Thursday, February 16, 2006

கிறிஸ்தவத்தில் சீர்கேடு.

ravi srinivas கேட்டிருந்தார் Does bible mention anything about the stupid and crazy christian fundamentalists....என்று.அவருக்குஎன் பதில் ஆமாம் என்பதே.

கடைசி காலங்களில் அனேகர் கிறிஸ்துவின் அடிப்படைபோதனைகளை மறந்துவிட்டு பைபிளை புரட்டி திரித்து புதிய நவீன கிறிஸ்தவத்தை பேசுவார்கள்.ஏசுவின் போதனைகளான ஆவியில் எளிமை, சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம் காண்பித்தல், இருதயத்தில் சுத்தம்,சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல், நற்செயல்கள் செய்தல்,உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுதல்,தீமையோடு எதிர்த்து நிற்காதிருத்தல்,கேட்கிறவனுக்குக் கொடுத்தல்,சத்துருக்களைச் சிநேகித்தல்;சபிக்கிறவர்களை ஆசீர்வதித்தல்; பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்தல்;நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுதல் ஆகியவற்றை மறந்து விட்டு Sunday ஆனால் Church செல்லுதல்,வெள்ளை ஆடை உடுத்தல்,நகை ஆபரணங்கள் போடாதிருத்தல்,ஒரு கன்னத்தில் அறைந்தால் அதே அறையை அவனுக்கு மறு கன்னத்தில் திருப்பி காட்டுதல்,அனாதை ஆசிரமம் கட்டிசம்பாதித்தல்,பணக்காரர்களுக்கு தனி மரியாதைஏழைகளுக்கு தனி மரியாதை தருதல்,துப்பாக்கி மற்றும் பட்டயம் தூக்குதல் என்றாகிவிட்டது.இவர்களை பற்றியும் பைபிள் முன்பே கூறியிருக்கிறது.

கடவுளுக்கு தொண்டுசெய்கிறேன்என நினைத்துக்கொண்டு படுபயங்கர காரியங்களை செய்பவர்கள் பற்றியோவான் :16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

பெரிய கூட்டங்களை கூட்டி நானே கிறிஸ்துஎன கூறிக்கொண்டு பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்பவர்கள் பற்றிமத்தேயு :24:5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

பெரிய கூட்டங்களை கூட்டி நானே கிறிஸ்துஎன கூறிக்கொண்டு ,இது கடைசி காலம்என்பவர்களை பற்றி
லூக்கா 21:8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

பெரிய கிறிஸ்தவ ஆலயங்களை வியாபாரம் பண்ணுவது போல் நடத்துபவர்கள் பற்றிமத்தேயு 21:13 என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.

பைபிளை திரித்து கூறும் கள்ள பாதிரிமார்கள் பற்றி
II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

John:16:2 They will put you out of the synagogue; in fact, a time is coming when anyone who kills you will think he is offering a service to God.

Matthew 24:5 For many will come in my name, claiming, 'I am the Christ,' and will deceive many.

Matthew 7:15 Watch out for false prophets. They come to you in sheep's clothing, but inwardly they are ferocious wolves.

Luke 21:8 He replied: Watch out that you are not deceived. For many will come in my name, claiming, 'I am he,' and 'The time is near.' Do not follow them.

Matthew 21:13 It is written, he said to them, 'My house will be called a house of prayer,' but you are making it a 'den of robbers'.

Peter 2:1 But there were also false prophets among the people, just as there will be false teachers among you. They will secretly introduce destructive heresies, even denying the sovereign Lord who bought them— bringing swift destruction on themselves.

1 comment:

  1. நல்ல பதிவு

    "என்னை ஆண்டவனே ஆண்டவனே என்பன் விண்ணரசில் சேரமாட்டாம் .என் வார்த்தைகளின் படி நடப்பவன் எவனோ ,அவனே விண்ணரசில் சேருவான்"

    "வெளிவேடக்காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு"

    ReplyDelete