Thursday, February 16, 2006

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை -உள்ளே? வெளியே?

நன்றி ஜோ / Joe .பாருங்கள்.இந்த வாக்கியங்களை மறந்துவிட்டேன்.

"என்னை ஆண்டவனே ஆண்டவனே என்பன் விண்ணரசில் சேரமாட்டாம் .என் வார்த்தைகளின் படி நடப்பவன் எவனோ ,அவனே விண்ணரசில் சேருவான்"

"வெளிவேடக்காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு"

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்

மத்தேயு 23:27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.Matthew:7:21 "Not everyone who says to me, 'Lord, Lord,' will enter the kingdom of heaven, but only he who does the will of my Father who is in heaven. 22Many will say to me on that day, 'Lord, Lord, did we not prophesy in your name, and in your name drive out demons and perform many miracles?' 23Then I will tell them plainly, 'I never knew you. Away from me, you evildoers!'

Matthew:23:27 "Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites! You are like whitewashed tombs, which look beautiful on the outside but on the inside are full of dead men's bones and everything unclean. 28In the same way, on the outside you appear to people as righteous but on the inside you are full of hypocrisy and wickedness.

4 comments:

 1. இந்த 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்குப் பிடித்த ஒன்று

  ReplyDelete
 2. நன்றி தருமி...தட்டுங்கள் திறக்கப்படும்,ஒரு கன்னத்தில் அறைந்தால்.... வாக்கியங்கள் போல இதுவும் யாவரும் அறிந்த பைபிள் வாக்கியம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. எனக்குப் பிடித்தது அந்த வார்த்தைகளுக்குள் கவித்துவமாய் உள்ளடங்கிய பொருளாய் இருக்கும் கருத்துதான். மெளனத்தின் இரைச்சல், கடற்கரைத் தாகம் என்பவை இதே போன்ற மற்ற சில சொற்கள்.

  ReplyDelete
 4. தாங்கள் கூறும் பல விஷயங்கள் "மறுக்க முடியாத நிஜங்களே". நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் மாற்றப்படாத பைபிளை இறை வேதம் என நம்புகிறேன். உங்கள் கூற்றுபடியே இறைவேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதை அனைத்தையும் முழுமையாக நம்புபவனே முழுமையான இறை விசுவாசி ஆக முடியும். ஆனால் இன்று பலர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானதை விட்டுவிட்டு ஒரு சிலவற்றை மட்டுமே நம்புகின்றனர். பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்.

  தற்போது நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகளிலிருந்து ஓர் சந்தேகம்.

  //அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//

  இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது.

  //பைபிள் சொல்லுகிறது"இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று."//

  இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

  நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

  ReplyDelete