Saturday, September 20, 2014

கொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்

ஐபோன் 6 ல் முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்தார். மணிபர்சுகளையே இல்லாமல் செய்வதே அவர் குறிக்கோளாம். கரன்சிகளே இல்லாமல் போனது. இப்போது கிரெடிட் டெபிட் கார்டுகளும் இல்லாமல் போகிறது. சீக்கிரம் முத்திரை மட்டுமே போதும் வாங்கவும் விற்கவும் என்றாகிவிடும். வேதாகமம் சொல்லுகிறது "முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது" வெளி:13:17. கடைசிகாலத்தில் இருக்கிறோம் நண்பர்களே. சிலர் கிண்டலாக ஐபோன் 666 என சொல்வதின் அர்த்தம் புரிகிறதா? "Our vision is to replace the wallet" said Apple CEO Tim Cook.  Yes,he is right on track. Bible says, at one time of a age "No one could buy or sell anything without that mark".Revelation:13:17 That too is coming soon. Friends please read the bible to know what is coming.

Monday, August 25, 2014

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள் எத்தனை எத்தனை?

இயேசுவிடம் ஒரு கேள்வி: உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?
இயேசுவின் பதில்: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் தயாரா நண்பரே? (லூக்கா 21:28)

                                                      இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள்

Monday, August 18, 2014

கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - ‍சீக்கிரம் தமிழகத்தில்

Slowly we are kind of getting there. "அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கு செய்தது" என்கிறது வேதாகமம்.செய்திதாள் செய்திய‌ பாருங்க. கூடிய சீக்கிரத்தில் அந்த நாளும் வந்துடும்ங்க. நாம பெற்ற சுதந்திரம் இன்னும் இருக்குதா? இல்ல இருந்த சுதந்திரமும் போயிட்டிருக்குதான்னு தெரியலைங்க. எல்லாம் நம்ம நன்மைக்கு தான்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா இருந்த‌ சுதந்திரமும் போயிட்டு தான் இருக்குதுனு தோணுது (வெளி:13:16,17). No one can buy or sell unless he has the mark, that is, the name of the beast or the number of its name.Revelation 13:17

Thursday, August 14, 2014

தப்பிய‌ பூமி - இம்மட்டும் வா, மிஞ்சி வராதே

ஒரு மயிரிழையில் தப்பிய‌து பூமி என இப்போது சொல்லுகிறார்கள். 2012‍ல் உண்டான சூரியப்புயல் கொஞ்சம் அவசரப்பட்டு ஒரு வாரம் முன்பே மட்டும் நடந்திருந்தால் பூமியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து போயிருக்கும் என்கிறார்கள். எலக்ட்ரானிக் கருவிகளெல்லாம் கருகிப்போயிருக்குமாம். இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என கட்டளையிடுவது நம் கர்த்தரன்றோ?. காலத்துக்கு முன்னே ஒன்றும் நடக்காது. எல்லாம் அதின் அதின் காலத்திலே நேர்த்தியாக நடக்கும். ஏனெனில் பூமி உண்டானதல்ல. உண்டாக்கப்பட்டது. இங்கு உண்டாக்கினவர் அறியாமல் ஒரு அணுவும் அசையாது.(யோபு 38:11)

Wednesday, June 11, 2014

என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்

எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான‌ உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக‌ கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்க‌ப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது. 
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)