Saturday, March 07, 2009

இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்


முதலாம் ஆதாமிற்கு அயர்ந்த நித்திரையை வரச்செய்து அவன் விலா எலும்பிலிருந்து தேவன் அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார்.இப்படியாக ஏவாள் ஆதாமின் சரீரத்திலிருந்து உருவாக்கப்பட்டாள். வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானவர் இரண்டாம் ஆதாமாக அறியப்படுகிறார்.இயேசு சிலுவையிலே அறையப்பட்டபோது அவர் மரணத்தை உறுதிசெய்ய ஒரு சேவகன் அவர் விலாவிலே ஈட்டியால் உருவ குத்த அவர் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.ஒரு கர்ப்பவதி குழந்தையை பிரசவிக்கும் போது அவள் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்படும்.இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இப்படியாக இரத்தமும் தண்ணீரும் வர அவர் மணவாட்டியாகிய சபை பிறந்தது. எருசலேம் தேவாலத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிய அதுவரை நடைபெற்று வந்த "நியாயபிரமாணத்தின் காலம்" முடிவுக்கு வந்தது.

சபையின் காலம் அலலது கிருபையின் காலம் அடுத்ததாக தொடங்கியது. தேவனின் பார்வை இஸ்ரவேல் ஜனங்களிடத்திலிருந்து திரும்பி சபையின் பக்கம் வந்தது. பரிசுத்த ஆவியானவர் சபையிலே உலாவரத்தொடங்கினார்.தேவ சபையின் இறுதி மனிதன் இரட்சிக்கப்படும் வரை இந்த சபையின் காலம் தொடரும். என்றைக்கு கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி மனிதன் இரட்சிக்கப்பட்டு மணவாட்டி சபை முழுமை பெறுகிறதோ அன்றைக்கே இயேசுவின் இரகசிய வருகை இருக்கும்.இயேசு கிறிஸ்துவானவர் மத்திய வானிலே வர சபையானது பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அன்றே சபையின் காலம் அலலது கிருபையின் காலம் முடிவடைந்து மீண்டுமாய் நியாயபிரமாணத்தின் காலம் துவங்கும்.தேவனின் பார்வை மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பும்.இதுவரை தடைசெய்துகொண்டிருந்த பரிசுத்த ஆவியானவரோடு சபையும் பூமியை விட்டு போய்விடுவதால் பூமியில் ஒரு வெற்றிடம் உண்டாக அது அந்திகிறிஸ்துவினால் நிரபப்படும்.ஆகையால் சபை பூமியிலிருக்கும் வரை அந்திகிறிஸ்து பூமியில் தலை காட்ட வாய்பேயில்லை.சபை எடுத்து கொள்ளப்பட்ட பின் நியாயபிரமாணத்தின் காலம் மீண்டும் தொடங்கியதால் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேம் தேவாலயத்தை கட்டத்தொடங்குவார்கள். மோசேயினால் உரைக்கப்பட்ட படியான தூப ஆராதனையும் பலி இடுதலும் தேவாலயத்திலே ஆரம்பிக்கும்.முதல் மூன்றரை வருடங்கள் அந்திக்கிறிஸ்து யூத ஜனக்களுக்கு மிக ஆதரவாக இருப்பான்.அதேவேளை பாலஸ்தீன அராபிய ஜனங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றி ஒரு சமாதான உடன்படிக்கையை செய்திருப்பான்.இஸ்ரவேல் ஜனங்களும் பாலஸ்தீன அராபிய ஜனங்களும் சுகமாக சவுக்கியமாக இருப்பார்கள்.மூன்றரை வருட முடிவில் அந்திகிறிதுவின் சுயரூபம் வெளிப்படும். எருசலேம் தேவாலயத்தை அவன் தீட்டு படுத்துவான். யூதர்கள் அப்போது அவன் தாங்கள் எதிர்பார்த்த மேசியாவல்ல என அறிந்துகொள்ள உண்மையான மேசியாவை அவர்கள் சிலுவையில் அறைந்ததை உணர்ந்து கதறி அழுவார்கள்.இரண்டு சாட்சிகள் அப்போது பூமியில் வல்லமையாக ஊழியம் செய்வதால் இஸ்ரவேலின் ஜனங்களில் அப்போது அநேகமாயிரம் பேர் இரட்சிக்கப்படுவார்கள்.அப்போது அந்திகிறிஸ்துவுக்கு பயந்து யூதர்கள் மலைகளுக்கு ஓடிப்போவார்கள்.அடுத்த மூன்றரைவருடகாலம் மகா உபத்திரவகாலமாக அமையும். இதை வேதாகமம் "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்கிறது.

"ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்."
(எரேமியா:30:7)

1 comment:

  1. Does the tribulation period is for jews(after accepting jesus as saviour) alone or for the entire Christians after rapture.

    ReplyDelete