Thursday, November 17, 2011

ஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும் - குறும்பதில்கள்

Dear Bro in Christ,
I have some Doubt in Spiritual.Please give explanation for below this in tamil.
God Bless You and Your Ministries.
ஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும்.


வேத பண்டிதனல்ல நான். ஆகிலும் எனது சிறிய அறிவுக்கு எட்டிய அளவில் விளக்கம் தர முயற்சிக்கிறேன்.
முதலில் ஆவி, ஆத்துமா,சரீரம் இவற்றின் தோற்றத்தை பார்க்கலாம்.
தேவன் தனது சொந்த கரம் கொண்டு பூமியின் மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். இது சரீரத்தின் தோற்றம்.
இச்சரீரம் இன்னும் உயிர் பெறவில்லை. தேவன் தனது சுவாசத்தை அந்த சரீரத்தின் நாசியிலே ஊத ஆவி உள் புகுகிறது. அவன் ஜீவ ஆத்துமாவானான்.
இந்த ஆத்துமாவானது பாவம் செய்வதன் மூலம் மரணம் அடைகிறது.
இதுதான் பாவத்தின் சம்பளம் மரணம் என்பது. இது முதலாம் மரணம்.(ரோம 6:23)
எல்லாருமே முதலாம் மரணம் அடைகின்றோம்.
எனவே தான் நாம் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது.(யோவா 3:3)
மறுபடியும் பிறந்த ஆத்துமாவுக்கு இனி மரணமேயில்லை.
இப்படி மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆத்துமாவும் இறுதியில் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறது.
பாவம் செய்து முதலாம் மரணம் அடைந்து மறுபடியும் பிறவாத ஆத்துமா
இறுதியில் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்குபெறும்.(வெளி 21:8)
சரீரத்துக்கும் ஆவிக்கும் இறுதியில் என்ன நேரிடும்?
"சரீர மரணத்துக்கு" பின் சரீரம் மண்ணுக்கும் (ஆதி 3:19), ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கும் திரும்பும்.(பிர 12:7)
முடிக்கும் முன் ஒரு விசயம் கூட சொல்லிவிடுகிறேன்.
தேவன் தம்முடைய சாயலாகவே மனிதனை படைத்தார் என்று பார்க்கிறோம்.(ஆதி 1:26)
எனவே நாம் நம் சாயலை தெரிந்து கொள்ள அவரையே பார்க்கலாம்.
அவரைப் போலவே நாமும் நம்மில் மூன்றாயும் ஒன்றாயும் இருக்கிறோம்.
அவரில் பிதா குமாரன் பரிசுத்தாவி.
நம்மில் ஆத்துமா சரீரம் ஆவி.
நாம் அவரின் பிரதிபலிப்பு.

1 comment:

  1. ஆவி, ஆத்துமா, சரீரம,> நியாத்தீரப்பு, இயேசுவை அறியாதவர்கள் எவ்விதம் நியாயம் தீர்க்கப்படுவார்கள் இரண்டாம் மரணம் இவை போன்ற அநேக கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது.
    முக்கிய குறிப்பு இதனை பிரிண்ட் செய்து விநியோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இலஙகையில் பதிப்புரிமை பெற்றது
    http://www.4shared.com/document/p__H9Nt6/Life_after_the_Death.html

    ReplyDelete