Thursday, March 02, 2006

மீண்டு வந்த மொழி

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் ஜனங்கள் சிதறடிக்கப் பட்டபோது அவர்கள் மொழியான எபிரேயு மொழியும் காணாமல் போயிருக்க வேண்டும்.நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும் மீண்டு வந்து பைபிள் முன்னறிவிப்பு படி தங்கள் மொழியையும் தக்க வைத்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யம்.இன்று இஸ்ரேலின் official language Hebrew.

செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

A pure language

With the return of the nation, the ancient Hebrew language has been revived and become the official language of the state. Prior to this happening, the Jews spoke an impure form of the language called Yiddish. The return to a pure common language was again predicted by the prophets.

Zephaniah 3:8-10 KJV - "For then will I turn to the people a pure language, that they may all call upon the name of the LORD, to serve him with one consent. From beyond the rivers of Ethiopia my suppliants, [even] the daughter of my dispersed, shall bring mine offering".

10 comments:

 1. அன்புள்ள தோமா அவர்களுக்கு,

  ஆரம்பத்தில் நீங்கள் நான் கேட்ட சந்தேகத்திற்கு நல்ல முறையில் பதிலளித்து என்னுடைய மற்றைய கேள்விகளையும் எதிர்பார்க்கிறேன் என்று நீங்கள் கூறியதால் தான் என் சந்தேகத்தை வைத்தேன். அது முழுக்க நல்ல எண்ணத்தில் மட்டுமே. விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்; உண்மையை விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திறந்த மனதுடன் விவாதம் புரிய தயாராவார்கள். நான் எனக்கு தெரிந்த சில விஷயங்களைக் குறித்து விளக்கம் தேடியலைகிறேன். அதில் கண்ணில் காணும்(விஷய ஞானம் உள்ளதாக தெரியும்) சிலரிடம் விளக்கம் கேட்பேன். அவர்கள் பதில் தரவில்லையெனிலோ, அல்லது அந்த அளவிற்கு விஷய ஞானம் இல்லை என தெரிந்தாலோ அதோடு விட்டு விடுவேன். உங்களிடமும் அந்த முறையிலேயே கேள்வி கேட்டேன். நீங்கள் சிறந்த முறையில் விளக்கியதால் தான் மறுபடியும் சந்தேகம் கேட்டேன். ஆனால் நீங்கள் இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை. குறைந்த பட்சம் என்னுடைய கேள்வியை அனுமதிக்க கூட இல்லை. இப்பொழுதும் நீங்கள் என் கேள்வியை கவனித்திருக்க மாட்டீர்கள் என்ற நினைப்பில் மறுபடியும் என் கேள்வியை வைக்கிறேன். பதிலளிப்பீர்களா?

  பொறுமையாக ஒரு பதிவாகவே என்னுடைய கேள்விக்கு பதிலளித்ததற்கு மிக்க நன்றி. மிகத் தெளிவாக கர்த்தர் வேறு இயேசு வேறு என்று பைபிளின் கருத்தினை சார்ந்து பதிலளித்துள்ளீர்கள்.

  //எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.//

  இதனை அப்படியே நம்புகிறவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன். அதாவது இயேசுவின் போதனைகளை அவரின் வார்த்தைகளை, கட்டளைகளை நம்பாதவன் ஒருவனும் உண்மையான முஸ்லிமாக முடியாது. அந்த அடிப்படையில் நானும் அவரின் வார்த்தைகளை முழுமையாக நம்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில் ஒரு சில விஷயங்களில் தவறான புரிந்துணர்வினால் பிரிந்திருந்தாலும் அடிப்படையில் யூத, கிறிஸ்த்தவ, முஸ்லிம் சமுதாயம் ஒரே கொள்கையுடையது தான் என்பது என் அபிப்பிராயம். அந்த ஒரு சில தவறான புரிந்துணர்வுகளை சரியாக புரிந்து கொண்டால் இவை ஒரே வழியில் போவதற்கு சாத்திய கூறு நிறைய உண்டு. அதனால் இந்த இரு சமுதாயங்களின் அடிப்படை வேறு பாடுகளைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதில் தவறில்லை என நினைக்கிறேன். அதனால் ஓர் நன்மை விளையுமெனில் அது நியாய தீர்ப்பு நாளை நம்பும் நம் இருவருக்கும் பயன் விளைவிக்கும் அல்லவா?

  இனி நான் உங்களிடம் கேட்க விரும்பியதாக கூறிய அந்த முன்னறிவிப்பினைக் குறித்து:

  பழைய ஏற்பாடு - மோசேவைக் குறித்து கூறப்படும் உபாகமம் என்ற புத்தகத்தில் மோசேக்குப் பின் வரும் ஓர் தீர்க்கதரிசியைக் குறித்து ஒரு முன்னறிவிப்பு உண்டு. அது இவ்வாறு கூறுகிறது:
  15. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்@ அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
  16. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
  17. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
  18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
  19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
  20. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
  21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
  22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை@ அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்@ அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

  உபாகமம் (18:15-22)

  அதாவது மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கதரிசி வருவார் என்று மோசே இஸ்ரவேலர்களைப் பார்த்தும், கர்த்தர் மோசேயைப் பார்த்தும் கூறுவதாக வருகிறது. அதே உபாகமம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில்,

  10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
  11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
  12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
  உபாகமம் (34:10-12)

  அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா?

  ReplyDelete
 2. கர்த்தராகிய தேவன் சொன்ன மோசேயை போன்ற பிகப்பெரிய தீர்க்கதரிசி "இயேசு கிறிஸ்துவே" பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில் மோசேயை போல ஒரு தீர்க்கதரிசி எழும்பியிருக்கவில்லை எனவே அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டில் வரும் போது "நியாயபிரமாணம் மொசேயினால் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்யமும் இயேசுவினால் வந்தது" என ஏசுவை மோசேயுடன் ஒப்பிடுவதை பார்க்கலாம்.

  சரி நண்பரே உங்கள் கேள்வியின் நோக்கப்பப்டி "முகமது நபி அவர்கள்தான் அந்த மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பது உங்கள் கருத்து என்றால்

  "மோசே செய்த எத்தனையோ பெரிய பெரிய அற்ப்புதங்களில் ஒன்று கூட அவர்கள் செய்யவில்லையே ஏன்?" பிறகு எப்படி அவர் மோசேயை போன்ற தீர்க்கதரிசி ஆக முடியும்.
  மேலும் அவர் கர்த்தரை முகமுகமாக அறியவில்லை மாறாக "ஜிப்ரிஎல் தூதனைதான் முகமுகமாக அறிந்து திரு குர்ரானை பெற்றார்"

  "மோசேயின் அந்த வார்த்தையகிய "உங்கள் சகோதரருக்குள்ளே" என்பது இஸ்ரவேல் கோத்திரத்தின் 12 பேரை மட்டுமே குறிக்குமே அல்லாமல் அதற்கு எத்தனையோ தலைமுறை முன்னே உள்ள ஆபிரகாமின் மகனாகிய இஸ்மவேலின் தலைமுறையை குறிக்க எந்த வாய்ப்பும் இல்லை.
  SUNDARARAJ
  www.kandukonden.blogspot.com

  ReplyDelete
 3. நண்பர் பகுத்தறிவாளன்

  இந்த பதிவுகளைப் பாருங்கள் உண்மை புரியும். பைபிளில் முகமதுவைப் பற்றி குறிப்பிடுகிறதா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

  http://isakoran.blogspot.com/2007/09/33.html

  http://isakoran.blogspot.com/2007/07/1416.html

  http://isakoran.blogspot.com/2007/08/332.html

  ReplyDelete
 4. நண்பரே சில சந்தேகங்கள், இஸ்ரேல் சமுதாயத்தின் கடவுள் பெயர் என்ன? அக்கடவுளுக்கு உருவம் உண்டா?இல்லையா? இருந்தால் என்ன மாதிரியான உருவமைப்புக் கொண்டது? மற்றும் வேதத்தின் பெயர் என்ன? எந்த மொழி?

  ReplyDelete
 5. யாசீர் கடவுளின் பெயர் என்னவாக இருந்தால் என்ன? ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும். அல்லா கடவுள் கண்டிப்பாக நீங்கள் வணங்கும் அல்லாவோ இந்துக்கள் வணங்கும் சிவாவோ அல்ல.

  மேலும் அல்லாவுக்கு உருவம் உண்டு என பி.ஜே கூறுகிறாரே. தங்களின் அபிப்பிராயம் என்னவோ? அல்லா என்ன மாதிரியான உருவம் கொண்டவர் என பி.ஜேயிடம் கேட்டுச் சொல்வீர்களா?

  ReplyDelete
 6. மோசே நன்கு கற்று அறிந்தவர். முகமதுவோ எழுத்தறிவு இல்லாதவர்
  மோசே சாந்த சொருபி. முகமது பட்டயத்தின் மூலம் தனது மதத்தை பரப்பியவர்.
  மோசே பல அற்புதங்களைச் செய்தார் முகமது எந்த அற்புதத்தையும் செய்யவில்லை.
  மேசே ஒரே மனைவியை யுடையவராயிருந்தார்
  முகமதுவிற்கு எண்ணற்ற மனைவிகள்

  ReplyDelete
 7. நண்பரே,

  உண்மையிலேயே என் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை என்பதால் தான் உங்களிடம் கேட்டேன்,தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. கற்றது கைமண் அளவுதான், தயவு செய்து பெயர்களை வைத்து மதங்களை எடை போட வேண்டாம்.

  ReplyDelete
 8. Jesus is the absolute expression of perfection

  If my brothers any one you want to have a role model in your life
  Jesus will be the only choice
  Because there is no hint of error in him

  when he touches the people they were healed
  when the people hear his mighty speech they were repent
  He is the holy God

  what do you know about GOD?The holy one
  you expect God's thinking is your thinking?

  Sir if you want him to come to the earth you expect him to come to the earth and born in a palace

  But only for his people who lost their righteousness to satan the deceiver ,Jesus came to the earth
  and born on a shepherds hurt

  A highest thing that a man can man can give another man is his life
  Jesus gave his life for his people because of nothing but he is rightheous
  Inorder to prove that he is God He Resurrected from Death and his name will be Glorified for ever and ever.

  Knowing jesus Christ will be attained only by his grace


  'Jesus Suffers Every pain' that is the secret
  Yes , Jesus Cried To His father
  why ?
  'maranathai kanadha siranjivi' eppadi maranathai sagippar

  sir oru hindu brothers,muslim brothers why they give offering of animals

  GOD allows animal sacrifice in olden days why? sir think sir they are the people 4000 years before they lived
  kattumanushanga.ivan en pulla appadiyachu thirundhuvana sollidhan Kadavul appadi seidhar

  Kadavul ulagukku seidha kaariyam ninaikka ninaikka pullarijkkudhu sir

  manusana pakkadhinga sir Kadavula parunga sir

  ReplyDelete
 9. sir ur question seems to be one of the stupid question

  ReplyDelete
 10. SIR I WOULD LIKE BRING SEE THE LIF E OF THE PEOPLE THEN U DECIDE
  WHO IS THE ROLE MODEL
  WHO IS SET EXAMPLE FOR OTHER
  WHO IS GIVEN LOVE WHO HAS GIVEN INSTRUCTION KILLING OTHERS
  WHO IS MARRIED OTHERS WIFE WHO TAUGHT CAN MARRAGE FOR FEW HOURS
  WHO SAID IF U LOOK AT THE GIRL WITH BAD THINKING YOU HAVE DONE PROSTITUTION
  WHO MARRIED HIS OWN DAUGHTER IN LAW
  WAKE WAKE UP DEAR BROTHERS PLS WAKE UP READ UR BOOKS

  ReplyDelete