Thursday, March 18, 2010

முழங்கால்களை முடக்கிய ஹெய்தி

பிப்ரவரி மாதம் 12-ம் தியதி ஹெய்தி அதிபர் பிரவல் மூன்று நாள் உபவாச ஜெபத்துக்கு தன் நாட்டு ஜனங்களை அழைப்புவிடுத்திருந்தார். பத்துலட்சத்துக்கும் அதிகமான ஹெய்தி மக்கள்
இந்த உபவாசஜெபத்துக்கு திரண்டு வந்திருந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு (ஜனவரி 12) நடைபெற்ற மாபெரும் ஹெய்தி பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 233,000.

பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
(மத்:24:7,8)
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
(II நாளாகமம் 7:14)
தேவன் ஹெய்தியை கண்ணோக்குவாராக. அவர்களுக்கு இரங்குவாராக.

Haiti - "A Call To Fasting & Prayer"
On February 12, 2010, President Préval of Haiti called his nation to 3 days of fasting and prayer in place of the regular Mardi Gras celebration. Several of the Nations Christian Leaders had 5 days to set up and arrange this event, Pastor Rene Joseph of Loving Hands Ministry was one of the head leaders and over 1 million Haitians attended this epic event.
May God bless Haiti!

Friday, March 05, 2010

பிரபல கேள்விகளும் பதில்களும்

பிரபலமான பதில் சொல்ல கடினமான கேள்விகள் பலவற்றிற்கு சகோ.ஜஸ்டின் பிரபாகரன் அவர்கள் அளிக்கும் பதில்கள்.

Famous God,christian,bible based questions are answered in Tamil by Bro Justin Prabakaran.

Download this video.
Famous questions are answered in Tamil by Bro Justin Prabakaran

Thursday, March 04, 2010

அன்பை விட்டாய்

அன்பை விட்டாய் அமெரிக்கா.
நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாயே.
நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.(வெளி:2:4)
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? (IIகொரி:6:16)
ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.(Iகொரி:10:14)
நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.(வெளி:2:5)
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.(Iயோ:5:21)

Barack Obama celebrates Diwali 2009 at White House.
All the best Obama.







Wednesday, March 03, 2010

கிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்

நோவா கால வெள்ளத்திற்கான ஆதாரச்சான்றுகள் செய்தியை வழங்குபவர் இடிமுழக்கம் சகோ.ஜஸ்டின் பிரபாகரன்.

Tamil message by Rev.Dr.S.Justin Prabakaran proves of Noah time flood existence.

Download this video.
Proves of Noah Flood Existence in Tamil by Bro Justin Prabakaran

1பேது:3:15
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

Tuesday, March 02, 2010

”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நம் கண்முன்னே நிறைவேறிக்கொண்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமரே வேதாகமத்தின் வசனத்தை மேற்க்கோள்காட்டி இவ்வசனங்கள் நிறைவேறியிருக்கின்றன எனக் கூறுவது சற்று அரிதான விசயமே. சமீபத்தில் போலந்து நாட்டில் ஆஸ்விச் எனும் இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 65-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வேதாகமத்தில் எசேக்கியேலின் உலர்ந்த எலும்புகள் தரிசனத்தை மேற்க்கோள்காட்டி அது நம் காலங்களில் நிறைவேறி விட்டதாக அறிவித்தார்.

அவர் பேசும் போது “யூதர்கள் படுகொலைக்கு பின், நாம் சாம்பலிலிருந்தும் அழிவிலிருந்தும் எழுந்து, என்றைக்கும் தீர்க்கமுடியாத வலியிலிருந்து மீண்டுவந்தோம். யூத இன பாசத்தாலும், மனித நேய உணர்வுகளாலும், தீர்க்கதரிசிகளின் தரிசனங்களாலும் உந்தப்பட்ட நாம் புதிதாக துளிர்விட்டோம். ஆழமாய் வேரூண்றத்தொடங்கினோம். உலர்ந்த எலும்புகள் மாமிசத்தால் மூடப்பட்டது. அதிலே ஆவி புகுந்தது. உயிர்பெற்று நாம் சொந்த காலிலே நின்றோம். எசேக்கியல் தீர்க்கதரிசனம் உரைத்தபடி “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்.” நான் இப்போது நின்று கொண்டிருப்பது இப்படி பல்லாயிரம் யூதர்கள் மாண்ட இடம்.நான்
மட்டுமல்ல என்னோடு கூட சேர்ந்து இஸ்ரேல் தேசமும் எல்லா யூதர்களும் நிற்கிறார்கள். உங்கள் நினைவுகளில் நாங்கள் தலைவணங்குகிறோம். எல்லோரும் பார்க்க. எல்லோரும் கேட்க. எல்லோரும் அறிய, நீலமும் வெண்மையும், நடுவே தாவீதின் நட்சத்திரமும் கொண்ட
கொடியேற்றி நாங்கள் இப்போது நிமிர்ந்து நிற்கிறோம். நம் நம்பிக்கை வீண்போகவில்லை.” என இஸ்ரேல் நாட்டின் உதயத்தை உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற எசேக்கியேலின் தரிசனத்தோடு ஒப்பிட்டு பேசினார்.

எசேக்கியேலின் 37-ம் அதிகாரம் நம் காலத்தில் நிறைவேறினதென்றால் 38ம்,39ம் நம் காலத்திலேயே நிறைவேறலாம் என்பது அதிக நிச்சயமல்லவா?
http://www.pmo.gov.il/PMOEng/Communication/PMSpeaks/speechauchwitz270110.htm

Monday, March 01, 2010

முன்பே சொன்ன ஏசாயா



பிப்ரவரி இருபதாம் தேதி செய்திதாள்கள் சொன்னது.
Syria warns: Next war will be ruinous
இத்தகவலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கத்தரிசி கடவுளின் வெளிப்பாடால் சொல்லியிருக்கிறான்.

Isaiah 17:1
The burden of Damascus. Behold, Damascus is taken away from being a city, and it shall be a ruinous heap.

என்னே ஒருமைப்பாடு!!

ஏசாயா:17:1. தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
மேலும் தகவல்