Friday, May 20, 2011

மே21 பரிகாசங்கள்


1961-ம் வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள்.
ஜான் எப்.கென்னடி அமெரிக்க அதிபராக பதிவியேற்க்க இன்னும் சில நாட்களே இருந்தன.பிரபல போதகர் பில்லிகிரகாமை தன்னுடன் ஒருநாள் செலவிட வேண்டி பிளாரிடாவுக்கு அழைப்புவிடுத்திருந்தார் ஜான் எப்.கென்னடி.ஒரு சுற்று கோல்ப் விளையாட்டை விளையாடி முடித்துக்கொண்ட இருவரும் தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஜான் எப்.கென்னடி பில்லிகிரகாமை பார்த்து கேட்கிறார் “பில்லி,இயேசுகிறிஸ்து பூமிக்கு மீண்டும் வருவார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?”
”நிச்சயமாக நம்புகிறேன், மிஸ்டர் பிரசிடெண்ட்” இது பில்லிகிரகாமின் பதில்.
“அப்புறம் ஏன் நான் அதை பற்றி மிகவும் குறைவாகவே கேள்விப்படுகிறேன்”. ஒருவேளை ஜான் எப்.கென்னடி இன்றைக்கு உயிரோடிருந்தால் இப்படி
கேட்டிருக்கமாட்டார்.எங்கு திரும்பினாலும் மே 21,ராப்சர்,இயேசு கிறிஸ்துவின் வருகை,பூமியின் அழிவு பற்றிய செய்திகள்.பூலோகம் எப்படி தயாராகிக் கொண்டிருக்கிறது பாருங்கள்.கைவிடப்பட்டால் எனப்படும் "Left Behind" series புத்தகங்கள் மட்டும் 60 மில்லியன் காப்பிகள் விற்றிருக்கின்றன. 2004-ல் நியூஸ்வீக் பத்திரிகை நடத்திய சர்வேயில் 55 சதவீத அமெரிக்கர்கள் இயேசுகிறிஸ்துவின் இரகசியவருகையை நம்புவதாக தெரிவித்திருந்தனர். நாளை இயேசுகிறிஸ்துவின் இரகசியவருகையை இருக்கலாம் என ஒரு சாரார் நம்புவதால் http://postrapturepost.com, http://eternal-earthbound-pets.com போன்ற வெப்சைட்டுகள் புதிதாக முளைத்துள்ளன.கைவிடப்படும் வீட்டு விலங்குகளை பரிமாறிக்க eternal-earthbound-pets.com, எடுத்துக்கொள்ளப்படுவோர் கைவிடப்பட்டோருக்கு சொல்ல விரும்பும் தகவல்களை தபால் செய்ய கூரியர் சர்வீசுகள் என பல கிண்டலும் கேலியுமாக சேவைகள் வந்துள்ளன. கிண்டலாகவோ சீரியசாகவோ பூமி முழுவதும் இறுதிக்காலசெய்திகள் நிரம்பியிருக்கின்றன.பூமி தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

வெளி:22:11,12 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும்நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.இதோ, சீக்கிரமாய் வருகிறேன்.

1 comment:

  1. அருமையான செய்தி பிரதர் பொதுவாக மேற்குநாட்டவர்களை புரிந்து கொள்வது மிக சிரமமானது. சில வருடங்களுக்கு முன் டாவின்சி கோட் நூல் வெளிவந்தபோது அது உண்மை என பெரும்பாலானோர் நம்பினர். தற்போது இதை வாசிக்கும்போது சற்று சிந்திக்கத் தூண்டுகின்றது. அவர்களின் பாவமான வாழ்க்கைக்கு (ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு) வேதம் வாசிக்காததே முக்கிய காரணம். என்னால் இந்த செய்தியை நம்பவும் முடியவில்லை அதேவேளை மறுக்கவும் முடியவில்லை

    ReplyDelete