http://english.peopledaily.com.cn/90001/90777/90852/6578029.html
http://www.timesonline.co.uk/tol/news/world/us_and_americas/article5567187.ece
அமெரிக்காவின் நாற்பத்து நான்காவது அதிபராக பதவியேற்ற பராக் உசேன் ஒபாமா தனது பதவியேற்பு விழாவில் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய மிகப்பழமையான வேதாகமத்தின் மேல் தன் கையை வைத்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.ஆனால் அடுத்த நாளே முதல் நாள் செய்த பதவிப்பிரமாண வாக்குமூலத்தில் ஏதோ தவறுகள் இருந்ததாகக் கூறி இன்னொரு முறை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஆனால் இந்த முறை எந்த வேதாகமமும் இன்றி.யாரையோ திருப்திபடுத்த அவர் அப்படி செய்திருக்கலாம்.
வேதம் சொல்கிறது
என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(I சாமுவேல் 2:30).
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.(மத்தேயு 10:32)
மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.(லூக்கா 12:8 )
தமிழக சட்டமன்றத்தில் கூட ஒரு அமைச்சர் பைபிளோடு பதவியேற்றிருக்கிறார். புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் தமிழகத்தில் நல்லாட்சி தந்திட நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.
Iதீமோ:2:1,2,3 எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
Tuesday, May 31, 2011
கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்
Thursday, May 26, 2011
கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபின் அவன் உடலையோ அல்லது அடக்கத்தையோ யாரும் லைவ் டெலிகாஸ்ட் செய்யவில்லை. ஆனால் அவன் மரணத்தை பலரும் குறிப்பாக அமெரிக்க இளைஞர்கள் கொண்டாடினார்கள். உங்களுக்குத் தெரியுமா இன்னொரு படுகொலை நடக்கவிருக்கிறது. அதில் இருவர் கொல்லப்படுவார்கள். அப்போது உலக ஜனங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். நீங்கள் அந்த சம்பவம் குறித்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? வெளிப்படுத்தின விசேசம் 11ம் அதிகாரம் நடைபெறப்போகும் அந்த சம்பவத்தை விவரிக்கிறது. இச்சம்பவமானது அந்திகிறிஸ்துவின் காலத்தில் அதாவது உபத்திரவகாலத்தில் நடைபெறும். இரண்டு சாட்சிகள் தோன்றி ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அக்காலத்தில் அவர்களால் மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்கவும், தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களால் முடியும்.இறுயில் அவர்கள் கொல்லப்பட அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் (எருசலேமின்) விசாலமான வீதியிலே கிடக்கும். ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள் என்பதாக வேதம் விவரிக்கிறது. இதற்கு தோதாக இன்றைக்கு விஞ்ஞான வசதிகள் வந்திருக்கிறது. டெலிவிசனிலும் இண்டர்நெட்டிலும் லைவ் டெலிகாஸ்டுகள், லைவ் ஸ்டிறீம்கள் என உலகமெங்கும் ஒரு சம்பவத்தை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.
கத்தே,வில்லியம் ராயல் திருமணத்தை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்து ரசித்தனராம். இந்தியா-இலங்கை மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை 6.8 கோடி பேர் பார்த்து ரசித்தனராம்.அது போலவே ஜனங்கள் வெகுமதிகளை அனுப்ப பெற Fedex,DHL,UPS கூரியர் கம்பெனிகள் ரெடி, கிரீட்டிங் கார்டுகள், ஆன்லைன் கிரீட்டிங் கார்டுகள்,ஹால்மார்க் கார்டுகளென அந்த சம்பவத்துக்கு மொத்த உலகமே ரெடி.
http://www.dinamani.com/edition/story.aspx?&artid=412856
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233396
http://www.maalaimalar.com/2011/04/04114723/world-cup-cricket-india-vs-sri.html
Wednesday, May 25, 2011
ஆசீர்வாதம் மே 2011 பத்திரிகை டவுண்லோட்
- மன்றாட்டு வீரர் ஆவது எப்படி? -R. ஸ்டான்லி
- பாடுபட்டு வேலையா அல்லது வேலை செய்ய படாதபாடா?- டோனி சலர்னோ
- ஆத்துமாதாயம்-மனைவியின் துணிச்சல்!— சிலுவைநாதன், மைசூர்
- பதின்மர் பக்கம் அன்றும் இன்றும் - திருமதி மலர் சாம், மதுரை
பிளசிங் புத்தகங்கள்/CD/DVD-க்கள் கிடைக்குமிடம்:
Blessing Literature Centre
21/ 11 West Coovam River Road
Chintadripet, Chennai 600002, India
Tel: 00 91 44 28450411
blc@bym-india.org
Tuesday, May 24, 2011
எங்களுக்கென்ன, அது உன்பாடு
இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை சம்பவம் rapture என்ற பெயரில் உலகமெங்கும் ஏளனமும் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.அதன் பிரதிபலிப்புதான் கீழே நீங்கள் காணும் படங்கள்.எப்படியோ ஒரு பொய் தீர்க்கதரிசி வழியாக வரும் காலத்தில் நடக்கப்போகும் ஒரு திடுக் சம்பவத்தை உலகமெங்கும் எடுத்துக்கூறியாயிற்று. இண்டர்நெட்,செல்போன் போன்ற ஊடகங்கள் இதில் மிக உதவியாய் இருந்தன.இனி நமக்கென்ன அவர்கள் பாடு.(மத்தேயு 27:4)
இங்கே அந்த கிண்டல் படங்கள்
http://gizmodo.com/5804259/the-best-rapture-prank-pictures
இந்த அம்மா கூட ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள்.
II பேதுரு 3:3,4 கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
Monday, May 23, 2011
வழக்காடும் தேவன்
மே 20
http://www.alaikal.com/news/?p=71028
http://www.thinakkural.com/news/all-news/world/4431-obama.html
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா "பாலஸ்தீனா என்ற நாட்டுக்கும், இஸ்ரேல் என்ற நாட்டுக்கும் இடையே 1967 ம் ஆண்டு என்ன எல்லை இருந்ததோ அதே எல்லைக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டும்" என கூறியிருக்கிறார். இதன்படி இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிக்குள் அமைத்த புதிய கட்டிடங்கள் யாவற்றையும் விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும்.வேதத்தின் படி இது மிகப்பெரிய தவறு.இஸ்ரேல் மற்றும் எருசலேமின் எல்லைகளோடு விளையாடுவது கர்த்தரோடு விளையாடுவதற்கு சமானம்.யோவேல் 3-ம் அதிகாரம் இது குறித்து கடுமையாக எச்சரிக்கிறது.நீங்களே வாசித்துப் பாருங்கள்.
என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தம்...அங்கே அவர்களோடு வழக்காடுவேன்(The President made an enormous mistake this week in calling for the Land of Israel to be divided and Jerusalem to be divided along pre-1967 borders. This is in direct defiance of the Bible. It won’t work, and it will bring judgment to the U.S., according to Joel chapter 3. Please pray that the President changes his heart and changes course very soon.)
தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச்சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன்
மே 22
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=245268
ஒருவேளை இது கர்த்தரின் எச்சரிப்பின் சத்தமாக இருக்குமோ?.சங்கீதம்29:8. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்.
அமெரிக்க அதிபருக்கு கேட்குமா?
http://www.chick.com/reading/tracts/1055/1055_01.asp
Friday, May 20, 2011
மே21 பரிகாசங்கள்
1961-ம் வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள்.
ஜான் எப்.கென்னடி அமெரிக்க அதிபராக பதிவியேற்க்க இன்னும் சில நாட்களே இருந்தன.பிரபல போதகர் பில்லிகிரகாமை தன்னுடன் ஒருநாள் செலவிட வேண்டி பிளாரிடாவுக்கு அழைப்புவிடுத்திருந்தார் ஜான் எப்.கென்னடி.ஒரு சுற்று கோல்ப் விளையாட்டை விளையாடி முடித்துக்கொண்ட இருவரும் தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஜான் எப்.கென்னடி பில்லிகிரகாமை பார்த்து கேட்கிறார் “பில்லி,இயேசுகிறிஸ்து பூமிக்கு மீண்டும் வருவார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?”
”நிச்சயமாக நம்புகிறேன், மிஸ்டர் பிரசிடெண்ட்” இது பில்லிகிரகாமின் பதில்.
“அப்புறம் ஏன் நான் அதை பற்றி மிகவும் குறைவாகவே கேள்விப்படுகிறேன்”. ஒருவேளை ஜான் எப்.கென்னடி இன்றைக்கு உயிரோடிருந்தால் இப்படி
கேட்டிருக்கமாட்டார்.எங்கு திரும்பினாலும் மே 21,ராப்சர்,இயேசு கிறிஸ்துவின் வருகை,பூமியின் அழிவு பற்றிய செய்திகள்.பூலோகம் எப்படி தயாராகிக் கொண்டிருக்கிறது பாருங்கள்.கைவிடப்பட்டால் எனப்படும் "Left Behind" series புத்தகங்கள் மட்டும் 60 மில்லியன் காப்பிகள் விற்றிருக்கின்றன. 2004-ல் நியூஸ்வீக் பத்திரிகை நடத்திய சர்வேயில் 55 சதவீத அமெரிக்கர்கள் இயேசுகிறிஸ்துவின் இரகசியவருகையை நம்புவதாக தெரிவித்திருந்தனர். நாளை இயேசுகிறிஸ்துவின் இரகசியவருகையை இருக்கலாம் என ஒரு சாரார் நம்புவதால் http://postrapturepost.com, http://eternal-earthbound-pets.com போன்ற வெப்சைட்டுகள் புதிதாக முளைத்துள்ளன.கைவிடப்படும் வீட்டு விலங்குகளை பரிமாறிக்க eternal-earthbound-pets.com, எடுத்துக்கொள்ளப்படுவோர் கைவிடப்பட்டோருக்கு சொல்ல விரும்பும் தகவல்களை தபால் செய்ய கூரியர் சர்வீசுகள் என பல கிண்டலும் கேலியுமாக சேவைகள் வந்துள்ளன. கிண்டலாகவோ சீரியசாகவோ பூமி முழுவதும் இறுதிக்காலசெய்திகள் நிரம்பியிருக்கின்றன.பூமி தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
வெளி:22:11,12 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும்நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.இதோ, சீக்கிரமாய் வருகிறேன்.
Wednesday, May 18, 2011
இரகசிய வருகை நான்சென்ஸ்?
இயேசுவின் இரகசிய வருகை, பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதல் இதெல்லாம் நான்சென்ஸ் என்கிறது இந்த நாத்தீகவாதிகளின் பில்போர்டு. இரண்டாயிரம் ஆண்டுகளாய் இதையேத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம் கிறிஸ்தவர்கள். மே 21 அன்று கிண்டலாக இதற்கென ஒரு ஸ்பெஷல் பார்ட்டியை ஒழுங்கு செய்திருக்கிறது American Atheist Association எனும் குழு. சாத்தானின் மிகப் பெரிய தந்திரங்களில் ஒன்று இது போல மக்களிடையே ஒரு சகஜத்தன்மையை ஏற்படுத்திவிடுவது.மக்கள் சீக்கிரத்தில் இது போன்ற ஏமாற்று நாள் குறிப்பிடுதலால் சுரணையற்று போவார்கள்.புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்துமாக இருப்பார்கள் அப்போது அழிவு வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருப்பார்கள்.நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். (மத்தேயு 24:37)
II பேதுரு 3:3,4 கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
II பேதுரு 3:12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;
Tuesday, May 17, 2011
மே21,2011 நியாயத்தீர்ப்பு நாள்?
I யோவான் 3:7 பிள்ளைகளே நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்.
மத்தேயு 24:26 அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
மத்தேயு 24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
அப்போஸ்தலர் 1:7 பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
வெளி 22:20 மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் ... ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
Tuesday, May 10, 2011
கடவுள் பற்றி குருசேவ்
ரஷ்யாவைச் சேர்ந்த யூரிக் ககாரின், மனிதனின் முதன் முதல் விண்வெளி பயணச்சாதனையை செய்ததை தொடர்ந்து அப்போதைய ரஷ்ய அதிபர் குருசேவ் இப்படியாகச் சொன்னார்.
""காகரின் விண்வெளியில் நுழைந்துவிட்டார். ஆனால் அங்கு அவர் எந்த கடவுளையும் பார்க்கவில்லை.''சங்கீதம் 19:1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
- நிகிட்டா குருசேவ், 1961.
சங்கீதம் 139:8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
சங்கீதம் 89:6 ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்?
I யோவான் 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை;
சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
நன்றி படம் நக்கீரன்
Friday, May 06, 2011
நரகம் உண்டா?
காந்தி நரகத்திலா இருக்கிறார்? அன்புமிக்க ஆண்டவர், மனதுருக்கம் கொண்ட நேசர் நரகம் என்று ஒன்றை படைத்திருப்பாரா? கருணை மிக்க கடவுள் தாம் படைத்த மக்களை நரகத்தில் இடுவாரா? என அமெரிக்காவில் ஒரு பாஸ்டர் கேள்வி எழுப்பி இருக்கிறார். நரகம் என்று ஒன்றே இருக்க முடியாது என்பது அவர் வாதம். இது குறித்து Love Wins என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் பாஸ்டர் ராப் பெல். இச்செய்தி டைம் பத்திரிகையில் அட்டைப்பட செய்தியாக இந்த ஏப்ரலில் வெளியானது.
இப்படி வேதத்தில் உள்ளதை உள்ளபடியாக போதிக்க வேண்டிய போதகர்மார்களே வழிமாறி திசை திரும்பி சுற்றும் காலம் இது. ஆனால் உலக மக்களோ நரகம் இருப்பதை இன்றும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒசாமாவின் மரணத்தையொட்டி ”ROT IN HELL" என டெய்லி நியூஸ் அட்டைப்பட செய்தி வெளியிட்டது.
இனி இந்த கள்ள போதகர்களின் வேலை கடினமாகிவிட்டது.நரகம் என்று ஒன்று இல்லவே இல்லை என மக்களுக்கு நிருபிக்கவேண்டியுள்ளது. இந்த தொல்லைகளையெல்லாம் கண்ட ஒரு வாசகர் டைம் பத்திரிகைக்கு எழுதினார் “நரகத்தை வர்ணிப்பது மிக எளிது.சுவிசேச கிறிஸ்தவர்களோடு நித்தியம் நித்தியமாக காலத்தை தள்ளுவது தான் அது”
God,Please let him have his heaven.Maranatha!!
மத்தேயு 25:30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்
Thursday, May 05, 2011
யூத மார்க்கத்திலிருந்து வந்த இந்து மத முறைமைகள்
1.கல்லை வணங்குதல்
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 28:18-ல் யாக்கோபு (கிமு 1836 முதல் 1689 வரை) எனும் ஒரு தேவமனிதன் ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்திய சம்பவத்தை பார்க்கிறோம். அவன் தன் தகப்பன் வீட்டை விட்டு ஓடி வரும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். இதைக் கண்டு பயந்து அவன் விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் எனச் சொல்லி ஒரு கல்லை நிறுத்தி தான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் என்றான்.இப்படி கடவுள் தரிசனம் தந்த இடத்தை மறந்து விடாமல் நியாபகார்த்தமாக இருக்க கல்லை நாட்டி சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பழக்கங்கள் யாக்கோபு காலத்திலேயே தொடங்கியது. இப்பழக்கம் தான் இந்து மதத்திலும் நுழைந்து இன்றைக்கு வீதிகள் தோறும் அவற்றை காண்கிறோம்.பிற்பாடு லேவியராகமம் 26:1-ல் ”நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்ற கடவுளின் கட்டளைபடியாக கல்லை நிறுத்தும் பழக்கம் யூதமார்க்கத்தை விட்டு ஒழிந்தது. ஆனால் அது இந்து மார்க்கத்தில் இன்றும் தொடர்கிறது.
2.கும்பாபிஷேகம்
யாக்கோபு கல்லை நிறுத்தியது மட்டுமல்லாமல்,அதின் மேல் எண்ணெய் வார்த்தான் என்றும் படிக்கிறோம்.ஆதியாகமம்:35:13,14 வசனங்கள் இப்படியாக சொல்கிறது “ யாக்கோபு தன்னோடே தேவன் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்” இச்சம்பவத்தை அபிசேகம் செய்தல் என்கிறோம் இதை ஆதியாகமம் 31:13-ல் பார்க்கலாம் ”நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே”. கும்பம் என்றால் குடம். கும்பத்தை கொண்டு சிலைகளுக்கு அபிசேகம் செய்வதால் அது கும்பாபிஷேகமாயிற்று. மனிதர்களை கடவுளுக்கென அர்பணித்து அபிசேகம் செய்தல் இன்றைக்கும் யூத மார்க்கத்தில் தொடர்ந்தாலும் கற்களை அபிசேகம் செய்தல் நடைபெறுவதில்லை.
3.பூசாரிமார்கள்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட கோவில் போன்ற ஆசரிப்புகூடாரத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய லேவியர் எனும் வம்சத்தினர் இஸ்ரேலில் தனியாக பிரித்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மட்டுமே ஆலய பணிகளை செய்ய முடியும்.எண்ணாகமம் 18:6 ”ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.” இந்து சமயத்திலும் பிராமண ஐயர்கள் மட்டுமே மந்திரம் ஓதுவது முதல் மற்ற எல்லா பூஜை பணிகளும் செய்ய தகுதி உடையவர் ஆவர்.
4.கற்ப கிரக பிரவேசம்
யூதர்கள் கடவுளை தொழுவதற்காக மோசேயால் உருவாக்கப்பட்ட ஆசரிப்புகூடாரத்தின் ஒரு பகுதியான மகா பரிசுத்த ஸ்தலத்தில் லேவியர்கள் எனும் கர்த்தரால் ஆசாரிய ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.II நாளாகமம் 23:6 ”ஆசாரியரும் லேவியரில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.” என்கிறது.இந்து கோவில்களிலும் பூசாரியாக உள்ள பிராமனர்கள் மட்டுமே கற்ப கிரகம் எனப்படும் கோவிலின் முக்கிய ஸ்தானத்திற்குள் நுழைய முடியும்.
5.பூஜையில் மணி அடித்தல்
பூஜையின் போது மணி அடிப்பதும், பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்திருக்கிறது. மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மணி அடிக்கப்படும், அந்த மணிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவன் செத்துப்போனான் என்று அர்த்தம். அப்போது அவனுடைய இடுப்பில் கட்டியிருக்கும் கயிரை பிடித்து இழுக்கவேண்டும்.யாரும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கக் கூடாது. யாத்திராகமம்:28:34,35 ”அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ளவேண்டும்.”
6.பலி செலுத்துதல்
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தது போல இன்றும் அனேக இந்து கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் (கொடையாக) பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், இரத்தம் குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் உண்டு. ஆதியாகமம் 22:13 ”ஆபிரகாம் போய், ஆட்டுக்கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்” யாத்திராகமம்:24:5,8 ”கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்தான்”
7.நந்தி வழிபாடு
இன்றைக்கும் நந்தி எனப்படும் ஆண் கன்றை வழிபடுதல் இந்துக்களிடையே பிரபலம். கோவில்களிலெல்லாம் நந்தி சிலைகள் காணப்படும். யூத ஜனங்கள் பின்மாறிப் போனபோது ஒரு கட்டத்தில் பொன்னை உருக்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை வணங்கினார்கள் என யாத்திராகமம் புத்தகத்தில் படிக்கிறோம். யாத்திராகமம் 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
8.குத்துவிளக்கு
ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு.யூத சமயத்திலும் குத்துவிளக்குகள் இடம் பெறுகின்றன. லேவியராகமம் 24:4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.
9.புனித நீராடல்
இந்துக்கள் சாமி தரிசனம் செய்ய செல்லும் முன் பொய்கையில், ஆற்றில், கடலில் அல்லது தெப்ப குளத்தில் புனித நீராடி தங்களை புற சுத்தம் செய்துவிட்டு செல்வர். இதுவே யூதர்களுக்கும் கட்டளையாக இருக்கிறது.யாத்திராகமம் 30:20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.
10.மாதவிலக்கு முறைமை
சில ஆச்சாரமான பிராமண வீடுகளில் மாதவிலக்கான பெண்களுக்கு ஓய்வு அளித்து தனியே ஒரு அறையில் தங்க வைப்பது இன்றும் ஒரு சில இடங்களில் உள்ளன. பழைய வீடுகளில் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக அடைசலான ஒரு சிறிய அறை இருக்கும் அதை “தூரமானாள் உள்” என்று அழைப்பார்கள்.இது போன்ற பழக்கம் யூதர்களிலும் இருந்திருக்கின்றது.லேவியராகமம்:15:19,20 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
Wednesday, May 04, 2011
மத்தேயு 5:16 வால்பேப்பர்
Download this tamil christian wallpaper
மத்தேயு 5:16 மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
Sunday, May 01, 2011
பைபிளில் காணப்படும் இன்றைய நகரங்கள்
புனித வேதாகமத்தின் விசேசம் என்னவென்றால் அதில் காணப்படும் நிஜமனிதர்கள், நிஜசம்பவங்கள் மற்றும் நிஜஇடங்கள்.மற்ற காவியங்களில் காப்பியங்களில் காணப்படும் மனிதர்கள், சம்பவங்கள்,இடங்கள் போலல்லாது வேதாகம புத்தகத்தில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் உண்மையானவை. நிஜத்தில் இருந்தவை மற்றும் இருக்கின்றவை.அதற்கான ஆதாரங்களை நாம் கண்கூடாக பிற அநேக மூலங்கள் மூலம் காணலாம். இன்றைக்கு நாம் உலக வரைபடத்தில் காணும் நாடுகளை நகரங்களை கூட வேதாகமத்தில் நாம் அதே பெயரில் காண முடிகிறது.வரலாறு மட்டுமல்லாமல் பூகோளமும் அரசியல் அமைப்பும் கூட வேதம் நிஜமே என நிரூபிக்கின்றது.வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்தேயு 24:15).
Jerusalem in Israel II Kings:23:27 இஸ்ரேலிலுள்ள எருசலேம் II இராஜாக்கள் 23:27 ”நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும்”
Damascus in Syria IChr:18:5 சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் I நாளாகமம் 18:5 ”ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்;
Alexandria in Egypt Acts:28:11 எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா அப்போஸ்தலர் 28:11 ”மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறி”
Tyre in Lebanon Josh:19:29 லெபனானிலுள்ள தீரு யோசுவா 19:29 ”அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும்”
Beersheba in Israel Gen:26:33 இஸ்ரேலிலுள்ள பெயெர்செபா ஆதியாகமம் 26:33 ”ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது”
Ashkelon in Israel Josh:13:3 இஸ்ரேலிலுள்ள அஸ்கலோன் யோசுவா 13:3 ”அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற”
Jericho in Israel Josh:6:26 இஸ்ரேலிலுள்ள எரிகோ யோசுவா 6:26 ”இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன்”
Gaza in Israel Acts:8:26 இஸ்ரேலிலுள்ள காசா அப்போஸ்தலர் 8:26 ”தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற”
Athens in Greece Acts:18:1 கிரீஸிலுள்ள ஏதென்ஸ் அப்போஸ்தலர் 18:1 "பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து"
Rome Acts:28:14 ரோம் அப்போஸ்தலர் 28:14 ”பின்பு ரோமாபுரிக்குப் போனோம்”
Modern city names mentioned in the bible.
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்