Tuesday, May 09, 2006

திரு.வி.க-வும் கிறிஸ்துவும்

"மாசு மிகுந்த மனித இருள் போக்க வந்த
இயேசு உனை மறவேன் இன்று"

" உன் குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா"

"சிலுவையில் சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும்"

"கிறிஸ்துவின் இரத்தம் பெரு மருந்து.கேடில் இன்பம் தரு விருந்து"

"தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்கும் செங்கரனே"

-திரு.வி.கல்யாண சுந்தரனார்.(1883-1953)

"கிறிஸ்துவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு.ஆனால் மதம் மாற என் மனம் ஒருப்படவில்லை" என்றார்.இவர் உலகிலுள்ள சமயங்களின் சாரமெல்லாம் கிறிஸ்து பெருமானின் மலைப்பொழிவில் திகழ்வதாக நம்பினார்.அதனால் தான் தன் மணவிழாவின் போது கிறிஸ்தவ ஜெபத்திற்கும் இடம் கொடுத்தார்."கிறிஸ்துவின் அருள் வேட்டல்" எனும் நூலை எழுதினார்.

I யோவான் 1:7 அவர் (யேசு) ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்

1 John 1:7 But if we walk in the light as He (Jesus) is in the light, we have fellowship with one another, and the blood of Jesus Christ His Son cleanses us from all sin.

3 comments:

  1. நண்பரே,

    தங்கள் எழுத்துகள் நன்றாக உள்ளன. வாசிக்க தூண்டுகிறது. வேதாகமாக முறைபடியும் எழுதுகிறீர்கள். வாழ்துக்கள். தெடர்நது எழுதுங்கள். மேலும் உங்களை போன்ற கிறிஸ்துவ எழுத்தளர்களை www.tamilchristians.com சந்திக்கலாம். முடிந்தால் உங்கள் கட்டுரைகளை அங்கும் அனுப்பவும்.

    நன்றிகள் பல.
    சாம்

    ReplyDelete
  2. A nice chrisitian blogspot

    ReplyDelete
  3. நன்றி சாம்,நன்றி tamil parks.
    உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete