Wednesday, July 29, 2009

இவர்களின் முடிவுகள்

எமி கார்மிக்கேல் அம்மையார்:
அக்டோபர் 1938-ல் வாக்கு தந்தபடியே 1951 ஜனவரி 18-ல் கர்த்தர் “உன் தூக்கத்தில் உன்னை எடுத்துக்கொள்வேன்” என்பதை நிறைவேற்றினார்.“எனக்கு தெரியும்...நீ அஞ்சாதே” என்கும் வெளி:2:9,10 வசனங்கள் அவருக்கு பிடித்துப்போனதொன்று. வயது 83. அதிகாலையில் அவர் முகம் ஒளிபெற்றது

டாக்டர் கல்லன்:
“இப்பொழுது எனக்கு எழுத மாத்திரம் பெலன் இருக்குமானால் மரிப்பது எத்தனை இன்பமானது என்று எழுதுவேனே”

ஜான் ஆற்தர் லித்:
“இது மரணமா? ஆ! இது ஜீவிப்பதைக் காட்டிலும் மேன்மையுள்ளதாய் இருக்கிறதே! நான் கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாய் மரிக்கிறேன்”

மிஸிஸ் மேரி பிரான்ஸெஸ்:
“நான் அனுபவிக்கும் ஆனந்தத்தை உங்களுக்கு அறிவிக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே! நான் ஆனந்த பரவசமடைகிறேன். ஆண்டவர் என் ஆத்துமாவில் மகிமையாய்ப் பிரகாசிக்கிறார். அவர் வந்துவிட்டார், வந்துவிட்டார்!”

வன்யா (Ivan ”Vanya” Moiseyev):
தனது தந்தைக்கு “அப்பா! நான் இந்த மால்டோவியாவை மறுபடியும் காணவே மாட்டேன் அப்பா” என்று எழுதிய ரஷ்ய ராணுவ வீரன் இவன். தனது சகோதரன் சிம்யானுக்கு 15-7-1972-ல் வெளி:2:10-யை நினைவு கூர்ந்து கடிதம் எழுதி “உங்கள் மிக எளிய சகோதரனிடமிருந்து இந்த உலகத்தில் எழுதப்படும் கடைசி கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்: என முன் எழுதினான். வன்யாவை ஒரு அறையில் கொண்டு சென்று நெஞ்சில் துளையிட்டு மால்சின்(Malsin) என்ற தளபதி கொன்றான். “கிறிஸ்து எல்லா பாவிகளையும் நேசிக்கிறார்” இது அவன் இறுதி வார்த்தைகள். வயது 20. “கடினமானதொரு மரணத்தையடைந்தான் ஆனால் அவன் ஒரு கிறிஸ்தவனாக மரித்தான்” என்றான் மால்சின்.

வால்டேர் (Voltire):
”நான் தேவனாலும் மனிதனாலும் கைவிடப்பட்டேன்.நான் நரகத்துக்கே போவேன். ஆ கிறிஸ்துவே, ஆ கிறிஸ்துவே”

டாம் பேன் ( Tom Paine):
"நான் எழுதிய பகுத்தறிவின் காலம் (Age of Reason) என்னும் (நாத்திக) நூல் பிரசுரிக்கப்படாதிருக்குமானால் நான் உலகங்களையே (எனக்கிருக்குமானால்) அதற்கீடாகக் கொடுப்பேனே. ஆண்டவரே எனக்கு உதவி செய்யும், கிறிஸ்துவே எனக்கு உதவி செய்யும். என்னோடே தங்கும், தனிமையாய் விடப்படுவது நரகமே”

சர் பிரான்சிஸ் நியூபோர்ட்:
“அவியாத அக்கினியின் உபாதையை ஆயிரம் ஆண்டுகள் அனுபவித்தாவது ஆண்டவரின் கிருபையைப் பெற்று அவரண்டை திரும்பக்கூடுமானால் நமாயிருக்கும்.ஆனால் அது வீண் நம்பிக்கை. கோடா கோடி ஆண்டுகளும் என் வேதனைக்கு முடிவுண்டாகாதே. நித்தியமே, ஆ நித்தியமே, நரகத்தின் தாங்க முடியாத வேதனைக்கு முடிவேயில்லையே”

ரோம அரசன் ஜூலியன்:
இயேசுவின் நாமம் உலகில் இல்லாதபடி அழித்து விட சபதம் செய்த ரோம அரசன் ஜூலியன் போரில் காயமடைந்து உயிர் பிரியும் நேரம் தன் இரத்தத்தை கையில் அள்ளி வானத்துக்கு நேராக எறிந்து "கலிலேயனே,நீயே ஜெயித்தாய்" என்று கூறி மரித்தான்.இங்கு கலிலேயனே என்று அவன் குறிப்பிட்டது இயேசுகிறிஸ்துவையேயாகும்.

1 comment: