Saturday, September 25, 2021

முப்பாட்டன் பெயரும் கொள்ளுபாட்டன் பெயரும்.

சிலருக்கு பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு முப்பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு கொள்ளுபாட்டன் பெயர் கூட‌ தெரியும். ஆனால் எவருக்கும் இயேசுவின் வம்சவரலாறு போன்று ஆதி மனிதனிலிருந்து தான் வரையுள்ள‌ வம்சவரலாறு தெரியாது. உலகின் எந்த மாபெரும் மகானுக்கும் அப்படி தெரியாது. அதுதான் இயேசு கிறிஸ்துவின் விசேஷம்.



வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி.

பைபிளில் முன்னறிவித்தது போல தற்போது வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி. வீடியோ https://www.youtube.com/watch?v=Sok8bAcuuYk ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. வெளி 16:12



கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக.

 உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே. மத்தேயு 4:7



தற்கொலை எண்ணங்களுடன் சிரமப்பட்டேன் - நடிகை மோகினி

 


வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி.

 உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இடம் கிடைத்துள்ளது நமக்கெல்லாம் பெருமையே (Vellore CMC Hospital).


வேலூர் கிறிஸ்தவ மருத்துவ‌ கல்லூரிக்கு நமது வாழ்த்துக்கள். Well done CMC!! நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் வரிசையில் நம்ம சிஎம்சி....! #NIRF2021 #NIRFRankings


"யெருபாகால்" பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுகள்.

"யெருபாகால்" என பைபிளில் நியாயாதிபதிகள் புத்தகத்தில் வரும் கிதியோனின் பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுகள் தற்போது இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3100 ஆண்டுகள் பழமையானதாகும். இப்பெயரை பைபிளில் நியாயாதிபதிகள்:6:32 காணலாம். Excavations in Judean foothills uncover small jug with ‘Jerubbaal’ inscription inked 3,100 years ago may be name of biblical judge Gideon, mentioned in the Book of Judges:6:32



இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம்.

இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம் இது.ஜோர்தான் நாட்டிலுள்ள இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் வருகிறது.



சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்ட இடம்.

 ஜோர்தானிலுள்ள நெபோ பர்வதம் (Mount Nebo in Jordan). சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14,15



தாவர இனத்துக்கு வில்லியம் கேரியின் பெயர்.


 

யூதர்கள் கண்களின் நடுவே Tefillin.

 "கர்த்தரின் நியாயப்பிரமாணம்... உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாக இருக்கக்கடவது" யாத் 13:9 "உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது" உபா 6:8 என்கின்ற பைபிள் வசனங்களை அப்படியே பின்பற்ற ஒவ்வொரு நாளும் நான்கு வேத வசனங்களை கைப்பட எழுதி Tefillin எனப்படும் ஒரு தோல் பெட்டியில் எழுதியிட்டு நெற்றியில் அணிந்திருக்கும் சில‌ யூதர்கள்.



"The Passion of the Christ" சினிமா வெற்றி.

 "The Passion of the Christ" எனும் கிறிஸ்தவ‌ சினிமா படத்தை தயாரிக்க மெல்கிப்சன் முற்பட்டபோது பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் தயாரிக்க மறுத்தன. ஆனால் அவர் தன் ஐகான் கம்பெனியிட‌மிருந்த 45 மில்லியன் டாலர்களையும் கொண்டு முழு படத்தையும் தயாரித்தார். படம் வெளியான போது 612 மில்லியன் டாலர் லாபத்துடம் முதல் மாபெரும் வெற்றி பெற்ற கிறிஸ்தவ சினிமா படமாகியது.



Follow Jesus - அட்டைப்பட செய்தி இட்ட நியூஸ்வீக்.

 "கிறிஸ்தவ சபையையல்ல, கிறிஸ்து இயேசுவை பின்பற்றுங்கள்" என அட்டைப்பட செய்தி இட்ட நியூஸ்வீக் இதழ் ஏப்ரல் 2012.



பைபிள் குறிப்பிடும் காபூல்.

காபூல் என்கிற ஊர் பெயர் பைபிளில் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அந்த காபூலும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் ஒன்றல்ல. பைபிள் குறிப்பிடும் காபூல் இஸ்ரேலில் இன்றும் உள்ளது.


துருக்கியில் நோவாவின் பேழை கண்டுபிடிக்கபட்ட இடம்.

 துருக்கியில் நோவாவின் பேழை கண்டுபிடிக்கபட்ட இடம்.



கி.மு கி.பி His Story.

 கிறிஸ்துவின் வாழ்க்கை கதையே (His story) வரலாற்றை கி.மு கி.பி என இரண்டாக பிரிப்பதால் வரலாற்றை History என்றார்கள்.



இன்றைக்கும் இருக்கும் பைபிள் லாசரு கல்லறை.

 இயேசு உயிரோடு எழுப்பிய பைபிள் கால லாசரு என்பவரின் கல்லறை. இது இன்றைக்கும் ஜெருசலேம் நகருக்கு அருகே பெத்தானியா என்கின்ற ஊரில் இருக்கிறது.



யானை, குரங்கு, மயில் மாமல்லபுர சிற்பமும் பைபிள் வாக்கியமும்.

யானை, குரங்கு, மயில் இணைந்து காணப்படும் மாமல்லபுர சிற்பம். பைபிளில் ஒரு வாக்கியம் வரும், இஸ்ரேலின் "சாலோமோன் ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்" என்று. I இராஜாக்கள் 10:22. சாலோமோன் ராஜாவின் காலம் கிமு 970-931.



ஆதியாகமம் ஆபிரகாம் கால ஒட்டகங்கள்.

ஆதியாகமம் ஆபிரகாம் காலத்திலேயே ஒட்டகங்கள் வீட்டு உபயோகத்தில் இருந்திருக்கின்றன.ஆபிரகாமின் வாரிசான இஸ்மவேலும், இஸ்மவேலின் தாயான ஆகாரும் அவர் சந்ததிகளும் குடியேறிய இடம் இன்னாள் சவுதி அரேபியா.

https://www.bbc.com/tamil/global-58577309



இன்றைக்கும் இருக்கும் மார்ஸ் மேடை.

 இன்றைக்கும் இருக்கும் பவுல் பிரசங்கம் செய்த ஏதென்ஸ் பட்டணத்தின் மார்ஸ் மேடை. அப்போஸ்தலர் நடபடிகள் 17.



"அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற பலிபீடம்.

 "அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தை ஏதென்ஸ் நகரில் பவுல் கண்டதாக நாம் அப்போஸ்தலர் 17:23 ல் படிக்கிறோம். படத்தில் காணும் அந்த பலிபீடம் 1820 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது இப்போதும் ரோம்நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.


நவீன‌ விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள் கால‌ சோதோம் கொமாரோ நகர அழிவு

மீண்டும் நவீன‌ விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள். சோதோம் கொமாரோ நகர அழிவுக்கு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினி காரணம். பல நூறு அணு குண்டுகளுக்கு சமானமான அழிவு நிரூபணம். 2000 டிகிரி செல்சியஸ் வரையான‌ வெப்பம் பதிவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு. மீண்டும் பைபிள் சம்பவங்கள் உண்மை என நிரூபணம் ஆகிறது. https://www.nature.com/articles/s41598-021-97778-3