Sunday, May 11, 2008

லியோ டால்ஸ்டாய்-"குற்றமும் தண்டனையும்"

"குற்றமும் தண்டனையும்"(War and Peace) என்பது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy 1828-1910) எழுதியதொரு புகழ்மிக்க நாவல்.

அதில் றோஸ்கோலவ் என்னும் கொலைகாரனும் சோன்யா (Sonya Rostova) என்னும் விபச்சாரியும் உரையாடும் காட்சி.

தந்தை குடிவெறியால் நிறைந்திருக்க தனது இளைய சகோதரர்கள் பசியால் வாடும் சூழ்நிலையின் காரணமாகவே தான் விபச்சாரியாக மாறினதாக சோன்யா கூறுகிறாள்.

"நீ ஆண்டவரிடம் தினந்தோறும் ஜெபிப்பாயா?" என்று சோன்யாவைக் கேட்டபோது; "ஆண்டவரில்லாவிட்டால் நான் எப்படி இருக்க முடியும்?"என்று மெல்லிய குரலில் திருப்பிக்கேட்டாள்.

ஆண்டவர் உனக்கு ஜெபத்துக்கு பதிலாக என்ன தருகிறார் என்று கேட்டபோது "அதனை கேட்கவேண்டாம்-அவரே எனக்கு எல்லாவற்றையும் செய்கிறார்" என்றாள்.

றோஸ்கோலவ் சோன்யாவின் இளைய தங்கை போலென்காவிடம் "ஜெபம் பண்ணத் தெரியுமா?"என்று கேட்கிறான்.

உடனே அவள் தெரியும்- பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் தனியாக பிரார்த்தனை செய்வேன்.மரியாளே வாழ்க-எங்கள் அக்கா சோனியாவை ஆசீர்வதியும்-மன்னியும்-எங்கள் தந்தையை ஆசீர்வதியும் என்று ஜெபிப்போம் என்றாள்.

சோன்யாவும், போலென்காவும் ஆண்டவரிடம் எப்படி அன்புகூருகிறார்கள்? அவர்களுக்கு மதம் என்பது வலியைப்போக்கும் மருந்து போன்றதா? மதுவைப்போன்றதா?

கொலைகாரன் மாறினான்!

மதுவும் ,மருந்தும் மனித இதயங்களை அழிக்கிறது. சோன்யா ஆண்டவரிடம் கொண்டுள்ள அன்பு வலுவானது.எனவே அவளது வார்த்தைகள் கொலைகாரனான றோஸ்கோலவ் மனதை மாற்றிவிடுகிறது.

எனவே அவளது நம்பிக்கையின் பின்னணியாக ஒரு உண்மை இருக்கவேண்டும்!

சோன்யா றோஸ்கோலவிடம் ஒரு சிலுவையை தந்து பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறாள்.

இதனால் இதுவரை மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த கொலைகாரனான றோஸ்கோலவ் சைபீரியாவுக்கு சென்று போலீசாரிடம் சரணடைந்து புதுவாழ்வு ஆரம்பிக்கிறான்.

சோன்யா அரிவாள் சுத்தியலை அவனிடம் தந்து ஸ்டாலினின் "சொற்பொழிவு சுருக்கத்தையோ", "டாஸ்காபிட்டல்" என்னும் புத்தகத்தையோ அவனிடம் தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிலருக்கு மதம் என்பது வாழ்வின் அனேக சந்தோசங்களுள் ஒன்று-கலைகளில் ஒன்று.

ஆனால் சிலருக்கு எல்லாம் மதம் தான்.ஆண்டவரை அனைத்திலும் காண்கின்றனர்.ஆண்டவர் நேசிக்கத்தக்கவர்- நம்புவதற்கு தகுதியானவர். அவரது வழிகள் மறைமுகமாயினும் அது ஏற்கத்தக்கது என்று நம்புகின்றனர். இவர்கள் நாத்திகரது வாதங்களை புரிந்து கொள்கின்றனர். ஆனால் நாத்திகர்கள் இவர்களது வாதங்களை எப்படி புரிந்துகொள்ள போகின்றனர்?

-The answer to Moscow`s bible-ரிச்சர்ட் உம்பிராண்ட்

"கடவுள் இல்லாமல் எந்த எழுத்தாளனும் இருந்தது இல்லை. "கடவுள் உண்டா இல்லையா? வாழ்நாள் முழுவதும் என்னை வதைத்துக் கொண்டிருந்த பிரச்சினை இது. இதை வைத்துத்தான் முட்டாள் என்ற நாவலை எழுதினேன்" என்கிறார் தாஸ்தாவஸ்கி. அவருடைய பாத்திரங்கள் எல்லாமே இந்தப் பிரச்சினைக்குள்தான் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை தாஸ்தாவஸ்கி எழுதினார்: "உண்மைக்கும் கிறிஸ்துவுக்கும் சம்பந்தமில்லை என்று யாராவது நிரூபித்து விட்டால் கூட நான் அந்த உண்மையின் பக்கம் செல்லாயேமல் கிறிஸ்துவின் பக்கமே நிற்பேன்." அவருடைய கரமஸோவ் சகோதரர்கள், முட்டாள், குற்றமும் தண்டனையும் என்று எல்லா நாவல்களிலும் இதே பிரச்சினைதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. இவான் கரமஸோவ் சொல்லுவான் "நான் ஒத்துக் கொள்ளாதது கடவுளை அல்ல; இந்த உலகத்தையும், இங்கே உள்ள இத்தனை ஆயிரம் கடவுள்களையும் கடவுள்தான் படைத்தார் எனபதைத்தான் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறேன்." வேறொரு இடத்தில் ஸொஸிமா சொல்லுவான், "இந்த ரஷ்ய தேசத்தின் எல்லாத் தீமைகளையும் போக்கக் கூடிய வல்லமை படைத்த ஒன்றே ஒன்று கிறித்தவம்தான்" என்று. இப்படி தாஸ்தாவஸ்கி நம்பினார்.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான போராட்டம் இது.

நம்பிக்கையின் பக்கம் கவிஞனும், நம்பிக்கையின்மையின் பக்கம் தத்துவவாதியும் நின்று கொண்டிருக்கிறான்."

-CN