Thursday, August 27, 2009

குறுகாமல் பெருகவேண்டும்


நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாம் இந்த கடைசி நிமிடங்களில் வீடுகளைக் கட்டி தோப்புத் துறவுகளோடு கார் பங்களாக்களோடு வாழலாமா? அவர் தான் சீக்கிரம் வரப்போகிறாரே? திருமணம் செய்யத்தான் வேண்டுமா? இப்போது இந்த கடைசி நொடிகளில் போய் குழந்தைகளை பெற்றுக்கொள்வதா? என் படிப்பில், வேலையில் அல்லது தொழிலில் கவனம் செலுத்தவா வேண்டாமா? இன்னும் ஒரு வருடத்தில் அவர் வந்து விட்டால் எல்லா முயற்சிகளும் வீணாகிப் போய்விடுமே? அவர் சீக்கிரம் வருவது போல் தெரிவதால் இருப்பதையெல்லாம் விற்று தின்றுவிட்டு அவருக்காக காத்திருந்தால் என்ன? என கேட்பவர்களுக்கெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது என்னவென்றால் ”நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருக வேண்டும்” என்கிறார்.(எரே:29:5,6)


இருப்பது பாபிலோனில், நிலமையோ அடிமை நிலை, அனைவரும் சிறைப்பட்டு போயிருக்கிறார்கள். ஆகினும் நீங்கள் குறுகக் கூடாது. போயிருக்ககூடிய இடத்தில் நீங்கள் பெருகவேண்டும் என்பது தான் தேவனின் விருப்பம். எருசலேமில் மட்டும்தான் வாழ்ந்திருக்க வேண்டுமென்றில்லை. போகுமிடமெல்லாம் நீங்கள் செழித்திருக்க வேண்டும். பாபிலோனிலும் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அதன் மூலம் கர்த்தரின் நாமம் மகிமைப் பட வேண்டும். உன் தேவன் ஜீவனுள்ள தேவன், அவர் உன்னோடிருக்கிறார். சிங்கங்களுக்கு அவர் உன்னைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். எந்த கடினமான சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் உனக்கு வெளிப்படுத்த அவர் வல்லவராயிருக்கிறார் ஆமேன் அவரே உன் ஜீவனுள்ள கர்த்தர் உன்னோடிருப்பவர் வல்லவர் என உலகம் சாட்சி பகர வேண்டும்.


ஆகையால் இந்த இறுதிநாட்களில் எல்லாம் நெறிகெட்டு தறிகெட்டு செல்லும் போது வாய்ப்பே இல்லை வழிகளெல்லாம் அடைபட்டுக்கொண்டிருக்கின்றன இருள் மிகு காலங்கள் மட்டுமே நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிற போதும் உலகத்தின் சமாதானத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார் தேவன். அப்போது உங்களுக்கும் சமாதானம் உண்டாயிருக்கும். (நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.(எரே:29:7)) நடப்பது எல்லாம் அவரைத் தெரிந்தே நடக்கிறது. தயாராவனவெல்லாம் அவர் வருகைக்கென தயாராகிக்கொண்டிருக்கின்றன. நாம் எதையும் மாற்றவோ சீர்திருத்தவோ முடியாது. இதெல்லாம் கடவுளின் முன் கூட்டிய திட்டங்களே. You can never give him a surprise.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment