டாமா!?.....

உன்னால் உன்னைக் காப்பாற்றக் கூடுமா? நிச்சயமாக முடியாது! ஏனெனில் நீயும் பென்னியைப்போலவே காணப்படுகிறாய். ஆகவே உன்னை நீயே காப்பாற்ற முடியாது.இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உன்னைக் காப்பாற்ற முடியும்!

இயேசு கிறிஸ்து உனக்காக பாவநிவிர்த்திப் பலியானார்! அவர் முற்று முடிய உனக்காக தன்னையே அளித்து,உன் பாவக் கடனைத் தீர்த்தார்.

நீ செய்ய வேண்டியதென்ன? அவரை விசுவாசி.பென்னி செய்ததைப்போல்,எந்த வித துணையும் அற்ற நிலையில்,அவன் வலையில் குதித்து நிலையான வாழ்வினை மீண்டும் பெற்றது போல் நீயும் உன்னைக் காப்பாற்ற முயற்சி செய்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் உன்னைக் காப்பாற்ற முடியும் என நம்பி,அவரிடம் பாவ மன்னிப்பை வேண்டி பெற்றுக்கொள்.

அப்போஸ்தலர்:16:31
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்

Thursday, June 15, 2006

மோசஸ் மோசடி

கல்கரி சிவா சார்
"நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 3" என்ற தங்கள் பதிவுக்கு என் பின்னூட்டம் இது.

//மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும் களையப் போவதாகச்சொன்னார்.இது ஒரு பெரிய அரசியல் மோசடி.//
இதில் என்ன மோசடி சார்...நல்ல செய்தி தானே.

//மோசஸ் மிக சாமர்த்தியமானவர்//
நீங்கள் சொல்வது போல் அவர் மிக சாமர்த்தியமானவராய் இருக்கவில்லை.பைபிளில் யாத்திராகமம் 4:10 சொல்கிறது அவர் வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று.ஒரு வேளை கடவுள் அவரை மிக சாமர்த்தியமானவராக மாற்றியிருக்கலாம்.

//இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.//
இவர்கள் எதிர்பார்த்த தேவதூதரை பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

//ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.//
சரியாய் சொன்னீர்கள்.இன்றும் அந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு யூதரும்.

//அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.//
இதெல்லாம் ஓவர் கதை.இப்படியெல்லாம் வரலாறில் எங்குமே இல்லை சார்.Sorry for that.பட் நல்லாஎழுதுரீங்க.really.உங்கள் எழுத்து திறமை அபாரம்.

//உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.//
நல்ல கதை சார்.தப்பித்து ஓடிய மோசஸை தான் இன்றைக்கும் யூதர்கள் கொண்டாடுகிறாக்களா?.கோழை அல்லது ஏமாற்றியவர் என தூசிக்க மாட்டார்களா?சிந்திக்க வேண்டுகிறேன்.

//அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார்//
ஆனால் சார்,பைபிள் இப்படி சொல்கிறது.
உபாகமம்:34
5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
7. மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்;


//காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப் பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)//
உண்மையிருக்கலாம்.ஆராய வேண்டும்.aBraham-Brahmin..Sara-SaraSWATHY...போன்ற ஆய்வுகள். :)

Any way good stuff.தொடரட்டும் தங்கள் தேடல்கள்.வாழ்த்துக்கள்.

யேசுவும் கர்த்தரும் வேறா?

பகுத்தறிவாளன் சார்,
முதலாவதாக தங்கள் விவாதங்களுக்கு நடுவே நான் புகுவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நினைக்கிறேன்.என் சிறிய அறிவுக்கு எட்டிய வரையான
எனது பதில்கள் கீழே.

கேள்வி:யேசுவும் கர்த்தரும் வேறா?

பதில்:இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை-இரண்டும் தான்.
யேசு பூமியில் மனிதனாய் வாழ்ந்திருந்த காலத்தில் மனிதனாகவே வாழ்ந்திருந்தார்.சராசரி மனிதனுக்கு இருந்த அன்றாட தேவைகள்,சம்பவங்கள்,பசி,வலி,கண்ணீர்,உணர்வுகள் அவர்க்கும் இருந்தது.அவரே கடவுள் என்றால் ஏன் அவரும் ஜெபம் செய்திருக்க வேண்டும்.பைபிளில் அவர் 40 நாள் உபவாசம் இருந்து ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோமே.ஆக அவர் பூமியில்இருந்த நாட்களில் "மனிதனாகவே" இருந்தார்.ஜெபம் செய்வது எப்படி என செய்து காட்டினார்.தன் கடைசி நொடிவரை மனித குணத்தை அவர் இழக்கவில்லை.ஆனால் he represented God.பொதுவாக இவ்வுலகில் power of attrony கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் தனி மனிதர்கள். ஆனால் சட்டப்படி அவர்கள் இருவரும் ஒருவரே.கணவனும் மனைவியும் வேறா? இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை இரண்டும் தானே.

ஆக ஒரு மனிதனான யேசுவும் கர்த்தரும் வேறு.
யோவான்:16:28. நான் (யேசு) பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதா(கர்த்தர்)வினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

ஆனால் ஆவியில் யேசுவும் கர்த்தரும் ஒன்று
யோவான்:17:21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை (யேசு)
அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும்
(கர்த்தர்) இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்

கடவுள் தன்னை மனிதனாக தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8 அவர் (யேசு) மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,
அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே
தாழ்த்தினார்.

யோவான்:14
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே(யேசு), பிதாவை எங்களுக்குக் காண்பியும்,
அது எங்களுக்குப் போதும் என்றான்.9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

கேள்வி:இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே?
இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்?


பதில்:யேசுவை கர்த்தர் காப்பாற்றியிருந்தால் யேசுவை யூதர்கள் கொன்றிருக்க முடியாதே.எப்படியாவது தப்பியிருப்பாரே.சிலுவை மரணம் நிகழ்ந்திருக்காதே.அதாவது யேசு உலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறாமலே போயிருக்கும்.

தொடரும் நம் தேடல்கள் ஆரொக்கியமாய் அமைய வாழ்த்துக்கள்.

Saturday, June 03, 2006

கண்ணதாசனும் கிறிஸ்துவும்

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவது
இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!

-கவிஞர் கண்ணதாசனின் (1927-1981) "இயேசு காவியம்" நூலிலிருந்து.(Kannadasan - “Yesu Kaviyam”)

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16-ல் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

அப்போஸ்தலர் 1:11
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

வெளி 5:10
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

Acts:1:11
"Men of Galilee," they said, "why do you stand here looking into the sky? This same Jesus, who has been taken from you into heaven, will come back in the same way you have seen him go into heaven."

Revelation:5:10
You have made them to be a kingdom and priests to serve our God,
and they will reign on the earth."