Friday, November 21, 2014

புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்.

புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன். வெளி 13:18

Wednesday, November 19, 2014

பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்

உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என
அக்கரை அக்கரையாக
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது.

அதனாலேயே வேதம் சொல்லுகிறது
வானங்கள் கர்த்தருடையவைகள்;
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே!
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!

Saturday, November 15, 2014

தேவனாலே எல்லாம் கூடும்

மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.மத்:19:26

Saturday, September 20, 2014

கொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்

ஐபோன் 6 ல் முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்தார். மணிபர்சுகளையே இல்லாமல் செய்வதே அவர் குறிக்கோளாம். கரன்சிகளே இல்லாமல் போனது. இப்போது கிரெடிட் டெபிட் கார்டுகளும் இல்லாமல் போகிறது. சீக்கிரம் முத்திரை மட்டுமே போதும் வாங்கவும் விற்கவும் என்றாகிவிடும். வேதாகமம் சொல்லுகிறது "முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது" வெளி:13:17. கடைசிகாலத்தில் இருக்கிறோம் நண்பர்களே. சிலர் கிண்டலாக ஐபோன் 666 என சொல்வதின் அர்த்தம் புரிகிறதா? "Our vision is to replace the wallet" said Apple CEO Tim Cook.  Yes,he is right on track. Bible says, at one time of a age "No one could buy or sell anything without that mark".Revelation:13:17 That too is coming soon. Friends please read the bible to know what is coming.

Monday, August 25, 2014

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள் எத்தனை எத்தனை?

இயேசுவிடம் ஒரு கேள்வி: உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?
இயேசுவின் பதில்: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் தயாரா நண்பரே? (லூக்கா 21:28)

                                                      இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள்

Monday, August 18, 2014

கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - ‍சீக்கிரம் தமிழகத்தில்

Slowly we are kind of getting there. "அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கு செய்தது" என்கிறது வேதாகமம்.செய்திதாள் செய்திய‌ பாருங்க. கூடிய சீக்கிரத்தில் அந்த நாளும் வந்துடும்ங்க. நாம பெற்ற சுதந்திரம் இன்னும் இருக்குதா? இல்ல இருந்த சுதந்திரமும் போயிட்டிருக்குதான்னு தெரியலைங்க. எல்லாம் நம்ம நன்மைக்கு தான்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா இருந்த‌ சுதந்திரமும் போயிட்டு தான் இருக்குதுனு தோணுது (வெளி:13:16,17). No one can buy or sell unless he has the mark, that is, the name of the beast or the number of its name.Revelation 13:17

Thursday, August 14, 2014

தப்பிய‌ பூமி - இம்மட்டும் வா, மிஞ்சி வராதே

ஒரு மயிரிழையில் தப்பிய‌து பூமி என இப்போது சொல்லுகிறார்கள். 2012‍ல் உண்டான சூரியப்புயல் கொஞ்சம் அவசரப்பட்டு ஒரு வாரம் முன்பே மட்டும் நடந்திருந்தால் பூமியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து போயிருக்கும் என்கிறார்கள். எலக்ட்ரானிக் கருவிகளெல்லாம் கருகிப்போயிருக்குமாம். இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என கட்டளையிடுவது நம் கர்த்தரன்றோ?. காலத்துக்கு முன்னே ஒன்றும் நடக்காது. எல்லாம் அதின் அதின் காலத்திலே நேர்த்தியாக நடக்கும். ஏனெனில் பூமி உண்டானதல்ல. உண்டாக்கப்பட்டது. இங்கு உண்டாக்கினவர் அறியாமல் ஒரு அணுவும் அசையாது.(யோபு 38:11)

Wednesday, June 11, 2014

என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்

எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான‌ உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக‌ கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்க‌ப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது. 
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)

Tuesday, June 10, 2014

அந்தரங்கத்தில் தொங்கும் பூமி

20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நன்கறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான 'பெர்ட்ரான்ட் ரஸ்ஸெல்' என்பவர் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதெனவும் சூரியன் அது அமைந்துள்ள பால்வெளி அண்டத்தின் மையத்தை அதிலுள்ள ஏனைய பல மில்லியன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் விளக்கினார். இவர் தனது விரிவுரையை முடித்த போது கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த பெண்மணி ஒருவர் எழும்பி பின்வருமாறு கூறினார். 'நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மை என்னவெனில் உலகம் ஒரு மிகப் பெரிய ஆமையின் ஓட்டில் அமைந்துள்ள ஒரு வட்டமான தட்டு.'விஞ்ஞானி உடனே அந்தப் பெண்மணியைப் பார்த்து விநோதமாகப் புன்னகைத்த பின் ஒரு கேள்வியை எழுப்பினார். 'நீங்கள் கூறும் ஆமை எதன்மேல் அமர்ந்துள்ளது?' அந்தப் பெண்மணி ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். மேலும் விஞ்ஞானியைப் பார்த்து நீங்கள் மிகவும் புத்திசாலி என்று வாழ்த்தினார். இப்படி பூமியின் அமைப்பு குறித்து தவறான‌ பல்வேறு மூடநம்பிக்கைகள் முன்பு உலக முழுவதும் இருந்தன. ஆனால் வேதாகமம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது 
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7

Thursday, June 05, 2014

எத்தனை நட்சத்திரங்கள்?

வெறும் கண்ணால் நமக்கு பார்க்கத் தெரியும் நட்சத்திரங்கள் 9,000
அதுவே நல்லதொரு பைனாகுலரால் பார்வையிட்டால் 200,000
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து டெலஸ்கோப் வாங்கி நோக்கினால் 15,000,000 (15 மில்லியன்)
பெரிய வான்வெளி ஆய்வுகூடங்களில் போய் ஆய்ந்து நோக்கினால் இதன் எண்ணிக்கை பில்லியன்கள் போகும்.
உண்மையிலேயே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளதாம்?
நாம் இருக்கும் பால்வெளியில் மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளனவாம்.
இது போல எத்தனை பால்வெளிகள் உள்ளனவாம்?
170 பில்லியன் பால்வெளிகள்.
அப்போ எல்லா பால்வெளிகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவாம்?
24 செப்டில்லியன்கள் என்கிறார்கள்.
அதாவது 1000000000000000000000000 நட்சத்திரங்கள்.
இதெல்லாம் நம் மூளைக்கு எட்டியவரையே.
ஆனால் உண்மையில் நாம் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எண்ணியே முடியாது என முடிக்கிறார்கள்.
வேதாகம‌ம் சொல்லுகிறது கர்த்தர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார் என்று (சங்கீதம் 147:4).
என்ன மகத்துவமான தேவன் அவர்.
http://www.universetoday.com/102630/how-many-stars-are-there-in-the-universe/

Thursday, May 29, 2014

அயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை

விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சன் முதன்முதலில் குளோரோபாமை கண்டுபிடித்தபோது பிரசவ வலியை தடுக்க நாம் இதை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வைத்தார்.அப்போது அக்கால மத‌போதகர்கள் இல்லை இல்லை இது இயற்கைக்கு எதிரானது பிரசவ வலியை தடுத்தல் வேதாகமத்துக்கு எதிரானது என்றனர். விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சனோ உடனே ஆதியாகமம் 2:21‍‍ ஐ எடுத்துக் காட்டி கர்த்தர் ஆதாமுக்கு "அயர்ந்த நித்திரையை" வரப்பண்ணி அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து கர்த்தர் ஏவாளை உருவாக்கினதை சுட்டிக்காண்பித்தார்.கடவுள் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இது இப்படியிருக்க ஏவாளோ கடவுளால் வேறு விதமாக உண்டாக்கப்பட்டாள். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என எண்ணிய கடவுள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அப்போது அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆமேன்.
முதல் மயக்கமருந்து நிபுணரும் நம் கர்த்தரே!
முதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே!!

Thursday, May 15, 2014

உலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்


உலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழகிய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய‌ 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945‍ ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய‌ ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் "JESUS DIED FOR OUR SINS." என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷ‌ங்கள் அங்கு இருக்கின்றன‌. ஆமாங்க‌ அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது? எதற்காக போவது? உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)
http://fieldsofthewoodbiblepark.com/

Wednesday, April 30, 2014

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். யாக்கோபு 5:15 
Prayer offered in faith will heal the sick. James 5:15

Thursday, February 20, 2014

ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை

வரப்போகிற உலகளாவிய சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்து சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் என பூமியில் எல்லோரையும் ஆட்டிப்படைப்பான் என்கிறது வேதாகமம் (வெளி:13.16). வசதியுள்ளோர்க்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் இன்டர்நெட் சீக்கிரத்தில் உலகமுழுவதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகளில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அதை அவுட்டெர்நெட் என்கிறார்கள். இப்படியாக ஒருநாள் உலக மக்கள் அனைவர் கையிலும் இன்டர்நெட் உலகம் இலவசமாக‌ வந்துவிடும். அப்படியே உலகத்தின் மீது அதிகாரம் செய்யவும் அந்திகிறிஸ்துவுக்கு எளிதாய் போய்விடும். அதன் வழி ஜனங்களை அவன் அதிகாரம் பண்ணலாம் ஆட்டிப்படைக்கலாம். அப்புறம் வேதம் சொல்லுவது போல கொள்ளவும் விற்கவும் அவனறியாமல் முடியாது ஆகிவிடும். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை என்று (மத்தேயு 24:22). அன்பு சகோதர சகோதரிகளே அதற்கு முன்பாகவே இப்பூவியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதுதான் புத்திசாலித்தனம். மணவாட்டியாய் கிறிஸ்துவோடு கூட எடுத்துக்கொள்ளப்பட நீங்கள் தயாரா? இல்லை அந்திகிறிஸ்துவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறீர்களா? இயேசு கிறிஸ்து சொன்ன புத்தியுள்ள கன்னிகைகள் போல‌ நாம் எல்லோரும் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.

Saturday, January 11, 2014

ஏரியல் ஷரோனின் மரணமும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்


நவீனகால இஸ்ரேலின் மிகப் பிரபலமான ரபியாகக் கருதப்படுபவர் இட்சாக் கடூரி. 108ஆவது வயதில் இவரது மரணத்தின் போது 200000 இஸ்ரேலியர்கள் எருசலேமிலே கூடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் பிரபலமான மதிப்பிற்குரிய இந்த‌ இட்சாக் கடூரி ரபியின் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றனவாம். இந்தோனேசியா சுனாமியையும் அதைத்தொடந்த அழிவுகளையும் இவர் முன்னறிவித்ததாக கூறுகிறார்கள். 2006‍ஆம் ஆண்டில் இட்சாக் கடூரி தான் இறந்த போது ஒரு பேப்பர் குறிப்பை ஒரு சீலிட்ட கவரில் விட்டு சென்றிருந்தார். தான் மேசியாவைக் கண்டேன் என்றும் அவரது பெயரை இந்த குறிப்பில் எழுதியிருக்கிறேன் என்றும் என் இறப்பிற்கு பின் ஒரு வருடம் கழித்து இந்த குறிப்பை திறந்து பார்த்து உண்மையான மேசியாவை தெரிந்து கொள்ளுங்கள் என அறிவித்து சென்றிருந்தார். அவரது மரணத்திற்கு பின் சரியாக ஒரு வருடம் கழித்து 2007ல் அவரது குறிப்பை திறந்து படித்தபோது அதில் எபிரேய மொழியில் ஜெசுவா அதாவது இயேசு என்று எழுதப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இந்த குறிப்பை பிராடு போர்ஜரி எனச்சொல்லி ஒதுக்கிதள்ளிவிட்டனர்.

இதே பிரபல ரபி சொல்லிச் சென்றிருக்கும் இன்னொறு வாக்கு ஏரியல் ஷாரோனின் மரணம் பற்றியது. அதாவது ஏரியல் ஷாரோனின் மரணத்தை தொடர்ந்து மேசியா வெளிப்படுவார் என்பதாகும். இந்த வார்த்தைகளை கடூரி சொல்லும் போது இன்னும் ஏரியல் ஷாரோன் இஸ்ரேலின் பிரதமாக திடகாத்திரமாக இருந்து வந்தார். அடுத்து சில மாதங்களில் ஜனவரி 2006‍ல் கடூரியும் இறந்து விட  அதே மாதம் ஏரியல் ஷாரோனும் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையானார். கடந்த எட்டு வருடங்களாக மரணிக்காமல் கோமா நிலையிலேயே இருந்துவந்த ஷாரோன் இப்போது மரணம் அடைந்திருக்க கடூரியின் தீர்க்கதரிசனம் இப்போது மிக‌ பிரபலமாக பேசப்படுகிறது. எட்டு வருடங்களாக அவரை சாகவிடாமல் கோமாவிலேயே அவரை வைத்து இருந்தது மிக ஆச்சரியமான விசயமாகும்.

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். எபிரெயர் 10:37