Monday, February 13, 2006

இஸ்ரேல் தேசத்தின் உதயம்

நூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் என்று ஒரு தேசமே இல்லை.யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டிருந்தனர்.யாருக்கும் அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தேசத்தை கட்டுவார்கள் என்ற நம்பிக்கையிருந்ததில்லை.ஆனால் இன்று அது ஒரு ஆசீர்வதிக்கப் பட்ட தேசமாயிருக்கிறது.
இவ்வாறு இந்த தேசம் மீண்டும் உருவாகும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிளில் சொல்லியிருக்கிறது.

ஏசாயா 11:12--இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.

எரேமியா 32:37. இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்

எரேமியா 16:15இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மத்தேயு:24:
32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.( இங்கு அத்திமரம் என்பது இஸ்ரவேல் தேசத்தை குறிக்கிறது.)
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்

So இதுவும் கடைசிகாலங்களுக்கான அடையாளம்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment