Tuesday, September 03, 2019

யூரோ கொடியின் பின்புலத்திலுள்ள‌ ரோமன் கத்தோலிக்கம்


Thursday, August 01, 2019

விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு

விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு

October 19, 2016
விரதம், உபவாசம் மற்றும் நோன்பு என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி தெரிவித்துள்ளார்.
autophagy
பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத்தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும் , ஆட்டோஃபஜி. என்றழைக்கப்படும் ‘ சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆட்டோஃபஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பொருள். இச்செயல் மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. இதன்மூலம்தான் நம் உடற்செல்கள் மறுசுழற்சி செய்துகொள்கின்றன.
நமது உடல் உணவை தவிர்த்து விரதம் இருக்கும் காலங்களில் ஆட்டோஃபஜி எனப்படும் இச்சுழற்சி தீவிரமடைவதால் நமது உடல் நன்கு சுத்தமடைகிறது. எனவே அவ்வப்போது விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்ற நமது முன்னோர்களின் கூற்றை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டோஃபஜி நாம் சீக்கிரமே முதுமை அடைவதிலிருந்து நம்மை காக்கிறது. உடலில் புது செல்கள் உருவாக்கப்பட்டு பழுதடைந்த செல்களும், சேதமடைந்த புரோட்டீனும் வெளியே தள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆட்டோஃபஜி நமது உடல் நலத்தை நன்கு பேணி காக்கிறது.

Tuesday, March 26, 2019

கோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரித்தது

கோலன் மலைப்பகுதி (கோலன் ஹைட்ஸ்) இஸ்ரேலின் மிகவும் எண்ணைவளம் மிகுந்த பகுதியாகும். இதுவரைக்கும் இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக உலகநாடுகளால் அங்கீகரிக்கப்படாமல் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வந்தது. இப்போது இப்பகுதி இஸ்ரேலின் ஒருபகுதியாக அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வேதாகமத்தில் பாசான் எனும் ஒரு அடைக்கல பட்டணமாக குறிக்கப்படுள்ளது  உதாரணமாக உபா 4:42 ல் "பாசானிலுள்ள கோலான்" என குறிப்பிடப்படுள்ளது. இறுதிகால யுத்த‌த்தை வர்ணிக்கும் எசேக்கியேல் 39 இதை "இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி" " இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்" "இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகம்" என குறிப்பிடுகிறது. இங்குள்ள அளவற்ற எண்ணை வளத்தின் மீது இரசியா/ஈரான்/துருக்கி போன்ற பைபிள் குறிப்பிடும் வட திசை நாடுகள் கண்வைத்துள்ளது இங்கு குறிப்பிடதக்கது.
சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலில் பொது தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 1967ம் ஆண்டு நடந்த இஸ்ரேல் ராணுவம் நடத்திய 6 நாள் போரில் சிரியாவின் கோலன் குன்றுகள், பாலஸ்தீன எல்லையில் உள்ள மேற்கு கரை, கிழக்கு ஜெருசேலம் மற்றும் காசா பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
இதில் கோலன் குன்றுகள் மற்றும் கிழக்கு ஜெருசேலம் ஆகியவற்றை இஸ்ரேலுக்கு சொந்தமான பகுதியாக உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தற்போது கோலன் குன்றுகள்  பகுதியில் 20,000 இஸ்ரேலியர்கள் வசிக்கிறார்கள்.
இந்நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின் கோலன் குன்றுகள் பகுதி இஸ்ரேலுக்கு சொந்தமான இடம் என்று அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. 
இது குறித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில்  ‘‘இஸ்ரேலின் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கோலன் குன்றுகள் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே 52 ஆண்டுகளுக்கு பின் கோலன் குன்றுகள் மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக அங்கீகரிக்கிறது’’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹு நன்றி தெரிவித்துள்ளார்.
சிரியாவை பயன்படுத்தி இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிட்டு வரும் நேரத்தில் அதிபர் டிரம்பின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பெஞ்சமின் நேதான்யாஹு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கி தவித்து வரும் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ தற்போது பொது தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு அவரது கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்கா தன் தூதரகத்தையும் ஜெருசலேமிற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalarnellai.com/web/news/67671

Wednesday, January 09, 2019

விவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்

விவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்

January 8, 2019
விவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்
பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம். மீனவர்கள், மேய்ப்பர்கள் முதல் கவிஞர்கள், அரசர்கள் வரை இந்த நூல்களின் ஆசிரியர்களாக உள்ளனர்.
இந்த நூல்களெல்லாம் தூய ஆவியானவரின் ஏவுதலால், வழிகாட்டுதலால் எழுதப்பட்டது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை. விவிலியம் சொல்வதும் அது தான்.
‘பிப்லோஸ்’ என்னும் கிரேக்கச் சொல் மருவி ‘பிப்ளியோன்’ என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இது தான் ‘பைபிள்’ என்றானது.
விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறது. ஒன்று ‘பழைய ஏற்பாடு’. இன்னொன்று ‘புதிய ஏற்பாடு’.
‘ஏற்பாடு’ என்பது உடன்படிக்கை.
‘பழைய ஏற்பாடு’ ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசு வின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது.
‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.
பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்களும், இணை திருமறையில் 7 நூல்களும் உள்ளன. இந்த எழுபத்து மூன்று நூல்களின் தொகுப்பே திருவிவிலியம்.
கி.மு. 750-ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன.
காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன.
கி.மு. 1300-ம் ஆண்டு முதல், கி.பி. 100-ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கணக்கு.
இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி. 1440-ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது.
புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி. 1550-ல் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216-ல் பிரித்திருந்தார்.
களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் மூல செய்திகள் எழுதப்பட்டிருந்தன.
சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி. 350-ல் கண்டெடுக்கப்பட்டன.
யூதேயா பாலை நிலப்பகுதியில் கி.பி 1947-ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் ஜாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர் களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.
பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. பின்னர் இந்த நூல்கள் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாடு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.
புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
1450-ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த கூடன்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் தான்.
சீகன்பால்கு 1715-ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழ் மொழியில் தான்.
அதன் பின்னர் 1727-ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது. தற்போது உலக மொழிகள் 1848-ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன‌. ஆண்டுக்கு சுமார் 10 கோடி விவிலியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
விவிலியத்தின் மையமான இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் மத்தேயுவும், யோவானும் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் செயல்களை மையமாய் வைத்து மார்குவும், போதனைகளை மையமாய் வைத்து மத்தேயு லூக்கா ஆகியோரும், இயேசுவின் இறை தன்மையை மையமாய் வைத்து யோவானும் நூல்களை ஆக்கியுள்ளனர்.
‘ஆதியிலே தேவன்’ என ஆரம்பித்து ‘ஆமென்’ என முடிகிறது பைபிள்.
சேவியர்

பைபிளில் கூறப்படும் எசேக்கியேல் சக்கரமும், ஏலியன்களின் யூஎப்ஓ'க்களும்!

பைபிளில் கூறப்படும் எசேக்கியேல் சக்கரமும், ஏலியன்களின் யூஎப்ஓ'க்களும்!

By Jothi RajendranJanuary 7, 2019
ஆதி மனிதர்கள்

ஆதி மனிதர்கள்

அப்படியான ஒரு நம்பிக்கை ஆனது வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் மீதும், அவைகள் பூமிக்கு வந்து போக உதவிய யூஎப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளும் மீதும் உள்ளன. ஆதி மனிதர்கள் தங்களின் குகை ஓவியங்களில் பறக்கும் தட்டுகளை வரைந்து வைத்துள்ளது தொடங்கி அதி நவீன கேமராக்களில் சிக்கியது வரையிலாக, பறக்கும் தட்டுகள் மீதான ஆதாரங்கள் ஏகப்பட்டது உள்ளன. ஆனால், இது சார்ந்த ஒரு ஆதாரம் புனித நூலான பைபிளில் உள்ளது என்கிற விவரம் உங்களுக்கு தெரியுமா?
கி.மு 6 ஆம் நூற்றாண்டில்

கி.மு 6 ஆம் நூற்றாண்டில்

ஆம், கி.மு 6 ஆம் நூற்றாண்டில், எபிரெயர் தீர்க்கதரிசியான எசேக்கியேலுக்கு 30 வயது எட்டி இருந்தது. கெபாரார் ஆற்றின் குறுக்கே நடந்து கொண்டு இருந்தார், (தற்போது அது ஈராக் ஆக இருக்கலாம்), அப்போது வடக்கில் இருந்து வரும் மகத்தான புயல் மேகத்தையும், மின்னலின் சூழல்களையும் காண்கிறார். அதற்கு நடுவில் ஒளிரும் உலோகம் ஒன்றை அவர் பார்க்கிறார். அதனுள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் முகங்களை கொண்டிருந்த நான்கு இறக்கை கொண்ட உயிரினங்களை பார்க்கிறார். என்கிறது எசேக்கியேல் 1: 1-28.
வேற்று கிரகவாசிகள்

வேற்று கிரகவாசிகள்

பூமிக்கு வந்த அந்த பார்வையாளர்கள் தரை இறங்கியபோது, எசேக்கியேல், அந்த உலோகங்கள் ஆனது "ஒரு சக்கரம், இன்னொரு சக்கரத்தை குறுக்கிடுவது போல் இருப்பதை காண்கிறார். அந்த வாகனங்கள் கூறப்படும் உயிரினங்களை தரையில் இருந்து மேல் எழும்ப உதவுகிறது. எசேக்கியேல் அதை தேவதூதர்களோடு சேர்ந்த கடவுளின் தரிசனமாக எடுத்துக் கொண்டார், ஆனால் நவீன கால பறக்கும் தட்டு ஆய்வாளர்களை பொறுத்தவரை (UFOologists), அந்த உயிரினங்கள் ஆனது வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும், அவர்களை பறக்க வைக்க உதவிய சக்கரங்கள் ஆனது பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்றும், இது வேற்று கிரகவாசிகள் பூமிக்கு விஜயம் செய்து உள்ளதற்கான ஆகப்பெரும் ஆதாரம் ஆகும்.
 எசேக்கியேலின்

எசேக்கியேலின்

வலிமைமிக்க தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலின் விஷயத்தில், அவர் ஒரு அற்புதமான அனுபவத்தை கண்டு உள்ளார். அது வேறு எவரும் காணாத ஒன்றை விளக்குகிறது. அதை உரை நிகழ்வுகளும் விவரிக்கிறது. இது நிஜமா, இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
அற்புதமான ஒளித் தோற்றம்

அற்புதமான ஒளித் தோற்றம்

எசேக்கியேல் பார்த்த அந்த யுஎப்ஒ ஆனது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது சக்கரங்கள், இறக்கைகள், உயிருள்ள ஜீவராசிகள் மற்றும் மின்னல் வேக பயணம் ஆகிய அனைத்தையும் அவர் விவரிக்கிறார். இந்த விசித்திரமான காட்சியில் ஒரு சிம்மாசனமும், அதில் அமர்ந்து உள்ளவரை சுற்றி ஒரு அற்புதமான ஒளித் தோற்றம் இருப்பதையும் அவர் விவரிக்கிறார். ஆனால் பத்தியின் தொடக்கத்தில் (Vs. 1) மற்றும் இறுதியில் (Vs. 28), எசேக்கியேல் மிகவும் தெளிவாக அது கடவுளின் தரிசனம் என்று கூறுகிறார்.
சர்வ வல்லமையுடையவர்

சர்வ வல்லமையுடையவர்

இந்த இடத்தில 'வாகனம்' என்று கூறப்படும் பொருள் ஆனது ஒரே நேரத்தில் அனைத்து திசைகளிலும் சென்றது என்று (அதாவது ஒரு உண்மையான வாகனத்தினால் செய்ய முடியாத ஒன்றை செய்ததாக) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரிப்பு ஆனது கடவுள் எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் (சர்வ வல்லமையுடையவர்) இருப்பதையும், அவர் நம் புரிதலுக்குக் கட்டுப்படுவது இல்லை என்பதே அர்த்தம் ஆகிறது.
'கிராஃப்ட்'

'கிராஃப்ட்'

சில யூ எப் ஓ நம்பிக்கையாளர்கள், இந்த பைபிள் குறிப்பை, கடவுளை பற்றிய விவரிப்பு என்றே நம்புகினறனர். ஆனால் மறு சிலரோ, எசேக்கியேல் எந்த ஒரு இடத்திலும், அவர் விவரிக்க விரும்பிய வாகனத்தை 'ஷிப்' என்றோ, 'கிராஃப்ட்' என்றோ கூறவில்லை, வேற்று கிரகம் என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அது இன்னமும் ஒரு யுஎஃப்ஒ வை பற்றியது தான் என்று நம்புகின்றனர்.
பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

பொதுவான ஆய்வாளர்களிடம் சென்று கருத்து கேட்டால் "பறக்கும் தட்டுகளையும், வேற்றுகிரக வாசிகளை பற்றியும் ஆராயும் மக்களால், புனித நூலான பைபிள் தவறாக புரிந்துகொள்ளப்படுவது ஒன்றும் புதிது அல்ல" என்று கூறுகின்றனர். இந்த இடத்தில் யார் கருத்தை ஏற்றுக்கொள்வது என்பது நாம் ஆரம்பத்தில் பேசிய நம்பிக்கையை பொறுத்தது.

Friday, January 04, 2019

`கிறிஸ்துவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன்’ - இமான் அண்ணாச்சி

`கிறிஸ்துவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன்’ - இமான் அண்ணாச்சி

December 25, 2018

பிரார்த்தனைகள்தான் பல நற்காரியங்களை எனக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

`கிறிஸ்துவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன்’ - இமான் அண்ணாச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் இந்த அளவு வாழ்க்கையில் முன்னேறி, உலகம் முழுவதும் வாழும்  தமிழர்களுக்கு ஓரளவு அறியப்பட்ட மனிதனாக இருப்பதற்குக் காரணம் இயேசுகிறிஸ்து மீதான எனது விசுவாசமும் பக்தியும்தான். 
`நம்முடைய தேவைகளை தேவன் நம்மைவிட அதிகம் அறிந்திருக்கிறார்' என்று பைபிள் கூறுகிறது. என் நண்பர்களில் பலர் குறைபட்டுக்கொள்வதுண்டு. `கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்கவில்லையே' என்று சில நண்பர்கள் என்னிடம் வருத்தப்படுவர். அதன் பொருட்டு கடவுளை நிந்திப்பவர்களும் உண்டு. 
கிறிஸ்து
அதில் ரகசியம் என்னவென்றால், கடவுள் நம் பிரார்த்தனைகளை உடனே கேட்பார் என்று சொல்லிவிட முடியாது. என் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்படி நான் நாற்பது ஆண்டுகளாக வேண்டி இருக்கிறேன். ஆனால், அவர் அதற்குக் குறித்த நாளும் நேரமும் வரும்போதுதான் அப்பிரார்த்தனைகளை நிறைவேற்றினார். இன்று எனது பெரும்பாலான பிரார்த்தனைகளைக் கர்த்தர் நிறைவேற்றியிருக்கிறார். நான் வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்து கிட்டதட்ட ஆறு ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. இந்த ஆறு ஆண்டுகளில் எனக்கு ஒரு டூ-வீலர், ஒரு கார் இருக்க ஒரு இடமென்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இயேசு கிறிஸ்து எனக்குத் தந்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் இறை பக்தியில் தொடர் பிரார்த்தனைகளும் மன உறுதியும் முக்கியமான ஒன்று.  
இமான் அண்ணாச்சி

கிறிஸ்துவுக்குள் வாழ்தல்...
ஒட்டுமொத்த பைபிள் வசனங்களின் சாரம் `உன்னைப் போல் பிறரையும் நேசி' என்பதுதான். இயன்றவரை அந்த வசனத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோள்.  
வறுமையின் காரணமாக பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். எனவே என்னைப் போல இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மனதுள் தோன்றிக்கொண்டேயிருந்தது. அதன் காரணமாகத்தான் `இணைந்த கைகள்' என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களுக்கும், தொழில் தொடங்க சிரமப்படுகிறவர்களுக்கும் உதவுவதுதான் `இணைந்த கைகளின்' நோக்கம்.  
சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை அதற்கெனச் செலவிட்டு வருகின்றேன். இந்த எண்ணம் எனக்குள் வந்ததற்கு `உனக்கு மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்' என்னும் திருவசனமே காரணம். கிறிஸ்தவனாக இருப்பதைவிட என் செயல்கள் மூலம் கிறிஸ்துக்குள் இருப்பதையே நான் விரும்புகிறேன்.   

தினம்தோறும் பிரார்த்தனை

தினமும், சாப்பிடும்போது, பயணம் புறப்படும்போது, இரவு தூங்கச்செல்லும்போது என மூன்று நேரங்களிலும் நான் பிரார்த்தனை செய்வேன். இந்தப் பிரார்த்தனைகள்தான் பல நற் காரியங்களை எனக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். 
நிகழ்ச்சிகளுக்காக காரில் பயணிக்கும்போது நான்கு முறை விபத்திலிருந்து தப்பியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் கர்த்தரே என்னைக் காப்பாற்றினார் என்று நன்றியோடு அவரை நினைவுக் கூர்வேன். அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கையே இயேசு கிறிஸ்துவின் கருணை தான் என்று உறுதியாக நம்புகிறேன் .
மனித சமூகம் வாழப் பத்துக் கட்டளைகள்
மனித சமூகம் துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு ஆண்டவர் மோசேயிடம் நமக்கு பத்துக் கட்டளைகளை அளித்தார் . 
இமான் அண்ணாச்சி
 
அந்தப் பத்துக் கட்டளைகள்:
1. நானே உன் கடவுள். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பதில், கருத்தாக இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபச்சாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. இவையே அந்தப் பத்துக் கட்டளைகள். 
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு,  இந்தப் பத்துக் கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளாகச் சுருக்கமாக்கித் தந்தார். அவை
அதில் முதலாவது எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளை அன்பு செய். 
இரண்டாவது உன்னிடத்தில் நீ அன்பு செய்வது போலப் பிறரிடத்திலும் நீ அன்பாக இரு என இரண்டே கட்டளைகளாக ஆக்கினார்.
இவற்றை நான் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் ஓரளவு கடைப்பிடிக்கவே முயல்கிறேன். அதுதான் என் வாழ்வின் நோக்கம்.
கால மாற்றங்களுக்கு ஏற்ப நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலிருந்து கற்ற பாடங்கள் மூலம் உருவாக்கிக்கொண்ட சிலவற்றை நெறிகளாகக் கடைப்பிடிக்க முயல்கிறேன்:
1. பிறர் மனம் நோக வாழாதே.
2) உன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவிசெய்.
3) போலித்தனமாகப் பழகாதே.
4) தேவையில்லாமல் புகழாதே
5) நன்றி மறவாதே.
6) மன்னிக்கக் கற்றுக்கொள்
7) தீமை செய்பவரையும் நேசி.
கர்த்தருக்குப் பிரியமானவனாக வாழ அனைவரையும் நேசிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

"இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் நிலைக்க வேண்டும்" - எலிசபெத் ராணி

"இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் நிலைக்க வேண்டும்"

December 25, 2018
"இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் நிலைக்க வேண்டும்" - எலிசபெத் ராணி
பதிவு : டிசம்பர் 25, 2018, 12:22 PM
இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் என்றும் நிலைத்திட செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் கேட்டுகொண்டுள்ளார்.
இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் என்றும் நிலைத்திட செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் கேட்டுகொண்டுள்ளார். இது மக்கள் ஒவ்வொருடைய கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தை மக்களுக்கு பகிர்ந்து கொண்டார்.

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி|

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி| Dinamalar

January 3, 2019
 இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடிதேனி: தேனி வயல்பட்டி விவசாயி ராஜா 33, இஸ்ரேல் வேளாண் உயர் தொழில்நுட்பத்தில் 10 ஏக்கரில் சம்பங்கி பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார்.இவர் கோவில்பட்டி, கீழப்பூலானந்தபுரம், தேனி வயல்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிக பரப்பில் இஸ்ரேல் நாட்டின் உயர் தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்து வருகிறார். வயல்பட்டியில் 'நிலப்போர்வை' (mulching technology) தொழில்நுட்பம் மூலம் சம்பங்கி பயிரிட்டுள்ளார்.அவர் கூறியதாவது:ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய பயிரை தேர்வு செய்வதில் சற்று குழப்பம் இருந்தது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் தொழில்நுட்பம் குறித்து அறிந் தேன். தற்போது வயல்பட்டியல் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் நிலப்போர்வை தொழில்நுட்பத்தில் சம்பங்கி பயிரிட்டுள்ளேன். கிழங்கு நட்டு 2 மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும். தொடர்ந்து மூன்றாண்டுகள் அறுவடை தருவதால் நமக்கு இரட்டிப்பு லாபம். முக்கியமாக, 'மல்ச்சிங் ஷீட்' போடுவதால் கிழங்குச் செடியோடு வளரும் களைச் செடிகள் வளர்வதை தடுத்து விடும். சொட்டிநீர் பாசனத்தில் ஈரப்பதம் மண்ணில் நீடித்து தங்க வைப்பதுடன், நீர்ச்சத்து வெப்பத்தில் நீர்த்துப்போக வாய்ப்பில்லை. அதனால் தொடர் அறுவடைக்கு எந்தவித பாதிப்பும் வந்தது இல்லை.செலவு குறைவுஏக்கருக்கு விதைப்புக்கூலி, சொட்டுநீர் குழாய்கள் அமைப்பது, நிலப்போர்வை அமைப்பது என ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிவிடும். ஆனால் ஒரு ஏக்கரில் அந்த செலவுக்கு லாபமாக ரூ.2.50 லட்சம் கிடைக்கும். மூன்றாண்டுகள் தொடர் அறுவடைக்கு தொடர் பராமரிப்பும் அவசியமாக ஒன்று. என்னைப்போன்ற குத்தகை விவசாயிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மானியம் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்

January 1, 2019

பாலை, உப்பு நீர், சீரற்ற பருவம் என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது, இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டும் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்
விவசாயத்தில் புதுப்புது யுக்திகளைப் புகுத்தி சாதித்து வரும் நாடு இஸ்ரேல். அந்த நாட்டின் நிலப்பகுதி விவசாயம் செய்ய ஏற்ற நிலம் கிடையாது. பாலை நிலம் கொண்டது. ஆனால், தான் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் செய்து உலக நாடுகளை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது, இஸ்ரேல். உலகிலேயே இந்த நாட்டில்தான் அதிக அளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலில் மழையின் அளவு மிகக் குறைவு. வெயில் அதிக அளவு சுட்டெரிக்கும். நாட்டின் வடக்குப் பகுதியில் மழை சிறிதளவில் பெய்தாலும், தெற்குப் பகுதி எப்போதும் காய்ந்த பூமிதான். ஜோர்டான் நதியின் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் சேமித்தனர். இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே இருக்கிறது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப் மூலம் எடுத்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் விவசாயம் பார்க்கிறார்கள். நாட்டில் கொஞ்சம் பெய்யும் மழையைக்கூட வீணாக்காமல் சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கிறார்கள். கழிவு நீரை முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். 
இஸ்ரேல்
இஸ்ரேல் விவசாயத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 75 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் என்கிறது புள்ளிவிவரம். நீரைக் குறைந்த அளவில் உபயோகித்துப் பல யுக்திகளைக் கையாண்டு விவசாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, இஸ்ரேல். தாவரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதிக அளவில் தண்ணீரைப் பாய்ச்சி நீரை வீணாக்குவது இல்லை. அதேபோல பயிர்களின்மீது மல்ஷிங் சீட் எனப்படும் பிளாஸ்டிக் உறையைப் போர்த்தி, தேவையான அளவு மட்டுமே சூரிய வெப்பத்தைப் படும்படி செய்கிறார்கள். அதிகமான வெயில் பட்டால் தாவரத்தின் நீர்ச் சத்து ஆவியாகிவிடும் என்பதால்தான் இந்தப் பாதுகாப்பு முறை. 
கடல் நீரைக் குடிநீராக்கி குடிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நிலத்தில் ஒரே பயிரை மீண்டும் பயிரிடுவதில்லை. பயிர்சுழற்சி முறையில் பல தாவரங்களைப் பயிரிடுகிறார்கள். 1948-ம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. நம் நாட்டில் விவசாயம் செய்வதுபோலவே அங்கும் நிலத்தைத் தனியாக பிரித்து விவசாயம் செய்து வருகிறார்கள். அதேபோல அரசுக்குச் சொந்தமான இடத்தில் குழுக்களாக விவசாயம் செய்து பங்கு போட்டுக் கொள்ளும் வழக்கமும் இஸ்ரேலில் உள்ளது. கோதுமை, சோளம், காய்கறிகள், பழங்கள் என அதிக அளவில் விளைவித்து சாதித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெள்ளரி, சுரைக்காய், வாழை, பேரிச்சை, ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் இஸ்ரேலுக்குத்தான். அதேபோல ஒயின் உற்பத்தி, பருத்தி உற்பத்தி எனப் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது. லில்லி மலர்களைப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு உலக சாதனை படைத்திருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல்
அதிக அளவில் மாடுகளை வைத்து பால் உற்பத்தியிலும் முன்னணி இஸ்ரேல்தான். மரங்களால் கிடைக்கும் அத்தனை பயன்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல். புதிய தொழில்நுட்ப நீர்ப் பாசனம், வறண்டப் பாலைவனத்தில் பயிர் செய்யும் முறை, நல்ல விளைச்சலைத் தரும் புதுப்புது தாவரங்கள் என அவ்வப்போது ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறது, இஸ்ரேல். மற்ற நாடுகள் இஸ்ரேலின் தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அதிகமான அளவில் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது, இஸ்ரேல். வறண்ட நிலப்பகுதி கொண்ட இஸ்ரேல்... விவசாய தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மையான நாடாகத் திகழ்கிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பழ ஏற்றுமதி செய்யும் நாடும் இஸ்ரேல்தான். இதற்குக் காரணம், விவசாயிகளின் கூட்டுப் பண்ணைத் திட்டமும், இயற்கை விவசாயம்தான்.  
வெப்பம் நிறைந்த பாலை, குடிக்க உதவாத உப்பு நீர், சீரற்ற பருவநிலை என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டே வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது. இதனால் இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழில்நுட்பங்களை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது நிச்சயம் இந்திய விவசாயத்தில் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் வளமான மண் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை செய்ய ஆட்கள் இல்லை, சீரான பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக விவசாய பொருட்களை விளைவிக்கிறது. இந்த வளர்ச்சிதான், இன்று நவீன விவசாய முறைக்கு உதாரணமாக உலகமே சுட்டிக்காட்டுகிறது.
விவசாயம்
நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் உயர் மகசூல் எடுத்து வருகிறது இஸ்ரேல். அங்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இந்திய அரசு இஸ்ரேல் நாட்டோடு இணைந்து இந்தியாவில் ஏழு பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. அவற்றில் மூன்று பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. மலர் சாகுபடிக்காக ஓசூரிலும், மா சாகுபடிக்காகக் கிருஷ்ணகிரியிலும், காய்கறிச் சாகுபடிக்காகத் திண்டுக்கல்லிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.