ஆரம்ப காலங்களில் சகல மிருகங்களும், பறவைகளும் மனிதர்களோடு ஒன்றியே இருந்துள்ளன. எந்த மிருகமும் பறவையும் மனிதர்களை கண்டு பயந்தோடியதில்லை. இதெல்லாம் ஆதியாகமத்தின் ஒரு வசனத்திலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அது எந்த வசனம் சொல்ல முடியுமா ? பதில் கீழே.
Friday, January 27, 2023
அது ஒரு இனிய கனா காலம்.
Saturday, November 19, 2022
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்.
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். ஆதியாகமம் 6:4
ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம்.
ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம் இந்த “ஒரே” எல்லாம் யெகோவா தேவனுக்கு பிடிக்காத விஷயம். மனிதர்கள் இப்படி ஒன்று கூடும் போதெல்லாம் உற்றுபார்க்க வந்துவிடுகிறார் இறைவன் (ஆதியாகமம் 11). ஆபத்து மக்களே. இதுவும் "புதிய உலக ஒழுங்கு - NWO New World Order"க்கு இட்டுசெல்லும் பாதையே.
Sunday, November 13, 2022
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
"நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள்" (ஆதியாகமம் 9:7) என்பதே இந்த பூமியை படைத்தவரின் விருப்பம். பூமியின் மக்கள் தொகையை பல்வேறு விதங்களில் குறைக்க திட்டமிடும் "புதிய உலக ஒழுங்கு -New World Order" எல்லாம் இறைவனின் விருப்பத்துக்கு எதிரானவையே. New world order likes to "Maintain humanity under 500,000,000 in perpetual balance with nature.".
Saturday, September 25, 2021
துருக்கியில் நோவாவின் பேழை கண்டுபிடிக்கபட்ட இடம்.
ஆதியாகமம் ஆபிரகாம் கால ஒட்டகங்கள்.
ஆதியாகமம் ஆபிரகாம் காலத்திலேயே ஒட்டகங்கள் வீட்டு உபயோகத்தில் இருந்திருக்கின்றன.ஆபிரகாமின் வாரிசான இஸ்மவேலும், இஸ்மவேலின் தாயான ஆகாரும் அவர் சந்ததிகளும் குடியேறிய இடம் இன்னாள் சவுதி அரேபியா.
https://www.bbc.com/tamil/global-58577309
நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள் கால சோதோம் கொமாரோ நகர அழிவு
மீண்டும் நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள். சோதோம் கொமாரோ நகர அழிவுக்கு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினி காரணம். பல நூறு அணு குண்டுகளுக்கு சமானமான அழிவு நிரூபணம். 2000 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பம் பதிவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு. மீண்டும் பைபிள் சம்பவங்கள் உண்மை என நிரூபணம் ஆகிறது. https://www.nature.com/articles/s41598-021-97778-3
Thursday, April 19, 2018
வாரத்துக்கு ஒருநாள் லீவு விட சொன்னதும் நம்ம பரிசுத்த வேதாகமம் தான்
Wednesday, April 18, 2018
வாரத்துக்கு ஏழுநாட்கள் என வகுத்தது வேதாகமம்
Monday, April 16, 2018
பிராணவாயு நாசியில் ஊதி நமக்கு பிராணன் தந்தவர்
Thursday, April 12, 2018
நம் சரீர திசுக்களை ஒருங்கிணைக்கும் சிலுவை வடிவ மூலக்கூறு
Wednesday, November 19, 2014
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்
நிலவில் ஒரு பகல் பொழுது
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும்
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.
ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.
மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என
அக்கரை அக்கரையாக
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது.
அதனாலேயே வேதம் சொல்லுகிறது
வானங்கள் கர்த்தருடையவைகள்;
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16
நன்றி தகப்பனே!
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக!!
Thursday, May 29, 2014
அயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை
முதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே!!
Tuesday, November 19, 2013
ஏதேனைச் சேர்ந்த மனித குலம்
பூமியில் வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாத, ஆனால் மனிதன் மட்டுமே படும் சில அவஸ்தைகளை, வேதனைகளை சுட்டிகாட்டி ஒரு விஞ்ஞானி ஒரு வேளை மனிதன் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல, அவன் வேறெங்காவதிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார். கடுமையான பிரசவ வேதனை பூமியில் மனிதன் மட்டுமே படும் வேதனைகளில் ஒன்று. வேறெந்த உயிரினங்களிலும் இல்லாதது. அது போலவே சூரிய வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மென்மையான தோல், முதுகு வலி இப்படியாகப் பல.
ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வேதனைகளெல்லாம் கடவுள் ஆரம்பத்தில் மனிதனுக்காக படைத்த ஏதேன் தோட்டத்தில் இருந்ததில்லை. எப்போது மனிதன் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டானோ அப்போது வந்தவைகள் தான் இந்த வலிகளும் வேதனைகளும். ஆதியாகமம் 3:16 சொல்லுகிறது கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியா யிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்று.இப்படியாக பிரசவ வேதனை வந்தது.அது போலவே சும்மா சொகுசாக இருந்து சாப்பிட்ட ஆதாம் பாவம் செய்த பின் "நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்" என்ற சாபம் வந்தது. முதுகு வலியும் கூடவே வந்தது. சரியாய் தான் சொன்னார் இந்த விஞ்ஞானி. நாம் பூமியில் வாழ படைக்கப்பட்டவர்களல்ல.ஏதேன் தோட்டத்தில் வாழவே படைக்கப்பட்டோம். மனிதன் செய்த பாவத்தால் இந்த பூமி சபிக்கப்பட்டதாயிற்று. மேற்சொன்ன சாபங்களும் வேதனைகளும் வந்தது. இன்னும் சில காலம் தான்.புதிய வானமும் புதிய பூமியும் தோன்றும். மனுஷர்களிடத்திலே நம் தேவன் வாசமாயிருப்பார்.அப்போது மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் எல்லாம் ஒழிந்துபோகும்.எல்லாம் புதிதாகும். ஆமேன். அல்லேலூயா. (வெளி:21:1-4)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்














