Friday, February 10, 2006

அரசியலும் கிறிஸ்தவமும்

ரொம்ப பேருக்கு அரசியலும் மதமும் சம்பந்தமே இல்லாத விஷயங்கள்.

அரசியல் ஒரு சாக்கடை.மதம் புனிதமானது.பெரும்பாலானோர் அரசியல் வாழ்வு ஓட்டு போடுதலோடு முடிந்து விடுகிறது.மதம்,வெள்ளியோ ஞாயிறோ கோயில் சென்று மனதுருக பிரார்த்திப்பதில் ,இஷ்டமானதை வேண்டுவதில் இருக்கிறது.அனைவருக்கும் கட்வுள் முக்கியமானவர்.மிகவும் தேவையானவர்.ஆனால் யாருமே அரசியலுக்கும் மதத்துக்கும் இருக்கும் தொடர்பை ஒத்துக்கொள்ளமாட்டர்கள்.இஸ்ரவேல் பிரச்சனைக்கும் இயேசுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் யார் ஒத்துகொள்வார்.அல்லாவுக்கும் அரேபியா பெட்ரொலுக்கும் தொடர்புண்டென்றாலோ,ஜார்ஜ் புஷ்க்கும் பைபிள்ளுக்கும்,இரான் பூகம்பத்துக்கும் பிசாசுக்கும் என முடிச்சுபோட்டால் நீங்கள் ஒத்துக்க மாட்டீர்கள்.தொடர்ந்து படியுங்கள்.இறைவன் ஆதியில் உலகை படைத்து மனிதனிடம் இதை ஆண்டுகொள் என்று பொறுப்பை ஒப்படைத்தார்.அன்று தொடங்கியது அரசியல்.மனிதன் தான் மண்ணின் ராஜா என வைத்திருந்தார் கடவுள்.அன்றிலிருந்து இந்த பூமியை எத்தனையோ ராஜாக்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்.அதைத்தான் புனித நூல்களான பைபிள்,குரான் போன்றவற்றில் படிக்கிறோம்.கடவுள் ராஜாக்களை ஏற்ப்படுத்துகிறவர்.ராஜாக்களை சிம்பாசனத்திலிருந்து தள்ளுகிறவர்.தானியேல் புஸ்தகம் கூறுகிறது உலகின் மிக முக்கியமான அரசாங்கங்களைப்பற்றி அதாவது ராஜியங்களைப் பற்றி.தானியேல் கனவில் வரும் சிலை பற்றிய விளக்கத்தில்இரும்புத்தனமான பாபிலொனியராஜியம், அலெக்ஸாண்டரின் உலகளாவிய கிரேக்க ராஜ்யம்,ரோம ராஜியம்,இப்போது உருவாகிக்கொண்டிருக்கும் இரும்பும் களிமண்ணும் போல ஒட்டாதிருக்கும் யூரோ ராஜியம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

இப்படியாக கடவுளே உருவாக்கிய ராஜியம்கள் அநேகம்.அதனை அதால பாதாளத்திற்க்கு தள்ளிவிட்டவரும் அவரே.இறுதிகாலத்தில் இப்பொ மனிதன் தன் ஆளுமை தன்மையை இழந்து போனான்.தான் லாயக்கு இல்லை என்றாகிவிட்டது.எனவே தான் இப்போ மன்னராட்சி எல்லாம் பொய்விட்டது.ஒருவர் மட்டும் தான் ராஜாவாகமுடியும்.மனிதன் மண்ணின் மன்னராக முடியாது.அதை உலக வரலாற்றில் தெளிவாக பார்த்தாயிற்று.இப்பொதைக்கு எங்கும் ஜனநாயகமே.ஆனால் தானியேல் கனவுபடி கடைசி ராஜியம் ஒன்று வருகின்றது.அதாவது ஐரொப்பிய ராஜியம் அந்திகிறிஸ்து தலைவனாக. எங்கிருந்தோ வந்த ஒருகல் அந்த ராஜியத்தை அடித்து நொறுக்கி மண் மேடாக்கி போடும்.

அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment