Thursday, December 16, 2010

கிறிஸ்தும‌ஸ் ஒரு பொய்?


கிறிஸ்து பிற‌ப்பு ப‌ண்டிகையை நாம் கொண்டாட‌லாமா கூடாதாவென‌ ந‌ம்மில் ஒரு சாரார் சிந்தித்துக்கொண்டிருக்க‌ அந்த‌ ப‌ண்டிகையையே வேறோடு பிடிங்கி கிறிஸ்துவின் நாம‌த்தை கால‌ண்ட‌ரிலிருந்தே அழிக்க‌ இன்னொரு சாரார் முய‌ன்று கொண்டிருக்கிறார்க‌ள். என்ன‌த்தான் ஹேப்பி ஹாலிடேஸ் என‌ச் சொல்லி ச‌ம்மாளித்தாலும் அந்த‌ ஹாலிடேக்கான‌ கார‌ண‌த்தை ம‌றைக்க‌ முடியவில்லையே. இத‌னால் த‌வித்த‌ அவ‌ர்க‌ள் அந்த‌ ப‌ண்டிகைக்கான‌ கார‌ண‌‌மே ஒரு பொய் என‌ கூசாம‌ல் நியூஜெர்சியில் பில்போர்டு வைத்து கூவியிருக்கிறார்க‌ள்.Oh my God என்ப‌து Oh my gosh ஆன‌து Merry Christmas என்ப‌து Happy Holidays ஆன‌து இன்னும் என்னென்ன‌ க‌ட‌வுளுக்கு விரோத‌மாக‌ செய்து வாங்கிக்க‌ட்டிக் கொள்ள‌ப் போகிறார்க‌ளோ. எதிர் வாத‌மாக‌ ஒரு க‌த்தோலிக்க‌ ச‌ங்க‌த்தின‌ர் வைத்த‌ பில்போர்டு நீங்க‌ள் கீழே காண்ப‌து.நியூயார்க் லிங்க‌ன் ட‌ன்ன‌ல் முடிவில் வைத்திருக்கிறார்க‌ள்.
http://www.npr.org/2010/12/11/131988679/War-On-Christmas-Spreads-To-Lincoln-Tunnel
ச‌ங்:59:7,8 இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.

5 comments:

  1. thanks brother God bless u a lot..

    ReplyDelete
  2. தளத்தை மூடி விடுங்கள்......உங்கள் காரியங்களால் கர்த்தருக்கு பிரயோஜனமாக இருக்கும்......நீங்கள் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் .....கர்த்தருக்கு மகிமை கொடுக்கும் செய்திகளை கொடுக்கலாமே......உங்கள் தளத்தை மூடி விடுங்கள்...இதுவே நீங்கள் தேவனின் பிள்ளைகளுக்கு செய்யும் நற்பணி.....

    ReplyDelete
    Replies
    1. தளத்தை மூடி விடுங்கள்.....

      Delete
  3. சிந்தியுங்கள்:
    - லூக்கா 2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
    இஸ்ரவேல் தேசமும், இந்தியா, சவுதி அரேபியா தேசமும் பூமத்திய ரேகைக்கு (Equator) மேலே இருப்பதால் குளிர் மற்றும் கோடைகாலங்கள் இந்த தேசங்களுக்கு ஒரே சமயத்தில்தான் வரும். இது விஞ்ஞானத்தின்படி உண்மை என்று நம்மனைவருக்கும் தெரியும். மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். வயல்வெளி, இராத்திரி, மந்தையைக் காவல் என்று இந்த மூன்று வார்த்தைகளில் அது டிசம்பர் என்னும் குளிர் காலமாக இருக்க வாய்ப்பில்லை என்று சில வேதபண்டிதர்கள் சொல்கின்றார்கள், ஏனெனில் வடக்கே குளிர்காலத்தில் 8 முதல் 10 செல்சியஸ் (8-10* C) என்று வெட்பத்தின் அளவு இருக்கும், எர்மோன் மலைகளில் பனிக்கட்டிகள் (Snow/Ice) காணப்படும். அறுவடை முடிந்தபின்புதான் வயல் காலியாக இருக்கும். அப்போதுதான் மந்தையினை கிடை போடுவார்கள். எனவே அது வசந்தகாலம் (Spring) என்றும் கூறப்படுகின்றது. அதாவது மார்ச் - ஏப்ரல். அப்படி என்றால் என்றைக்கு கிறிஸ்துமஸ்?

    ReplyDelete
  4. [1] யோபு, எரேமியா தன் பிறந்தநாளைச் சபிக்கிறார்கள்.
    [2] ஏரோது தன் பிறந்தநாளன்று விருந்து செய்தான்.
    [3] பழைய ஏற்பாட்டில் பார்வோனும் பிறந்த நாளன்று விருந்து செய்தான்.
    [4] இயேசு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதாக வேதத்தில் இல்லை. தனக்கு முப்பது வயதாகும்போது ஞானஸ்நானம் பெற்றார் என்று வாசிக்கிறோம். அன்று அவருடைய பிறந்த நாளாயிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்கின்றனர்.

    குமாரனாகிய இயேசு திரித்துவ தேவனில் ஒருவர், அவருக்கு துவக்கமும், முடிவும் இல்லை. அப்படியென்றால் பிறப்பு என்பது அவர் பூமிக்கு வந்த தேதி. இயேசுவின் பிறந்த தினம் அன்று:
    - தேவதூதர்கள் திரளாகத்தோன்றி தேவனைத் துதித்தார்கள்.
    - கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் அவரைப் பணிந்துகொண்டார்கள்.
    - லூக்கா 2:15,16 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்

    ReplyDelete