Friday, February 10, 2006

ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்

வரலாற்றை திருப்பி பார்த்தால் நாலாவது பேரரசான ரோம பேரரசானது துண்டாடப்பட்டு இப்போது நாம் காணும் ஐரோப்பிய நாடுகளாக பிரிந்து போய்விட்டன.(கால் விரல்களை போல).அவர்கள் மீண்டும் ஒன்றிணய முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார்கள்.லூயி,நெப்போலியன்,ஹிட்லர் காலத்திலிருந்தே.இப்போது ஐரொப்பிய யூனியனாகி நிற்கிறது.அவர்கள் மட்டுமல்ல அராபு நாடுகளும் சரி,ஆசிய நாடுகளும் சரி ஒன்றிணய முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார்கள்.என்னத்தான் ஒன்றிணய முயற்சி மேற்க்கொண்டாலும் இரும்பும் களிமண்ணும் ஒட்டவே ஒட்டாது போல சேர்ந்தும் பிரிந்திருப்பார்கள்.கடைசியில் இது உலகளாவிய அரசு,ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன் என்கிற ரீதியில் போய் கொண்டிருக்கும்.யார் இந்த உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன் ?பார்க்கலாம்.

தானியேல்-2:41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment