Wednesday, February 11, 2009

பழைய புதிய பாபேல்

நோவா கால பெருவெள்ளம் வந்து ஓய்ந்திருந்தபோது இனிமேல் ஒரு பாதுகாப்புக்காகவும், பூமியில் தாம் சிதறிப்போய்விடாமல் இருக்கவும் நினைத்த ஜனங்கள் வானத்தை எட்டும் ஒரு கோபுரத்தை கட்ட நினைத்தார்கள். பாபேல் என அக்கோபுரத்திற்கு பெயரிடப்பட்டது. பாபேல் என்றால் குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மறுவலாகும்.அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" என அது பொருள்படும் "பப்-இலு" வின் மறுவல் என்பது சில ஆய்வாளரின் கருத்து. அக்காலத்தில் பூமியில் பராக்கிரமசாலியான கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்த நிம்ரோத் அதை தலைமை வகித்து கட்டி வந்தான்.பலுகிப் பெறுகி பூமியை நிரப்புங்கள் என்ற கடவுளின் வார்த்தைக்கு எதிராக ஒரே இடத்தில் குவிந்திருக்க மனிதர்கள் சிந்தித்தனர். ஒரே மொழி பேசிவந்த அவர்கள் இடையே கடவுள் குழப்பத்தை உண்டாக்கினார். ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார்.உலக மொழிகள் அனைத்தும் தோன்றின. பல்வேறுதிசைக்கு மனிதர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.பாபேல் என்பது பாபிலோனுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடம்.பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பாபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இன்று சிதறிக்கிடந்த ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள புதிய ஐரோப்பிய யூனியன் ஒருவகையில் இந்த பாபேலை நினைவூட்டுகின்றது.பாபேல் கோபுர வடிவமைப்பிலேயே ஐரோப்பிய பார்லிமெண்ட் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


The Tower of Babel
by Pieter Bruegel the Elder, 1563

European Parliament; Strasbourg, France

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment