Friday, February 10, 2006

நோவாவின் நாட்கள்

நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.அப்படிஎன்றால் என்ன?.தங்கள் முன்னே தான் எழும்பிக்கொண்டிருந்தது நொவாவின் பேழை.உண்மையில் அவர்கள் தான் பேழையை கட்டிக்கொண்டிருந்தார்கள்.அது மட்டுமல்ல நோவாவே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான் பெருமழை வருகிறது என்று ஆனால் யாரும் நம்பத் தயாராய் இல்லை. பெருமழை வந்து அள்ளிக்கொண்டு போகிறவரையும் யாரும் நோவாவை நம்பவில்லை.இன்றைக்கும் அப்படிதான்.கண்முன்னே திருச்சபை எழும்பிக்கொண்டுள்ளது.எங்கு நோக்கினும் இயேசு வருகிறார் இயேசு வருகிறார் முழக்கம்.ஆனால் யாரும் நம்ப தயாராய் இல்லை.கடைசி நிமிடம் வரை இவர்கள் இப்படியே இருப்பர்.மின்னல் ஒளிக்கிறது,ஆங்காங்கே இடி இடிக்கிறது மழை வரும் அறிகுறியே. நோவா கால மக்கள் நோவாவை பார்த்து சிரித்தார்கள் மழை வருதாம் அள்ளிக்கொண்டு போகுதாம்.அதே தான் இன்றும்.ஆங்காங்கே அறிகுறிகள் தெரிந்தாலும் இயேசுவாவது வருவதாவது கிண்டலடித்துக் கொள்கிறார்கள் கலியுகத்தில் இதெல்லாம் சகஜமென்று.பேருந்தையே தள்ளிக்கொண்டு போகும் பெருமழையும் பேர் வெள்ளமும் வெளியே உள்ளே “காதலிக்க நேரமில்லை” பார்த்து கொட்டி கொட்டி சிரித்து கொண்டிருந்தார்களாம் Bro.Sam Jebadurai எப்போதோ ஒருமுறை சொன்னதாக நியாபகம்.கப்பல் மூழ்குவது கண்ணெதிரெ தெரிந்தும் தப்பிக்க முயலாமல் இசை வாசித்துக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.எப்படியாயினும் கண்களை மூடிக்கொண்டிருக்காமல் (இருட்டாகத்தான் இருக்கும்) தலைகளை உயர்த்திப் பாருங்கள்.தெளிவாக அறிகுறிகள் தெரியும் கார்காலத் துவக்கம். நோவக்கால மனிதர் போல் பேழையை உருவாக்குபவர்களாக நாம் இராமல் பேழையில் நுழைபவர்களாக நாம் இருப்போம்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment