Wednesday, May 18, 2011

இரகசிய வருகை நான்சென்ஸ்?


இயேசுவின் இரகசிய வருகை, பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதல் இதெல்லாம் நான்சென்ஸ் என்கிறது இந்த நாத்தீகவாதிகளின் பில்போர்டு. இரண்டாயிரம் ஆண்டுகளாய் இதையேத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம் கிறிஸ்தவர்கள். மே 21 அன்று கிண்டலாக இதற்கென ஒரு ஸ்பெஷல் பார்ட்டியை ஒழுங்கு செய்திருக்கிறது American Atheist Association எனும் குழு. சாத்தானின் மிகப் பெரிய தந்திரங்களில் ஒன்று இது போல மக்களிடையே ஒரு சகஜத்தன்மையை ஏற்படுத்திவிடுவது.மக்கள் சீக்கிரத்தில் இது போன்ற ஏமாற்று நாள் குறிப்பிடுதலால் சுரணையற்று போவார்கள்.புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்துமாக இருப்பார்கள் அப்போது அழிவு வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருப்பார்கள்.நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். (மத்தேயு 24:37)

II பேதுரு 3:3,4 கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

II பேதுரு 3:12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;

2 comments:

  1. அதான் வசனமே தெளிவாக சொல்லிவிட்டதே இப்படித்தான் இருப்பார்கள் என்று. இவர்கள் கெட்டு மற்றவர்களையும் பாவத்தில் நுழைக்கிறார்கள். தேவன் நீடிய பொறுமையோடு காத்திருப்பது அநேகர் மனந்திருப்ப வேண்டும் என்பதே. இந்த பிரகிதிகளுக்கு அதுகூட புரிவதில்லை.

    ReplyDelete
  2. இரண்டாயிரம் ஆண்டுகளாய் இதையேத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். இரண்டாயிரம் ஆண்டுகளாய் உயிரோடே இருந்து கவனிப்பவர் போல பேசும் இவர்கள் யார்? இவர்கள் வாழும் வாழ்க்கை 70 ஆண்டுகள். பெலத்தின் மிகுதியால் 80 ஆண்டுகள்...
    ஒரு வேடிக்கையான கதை உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை உருவாக்கினார். உருவாக்கி, அதனிடம் ‘நீ நாளெல்லாம் ஒரு விவசாயின் கீழ் இருந்து சூரியனுக்கு கீழே நிலத்தை உழுது உழைக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக 50 வருடங்கள் தருகிறேன்’ என்று கூறினார். அதற்கு காளை, ‘என்னது, இத்தனை கஷ்டமான வேலை செய்வதற்கு எனக்கு ஏன் ஐம்பது வருடங்கள்? வேண்டாம், வேண்டாம் எனக்கு வாழ்நாள் இருபது வருடங்கள் போதும், முப்பது வருடங்களை உமக்கே திருப்பி தருகிறேன்’ என்றது. தேவனும் அதற்கு ஒத்து கொண்டார்.

    அடுத்ததாக அவர் ஒரு குரங்கை உண்டாக்கினார். ‘குரங்கு நீ மனிதர்களை சிரிக்க வைக்க வேண்டும். நீ செய்கிற சேட்டைகளை பார்த்து அவர்கள் சிரிக்க வேண்டும். உனக்கு 20 வருடங்களை வாழ்நாளாக தருகிறேன்’ என்றார். அதற்கு குரங்கு, ‘இந்த வேலைக்காக நான் இருபது வருடங்கள் உயிர் வாழ வேண்டுமா? பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்களை உமக்கே தருகிறேன்’ என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

    அடுத்ததாக அவர் ஒரு நாயை உண்டாக்கினார். உண்டாக்கி, ‘நீ நாள் முழுவதும் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களை பார்த்து குரைத்து கொண்டிருக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக இருபது வருடங்களை தருகிறேன்’ என்றார். அதற்கு நாய் ‘வாழ்நாளெல்லாம் நான் வீட்டு வாசற்படியில் இருந்து என் தொண்டை தண்ணீர் வற்றி கத்தி கொண்டு இருக்க வேண்டுமா? எனக்கு பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்ளை உமக்கே திருப்பி தருகிறேன்’ என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

    அடுத்ததாக மனிதனை உண்டாக்கினார். அவனிடம், ‘நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேராநேரம் நன்கு சாப்பிட்டு, வாழ்க்கையை அனுபவி. உனக்கு 20 வருடங்களை தருகிறேன்’ என்றார். அதற்கு மனிதன், ‘ஒன்றும் செய்யாமல் ஜாலியாக இருப்பதற்கு இருபது வருடங்கள் மட்டும் தானா? காளை வேண்டாம் என்று கூறின முப்பது வருடங்கள், நாய் வேண்டாம் என்று கூறின 10 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று கூறின பத்து வருடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எனக்கு தாரும், நான் அவற்றை எடுத்து கொள்கிறேன. அப்போது மொத்தம் எழுபது வருடங்கள் ஆகுமல்லவா?’ என்றான். தேவனும் ஒத்து கொண்டார்.

    அதனால் தான் நாம் முதல் 20 வருடங்கள் ஒன்றும் செய்யாமல், உறங்கி, தூங்கி, வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அடுத்த முப்பது வருடங்கள் காளையை போல கடுமையாக உழைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நம் பேர குழந்தைகளிடம் குரங்கை போல முகத்தை காட்டி, அவர்களை சிரிக்க வைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நாயை போல வீட்டிலிருந்து, காவல் காத்து கொண்டிருக்கிறோம்.

    இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும், தேவன் நமக்கு கொடுத்த வருடங்கள் எழுபது, பெலத்தின் மிகுதியால் எண்பது வயது என்று வேதம் கூறுகிறது. இந்த எழுபது வருட வாழ்க்கையில் நாம் எல்லா பாடுகளையும் பட்டு, வாழ்ந்து முடித்தாலும், அதன் மேன்மை வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம் என்று தேவ தாசனாகிய மோசே கூறுகிறார். எழுபது வயதிற்கு மேல் வியாதியும், படுக்கையில் விழுந்து யாராவது திருப்பி விட்டால்தான் திரும்ப முடியும் என்ற நிலைமையும் இருந்தால் மிகவும் வருத்தமும் சஞ்சலமுமே! இதில் இன்னும் வருடங்கள் கூட்டப்பட்டால் அப்பப்பா எத்தனை வேதனை! யாரும் படுக்கையில் விழுந்து, மற்றவர்களுக்கு பாரமாக, நாமே நமக்கு பாராமாக இருந்து விடக்கூடாது! தேவன் அப்படிப்பட்ட வாழ்வை யாருக்கும் தராதிருப்பாராக!

    தேவன் கிருபையாய் கொடுத்த இந்த வாழ்க்கையில், மனிதனுக்கு மட்டுமே அதை அவன் சித்தத்திற்கு செலவிடும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார். மிருகங்களும் தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை. நாம் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அதை தேவன் கையில் ஒப்புக்கொடுத்து வாழ்ந்தோமானால் அதற்கு பின் வரும் வாழ்வில் நமக்கு பலன் உண்டு. தற்போது ஏனோதானோ என்று வாழ்ந்து, பின்வரும் வாழ்வில் பலனற்று போவதை விட இப்போதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அருமையான வாழ்வை அருமையான பாதுகாக்கும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தின்படி வாழும்போது, அவர் நம் வாழ்வை பொறுப்பெடுத்து கொள்வார்.

    இந்த உலகில் நாம் வாழும் வாழ்கை ஒருமுறைதான். அதை பலர் சிறக்க வாழவும் முடியும். பலர் வெறுக்க வாழவும் முடியும். நம்முடைய கைளில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையை தேவன் நாமம் மகிமைப்பட வாழ்வோம். அவருடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ்வோம். ஒவ்வொரு நாளும் தேவனுடைய பரிசு என்று அவருக்காக, அவரை துதித்து, அவருக்கென்று வாழ்வோம். மறுமையின் வாழ்வில் அவர் நமக்கு சிறந்த பலனை தருவார். ஆமென் அல்லேலூயா!

    ReplyDelete