நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். நீதிமொழிகள் 10:24
Tuesday, January 26, 2021
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
Friday, November 21, 2014
புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்.
Wednesday, April 30, 2014
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். யாக்கோபு 5:15
Prayer offered in faith will heal the sick. James 5:15
Saturday, July 20, 2013
நிச்சயமாக பதில் உண்டு
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18
தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்
Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில் பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
Wednesday, July 11, 2012
அமெரிக்காவில் திறப்பின் வாசல் ஜெபங்கள் 2012
கடந்த வருடம் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்ற திறப்பின் வாசல் ஜெபங்கள் இந்த வருடமும் டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் வாசிங்டன் டி.சி பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்ட் கோஸ்ட் பகுதியிலிருந்து வாசிங்டன் டி.சி திறப்பின் வாசல் ஜெபத்தில் பங்கு பெறுவோர் பென்சில்வேனியா இடமாற்றத்தை கவனிக்கவும்.
- Thirappin vasal jebam 2012 at Highland Lakes Camp North Spicewood Texas USA July 13,and 14 Yesu viduvikiraar Bro.Mohan.C.Lazaras and Bro.David Stewart Jr
- Thirapin vaasal jebam 2012 at Family Community Church San Jose Bay Area SanFrancisco California USA July 19,20 and 21
- Thirappin vaasal jebam (Stand in the Gap Prayer) 2012 at Hotel Brunswick Lancaster PA Washington DC America July 26,27 and 28 Jesus Redeems
Wednesday, January 18, 2012
கால்பந்தாட்டக் களத்திலும் முழங்கால்
அமெரிக்க கால்பந்தாட்ட களத்தில் டிம் டிபோவின் (Tim Tebow) பெயர் மிக சர்ச்சைக்குரியது. இவரை பெரிதாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள், கடுமையாக தூசிப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் டிபோ வெளிப்படையாக தனது கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை தெரிவிப்பதுதான். பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்களை எப்போதுமே வெளியில் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். அதிலும் விஐபியாக இருப்பவர்கள் கப்சிப்பென ஒரு இரககசிய கிறிஸ்தவரை போலவே நடந்துகொள்வார்கள். ஆனால் டிம் டீபோவோ வித்தியாசமானவர். அமெரிக்கர்கள் வெறித்தனமாக ரசிக்கும் கால்பந்தாட்டக் களத்தில் கூட தலை குனிந்து தேவனை நோக்கி விண்ணப்பம் ஏறெடுக்க தயங்காதவர்.(படம்:Tim Tebow in his trademarked prayer pose.) தைரியமாக தனக்கு கிறிஸ்துவின் மீது உள்ள நம்பிக்கையை உலகுக்கு எடுத்துக்கூற துணிந்தவர். இந்த நவநாகரீக உலகில் கிறிஸ்துவுக்கான இதுபோன்ற சாட்சியங்கள் மிகவும் அபூர்வமானவை.
டிம் டிபோ ”டென்வர் பிராங்காஸ்” (Denver Broncos) அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு முறை புளோரிடா யூனிவர்சிட்டி போட்டியின் போது இவர் தனது முகத்தில் யோவான் 3:16 என வர்ணம் தீட்டிக்கொண்டு விளையாட அன்றையதினம் மட்டும் கூகிள் தேடு தளத்தில் 92 மில்லியன் தடவை “John 3:16" என்றால் என்ன என மக்கள் தேடியிருக்கிறார்கள். அந்த வசனம் இப்படியாக பிரபல்யம் அடைந்தது. தனது டிவிட்டரில் அடுக்கடுக்காக வேத வசங்களை வெளியிடுபவர் இவர்.800,000 பேர் இவரின் டிவிட்டர் ஃபாலோவர்கள். இவரின் பேஸ்புக் அக்கவுண்டில் 1.3 மில்லியன் பேர் ரசிகர்கள்.
இளவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட டிம் டிபோ கால்பந்து களத்திலிருந்து கொண்டே இப்படி பல விதங்களிலும் சுவிசேசத்தை அறிவிக்க முயன்று கொண்டு வருகிறார். இதனால் இவரை எதிர்ப்பவர்களும் பெருகியிருக்கிறார்கள்.”I hate Tim Tebow" என பேஸ்புக் பக்கங்களும் “TebowHaters.com" போன்ற தளங்களும் ஆன்லைனில் பெருகி உள்ளன.
ஜனவரி 16-ல் அமெரிக்காவில் வெளியான டைம் பத்திரிகை எழுதும் போது பொது இடத்தில் தொழகை அல்லது ஜெபம் அல்லது பிரார்த்தனை செய்வதை "Tebowing" எனலாம் என்கின்ற அளவுக்கு டிம் டிபோவின் ஆன்மீக வாழ்க்கை அமைந்துள்ளதாக கூறியுள்ளது.
Tuesday, November 15, 2011
சகோ.டைட்டஸ் தாயப்பன் வாழ்வில் இயேசு செய்த அற்புதங்கள் வீடியோ
இந்து மதத்தில் தீவிரமாயிருந்து பின் கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சகோ.டைட்டஸ் தாயப்பன் அவர்களின் வாழ்வில் இயேசு செய்த மாபெரும் அற்புதங்கள் சாட்சியாக இங்கே வீடியோவில்.
Hindu To Christian Testimony in Tamil Language - Bro. Titus Thayappan
Download this video.
Wednesday, August 17, 2011
சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்
2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்திருக்கும் டெக்சஸ் மாகாண கவர்னர் ரிக் பெர்ரி சமீபத்தில் கர்த்தரின் கிருபையால் ஒரு வெற்றிகரமான நாடு தழுவிய உபவாச நாளை நடத்தி முடித்திருக்கிறார்.அதற்கு எதிராக உருவாக்கபட்ட federal lawsuit போன்ற ஆயுதங்கள் வாய்க்காமல் போனது.கர்த்தருக்கே மகிமை.
30,000 -க்கும் அதிகமான பல்வேறு நிற இன மொழி கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் ஒரே ஸ்டேடியத்தில் ஒன்றுகூடி காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை உபவாசித்து ஜெபித்து பிதாவை நோக்கி கண்ணீர் விட்டு பிரார்த்தித்திருக்கிறார்கள். தொடர்ந்து 7 மணிநேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடு முழுவதும் 1300 இடங்களில் இருந்து வீடியோ வழியாக பலரும் கலந்துகொண்டனர். கான்சாஸ் மாகாண கவர்னர் சாம் பிரவுன்பேக் இக்கூட்டத்தில் நேரில் பங்குபெற்று பேசினார். புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் வீடியோ வழியாக இந்த உபவாச ஜெபத்தில் கலந்து கொண்டார்.கடவுள் தாமே அவர்கள் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்பாராக.
இக்கூட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் இருந்தன.பல்வேறு டினாமினேசன்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களும் இதில் கலந்து கொள்வதாக
இருந்ததால் சில கிறிஸ்தவ போதகர்மார்களும் விசுவாசிகளும் இக்கூட்டத்தில் சுவிசேச கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என தங்கள் சகாக்களை எச்சரித்திருந்தனர். ஆனாலும் கர்த்தர் மகிமையாய் வெற்றிச் சிறந்தார்.ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே குறைகூறியே நாம் கிறிஸ்தவர்களிடையே ஒருமைப்பாடு இல்லாமல் போனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.யோவான் 17:23-ல் ஒருமைப்பாட்டில் நாம் தேறினவர்களா யிருக்கும்படிக்கு வேண்டுகிறார் இயேசப்பா. சரீரத்தில் ஒவ்வொரு அவையவங்களுக்கும் ஒவ்வொரு வேலை இருப்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. ஆனாலும் எல்லாவற்றிற்கும் தலையானவர் இயேசுகிறிஸ்துவே. எல்லா சபைகளுக்கும் டினாமினேசன்களுக்கும் தலையானவர் இயேசு கிறிஸ்துவே.ஒரு சபைகாரர்களை நீங்கள் பரலோகம் போகமாட்டீர்கள் என இன்னொரு சபைகாரர்கள் நியாயம் தீர்ப்பது எப்படி? கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. அவர்களுக்கும் கிறிஸ்துதானே தலையானவர். ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.(1கொரி:12:5)
யாரோ சொன்னது போல “In essentials, unity; in non-essentials, liberty; in all things, charity.”-யாக நாம் இருக்கலாம்.அதாவது முக்கியமானவற்றில் நாம் ஒரே மனமாகவும்,முக்கியமில்லாவற்றில் விட்டுக்கொடுத்தும்,பிற எல்லாவற்றிலும் தாராளமாகவும் நாம் இருப்போம்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Monday, August 01, 2011
ஆகஸ்ட் 6 தேசத்துக்கான உபவாச ஜெப தினமாக டெக்சாஸ் கவர்னர் பிரகடனம்
அமெரிக்காவின் தெற்கிலுள்ள ஒரு மாகாணம் டெக்சாஸ். இம்மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ரிக் பெர்ரி (Rick Perry) கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற விரும்பும் ஒரு நல்ல கிறிஸ்தவர். இவர் சமீபத்தில் ஆகஸ்டு 6-ம் தினத்தில் தேசத்துக்காக உபவாசம் இருந்து ஜெபிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவர் தன் அறிக்கையில் கூறும் போது, “தேசம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அத்தேசத்தின் அதிகாரிகள் தேவனிடத்தில் தங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து தேசத்தை நல்ல திசையில் நடத்த ஞானத்தையும் தேவ இரக்கத்தையும் பெற்றுக் கொள்ளவேண்டும். யோவேல் 2-ம் அதிகாரம் 15,16ம் வசனங்கள் போல நான் தேவனிடத்தில் விண்ணப்பிக்கவும் உபவாசிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். அந்த வசனங்கள் இப்படியாக சொல்கிறது,சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், என்கிறது. இயேசு யோவான் 11:41-42-ல் எல்லாருக்காகவும் பொதுவெளியில் விண்ணப்பித்தது போல நாமும் நம் விசுவாசத்தை வெளிப்படுத்தவேண்டும்” எனக்கூறி ”A Day of Prayer and Fasting for Our Nation” -க்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அமெரிக்க மாகாண கவர்னர் ஒருவரே தைரியமாக இதனை பிரகடனம் செய்ததை காணச் சகிக்காத சில குழுவினர் பிசாசினால் ஏவப்பட்டு இதனை தடைசெய்ய முழு முயற்சிமேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஜெப கூடுகைக்கு வரும் ஆதரவை விட எதிர்ப்புகளே அதிகம்.Federal Lawsuit-களும் போய் கொண்டிருக்கின்றன. கூடவே ஏகப்பட்ட பரிகாசங்களும் நிந்தனைகளும். யெகோவா யீரே- வெற்றி தரும் கர்த்தர் இந்த தடைகளை இழி சொற்களையெல்லாம் கடந்து அந்த உபவாச ஜெபம் மாபெரும் வெற்றி பெறவும், அதன் மூலம் சாத்தானின் கோட்டைகள் முற்றிலுமாக தகர்க்கப்படவும் நீங்களெல்லாரும் ஜெபிக்க நாம் வேண்டிக்கொள்கிறோம்.
யாத்திராகமம் 15:1 கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
http://governor.state.tx.us/news/proclamation/16247/

இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்





