ஆனால் பேரரசர் அவுரங்கசீப்பின் இறுதி காலங்களோ பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. ”நான் என் பேரரசை பாதுகாக்க தவறிவிட்டேன். விலை மதிப்பற்ற என் வாழ்வை நான் வீணாக்கிவிட்டேன்” என சொல்லி தன் மூத்த மகன் அசாமிடம் அவர் புலம்பியிருக்கிறார்.
மரணம் அவரை நெருங்கும் வேளையில் அவுரங்கசீப் இவ்வாறாக தன் இளைய மகன் கம் பாக்ஷ்க்கு கடிதம் எழுதினார்:
"நான் இழைத்த ஒவ்வொரு கொடுமையின், நான் செய்த ஒவ்வொரு பாவத்தின், தவறின் பலனை நான் சுமந்து செல்கிறேன். என்ன விசித்திரம் நான் பிறந்த போது உலகில் சுதந்திரமாக பிறந்தேன். இறக்கும் போதோ பாவமூட்டையுடன் செல்வேன். நான் பார்க்கும் இடமெல்லாம் அல்லா மட்டுமே தெரிகிறார். நான் ஒரு மிக மோசமான பாவி. எனக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ தெரியவில்லை.”என எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி எழுதியிருந்தார். 1707-ல் கிட்டத்தட்ட அவரது தொண்ணூறு வயதில் அவுரங்கசீப் காலமானார்.
ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கோ ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என சொல்லுகிறது வேதம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று சொல்லி இயேசு பாவிகளை அழைக்கிறார். பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னிக்கிறார். நீங்கள் அவரிடம் வேண்டும் போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் சுமக்க வேண்டிய தேவையில்லை. எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 4:7 ), என்ன அருமையான வேத வசனம் இது.
Reference:
http://www.srichinmoylibrary.com/books/1368/9/8/index.html
0 comments:
Post a Comment